கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம்! பிஎப்ஐ அமைப்பினரின் அடுத்த பிளான்!

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம்! பிஎப்ஐ அமைப்பினரின் அடுத்த பிளான்!

நேற்று அதிகாலையில் இருந்து பி எஃப் ஐ நிறுவனத்தின் ஊழியர்களின் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இவ்வாறு சோதனை நடத்தியதில் பிஎப்ஐ அமைப்பின் தேசிய தலைவர் மற்றும் தேசிய செயலாளர் என 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல கேரளாவிலும் சோதனை நடத்தப்பட்டு ,கேரளாவை சேர்ந்தவர்களையும் கைது செய்தனர். நேற்று சோதனை தொடங்கிய பொழுது அமலாக்க துறையை எதிர்த்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை கலைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இவர்களை கைது செய்யப் பட்டதையடுத்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று பிஎஃப்ஐ  சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தினால் கேரளா வன்முறை காடாக காட்சியளிக்கிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்தை எதிர்த்து கேரளா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை அமல்படுத்தியுள்ளது. யாருடைய அனுமதியும்  இன்றி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது. அதேபோல வன்முறை தடுக்க அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் முழு அடைப்பு போராட்டத்தை எதிர்த்து, நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து  அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. அவ்வாறு இயக்கப்பட்டதால் பி எஃப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் கோபமடைந்து பேருந்து மற்றும் இதர வாகனங்களை தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு பயந்து பேருந்து ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியும் நிலை வந்துவிட்டது. அவ்வாறு பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.தமிழகத்திலும் கோவை மட்டும் சில மாவட்டங்களில் அரசு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது கேராளவில் வன்முறை வெடிக்க ஆரம்பித்தது போல தமிழகத்திலும் நாளடைவில் ஏற்படும் எனக் கூறியுள்ளனர்.தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பிஎப்ஐ அமைப்பினர் கூறிவருவதாக தகவல் வெளிவந்துள்ளது.