நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

0
48
#image_title

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என அடுத்தடுத்த திட்டங்களால் தமிழக மக்கள் மத்தியில் திமுக அரசின் செல்வாக்கு பெருகியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கட்சி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை மட்டும் திமுக ஒதுக்க உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை ஐந்து தொகுதிகளை மட்டும் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்; இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்; விசிக கட்சிக்கு இரண்டு தொகுதிகள்; அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் மற்ற சிறு,சிறு கட்சிகளுக்கு ஒரு-ஒரு தொகுதிகளை ஒதுக்கி விட்டு பெருவாரியான தொகுதிகளில் அதாவது 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கட்சி போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கும் மேல் திமுக தனித்துப் போட்டியிட்டு அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.

திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மக்கள் திமுக கட்சியைப் பெரிதும் நம்பி உள்ளனர். காரணம் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் சரியான நிலைப்பாட்டில் இல்லாததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. மக்கள் திமுக கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளனர். மற்ற கட்சிகள் பெரிய அளவில் இல்லாததே இதற்குக் காரணம் என்னும் சொல்லப்படுகிறது.

author avatar
Parthipan K