சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5556

4 மடங்கு சம்பளம் கொடுங்க! இவர்கள் இல்லாமல் என்ன செய்வது? தவிக்கும் தலைநகர்!

0

தலைநகர் டெல்லி கொரோனாவை சமாளிக்க முடியாமல் அம்மாநில அரசு திணறி வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பு தலைநகர் டெல்லியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் இறுதியில் ஐந்தரை இலட்சம் படுக்கை வசதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவைப்படும் என்று சுகாதாரத்துறை அமைப்பு ஒருபுறம் தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவர்களின் எண்ணிக்கையும், செவிலியர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கான காரணமாக கூறப்படுவதாவது,

டெல்லியில் வசிக்கும் மக்களை தாண்டி மருத்துவர்களும் நர்ஸுகளும் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்களைத் கொரோனா தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த அச்சம் காரணமாகவும், தங்களது குடும்பங்கள் கொரோனா அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அழுத்தம் கொடுப்பதாலும் பல தனியார்துறை மருத்துவர்கள் தங்களது பணியில் இருந்து விலகிக் கொள்கின்றனர்.

அதேபோல் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் பல மருத்துவமனைகள் கொரோனா வார்டாக மாற்றப்படும் சமயத்தில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் பணியில் இருந்து நின்று விடுவதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு மீண்டும் பணிக்கு வர வேண்டுகோள் விடுத்த போது, பணிக்கு வரவேண்டுமெனில் கூடுதலாக சம்பளம் கேட்பதாகவும் அதாவது அவர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து நான்கு மடங்கு வரை உயர்த்தி கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காக டெல்லி உயர் மட்ட அமைச்சர்கள் குழு பல ஆலோசனைகளை நடத்தி வந்தது. அதில் தற்போது நர்சிங் பள்ளிகளில் பயிற்சி பெற்று வரும் மாணவிகளை இந்தப் பணிகளில் ஈடுபடுத்தலாம் எனவும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் இருந்து மருத்துவர், செவிலியர்களை உதவிக்கு அழைக்கலாம் எனவும் பல்வேறு ஆலோசனைகள் தொடர்ந்து டெல்லி மாநில அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அத்தனை ஆலோசனைகளையும், அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய நாட்டு பாதிப்பு முற்றிலும் நீங்கி நாடு கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சசிகலா முன்கூட்டியே விடுதலையா? பலரின் அரசியல் கணக்கை உடைத்த அடுத்த வழக்கு

0

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை நிறைவு செய்யும் முன்பே நன்னடத்தை அடிப்படையில் வெளியில் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின.இதன் அடிப்படையில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின்னர் அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதை உறுதி செய்யும் வகையில் பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சசிகலா ஆகஸ்ட் மாதத்தின் 15 தேதிக்கு பின்னர் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது போன்ற செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யும் பரிசீலனை எதுவும் இல்லை என கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்ன அரசியல் கணக்கு போட்டு அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா தரப்பினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அவரது உறவினர்களை பயன்படுத்தினர் என்ற குற்றசாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள்,அலுவலகங்களில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை ஆய்வு செய்தனர்.

அப்போது கங்கா பவுண்டேசன் சார்பாக கட்டப்பட்ட ஸ்பெக்ட்ரம் மால் என்ற கட்டிடத்தை சசிகலா தரப்பினர் மறைந்த ஒரு தலைவரின் பெயருக்கு விற்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பரிவர்த்தனையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.

இன்னிலையில் சசிகலாவின் பணமதிப்பிழப்பு நேரத்தில் நடத்தப்பட்ட பணபரிவர்த்தனைக்கும் அந்த நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் சொத்துக்களை முடக்கி வைத்திருக்கும் வருமான வரித்துறையின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணையில் அடுத்த 15 நாட்களில் உரிய ஆவணங்களுடன் வருமான வரித்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பினாமி சொத்து தடைச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளதால் சசிகலாவின் விடுதலைக்கு மீண்டும் பிரச்சனையாக அமைய வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

30 வருடங்களாக தன்னை பெண் என நினைத்து வாழ்ந்து வந்த ஆண்!

0

30 வயதான பெண் ஒருவர் புற்றுநோய் இருப்பதாக மருத்துவமனைக்கு புற்று நோய் சிகிச்சைக்கு சென்ற போது அவர் ஒரு ஆண் என கண்டறிந்துள்ளனர்.

பிர்பம் என்பவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். வயது 30 ஆகிய இவர் திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியுள்ளன.மேலும் இவர் எல்லோரைப் போலவும் தான் வாழ்ந்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அடி வயிற்றில் வழி ஏற்பட்டது.இதனால் இவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மருத்துவமனையில் சிகச்சைக்காக சென்றுள்ளார்.மேலும் சிகிச்சையில் கண்டறியப்பட்ட ஒன்று மருத்துவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த பெண்ணுக்கு ஆண்ட்ரோஜன் இன்செண்டிவிட்டி சிண்ட்ரோம் நோய் உள்ளது கண்டறியப்பட்டது.இந்த நோய் உள்ளவர்கள் மரபணு ரீதியாக ஆணாகவும் மேலும் ஒரு பெண்ணுக்கு உள்ள அனைத்து உடற்பண்புகளும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சோதனை முடிவில் இவருக்கு குருட்டு யோனி இருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில் இவர்கள் பத்தாண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.எனவே மருத்துவர்கள் இவர்கள் தொடர்ந்து இல்லற வாழ்க்கை நடத்துவது குறித்து ஆலோசனையை வழங்கி வருகின்றனர் மேலும் இந்த ஜோடி குழந்தை பெற இயலாது என்றும் கூறியுள்ளனர்.

மத்திய அரசின் பாரத் நெட் திட்டம் தமிழகத்தில் ரத்து!.

0

தமிழகத்தில் பாரத் நெட் திட்டம் என்ற இணையதள டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்த பாரத் நெட் திட்டம் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.1,950 கோடி ஒதுக்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அரப்போர் இயக்கம் மற்றும் திமுகவினர் குற்றச்சாட்டை எழுப்பினர்.

எனவே டெண்டர் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததால் மத்திய அரசு இந்த டெண்டரை ரத்து செய்துள்ளது.மேலும் கருவிகள் கொள்முதல் செய்வதில் உள்ள குறைகளை அகற்றி மீண்டும் டெண்டர் விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தான் சாகபோவதாக மனைவிக்கு போன் செய்த கணவன்! புத்திசாலி மனைவியால் மீட்கப்பட்ட ருசிகர சம்பவம்!

0

ஐதராபாத்தைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் தன் மனைவிக்கு போன் செய்து தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அதிர்ச்சிகரமான தகவலை கூறி போனை துண்டித்தார். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி “தப்பச்சாபுத்ரா’ என்பவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு போன் செய்து கணவர் பற்றிய தகவலை கூறியுள்ளார். இதன்பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது கணவரை காப்பாற்றி கைது செய்தனர். எதற்காக தற்கொலைக்கு முயற்சி செய்தீர்கள் என்று காவல்துறையினர் விசாரித்தபோது, கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளானதால் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் வேலையிழப்பு, வருமானம் மற்றும் குடும்ப சிக்கலால் பலருக்கு மன அழுத்தம் அதிகரித்து தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர்.

இந்தோ- சீனா பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்! இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கியது

0

பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா களம் இறக்கிய இந்த போர்க்கப்பல் சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.

சீனா தனது எல்லையில் இருக்கும் நாடுகள் மீது கடுமையான அத்து மீறல்களை மேற்கொண்டு வருகிறது.இதனை இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. சீனாவின் அத்து மீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது படைகளை ஆசியாவிற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது.

இதன் விளைவாகவே போர்க்கப்பல்கள் அமெரிக்காவால் இந்தோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் களம் இறக்கபட்டுள்ளது.
இதில் ஒரு போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் எல்லைகளில் சுற்றி வருகிறது.இரண்டாவது கப்பல் பசுபிக் எல்லைப்பகுதியில் சுற்றி வருகிறது.மேலும் மூன்றாவது மற்றும் முக்கியமான போர்க் கப்பலான யு எஸ் எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற கப்பல் வியட்னாம் அருகே சுற்றி வருகிறது.

இந்தியா சீனா இடையில் போர் என்றால் இந்த யூ எஸ் எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பல் சில மணிநேரங்களில் வங்கக்கடல் பகுதிக்கு செல்வதற்காக களமிறக்கபட்டுள்ளது.மேலும் இந்தக்கப்பல் தான் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் , அணு ஆயுதங்கள்,போர் விமானங்கள் ,நீர்மூழ்கி கப்பல்களை இதில் இருந்து இறக்க முடியும்.இந்த கப்பல் (USS Theodore Roosevelt) வங்கக்கடல் பகுதியில் இறக்கினால் இது இந்தியாவிற்கு பெரும் ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஒரே நாளில் வேற லெவல்.! சாதாரண கூலி தொழிலாளிக்கு அடித்த 25 கோடி ஜாக்பாட்.!!

0

தான்சானியா நாட்டில் சுரங்க தொழிலாளியாக இருப்பவர் சானினியு லைசர். இவர் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் பணி செய்தபோது “டான்சனைட்’ என்னும் இரண்டு இரத்தின கற்கள் இவருக்கு கிடைத்துள்ளது. ஒரு கல் 9.27 கிலோ எடையும், மற்றொன்று 5.8 கிலோ எடையும் இருந்துள்ளது. இதற்கு முன்பு கிடைத்த இரத்தின கற்களை விட இதுவே அதிக எடை கொண்டதாகும்.

இந்நிலையில் சுரங்கத்தில் கிடைக்கும் கற்களை அரசாங்கத்திடம் விற்கும் வகையில் அந்நாட்டு அரசு கடந்தாண்டு வர்த்தக வழிமுறை ஒன்றை செய்துள்ளது. அதன் மூலம் சுரங்க தொழிலாளி சானினியு தனக்கு கிடைத்த இரண்டு கற்களையும் விற்பனை செய்துள்ளார். இந்த இரண்டு கற்களுக்கும் 7.74 பில்லியன் தான்சானியன் ஷில்லிங்ஸ் அவருக்கு கொடுக்கப்பட்டது. இந்த பணம் இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடிக்கும் அதிகமானதாகும்.

இந்த பணத்தின் மூலம் தனது வீட்டின் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் மால் கட்டப்போவதாகவும், மேலும் அவரது பகுதியில் குழந்தைகளை பள்ளிக்கூடம் அழைத்துச் செல்ல வசதி இல்லாததால் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டப்போவதாகவும் சானினியு லைசர் கூறியுள்ளார். ஒரு சாதாரண சுரங்க தொழிலாளியாக இருந்து ஒரேநாளில் பல கோடிகளுக்கு அதிபதியான சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு! ஒரே கட்சியில் தொடர்ந்து வருவதால் பீதி!

0

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஆர்.டி.அரசு இருந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆர்.டி.அரசு சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீண்டும் மற்றொரு எம்எல்ஏ பாதிப்பானது திமுக கட்சியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் மேலும் ஒரு எம்எல்ஏ வுக்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்

0

கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் விதித்து வருகிறார். இந்நிலையில் சாதாரண மக்களை மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் கலந்து கொண்டதால் கொரோனா பாதிப்பிற்குள்ளான ஜெ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுகவில் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் கொரோனா பாதிப்பிற்குள்ளானது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக சார்பாக போட்டியிட்டு செய்யூர் தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரான ஆர்.டி.அரசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

DMK Mla Corona - Updatenews360

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட செய்யூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரான ஆர்டி அரசுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் இந்நிலையில், திமுக எம்எல்ஏவுக்குவும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

முன்னதாக ரிஷிவந்தயம் தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கொரேனா தொற்றால் பாதிப்படைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு திமுக எம்எல்ஏக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர்! கும்பலாக மிரட்டியதால் நடந்த விபரீத சம்பவம்!

0

திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சி பகுதியில் வசிப்பவர் விஜயா. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது கடைசிமகன் தினேஷுடன் வாடகை வீட்டில் வசிந்து வந்தார். ஆந்திராவில் ரயில்வே ஒப்பந்த பணியாளராக வேலை செய்த தினேஷ், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் சமயபுரத்திற்கு வந்துள்ளார். கடந்த மூன்று வருடமாக அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்துள்ளார். காதல் பற்றிய செய்தி பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே, பெண்ணின் தாயார், பெரியம்மா மற்றும் அவரது தம்பி உட்பட 10 க்கும் மேற்பட்டோர் தினேஷ் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து காதலியை நேரில் அழைத்து காதலன் முன்பே துன்புறுத்தியதோடு இனி எங்கள் பெண்ணை பார்க்கவோ, பேசவோ கூடாது என்று பத்திரத்தில் எழுதியும் வாங்கிக் கொண்டனர். இச்சம்பவத்திற்கு பின்னர் சோகத்துடன் காணப்பட்ட தினேஷ் காதலியை காணமுடியாது என்ற ஏக்கத்தில் தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காதலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.