செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2025
Home Blog Page 5880

கெடு விதித்த பாமக நிறுவனர் ராமதாஸ்! 2021- இல் இது நடந்தே ஆக வேண்டும்!

0

மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

மத்திய அரசு உறுதியளித்தவாறு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படாது என்று வெளியாகும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. இவை உண்மையாக இருந்தால் மத்திய அரசின் நிலை கண்டிக்கத்தக்கது.

உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா பல வழிகளில் மாறுபட்ட நாடு ஆகும். பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், சமூக அடுக்குகளைக் கொண்ட நாடான இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கு சமூகநீதி வழங்க சாதிவாரியான மக்கள் தொகை  மிகவும் அவசியம் ஆகும்.

1931 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட பிறகு கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப் படவில்லை. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைக்காமல் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

இத்தகைய பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அவற்றை ஓரளவுக்கு மட்டும் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு  ஆகஸ்ட் 31 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பை பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றிருந்த நிலையில், அது செயல்படுத்தப்படாத வெற்று அறிவிப்பாகிவிடுமோ என்ற பெருங்கவலை ஏற்படுகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பாக அதில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதற்காக மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அத்தகைய கணக்கெடுப்பு தமிழகத்தில் மறைமலைநகர் நகராட்சி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள 293 கணக்கெடுப்பு வட்டங்களில் ஆகஸ்ட்12-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதற்காக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்களில்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தனியாக கணக்கெடுப்பதற்கான வசதி எதுவும் இல்லை என்று  மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை முதன்மை கணக்கெடுப்பின் போதாவது இந்த வசதி ஏற்படுத்தப்படுமா? என்ற விவரமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

வழக்கமாக மாதிரி கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதே முறையில் தான் முதன்மைக் கணக்கெடுப்பும் நடத்தப்படும். அதனால், இந்த மாதிரிக் கணக்கெடுப்பின் போது பிற பிற்படுத்தப்பட்ட  வகுப்பினரின் விவரங்கள் கணக்கெடுக்கப்படவில்லை என்றால், முதன்மைக் கணக்கெடுப்பிலும் இந்த விவரங்கள் இடம் பெறாது. இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகமாக அமையும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பே சாதிவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென  பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

அவ்வாறு தொகுப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு விழுக்காடு என்பதைத் தீர்மானிக்க அவர்களின் எண்ணிக்கை அவசியமாகும். அதுதவிர  உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மக்கள் தொகையை தீர்மானிக்கவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

OBC கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது சாதிவாரி கணக்கெடுப்பு கடினமானது அல்ல. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கணக்கெடுப்போர் நேரடியாக அடையாளம் காண முடியாது. மாறாக, ஓபிசி பிரிவில் உள்ள சாதிகளின் பட்டியலை மக்களிடம் படித்துக் காட்டி, அப்பட்டியலில் உள்ள சாதி தான் தங்களின் சாதி என்று மக்கள் கூறினால், அவர்கள் பெயர் ஓபிசி பிரிவில் சேர்க்கப்படும்; அத்துடன் அவர்கள் தெரிவிக்கும் சாதியையும் சேர்த்து விட்டால் அது சாதிவாரி கணக்கெடுப்பாக மாறி விடும்.

ஆகவே,  2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்வதற்கு  மத்திய அரசு முன்வர வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும்”, என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

டிசம்பர் 20 இல் “ஹீரோ” இவர்தான் ! இன்று அறிவிப்பு வெளியானது.

0

சீமராஜா, Mr local சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் முன்னதாக வெளி வந்து சரியாக போகாததால் சிவகார்த்திகேயன் பெரும் வருத்தத்தில் உள்ளார். பிறகு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் ‘Mr.லோக்கல்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘ஹீரோ’. ‘இரும்புத்திரை’  மித்ரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், அபிய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றி நடைபெற்று வந்தது. ஆனால் இதன் தொடர்ச்சியாக தொடங்கப்பட்ட பாண்டிராஜ் படத்திலும் கவனம் செலுத்தி வந்தார் சிவகார்த்திகேயன். 

இதனால் ஹீரோ மற்றும் பாண்டி ராஜ் படங்களில் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்ற குழப்பம் உண்டானது. இதனைத் தீர்க்கும் பொருட்டு டிசம்பர் 20-ம் தேதி படம் வெளியீடு என்று ‘ஹீரோ’ படக்குழு அறிவித்துள்ளது. இதோடு தங்களது படத்தின் லோகோ வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளனர்.  

‘ஹீரோ’ படக்குழு அறிவிப்பைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் பாரதிராஜா, ஆர்.கே.சுரேஷ், சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடிக்க தொடங்கி ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகிறது. 

மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன். 

இந்த வருடம் இறுதியில் வரும் ஹீரோ படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

“தல” தான் இதுக்கு காரணம்? காவல் துறை எடுத்த கடும் நடவடிக்கை!

0

நாம் படிக்கும் போது எல்லாம் சண்டை என்றால் குச்சிகளை வைத்து சண்டை போடுவோம். ஆனால் இப்போதெல்லாம் அறுவா,கத்தி, துப்பாக்கி, பிளேடு போன்ற பொருளை வைத்து தான் சண்டை போடுகிறார்கள். நாடு எங்கே போகிறது. அப்படி ஒரு சம்பவமாக சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு சென்றுகொண்டிருந்தனர்.

அந்த பேருந்தில் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. ஒருகட்டத்தில் ஒரு தரப்பு மாணவர்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள், பட்டாகத்தி ஆகிய ஆயுதங்களை எடுத்து மற்றொரு தரப்பினரை தாக்க ஆரம்பித்தனர்.

பேருந்தில் நடந்த சண்டையில், பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் வசந்த் என்பவர் உட்பட 7 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

அங்கு நடந்த சம்பவம் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்களை கைது செய்தனர்.
இந்த மோதலில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிகொண்டிருக்கும் வசந்தகுமார் என்னும் மாணவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து மாணவர்களின் இந்த மோசமான செயல்களை கண்டித்து காவல்துறை சார்பில் பல கல்லூரி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் ரூட் தல எனப்படும் 90 மாணவர்கள் கண்டுபிடித்து காவல்துறையினர் அழைத்து வரப்பட்டனர்.

காவல் துறையினர் இதற்கு தீர்வாக மாணவர்கள் அனைவரும் இனி எந்தவித வன்முறையிலும் ஈடுபட மாட்டோம், எங்கள் பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம் என ஒரே குரலாக உறுதிமொழி எடுத்தனர்.

சட்டத்தை மீறி எந்த ஒரு தவறு செய்தாலும் அவர்களை கைதுசெய்ய அம்பத்தூர் துணை ஆணையருக்கு அதிகாரம் உண்டு என கைப்பட பத்திரம் எழுதிக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படிக்கும் போதே இப்படி அருவாள், கத்தி, கம்பு, வெட்டருவா, போன்ற பொருள் வைத்து கொண்டு திரிந்தால் இந்த இளைஞர் சமூகம் எப்படி நல்ல நிலையை அடையும். ஆசிரியர் மற்றும் பெற்றோர் அனைவரும் இது போன்ற மாணவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இப்படி ஒரு சம்பவமா? 112 ஆண்டுகளுக்கு பிறகு! அடகொடுமையே!

0

நடப்பு உலக கோப்பை வெற்றி அணியான இங்கிலாந்து அயர்லாந்து உடனான போட்டியில் போராடி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அடுத்த போட்டியே கஷ்ட பட்டு வெற்றி பெறுவதா ? அயர்லாந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதி பெறாத அணி என்பது அனைவரும் அறிந்ததே.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பங்கு பெறும் ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அயர்லாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடியது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணி 207 ரன்கள் அடித்தது.
122 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இங்கிலாந்து அணி.

இரண்டாவது இன்னிங்ஸில் பர்ன்ஸுடன் தொடக்க வீரராக நைட் வாட்ச்மேன் ஜாக் லீச் இறக்கப்பட்டார். பர்ன்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், யாருமே எதிர்பார்த்திராத வகையில், 11ம் வரிசை வீரரான ஜாக் லீச் அபாரமாக ஆடி 92 ரன்களை குவித்தார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய ராய் 72 ரன்களை குவித்தார். இவர்கள் இருவர் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடினர். இவர்கள் தவிர ரூட் மற்றும் சாம் கரன் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்தனர்.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்தது அணி. இங்கிலாந்து அணியை வீழ்த்த 181 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணிக்கு கிறிஸ் வோக்ஸும் ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து துவம்சம் செய்தனர். வெறும் 16 ஓவர்களில் 38 ரன்களுக்கு அயர்லாந்து அணியை ஆல் அவுட் செய்தனர். வோக்ஸ் 6 விக்கெட்டுகளையும் பிராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நைட் வாட்ச்மேனாக இறங்கி 92 ரன்களை குவித்த ஜாக் லீச் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் 112 ஆண்டுகளுக்கு பிறகு தரமான சம்பவத்தை செய்துள்ளது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்தும் அந்த போட்டியை வென்றதில் முதலிடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. 1886/87ம் ஆண்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 45 ரன்கள் அடித்தும் அந்த போட்டியில் வென்றது.

அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி. 1907ம் ஆண்டில் முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த போட்டியை வென்றது.
அதன்பிறகு 112 ஆண்டுகள் கழித்து, முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்தும் அந்த போட்டியில் ஒரு அணி வென்றது இந்த போட்டியில் தான். முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, அயர்லாந்தை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த இடைப்பட்ட 112 ஆண்டுகளில், முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்த எந்த அணியும் வென்றதில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி என்பது குிப்பிடத்தக்கதாகும். இருந்தும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதி பெறாத அணியிடம் இப்படி மோசமாக ஆடியது இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

A1 படத்தின் மக்கள் கருத்து ! லொள்ளு சபா சந்தானம்! வயிறு குலுங்க சிரிப்பு மழை!

0

சந்தானம் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் A1 என்ற திரைப்படத்தின் பிரபலங்களின் ட்விட்டர் ரிவ்யூ மக்களின் கருத்து எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். முக்கியமாக லொள்ளுசபா சந்தானம் மீண்டும் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

படம் வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடி சிறப்பாக வந்துள்ளது மற்றும் சர்ச்சைக்குரிய பிராமணர்களை பற்றி பேசிய வசனங்கள் என ஒரு தரப்பு கூறியுள்ளது முற்றிலும் தவறு என படக் குழு மறுத்துள்ளது. யார்மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

படம் மிகவும் சிரிப்பாக வந்துள்ளதாக மக்கள் கூறிவருகின்றனர். தில்லுக்கு துட்டு 2 படம் வெற்றிக்கு பிறகு இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அதிமுகவின் பெயர் மாற்றப்பட்டது ? தலைவர் அறிவிப்பு, என்ன பெயர் தெரியுமா?

0

முத்தலாக் மசோதாவை கடந்த முறை எதிர்த்த அதிமுக, இந்த முறை ஆதரிப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவையின் வாக்கெடுப்பில் எதிர்த்து ஆனால் இன்று ஆதரிப்பதற்கு அதிமுக என கட்சி பெயரை பிஜேபி என மாற்றி கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது, அதே அதிமுக, தற்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. இது மக்களிடையே பெறும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை உண்டாகியது.

முஸ்லீம் பெண்களை தனது கணவர் முத்தலாக் என கூறிவிட்டால் திருமணம் முறிவு ஏற்பட்டது என்று அர்த்தம். இதனால் அப்பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஒரு குழு கூறி இந்த முத்தலாக் சட்டத்தை தடை செய்ய வேண்டி நாடாளுமன்றத்தில் முறையிடப்பட்டு சட்டம் இயற்ற ஆதரவு கோரினார்.
, ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடுக்கும் வகையில், முத்தலாக் தடை சட்ட மசோதாதாவை முந்தைய அரசில் மோடி அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக அதிமுக 37 எம்.பி.களைக் கொண்டு முந்தைய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவின் மீது பேசிய அப்போதைய அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பிரதமர் மோடி அரசை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால்,. அப்போதைய மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இடையே நாடாளுமன்றத்தேர்தல் வந்ததால், அந்த மசோதா நிலுவையில் இருந்துவந்தது. முந்தைய அரசில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, அதன் பதவிக்காலம் முடிந்ததும் காலாவதி ஆனது. இந்நிலையில் இந்த மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மக்களவையில் மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கடும் விவாதத்திற்கு பிறகு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர்.

மக்களவையில் போன ஆட்சியில் தனி மெஜாரிட்டி இல்லாமல் போனதால் நடைமுறை படுத்தமுடியவில்லை. ஆனால் இப்பொழுது பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி இருப்பதால், அந்த மசோதா 303 வாக்குகளுடன் நிறைவேறியது. எதிர்த்து 82 வாக்குகள் பதிவாயின. இந்த மசோதாவுக்கு அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓ. ரவீந்திரநாத் குமார் அளித்தார்.

கடந்த நாடாளுமன்ற அவை டிசம்பரில் இந்த மசோதா கொண்டு அறிமுகமானபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இந்த முறை ஆதரவு தெரிவித்தது. இதனால் இசுலாமிய அமைப்புகள் கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.
அது மட்டும் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். கட்சியின் பெயரை மாற்றி கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

புது டுவிஸ்ட்! ஆட்சியை கவிழ்த்தது காங்கிரஸ், எங்களுக்கு எதும் தெரியாது. MLA கள் பகிர்?

0

கர்நாடகாவில் ஒரு மாதமாக யார் அட்சி செய்வார்கள் என குழப்பம் நிலவியது. 16 சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு எதிராக செயல் பட்டதால் சட்ட சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்று வந்த உச்சக்கட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. அதில் ஒவ்வோரு வரிசையாக அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.

அதேபோல அரசுக்கு எதிராக ஆதரவளிப்பவர்கள் எழுந்து நின்று வாக்களித்தனர். இறுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தது. அவையில் மொத்தம் 204 உறுப்பினர்கள் இருந்தனர். பெரும்பான்மைக்கு தேவையான 103 உறுப்பினர்களை பெறாத காரணத்தினால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா கடிதத்தை ஏற்கப்பட்டது என ஆளுநர் அறிவித்தார்.
இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் மும்பையில் இருந்து பெங்களூர் திரும்பினார். அதன்பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது அவர்கள் கூறியவை, சித்தராமையாவின் வழிகாட்டுதலின்படியே எம்எல்ஏக்கள் பதவி மட்டும் ராஜினாமா செய்துவிட்டு. பிறகு மும்பையில் சென்று விட்டோம்.

பாஜகவுடன் நாங்கள் தொடர்பில்லை. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் எல்லாரும் காங்கிரசில் தான் இருக்கிறோம். என்றும் சித்தராமையா தான் எங்கள் தலைவர். சிறிது நாட்கள் மட்டும் எங்களை கட்சியில் இருந்து விலகுமாறு சித்தராமையா கூறியிருந்தார்.
அவர் கூறியது போல் நடந்து கொண்டோம். சித்தராமையா முடிவின் படி எதிர்காலத்தில் நடந்துகொள்வோம்.

சித்தராமையா கூறியதால் தான் நாங்கள் ராஜினாமா செய்தார் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியே குமாரசாமி ஆட்சியை கலைத்து விட்டதோ என்ற சந்தேகம் கர்நாடகா மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இந்தியாவின் நிலை இந்நாளில் தான் நிலைநிறுத்தப்பட்டது! கார்கில் 20 இன்று! கார்கில் வரலாறு

0

இந்திய தனது இராணுவத்தின் திறனையும், வலிமையையும் நிரூபித்த கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் அருகே கார்கில் போரில் உயிர் விட்ட வீரர்களின் தேசிய போர் நினைவகத்தில் முப்படை வீரர்களின் சார்பில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், விமானப் படைத் தளபதி பி.எஸ்.தனோவா, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.பி.மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும். போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது.

 இந்திய வான்படை துணையோடு, இந்திய தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.

60 நாட்கள் நடைபெற்ற இந்த சண்டை, ஜூலை 26-ம் தேதி முடிவடைந்தது. இந்தியப் பகுதிகளை ராணுவம் மீட்டது. கார்கில் வெற்றி தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கார்கில் போரில் தனது கால்களை இழந்த ராணுவ வீரர், தனது குடும்பத்துடன் வந்து இந்த வெற்றித் தினம் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலிகார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

அதில், இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்நாள் நமது வீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு ஆதரவளித்த அந்த வலிமை மிக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். வாஜ்பாய் தலைமையில் இந்த போர் நடத்தப்பட்டது. இந்த போரின் மூலம் இந்திய வான்படை, தரைப்படை, ஆய்தபடை ஆகியவற்றை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இதில் உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் இரங்களை தெரிவித்து கொள்வோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அப்போ எதிர்த்தோம் இப்போ ஆதரிக்கிறோம்! நாடாளுமன்றத்தில் அதிமுக நிலை?

0

அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது, அதே அதிமுக, தற்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை உண்டாகியது.

முஸ்லீம் பெண்களை தனது கணவர் முத்தலாக் என கூறிவிட்டாள் திருமணம் முறிவு ஏற்பட்டது என்று அர்த்தம். இதனால் அப்பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஒரு குழு கூறி இந்த முத்தலாக் சட்டத்தை தடை செய்ய வேண்டி நாடாளுமன்றத்தில் முறையிடப்பட்டு சட்டம் இயற்ற ஆதரவு கோரினார்.
, ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடுக்கும் வகையில், முத்தலாக் தடை சட்ட மசோதாதாவை முந்தைய அரசில் மோடி அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக அதிமுக 37 எம்.பி.களைக் கொண்டு முந்தைய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவின் மீது பேசிய அப்போதைய அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பிரதமர் மோடி அரசை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால்,. அப்போதைய மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இடையே நாடாளுமன்றத்தேர்தல் வந்ததால், அந்த மசோதா நிலுவையில் இருந்துவந்தது. முந்தைய அரசில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, அதன் பதவிக்காலம் முடிந்ததும் காலாதியானது. இந்நிலையில் இந்த மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மக்களவையில் மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கடும் அமளிக்கு பிறகு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர்.

மக்களவையில் போன ஆட்சியில் தனி மெஜாரிட்டி இல்லாமல் போனதால் நடைமுறை படுத்தமுடியவில்லை. ஆனால் இப்பொழுது பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி இருப்பதால், அந்த மசோதா 303 வாக்குகளுடன் நிறைவேறியது. எதிர்த்து 82 வாக்குகள் பதிவாயின. இந்த மசோதாவுக்கு அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓ. ரவீந்திரநாத் குமார் அளித்தார்.

கடந்த நாடாளுமன்ற அவை டிசம்பரில் இந்த மசோதா கொண்டு அறிமுகமானபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இந்த முறை ஆதரவு தெரிவித்தது. இதனால் இசுலாமிய அமைப்புகள் கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

A1 செம்ம காமெடி! சந்தானம் மாஸ்! ரசிகர்கள், மக்களின் review!

0

சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘A 1’. புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தாரா அலிசா பெரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜூலை 26-ம் தேதி இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

மக்களின் கருத்து:

A1 திரைப்படம் சிறப்பாக உள்ளது என காலை 6 மணி ஷோ பார்த்த மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களின் கருத்து “படம் வேற லெவல்” “படம் மாஸ்” “செம்ம காமெடி” “செம்ம ப்ரோ” “செம்ம ஆக்டிங்” போன்ற வசனங்களுடன்
ரசிகர்கள் திரையை விட்டு வெளிவருகின்றன.

படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக வெளிவந்துள்ளது.
கண்டிப்பாக சந்தானம் திரை பயணத்தில் இது பெரிதும் பேசப்படும் என கூறுகின்றனர்.

மேலும் இது தவிர சந்தானம் செய்தியாளர் சந்திப்பில் இந்த படத்தை பற்றி கூறியது,
என்னுடைய காமெடி, பன்ச் வசனங்கள் என அனைத்துமே நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் என்னுடைய டீம் தான். ஆனந்த், முருகன், சேது, மாறன், சுந்தர், குணா, ஜான்சன் உள்ளிட்டவர்கள்தான் என்னுடைய டீம். அவர்கள் தான் எனக்கு முதுகெலும்பு.

நிறைய படங்கள் பார்த்து, இந்தக் காமெடி பண்ணலாம். இந்த பன்ச் போடலாம் என்றெல்லாம் சொல்வார்கள். அதற்குப் பிறகு எனது தயாரிப்பு நிறுவனத்திலும் பலர் முதுகெலும்பாக இருக்கிறார்கள். இந்த ‘A1’ படத்தின் மூலம் ஜான்சன் இயக்குநராகவும், என் தயாரிப்பு நிறுவனத்திலிருந்த ராஜ் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள்.

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் இயக்குநர் ஜான்சன். ஆகையால், தான் சந்தித்த விஷயங்களை எல்லாம் வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார். அதைக் கேட்டவுடன், என் ஸ்டைலுக்கான பன்ச் வசனங்கள் இதில் சேர்க்க முடியுமா? என யோசித்தேன்.

கதையாகவேகொஞ்சம் புதிது என்பதால், என்னுடைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும்.இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, நான் மியூசிக் பண்றேன். கண்டிப்பாக ஹிட்டாகும் என்று சொன்னவர் சந்தோஷ் நாராயணன். அவருக்கு நன்றி.

நம் குடும்பம், நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள் என அனைவருமே உறுதுணையாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அந்த விதத்தில் குடும்பம், நண்பர்கள் என அனைவருமே நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இப்படி கூறியுள்ளார்.

A1 திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள். சந்தானம் திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைய வாழ்த்துக்கள்.