20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

0
123
Dinesh Karthik
Dinesh Karthik

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வான பின்னர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆசியகோப்பை போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் அதிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட இந்திய அணி தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

7 வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

அதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்த நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர்.

இதில் ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Dinesh Karthik
Dinesh Karthik

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பின்வருமாறு:

ரோகித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இந்நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பைக்கு தேர்வானதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கனவு நனவாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார்.