குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்!

0
52
#image_title

குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்திற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் மதிமுக பொது செயலாளர் வைகோ.

இதற்க்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்க்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்.

ஆனால் இன்னும் எந்த பதிலும் அளிக்காததால் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை வேகமாக பரிசீலிக்க கோரி மதிமுக சார்பில் வைகோ மேல் முறையீடு செய்துள்ளார்.

எனவே மதிமுக பம்பர சின்னம் கோரிய வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது, அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில், தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் தான் தனி சின்னம் வழக்கப்படும், மதிமுக கட்சி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரியே முடிவெடுக்க வேண்டும் எனவே இன்று மாலைக்குல் பதில் அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

எனவே மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் தான் ஒதுக்க வேண்டும் என நிர்பந்திக்க முடியாது எனவும் கூறியுள்ளது.

மேலும், பம்பர சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதாக என்பதற்கான விளக்கமளிக்கவும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணை இன்று பிற்பகல் 2.30மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

author avatar
Savitha