Sunday, July 13, 2025
Home Blog Page 3378

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது!

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது!

ஆனைமலை பகுதியை சேர்ந்த சிறுமி (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவி கடந்த மாதம் 25 தேதி முதல் காணவில்லை. அவரதின் பெற்றோர்கள் அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விாரணை நடத்தினார்கள். மேலும் சிறுமியை வலை வீசி தேடி வந்தனர். அப்போது அந்த சிறுமி 17 வயது சிறுவனை காதலித்து வந்தது தெரியவந்தது.இந்நிலையில் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுவனுடன் சிறுமி இருபது தெரிய வந்தது.

உடனடியாக அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததும் தற்பொழுது அந்த சிறுமி கர்பமாக இருப்பதும் தெரியவந்தது .இதயடுத்து போலீசார் போக்சோ வழக்காக மாற்றி அந்த சிறுவனை கைது செய்தனர்.

ரிஸ்க் எடுக்க வேணாம்ப்பா… கோப்ரா இயக்குனரிடம் மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்!

0

ரிஸ்க் எடுக்க வேணாம்ப்பா… கோப்ரா இயக்குனரிடம் மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்!

கோப்ரா திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்தே அதன் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக்கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு இந்த படத்தைப் பார்க்கலாம். அதே போல படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடும் என அறிவிக்கபட்டுள்ளது. தற்போதைய காலத்தில் 2.15 மணிக்குள் எடுக்கப்படும் படங்களையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் கோப்ரா சற்று நீளமான படமாகவே பார்க்கப்படுகிறது.

இதை உணர்ந்த தயாரிப்பாளர் படத்தை இன்னும் ட்ரிம் செய்ய சொல்லி இயக்குனரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதை விரும்பாத இயக்குனர் அஜய் இதே நீளத்தோடுதான் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என வலியுறுத்தி வருகிறாராம். ஏற்கனவே இந்த ஆண்டு ரிலீஸ் ஆன வலிமை உள்ளிட்ட படங்கள் அதிக ரன்னிங் டைம் காரணமாக ட்ரோல் செய்யப்பட்டு பின்னர் திரையரங்குகளில் வெளியான சில நாட்களுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்டன. ஆனால் அப்படி செய்தால் அது எதிர்மறை விளைவுகளையே படத்தின் மேல் ஏற்படுத்தும்.

இந்த படம் ஆரம்பித்தது முதல் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஒத்துவரவில்லை. அதிக பட்ஜெட் மற்றும் அதிக நாட்கள் ஷூட்டிங் செய்து தயாரிப்பாளரை சிக்கலுக்கு ஆளாக்கினார் இயக்குனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இப்போது ரிலீஸ் நேரத்திலும் மறுபடியும் பிரச்சனை தீர்ந்த பாடில்லாமல் இருவரும் முட்டிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு எடுக்கபோகும் அதிரடி நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு! 

தமிழக அரசு எடுக்கபோகும் அதிரடி நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பல பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது. அவ்வாறு சேலம் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகிறது.அவ்வாறு உள்ள பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் சேலம் மாவட்டம் நான்குரோடு , அரிசி பாளையம் பகுதியில் சாய் விஹார் என்ற தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த தொடக்கப்பள்ளி அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதால் அதனை மூடும் படி வட்டார கல்வி அதிகாரி உத்தரவிட்டார். வட்டார கல்வி அதிகாரி உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பள்ளி சார்பாக வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது.

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த தொடக்கப்பள்ளியை  பள்ளியை மூடும்படி கல்வி அதிகாரி உத்தரவை எதிர்த்து,போடப்பட்ட வழக்கை நீதிபதி விசாரித்தார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இன்றி செயல்பட்டு வரும் பள்ளிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரசிகர்களை ரசிக்க வைக்கும் ரகசியமான கவர்ச்சி பிக் !..இன்ஸ்டாவில் பகிர்ந்த நடிகை!!

ரசிகர்களை ரசிக்க வைக்கும் ரகசியமான கவர்ச்சி பிக் !..இன்ஸ்டாவில் பகிர்ந்த நடிகை!!

தனது பேக் டு பேக் பிளாக்பஸ்டர்களுடன் ஆளும் பன்மொழி நட்சத்திரமான ராஷி கண்ணா தற்போது தனுஷுடன் இணைந்து நடித்த சமீபத்திய வெளியீடான படம் தான் திருச்சிற்றம்பலம்.நடிகை இந்த ஆண்டு பல வெளியீடுகளுடன் பல்துறை நடிப்பைக் கொடுத்து பார்வையாளர்களின் இதயங்களை வென்றார்.

ராஷி கண்ணா தனது இதயப்பூர்வமான நன்றிக் குறிப்புகள் மூலம் தனது ரசிகர்களின் நிபந்தனையற்ற ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவிப்பதை உறுதி செய்தார்.தனுஷுடன் இணைந்து படத்தின் அபிமான ஸ்டில் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட நடிகை எங்கள் திருச்சிற்றம்பலம் படத்தை நீங்கள் பார்த்தீர்களா?இதைப் பார்த்து அன்பைப் பொழிந்தவர்களுக்கு நன்றி என்றார்.

ராஷி கண்ணா சக நடிகர் தனுஷுடன் ஒரு சூடான படத்தைப் பகிர்ந்து கொண்டார்.நடிகை இந்த ஆண்டு பல வெளியீடுகளுடன் பல்துறை நடிப்பைக் கொடுத்து பார்வையாளர்களின் இதயங்களை வென்றார். ராஷி கண்ணா தனது இதயப்பூர்வமான நன்றிக் குறிப்புகள் மூலம் தனது ரசிகர்களின் நிபந்தனையற்ற ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவிப்பதை உறுதி செய்கிறார்.

படம் ஆயிரம் உணர்ச்சிகளைப் பேசும் போது வார்த்தைகள் தேவையில்லை. படத்தின் ஸ்டில் ராஷி கண்ணாவின் குறிப்பைப் போலவே மனதைக் கவரும். ரசிகர்களும் திரையில் இந்த ஜோடியைப் பார்த்து வியப்பில் உள்ளனர் மற்றும் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை விரும்புகிறார்கள்.ராஷி கண்ணா எப்போதுமே திரையில் தனது சக நடிகர்களுடன் ஒரு சிறந்த கெமிஸ்ட்ரியைக் கொண்டிருப்பவர்.

தொடர்ந்து சூப்பர் ஹிட்களை வழங்குவதில் இடைவிடாத வாகனத்தில் பயணித்து வரும் ராஷி கண்ணா  விரைவில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து தர்மா புரொடக்‌ஷனின் யோதா படத்தின் மூலம் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். அறிவிக்கப்பட்ட சில திட்டங்களில் நடிகை ஷாஹித் கபூருடன் ஃபார்ஸியும் இருக்கிறார்.

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?

0

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?

திருச்சிற்றம்பலம் படத்தின் எதிரபாராத வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது.  ரிலீஸூக்கு முன்பே பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்களைக் கவர்ந்தன.

இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இலலாமல் சென்ற ரசிகர்களுக்கு நல்ல பீல்குட் படத்தைப் பார்த்த உணர்வு கொடுத்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்துள்ளது. முதல் நாளிலேயே 9 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. தனுஷின் சமீபத்தைய படங்களில் திருச்சிற்றம்பலம்தான் அவருக்கு வெற்றியைக் கொடுத்த படமாக மாறியுள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் எப்படி ரசிகர்களுக்கு எப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லையோ, அதுபோல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கும் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லையாம். அதனால் படத்துக்கு பெரியளவில் பப்ளிசிட்டி எதுவும் செய்யவில்லை என்று சொல்லபடுகிறது. இதனால் தயாரிப்பு தரப்பு மீது தனுஷ் அதிருப்தியில் இருந்துள்ளார்.

இதையடுத்து இப்போது படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் படத்திக்கு எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்க தனுஷின் நேர்காணல் எடுத்து அதை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம் என திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு தனுஷ் மறுத்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

இந்த 5 மாவட்டங்களுக்கு 23 மற்றும் 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

இந்த 5 மாவட்டங்களுக்கு 23 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம்   கூறுகிறது.

மேலும் வரும் 23 மற்றும் 24 போன்ற தேதிகளில் நீலகிரி ,கோவை,தேனி ,திண்டுக்கல் ,திருப்பூர் போன்ற 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டமாக  ஆக காணப்படும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடல் ,வட ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று அடிக்கும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

0

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரங்கள் இப்போது தொடங்கியுள்ளன.

இயக்குனர் மணிரதனத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தமிழில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பேன் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையடுத்து படத்தின் பிஸ்னஸ் தற்போது தொடங்கியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை அவர் விற்றுவிடும் முடிவில் இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ டிஸ்ட்ரிபுயூஷன் முறையில் மட்டுமே படங்களை வாங்குகிறது. இதனால் மணிரத்னம் ரிலீஸுக்கு  முன்பே லாபம் பார்க்கவேண்டும் என ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.அதே போல தெலுங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன்  படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்!

திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்!

சமீப காலமாக கோயில்களின் கொள்ளையடிப்பது அதிகரித்து விட்டது. கோவில்களில் உள்ள சிலையை திருடுவது, உண்டியலை உடைத்து அதில் உள்ள பணம், நகைகளை எடுப்பது சற்று அதிகரித்து வண்ணமாக தான் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

அவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெற்ற சில தினங்களிலேயே தங்க முலாம் பூசிய கலசம் ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.அதனையடுத்து தற்போது திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அழகு சேனை கிராமத்தில் ஸ்ரீ தர்மராஜா ஆலையம் உள்ளது.அந்த ஆலயத்தில் உள்ள  கோபுர கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஒன்பது கலசங்களையும் திருடி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் வாரிசு படம் எப்போது முடியும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

0

விஜய்யின் வாரிசு படம் எப்போது முடியும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மாற்றி மாற்றி நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பை வம்சி நடத்தி வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு குறுகிய பிரேக் எடுத்துக் கொண்டு விஜய் உடனடியாக லோகேஷ் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் தன் குழுவினரோடு விஜய்யை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைராலாகி  வருகிறது.  லோகேஷ் படத்தில் விஜய்க்கு மொத்தம் 6 வில்லன்கள் என்று சொல்லப்படுகிறது. அது சம்மந்தமாக பல யூகங்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?

பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?

புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த தான் இந்த 18 வயதுடைய மாணவி.இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கோட்டுச்சேரியை சேர்ந்தவர் தான் பால் எடிசன்.இவருடைய வயது 33.

இவர் அதேபகுதியில் உள்ள ஹோட்டல்  ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கல்லூரி மாணவி அந்த ஹோட்டல் வழியாக தான் சாலை ஓரமாக நடந்து செல்வார்.இதன ஹோட்டல் ஊழியர் கண்காணித்து வந்துள்ளார்.

அன்று கல்லூரி மாணவி செல்லும்போது அக்கறையோடு பால் எடிசன் அவரை பற்றி விசாரித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அந்த மாணவி கல்லூரிக்கு படிக்க சென்ருள்ளார்.அப்போது தனது வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வலுக்கட்டாயமாக அந்த மாணவியை இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரது பிடியில் இருந்து திமிறிய மாணவி அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தாா்.துரத்தி பிடித்த அவர் இது குறித்து யாரிடமாவது சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.பயத்தில் இது குறித்து மாணவி தனது தாயாரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுள்ளார்.

மாணவியின் தாயார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.பிறகு   கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் பால் எடிசன் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.பட்ட பகலில் ஒரு கல்லூரி மாணவியை இச்சைக்கு அழைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.