Tuesday, July 15, 2025
Home Blog Page 3387

மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

0

மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த சாஹல், தற்போது மீண்டும் தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாஹல் சமூகவலைதளங்களில் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்குக் காரணம் சமீபத்தில் தனுஸ்ரீ தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் தன்னுடைய கணவர் பெயரான சாஹலை நீக்கினார். இதுதான் ரசிகர்களுக்கு விவாகரத்து யூகங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் “விவாகரத்து” தொடர்பான பதிவுகளால் சமூக ஊடகங்களில் பரபரப்பானதைத் தொடர்ந்து, தனது திருமண வாழ்க்கை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைப்பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாஹல், “எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள். தயவுசெய்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பு.” எனக் கூறி பதிலளித்துள்ளார்.

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்  முருகன்.இவருடைய வயது40.

இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்த அரசு பேருந்தில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் சேர்த்து வருகின்றார்கள்.இந்நிலையில் இன்று அரசு பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

நேற்று இரவு 11:30 மணி அளவில் அந்த பேருந்து பரவை கொண்ட மாரி பாலம் அருகே வந்திருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே கவிழ்ந்தது.இந்த விபத்தை கண்ட சக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! 

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியிலுள்ள பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது .அதில் தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சம்பவத்தன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதியது அதனை சாதகமாக பயன்படுத்தி   42 ஆயிரம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடி சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்குள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில்  மூதாட்டி ஒருவர் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது . இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவருடன் பள்ளி கல்வித்துறை ஆணையர் கா.நந்தகுமார் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி உரையாடினார்கள்.

அதனையடுத்து மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகளை தொடர்ந்து தற்போது துறை சார் இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பள்ளி கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம் பாடநூல் கழகம் என ஒவ்வொரு துறை வாரியாகவும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் தற்போதைய நிலை அதற்கான நிதி ஒதுக்கீடு போன்றவைகள் பற்றி சட்டப்பேரவை அறிவிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அந்த ஆலோசனையில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் குறித்து நீதிமன்ற வழக்கு நிலவரம், மழலையர் வகுப்புக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பாகவும் பேசப்பட்டது. கல்வி தொலைக்காட்சிகளில் தலைமை செயல் அதிகாரியாக சிஇஓவாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணி நியமனம் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டது.

அவர் மீது  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ள நிலையில் அவரைப் பற்றி ஆராயும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தனர். அவர் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களில் இருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்து நியமிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

அப்போது அவர் தற்போதுள்ள நிலவரம் படி அரசு பள்ளிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேண்டுமென்பதால் முதுநிலை ஆசிரியர் பணி நியமனம் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் அடிப்படையாக இதர ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள ஆசிரியருக்கான ஊதியத்தை உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம்! எதிரணியை சிதற விட்ட இந்தியா!

0

ஹராரேயில் நடந்த இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி 40.3 ஓவர்கள் தான் தாக்குப் பிடித்தது. அந்த அணியின் கேப்டன் 51 பந்துகளை சந்தித்து 4 பவுண்டர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார்.

110/8 என்ற நிலையில், இருந்த ஜிம்பாப்வே அணி 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் சேர்த்தது. இது வெறும் 11 ஓவர்களில் எடுக்கப்பட்டது. இந்தியா தரப்பில் தீபக் சாஹர் பிரஷீத் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதேபோல முகமது சிராஜ் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. சுப்மன் 82 தங்களுடனும், தவான் 81 ரன்களுடன், ஆட்டமிழக்காமலிருந்தனர்.

ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி சமீபத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், இந்தியா தன்னுடைய முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், வெற்றியைக் கண்டிருக்கிறது. நடைபெறவிருக்கும் ஆசிரியக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும், மொத்தவிருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த தீபக் சாகர் 7 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்!

0

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்!

சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து நான்கு படங்களை சிறுத்தை சிவா அஜித் நடிப்பில் இயக்கினார். அந்த படங்களின் வெற்றியால் ரஜினிகாந்த் சிவாவை தன்னுடைய அண்ணாத்த படத்துக்கு இயக்குனர் ஆக்கினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதையடுத்து சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தன்னுடைய இரண்டு கடைசி படங்களான விஸ்வாசம் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களுக்கு இமானோடு பணியாற்றி வந்தார் சிவா. ஆனால் சூர்யா படத்துக்கு அவர் இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே அனிருத்தோடு விவேகம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை சென்னையில் இந்த படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்றுக் கதைக்களம் கொண்ட இந்த படம் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளது.

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

0

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.

75 வயதான ருஷ்டி, மேற்கு நியூயார்க்கின் சௌடோகுவா நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுக்கு கலை சுதந்திரம் குறித்து உரை நிகழ்த்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஒரு நபர் மேடைக்கு விரைந்து அவர் மீது பாய்ந்து இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பங்கேற்பாளர்கள் தரையில் விழுந்த ருஷ்டியை பிடிக்க உதவினார்கள். இந்த நிகழ்வில் பாதுகாப்பு வழங்கிய நியூயோர்க் மாநில பொலிஸ் படையினர் தாக்குதல் நடத்தியவரை கைது செய்தனர். நியூஜெர்சியில் உள்ள ஃபேர்வியூவைச் சேர்ந்த 24 வயதுடைய ஹாடி மாதர் என்ற நபர்தான் தாக்குதல் நடத்தியவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவர் நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டு வாங்கியவர் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் ருஷ்டியைத் தாக்கிய நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சல்மான் ருஷ்டியின் புத்தகங்களில் வெறும் 2 பக்கங்களை மட்டுமே படித்துள்ளதாகக் கூறியுள்ளார். அப்படி இருக்கையில் எப்படி ருஷ்டி மீது அவருக்கு இவ்வளவு பெரிய அளவில் கோபம் ஏற்பட்டு அவரை தாக்கி இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட நித்யா மேனன்… திருச்சிற்றம்பலம் பார்த்த ரசிகர்கள் கருத்து

0

எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட நித்யா மேனன்… திருச்சிற்றம்பலம் பார்த்த ரசிகர்கள் கருத்து

திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று ரிலீஸான நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று இப்போதே சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். தனுஷ் உள்ளிட்ட அனைவரையும் தூக்கி சாப்பிட்டு படத்தை தாங்கிப் பிடிப்பதே அவர்தான் என்றும், அவருக்காக மீண்டும் படம் பார்ப்போம் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். படத்தில் நித்யா மேனன் தனுஷின் தோழியாக நடித்துள்ளார்.

தாத்தா, தந்தை & மகன் ஆகியோருக்கு இடையிலான பாசப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பாசப் போராட்டமே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது.

இதற்கிடையே தனுஷுக்கு ஏற்படும் காதல் தோல்விகள், அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார், அவருக்கு துணையாக நித்யா மேனன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் உள்ளனர் என்பதை பீல்குட் தன்மையோடு சொல்லியுள்ளார் இயக்குனர். படத்தின் அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்த சிக்கல் இருந்தால் புகார் வழங்கலாம்!

0

ஊழியர்கள் வைப்பு நிதி என்பது ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கான எதிர்கால சேமிப்பாகவும், நிதி ரீதியிலான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக அடிப்படைச் சம்பளம் மற்றும் டியர்னஸ் அலொவன்ஸிருந்து 12 சதவீத தொகை வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு அந்தந்த ஊழியரின் வாய்ப்பு நிதி கணக்கில் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது.

இதே போல ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் சார்பாக ஒவ்வொரு மாதமும் அந்த ஊழியருடைய வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும் அதாவது ஒரு ஊழியரின் சம்பளம் 1,000 ரூபாய் PF பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படுகிறது என்று சொன்னால் அதற்கு சமமான தொகையை சம்பளம் வழங்கும் நிறுவனம் ஊழியரின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் ஊழியரின் PF பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்களிப்பை ஊழியரின் PF கணக்கில் செலுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஒரு நிறுவனம் PF கணக்கிற்கு வழங்கும் 12 சதவீத தொகையில் 8.33% ஊழியரின் ஓய்வூதிய கணக்கில் சேர்க்கப்படும் மீதமுள்ள தொகை பிஎப் கணக்கில் சேர்க்கப்படும் ஒவ்வொரு நிறுவனமும், நிச்சயமாக இதனை செய்ய வேண்டும். ஈ பிஎஃப் சட்டத்தினடிப்படையில் மாதந்தோறும் இந்த தொகையை ஒவ்வொரு நிறுவனமும் ஊழியரின் கணக்கில் செலுத்த வேண்டும். நிறுவனம் அந்தத் தொகையை ஊழியரின் கணக்கில் செலுத்துகிறதா என்பதை ஒவ்வொரு மாதமும் பிஎஃப் கணக்கு போர்ட்டலில் லாகின் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை ஊழியரின் நிறுவனம் pf பங்களிப்பை வழங்கவில்லை என்றால் என்ன நடக்கும்? ஊழியராக நீங்கள் என்ன செய்யலாம்? என்பது தொடர்பாக இங்கே நாம் பார்க்கலாம்.

ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கான வைப்புத் தொகையை செலுத்த தவறவிட்டால் ஊழியர்களுக்கான வாய்ப்பு தொகை அலுவலகத்தில் நிறுவனம் பங்களிப்பு செய்யவில்லை என்பதை புகாராக வழங்கலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி ஒரு நிறுவனத்தின் மீது புகார் பதிவு செய்யப்பட்டால் EPFO அந்த நிறுவனம் PF கணக்கை சரியாக நிர்வாகம் செய்கிறதா? என்பதை ஆய்வு செய்து தெரிந்து கொள்ளும் ஒருவேளை நிறுவனங்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க தவறினால் அதனை கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு அறிக்கை வழங்கப்படும். அது மட்டும் அல்லாமல் ஊழியர்கள் பங்களிக்கும் தொகையையும் சேர்த்து நிறுவனமே செலுத்த வேண்டும் எனவும், வலியுறுத்தப்படும்.

அதோடு மட்டுமல்லாமல் ஊழியர்களுக்கான வாய்ப்புத் தொகை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு அந்த தொகையை செலுத்தாமலிருந்தால் அது கிரிமினல் குற்றம் என கருதப்படும். இந்தியன் பினல் கோட் சட்டப்பிரிவு 406/409ன் கீழ் காவல்துறையில் புகார் வழங்கலாம்
.

ஊழியர்கள் வைப்பு நிதி சட்டத்தினடிப்படையில், நிறுவனத்தின் மீது தவறு என்பது நிரூபணம் செய்யப்பட்டால் நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதன் மூலமாக ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

PF கணக்குகளில் பங்களிப்பு செலுத்த வேண்டிய கால வரம்பு

ஊதியம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட்ட மாதத்திற்கான PF பங்களிப்பை நிறுவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, ஜூலை சம்பளத்தை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிறுவன ஊழியர்களுக்கு வழங்கியிருந்தால் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் ஊழியரின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் PF பங்களிப்பு இரண்டையுமே ஊழியரின் கணக்கில் நிறுவனம் செலுத்த வேண்டும்.

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில்

0

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில்

ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட குல்தீப் யாதவ், கே எல் ராகுல், தீபக் சஹார் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய போட்டியில் விளையாடினர்.

ஆரம்பம் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினர். இதனால் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில் தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை அதிகபட்சமாக கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது. ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் அடித்தனர். 6 மாதத்துக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த தீபக் சஹார் 3 விக்கெட்கள் வீழ்த்தியதற்காக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் போட்டிக்குப் பின்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் “ காயத்தில் இருந்து குணமாகி இந்திய அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற பவுலர்கள்தான் முக்கியக் காரணம். அடுத்தடுத்த போட்டிகளையும் சிறப்பாக விளையாடி தொடரை வெல்ல முயற்சிப்போம்” எனக் கூறியுள்ளார்.