Wednesday, July 16, 2025
Home Blog Page 3389

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!..

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!..

இடுப்பு வலி மிகவும் மோசமான வலிகளுள் ஒன்று. இந்த இடுப்பு வலி பலவகை காரணங்களால் ஏற்படுகிறது.முதலில் குழந்தை பிறக்கும் போது இடுப்பு வலி ஏற்படும்.அதையடுத்து விளையாட்டுகளில் ஈடுபடும் அதிக ஆண்களுக்கு இவ்வலி ஏற்படும். இவை முதியவருக்கு அதிகம் ஏற்படும். இவைகளை சரி செய்ய பல வழிமுறைகள் இருக்கின்றன.
இடுப்பு வலி அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்கவேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும்இ மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.
பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்க வேண்டும் அல்லது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும்இ இடுப்புப் பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் ஆபத்தை ஏற்படுத்தும்.

 

 

 

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

0

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

இலக்கிய பேச்சாளரும் அரசியல் பார்வையாளருமான நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

தமிழக இலக்கிய பரப்பிலும் அரசியல் உலகிலும் தனது பேச்சால் கவன்ம் ஈர்த்தவர் நெல்லை கண்ணன். இவரின் மகாபாரத உரைகள் ஆகியவை தமிழ் மக்களிடையே வெகு பிரபலம். தனது கடலலை போன்ற பேச்சால் தமிழ்க்கடல் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர். இன்று தனது 77 ஆவது வயதில் நெல்லையில் உள்ள தனது வீட்டில் இயற்கை எய்தினார். இதையடுத்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தனது இரங்கலை வெளியிட்டுள்ளார். அதில் “திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்லை கண்ணன். தமிழ்க் கடல் என்றழைக்கப்படும் நெல்லை கண்ணன், பல்வேறு இலக்கியங்கள் தொடர்பாக சுவைபட பேசுவதில் வல்லவர். காமராஜர், கண்ணதாசன் போன்றோருடன் மிகவும் நெருக்கமாக பழகிய அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டு காலம் உறுப்பினராக இருந்த நெல்லை கண்ணன், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில், உடல் நல குறைவு காரணமாக நெல்லையில் உள்ள தனது இல்லத்தில் நெல்லை கண்ணன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கி காமராசர் கதிர் விருது பெற்ற நெல்லை கண்ணன், விழா மேடையிலேயே என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன். நெல்லை கண்ணன் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இலக்கிய அறிவில் செறிந்த பழகுதற்கினிய நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்து இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

10 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஊக்க தொகை… ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

0

10 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஊக்க தொகை… ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

ரஷ்யாவில் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்கள் மதர் ஹீரோ என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக உருவாகியுள்ள நாட்டின் மக்கள்தொகை நெருக்கடியை மீட்டெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அதன் மூலம் ரஷ்ய பெண்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 குழந்தைகளைப் பெற்றெடுக்கவும், அவர்களை உயிருடன் வைத்திருக்கவும் ஒரு மில்லியன் ரஷ்யன் ரூபிள்கள் பணமாக வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது சுமார் 13 லட்சம் ரூபாய் ஆகும். 10 ஆவது குழந்தை பிறந்து ஒரு வயது நிறைவு பெற்றதும் இந்த பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் மூலம் குழந்தைகள் இறந்திருந்தாலும், அந்த குழந்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என சொலல்ப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மதர் ஹீரோயின் என பெயர் வைத்துள்ளனர். இந்த திட்டத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. குறிப்பாக பெண்ணியவாதிகள் இந்த ஆணையைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னர் ரஷ்யா இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட போது அந்த நாட்டில் மரண விகிதம் அதிகமான போது அப்போதைய அதிபர் ஜோசப் ஸ்டாலினும் இந்த ஆணையைப் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில்

0

சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில்

சமீபத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிட்டு பேசி இருந்தார் ரிக்கி பாண்டிங்.

சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா  மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் செய்கிறார், அவர் ஏபி டி வில்லியர்ஸ் செய்ததைப் போல ஷாட்களை ஆடி வருகிறார்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் “ஏபி டி வில்லியர்ஸ் விளையாடிய அளவுக்கு சமீபத்திய வரலாற்றில் கூட அவரைப் போல் யாரும் விளையாடியதில்லை என்று நினைக்கிறேன். அவர் ஏற்படுத்திய தாக்கம், அவரை அவுட் ஆக்க முடியாவிட்டால், போட்டியில் வெற்றி பெற முடியாது என்பது எதிர் அணிகளுக்குத் தெரியும், ”என்று கூறியுள்ளார்.

மேலும் “சூர்யகுமார் யாதவ் இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் திறமையானர். சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் அவரை நேரடியாக ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறீர்களா?. பாண்டிங் இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்க வேண்டும். அவர் இன்னும் பெரிய போட்டிகளில் விளையாடவில்லை. ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஒரு வீரர் இதுவரை இருந்ததில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் அவரை விவ் ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிடலாம்,” என்று பட் மேலும் கூறினார்.

முதலில் கமல் இல்லாத காட்சிகள்… இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்!

0

முதலில் கமல் இல்லாத காட்சிகள்… இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்!

இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் பல தடைகளுக்குப் பிறகு தொடங்க உள்ளது.

1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது விக்ரம் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தை தொடங்குவதில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் சமீபத்தில் மறைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு பதில் வேறு நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

மூத்த நடிகர்கள் கார்த்தி மற்றும் சத்யராஜ் ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. முதலில் கமல் இல்லாத காட்சிகளை ஷங்கர் படமாக்க உள்ளார். அதன் பின்னர் படப்பிடிப்பில் கமல் இணைய உள்ளாராம். அதுபோல காஜல் அகர்வால் செப்டம்பர் 13 ஆம் தேதி ஷூட்டிங்கில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்… உற்சாகத்தில் திரையைக் கிழித்த ரசிகர்கள்? பிரபல திரையரங்கில் நடந்த சம்பவம்!

0

திருச்சிற்றம்பலம்… உற்சாகத்தில் திரையைக் கிழித்த ரசிகர்கள்? பிரபல திரையரங்கில் நடந்த சம்பவம்!

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடி தியேட்டர் ரிலீஸ் படமாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தாத்தா, தந்தை & மகன் ஆகியோருக்கு இடையிலான பாசப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பாசப் போராட்டமே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார். சில கருத்து வேறுபாடுகளால் சில ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாத தனுஷ் மற்றும் அனிருத் காம்பினேஷன் இந்த படம் மூலம் இணைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் இன்று படத்தை மிகவும் ஆர்வமாக பார்த்த ரசிகர்கள் பாடல் ஒன்றுக்கு திரைக்கு அருகே சென்று நடனமாடியுள்ளனர். அப்போது திரை எதிர்பாராத விதமாக திரைக் கிழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக திரையரங்க நிர்வாகம், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல்

0

ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல்

சி எஸ் கே அணியில் இருந்து ஜடேஜா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது. இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், சமூகவலைதளங்களில் ஜடேஜாவை பின் தொடர்வதை நிறுத்தியது. அதுபோல சி எஸ் கே சம்மந்தமான பதிவுகளை ஜட்டு நீக்கினார். இதனால் அவர் தொடர்ந்து சி எஸ் கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜடேஜா சி எஸ் கே அணி நிர்வாகத்தோடு எந்த ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதன் மூலம் அவர் சி எஸ் கே வுக்காக தொடர்ந்து விளையாட விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

வேறு அணிக்கு தாவுவதற்காக அவர் டிரேடிங் விண்டோ மூலமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ்  அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சில அணிகளும் ஜடேஜாவை எடுப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜடேஜாவுக்குப் பதில் ஏற்கனவே அணியில் இருந்த நட்சத்திர வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் எடுக்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டி… இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சு!

0

முதல் ஒருநாள் போட்டி… இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சு!

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.

ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பலம் மிக்க இந்திய அணியை கத்துக்குட்டி அணியாக ஜிம்பாப்வே சமாளிக்குமா என்ற கேள்வியோடு தொடங்கிய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து வெளியேறி வருகின்றனர். தற்போது வரை 8 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா சார்பில் தீபக் சஹார் 3 விக்கெட்கள், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை அதிகபட்சமாக கைப்பற்றினர். இதனால் இந்த போட்டியை இந்தியா எளிதில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த தொடரை ஒளிபரப்ப எந்த முன்னணி தனியார் தொலைக்காட்சி சேனலும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஜிம்பாப்வே எதிரான ஒரு நாள் போட்டியை நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்காது என்பதால் தனியார் தொலைக்காட்சியில் பாராமுகம் காட்டுகின்றன. இதனால் இந்த போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி… மாஸ் போஸ்டருடன் வெளியீடு!

0

சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி… மாஸ் போஸ்டருடன் வெளியீடு!

சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் காட்பாதர் படத்தின் டீசர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பிரித்திவிராஜ் மலையாள படங்களில் நடிக்கவும் படங்களை இயக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை கதாநாயகனாக்கி முதல் முதலாக இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. மலையாள சினிமாவில் முதல் முதலாக 200 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக அமைந்தது லூசிஃபர்.

இதையடுத்து இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன் லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கி வருகிறார். தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்ற, கலை இயக்குனராக சுரேஷ் செல்வராஜன் பணியாற்றுகிறார். தமன் இசையமைக்கிறார். படத்தை பிரம்மாண்டமாக ஆர் பி சௌத்ரி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

அரசியலுக்கு சென்று வந்த பிறகு ஹிட் படம் கொடுக்க முடியாமல் தடுமாறி வரும் சிரஞ்சீவி இந்த படத்தை பெரும் அளவில் நம்பியுள்ளார். இந்த படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வத்திற்கு சவால் விட்ட எடப்பாடி பழனிச்சாமி!

0

ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவு பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே வாதங்கள் யாவும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லாது. ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிவைகள் எம் துரைசாமி, சுந்தர்மோகன், முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள்.