Thursday, July 17, 2025
Home Blog Page 3392

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை

0

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை

நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இன்றளவுக்கு மிகப்பெரிய ஹிட்டாக மாநாடு திரைப்படம் அமைந்துள்ளது. திரையரங்குகளில் மட்டும் 117 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிம்புவின் மார்க்கெட் எக்கச்சக்கமாக விரிவடைந்துள்ளது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சிம்பு அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வரிசையில் இயக்குனர் கோகுல், மிஷ்கின் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபடுகின்றன. அந்த வரிசையில் இப்போது சிம்பு – கமல் கூட்டணி பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. கமலின் ராஜ்கமல் நிறுவனத்துக்காக சிம்பு ஒரு படம் நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குபவர் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. சிம்புவின் சினிமா வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறார்.

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..

 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஜவுளி தொழில் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த ஜவுளி ரகங்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜே என்டர்பிரைஸ் சார்பில் அதிநவீன டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஜக்கார்டு மற்றும் ரேப்பியர் தறி ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.அதன்படி இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக இந்த கண்காட்சி நடந்து வந்தது. இக்கண்காட்சியை வங்கி மேலாளர்கள் முதலில் குத்து விளக்கு ஏற்று துவக்கி வைத்தனர். இதில் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

இதில் சேலை ரகங்கள் ஏற்றார் போல் டிஜிட்டல் முறையில் இயக்கக்கூடிய ரேபியர் தறி மற்றும் எலக்ட்ரானிக் ஜக்கார்டு மிஷின் கண்காட்சியில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ஊர்களில் இருந்து விசைத்தறி உரிமையாளர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்த கண்காட்சியினை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த கண்காட்சியில் விசைத்தறி உரிமையாளர்கள் மிஷின் வாங்க வங்கி மூலம் கடன் பெறுவதற்காக கண்காட்சி வளாகத்திலேயே தனியார் வங்கிகளும் அரசு வங்கிகளும் முகாமிட்டு தயாராக இருந்தனர். முகாமிற்கான ஏற்பாட்டினை டிஜே என்டர்பிரைஸ் நிர்வாக இயக்குனர் துரைசாமி மற்றும் சுமதி துறை சாமி சுரேந்தர்,ரோஹித் ஆகியோர் செய்து இருந்தனர். இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் விறுவிறுப்பாக அவற்றையெல்லாம் பார்வையிட்டு வந்தனர்.

இனி இந்த சேவையை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

0

இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மத்திய, மாநில, அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மானியங்கள் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட 99 சதவீத பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன் அடிப்படையில் ஆதார் அட்டை பெறாதவர்கள் அரசு வழங்கியிருக்கின்ற மற்ற அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மூலமாக சேவைகளை பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் அல்லது பதிவு சீட்டை தாங்கள் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த வாரம் அனைத்து மத்திய, மாநில, அரசுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.

அதேபோல மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த உதவிகளை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் சில குறிப்பிட்ட சான்றிதழ்களை அரசிடமிருந்து பெற வேண்டும். அந்த சான்றிதழ்களை பெறுவதற்கு ஆதார் எண் அல்லது விண்ணப்ப ஒப்புகை சீட்டு இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே ஆதார் எண் உள்ளிட்டவற்றை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலமாக தாங்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் வெளியே கட் செய்வதை சிலர் விரும்பவில்லை. இதனை எதிர்கொள்வதற்கு வி ஐ டி என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் ஐடென்டிஃபையர் என்ற சேவையை சமீபத்தில் யூ ஐ டி ஏ ஐ அறிமுகப்படுத்தியது. அதனடிப்படையில், ஆதார் எண் இருப்பவர்கள் இணையதளம் மூலமாக தங்களுடைய 12 இலக்கு ஆதார் எண்ணை பதிவு செய்தால் அவர்களுக்கு 16 இலக்க தற்காலிக எண் வழங்கப்படும். இந்த எண்ணை தெரிவித்து பயனாளர்கள் சேவைகளை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் சில சமூக நலத்திட்ட உதவிகள் எந்த விதமான சிக்கலுமின்றி செயல்பட முழுமையான ஆதார் எண் அவசியம் என்பதால் தொடர்புடைய துறைகள் மட்டும் பயனாளிகளிடம் முழுமையான ஆதார் எண்ணை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்

0

சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்

தனுஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில் இன்று திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூலம் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் காம்பினேஷன் இணைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல்களை தனுஷே எழுதியுள்ளார். வெளியான பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

தனுஷ் நடிப்பில் வெளியான ஜாலியான படங்கள் வரிசையில் இந்த படமும் இணைந்துள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பாசப் போராட்டமே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார்.

இன்று இந்த படம் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இந்த படத்துக்காக திரையிடப்படவில்லை. வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை 4 மணிக் காட்சிகள் திரையிடப்படும். அனால் கடைசியாக வெளியான விருமன் படத்துக்கும் திருச்சிற்றம்பலம் போல அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கு போட்டியாக ரியல் எஸ்டேட் பிசினஸில் குதித்த பெண்கள்! காரணம் இதோ!

0

பெண்கள் தங்கத்தை வாங்குவதிலும், ஆண்கள் நிலத்தை வாங்குவதிலும், ஆர்வம் காட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் சமீபகாலமாக பெண்கள் தங்கத்தை விட நிலம் வாங்குவதில் தான் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள்.

இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்களுடைய தேவைகளை பல முதலீட்டு திட்டத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் நோய்த்தொற்று காலகட்டத்தில் திடீரென்று வருமானமில்லாமல் தவித்த நிலையில், பலருக்கு அவர்கள் ஏற்கனவே பல முதலீடுகளில் பணத்தை சேமித்து வைத்தது தான் உதவியாக இருந்தது.

இந்த சூழ்நிலையில்தான் நோய் தொற்று தாக்கத்திற்கு பின்னர் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பொதுமக்களிடையே முன்பை விடவும், தற்போது அதிகமாக காணப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதிலும், ஆண்கள் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வதிலும், ஆர்வம் காட்டுவார்கள். ஆனாலும் இந்த சூழ்நிலை தற்போது மாறியிருக்கிறது. பெண்களுக்கு படிப்படியாக நிலம் வாங்குவதில் தங்களுடைய ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

பெண்கள் என்றாலே தங்கத்தின் மீதான மோகம் அதிகமிருக்கும் இந்த நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய பெண்கள் ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன? என நாமும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில், தங்கம் ஒரு நல்ல முதலீட்டு தேர்வாகவும், உடனடி நிதி இலக்குகளை அடைய உதவும் குறுகிய கால முதலீடாகவும், கருதப்படுகிறது.

இருந்தாலும் ரியல் எஸ்டேட் என்பது நிலையான முதலீடாகவும், இருந்து வருகிறது. தற்போது ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியடைந்து வருவதால் பங்குச்சந்தையை விட ரியல் எஸ்டேட் மிகச் சிறந்த வருமானத்தை கொடுக்கின்றது.

ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும், தங்கத்தை விட ரயில்வே ஸ்டேட் துறையில் முதலீடு செய்வது எப்போதும் சிறந்த வழியாக இருக்கும். நிலம், வீடு, உள்ளிட்ட ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது வரிச்சலுகைகள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன.

ரியல் எஸ்டேட் துறையில் பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் வங்கிகள் பல முயற்சிகளையும், சலுகைகளையும், வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பல பொதுத்துறை வங்கிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் கடன்களை வழங்கி வருகிறது. அதோடு பெண்கள் பெயரில் எந்த வகையான சொத்துக்களுக்கும் முத்திரை வரிவிலக்கு வழங்கி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியை அதிகரிக்கும் பணமதிப்பு மற்றும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் உள்ளிட்டவை இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது.

அதே சமயம் வீடு, நிலம், உள்ளிட்டவற்றை வாங்குவது போன்ற ரியல் எஸ்டேட்டில் முன்னெடுக்கப்படும் முதலீடு பொருளாதாரத்தின் வளர்ச்சியை எளிதாக அதிகமாக்க உதவுவதாக இருக்கிறது. அதோடு தங்கம் மூலதன பொருள் மற்றும் எரிபொருள் போன்ற பொருட்களின் விலை உயருவதற்கு வழிவகை செய்கிறது.

இதுபோன்ற பல்வேறு நன்மைகள் உள்ளதால் ஆண்களுக்கு போட்டியாக தற்போது பெண்களும் வீடு, நிலம், வீட்டுமனை தோட்டம், உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதே நேரம் தங்களிடமிருக்கின்ற பணத்தை வைத்து நகை சீட்டுகள் போட்டு தங்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருகிறார்கள். பெண்கள் என்னதான் கணவர்கள் அல்லது பெற்றோர்கள் கடைசிவரையில் உடனிருந்தாலும் தங்களுக்கென ஒரு முதலீடு தேவை என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

“ஷேன் வார்னும் நானும் ரகசிய உறவில் இருந்தோம்…” உலக பிரபலம் வெளியிட்ட சீக்ரெட்

0

“ஷேன் வார்னும் நானும் ரகசிய உறவில் இருந்தோம்…” உலக பிரபலம் வெளியிட்ட சீக்ரெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த போது மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் ஷேன் வார்ன். இவரின் மாயாஜால சுழலில் சிக்கி பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகுகளில் ஒன்று. உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக இன்று வரை இருந்து வரும் ஷேன் வார்ன் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த போது இயற்கை எய்தினார்.

ஷேன் வார்னின் கிரிக்கெட் வாழ்க்கையப் போல அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. பல பெண்களோடு செக்ஸ் உறவில் இருந்த ஷேன் வார்ன் அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தவர்.

இந்நிலையில் இப்போது உலகின் அழகான பாட்டி என அழைக்கப்படும் ஜினா ஸ்டிவார்ட் தான் ஷேன் வார்னுடன் உறவில் இருந்ததை வெளிப்படுத்தியுள்ளார். அவர் “கடந்த சில மாதங்களாக நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். உலகம் ஒரு லெஜண்ட்டை இழந்தது, நான் ஒரு நண்பரையும் நம்பிக்கையாளரையும் இழந்தேன். நினைத்துக்கூட பார்க்க முடியாதது நடந்தது. நான் ஷேனுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தேன் ஆனால் அது யாருக்கும் தெரியாது. அவர் அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினார்.” என்று கூறியுள்ளார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு தங்கள் சந்திப்பு நடந்தது குறித்து “அவர் கோல்ட் கோஸ்டுக்கு வந்தார். கிரிக்கெட் விளையாட்டிற்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தேன். நாங்கள் சந்தித்து இரவு முழுவதும் பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டோம். நான் அவரை மிகவும் சுவாரஸ்யமானவராக உணர்ந்தேன். அவருடைய வாழ்க்கையைப் பற்றியும், அவரைப் பற்றிக் கேட்பதற்கு எனக்குப் பிடித்திருந்தது. நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம், எங்கள் கதையை மக்கள் பார்வையில் இருந்து ரகசியமாக வைப்பேன் என்று அவரிடம் வாக்குறுதி அளித்தேன்.” எனக் கூறியுள்ளார்.

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகளை சூடாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.காலை வேலையில் அருகம்புல் சாறு,எலுமிச்சை,பூசணி, மணத்தக்காளி,வாழைத்தண்டு மற்றும் வல்லாரை ஆகியவற்றில் சாறு எடுத்து சூடாக காலையில் குடிக்க வேண்டும்.உளுந்து, கோதுமை ஆகியவற்றை ஊற வைத்து வடிகட்ட வேண்டும். பின்பு அதனை பருத்தி துணியால் மூடி வைக்க வேண்டும். அவ்வாறு மூடி வைத்தால் பயறு வகைகள் முளைத்து விடும். அவ்வாறு முளைத்த பயறு வகைகளுடன் தேங்காயை துருவிப்போட்டு சாப்பிடலாம். கேழ்வரகு கூழ், கோதுமை கஞ்சி ,அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றை சூடாக சாப்பிடலாம்.சூடான இட்லியை காலை உணவாக சாப்பிடலாம்.

 

மதிய வேலையில் அதிகளவில் கீரைகளையும் கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது. சாப்பிடக்கூடிய உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும். அசைவ உணவுகளான மீன் ,முட்டை, இறைச்சி ஆகியவற்றை மதிய உணவாக சாப்பிடலாம். கோழிக்கறி சூப்,ஆட்டுக்கால் சூப் வைத்தும் குடிக்கலாம்.தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது. மீன்களில் அதிக அளவு ஜிங்க் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். மாலை நேரத்தில் குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இரவு வேலையில் இட்லி ,தோசை, சப்பாத்தி,இடியாப்பம், உப்புமா மற்றும் சேமியா ஆகியவற்றை இரவு உணவாக சாப்பிடலாம். ஐந்து முந்தரி பருப்பை அல்லது பாதாம் பருப்பை ஊறவைத்து அதனுடன் அரை கப் தேங்காய் துருவிப்போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தால் இயற்கை பால் தயாராகி விடும். அதன்பின் பால் அருந்துவதற்கு பதில் இயற்கை பாலை பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள்,மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஜலதோஷம் தொடர்பான பிரச்சனைகள் வராது.மேற்கூறிய உணவுகளை சரியான நேரத்தில்  உட்கொண்டு வந்தால் நாம் ஆயுள் முழுக்க கடைசி வரை ஆரோக்கியமாக வாழலாம்.

இன்று முதல் ஒருநாள் போட்டி… இந்தியாவை சமாளிக்குமா கத்துகுட்டி ஜிம்பாப்வே!

0

இன்று முதல் ஒருநாள் போட்டி… இந்தியாவை சமாளிக்குமா கத்துகுட்டி ஜிம்பாப்வே!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. ஜிம்பாப்வே போன்ற நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாடினால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பொருளாதார ரீதியில் பலன் கிடைக்கும் என்பதால் இந்த தொடரை ஜிம்பாப்வேயில் நடத்துகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா, கோலி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

இதையடுத்து இன்று முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. பலம் மிக்க இந்திய அணியை கத்துக்குட்டி அணியாக ஜிம்பாப்வே சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த தொடரை ஒளிபரப்ப எந்த முன்னணி தனியார் தொலைக்காட்சி சேனலும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஜிம்பாப்வே எதிரான ஒரு நாள் போட்டியை நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்காது என்பதால் தனியார் தொலைக்காட்சியில் பாராமுகம் காட்டுகின்றன. இதனால் இந்த போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

இந்திய அணி

கே எல் ராகுல், ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.

“கனவு நனவாகிடுச்சு… “ இந்திய அணிக்காக செலக்ட் ஆகிய இந்திய வீரர் மகிழ்ச்சி

0

“கனவு நனவாகிடுச்சு… “ இந்திய அணிக்காக செலக்ட் ஆகிய இந்திய வீரர் மகிழ்ச்சி

இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாடும் தொடரில் ஷபாஸ் அகமது கடைசி நேரத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியதால், மற்றொரு இளம் வீரரான ஷபாஸ் அகமதுக்கு அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் தனது கனவு நிறைவேறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளை ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாடுகிறது. முதலில் ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கே எல் ராகுல் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்தில் நடந்த ராயல் லண்டன் தொடரில் விளையாடும்போது காயம் அடைந்ததன் காரணமாக அணியில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக இளம் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். இப்போது இந்திய அணிக்குள் இடம்பெற்று அறிமுக தொடரில் விளையாட உள்ளார். இந்நிலையில் நாட்டுக்காக விளையாடும் கனவு நிறைவேறியுள்ளதாகக் கூறியுள்ள அவர் “கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு தனது சொந்த நாட்டுக்காக விளையாட வேண்டுமென்ற கனவு இருக்கும். எனக்கு இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது. இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பைக் கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

0

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பெண் கேபின் க்ரூ வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றுக் கொள்ளலாம்.

ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இதற்கான நேர்காணல் நடைபெறுகிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FRESHERS CAN APPLY FOR FEMALE CABIN CREW POST @AIR INDIA RECRUITMENT 2022

நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா (Air India)

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.airindia.in

வேலைவாய்ப்பு வகை Central Government Jobs 2022

Recruitment Air India Recruitment 2022

Air India Address Airlines House, 113 Gurudwara Rakabganj Road, New Delhi, Delhi, 110001

அரசு வேலைகளில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். கல்வித்தகுதி, வயது, காலியிடங்கள், பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரி பார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Female Cabin Crew

காலியிடங்கள் Not Mentioned

கல்வித்தகுதி 12th

வயது வரம்பு அறிவிப்பைப் பார்க்கவும்

அனுபவம் புதியவர்

பணியிடம் Jobs in Chennai

சம்பளம் 18 to 27

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு/தனிப்பட்ட நேர்காணல்/மருத்துவத் தேர்வு/ நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் As Per Notice

விண்ணப்பிக்கும் முறை Walk in Interivew

இன்டர்வியூ நடைபெறும் முகவரி Hilton Hotel,
124/1, jawaharlal Nehru Salai,
poomagal Nagar,
Guindy, Chennai.

அறிவிப்பு தேதி: 16 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி: 23 ஆகஸ்ட் 2022

Air India Recruitment 2022 Notification Details