Sunday, July 13, 2025
Home Blog Page 4222

பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!

0

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

சென்னை கிண்டி மதுவின்கரையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக இன்றைய தினம் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக மிக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் பிரச்சனையே இல்லாத ஒரு நகரமாக சென்னை மாற்றப்படும். 10 வருடகாலமாக செயல்படாமல் இருக்கும் தண்ணீர் தொட்டிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியன்.

தடுப்பூசி தொடர்பாக உரையாற்றிய அவர் கேரள மாநில எல்லைப் பகுதியில் இருக்கின்ற 9 கிராமங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. அந்த பகுதியில் 100% தடுப்பூசி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசிடம் வலியுறுத்த ப்பட இருக்கிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

அதோடு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறந்தவுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது என சொல்லப்படுவது தவறான விஷயம். பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவது என்பது சாத்தியமற்ற நிகழ்வு ஏற்கனவே நோய்த்தொற்று இருப்பவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அது கண்டறியப்பட்டு இருக்கிறது. தற்சமயம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், இதுவரையில் 5 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கல்லூரி மாணவி ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

0

விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

தாராபுரம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரைபட்டி சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் சூரியகுமார் வயது இருபத்தி ஒன்று. இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் இருந்ததால், இவர் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாராபுரம் அருகே கொண்டரசம்பாளையத்தில் உள்ள அவரது அத்தை மீனாட்சியின் வீட்டிற்கு வந்தார். அத்தை விருந்துக்கு தயார் செய்த நிலையில் திடீரென்று சூரியகுமார் காணவில்லை. வேறு பகுதிக்கு செல்வதாக அத்தையிடம் கூறாததால் அவரது அத்தை அதிர்ச்சி அடைந்துவிட்டார். இதையடுத்து அவரை பல்வேறு இடங்களிலும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் நேற்று காலை அவரது அத்தை மீனாட்சி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் எல்லாம் அவரைத் தேடி பார்த்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சூரியகுமாரின் காலடிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் தீயணைப்பு துறையின் அலுவலர் ஜெயச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி சூரியகுமார் உடலை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவர் கிணற்றில் அவரே விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பிய அதிரடி சுற்றறிக்கை!

0

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பின்னர் சென்ற ஒன்றாம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பை தொடர்ந்து மாணவர்கள் நோய்தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவிகளை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் மாவட்ட கண்காணிப்பாளர் அளவிலான காவல்துறை அதிகாரி, சமூக பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் உளவியல் நிபுணர் போன்றோர் அடங்கிய ஒரு குழுவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கின்ற அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல், போன்ற பணிகளை வேகமாக செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவிகளை பாதுகாப்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அந்த சுற்றறிக்கையில் தெரிவித்து இருக்கிறது,

எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

0

இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சமயத்தில் அவர் ஒரு சில விஷயங்களை முன்வைத்தார் அதாவது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது வேடிக்கையாக இருக்கிறது இருந்தாலும் அதே சமயத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

தற்போது இருக்கும் தமிழக அரசு மாநில பாஜக நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பது இல்லை அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை உண்டு ஆனால் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை விரைவில் நேரில் சந்திக்க இருக்கிறேன். பொதுச் சொத்துக்கள் உள்கட்டமைப்பு உடன் கூடிய நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு தான் மத்திய அரசு விடுகின்றது. அதனை மத்திய அரசு தனியாருக்கு விற்று விட்டது என்று சட்டசபையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது கண்டனத்திற்குரிய செயல் என கூறியிருக்கிறார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் இணையதளத்தை சிறிது பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மூன்று லட்சம் கோடி கடன் இருந்தது. அதனை மத்திய அரசு செலுத்தி வருகின்றது மிக விரைவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!

0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்துகொண்டு இருக்கின்றன. நோய் தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல் கடந்த மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யாமல் இருந்த இந்த நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் மூன்றாவது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 08 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 93 ரூபாய் 38 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி!

0

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகின்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 191ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாகூர் 52 விராட்கோலி 52 சேர்த்தார்கள் இங்கிலாந்து அணியின் சார்பாக வோக்ஸ் 4 விக்கெட்டுகள் மற்றும் ராபின்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆரம்பித்தது முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்தது. மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த சூழ்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்றையதினம் ஆரம்பமானது. மலான் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ் டோவ் 37 ரன்னும் மொயின் அலி 35 ரன்னும் சேர்த்தார்கள்.

ஒன்லி போப் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து 81 ரன்னில் வெளியேறினார். இறுதியில் கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் சார்பாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தாக்கூர், சிராஜ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக விளையாடினார்கள் 2-வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா விக்கெட் இழக்காமல் 43 ரன்கள் சேர்த்து இருந்தது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்னுடனும், களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ரன்னை விட இன்னும் 56 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போகிறதா?

0

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என்று இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. அதில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பதவிகளும் இருக்கிறது. பல மாவட்டங்களில் இருந்த சில ஊர்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக, 9 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.

அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதுவரையில் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இதில் விடுபட்டு இருக்கின்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது பல காரணங்களை முன்வைத்து தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

சமீபத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருக்கிறது. செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்த சூழ்நிலையில், மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்திருக்கிறது.

பரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக் வரவேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன்!

0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி ஆரம்பித்து நடந்து வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டு போட்டிகளில் 162 நாடுகளை சார்ந்த 4 403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற இருக்கின்ற நிலையில், இதுவரையில் இந்தியா 2 தங்கம் 6 வெள்ளி 5 வெண்கலம் என்று 13 பதக்கங்களை வென்றிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் dd61 போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேலு என்பவர் பங்கேற்றார். இவர் ஏற்கனவே சென்ற 2016 ஆம் வருடம் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். ஆகவே இந்த முறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப்பதக்கம் அவர் வென்றிருக்கிறார்.

மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றிருக்கிறார். மற்றொரு வீரர் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்த சூழ்நிலையில், மாரியப்பன் தங்கவேலு ஜப்பானிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தார். டெல்லி வந்து சேர்ந்த அவரை தமிழக அரசின் சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று வரவேற்று வாழ்த்துக்களை கூறினார்.

என் வாழ்வாதாரத்தை மீட்டுத்தாருங்கள்! டிஜிபியிடம் கண்கலங்கி புகார் அளித்த 14 வயது சிறுமி!

0

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி உயிரிழந்த தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான டிராக்டர், கலப்பை, போன்ற உடைமைகளை மீட்டுத்தருமாறு தமிழக காவல்துறை இயக்குனரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் வைராபாளையம் பகுதியைச் சார்ந்தவர் சிறுமி தர்ஷனா இவர் தன்னுடைய தந்தையின் உடைமைகளை மீட்டுத் தரவேண்டும் என்று தெரிவித்து தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் சந்தித்து புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அந்த புகார் மனுவில் என்னுடைய சொந்த ஊரான கருவூரில் இருக்கின்ற ஓம் அந்த ஊரில் என்னுடைய தாய் தந்தை வசித்து வந்தார்கள். கடந்த 2014ஆம் வருடம் என்னுடைய தந்தை உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். என்னுடைய தந்தைக்கு சொந்தமான டிராக்டரை என்னுடைய தந்தையின் அக்கா மகன் பூபாலன் என்பவர் கந்து வட்டி என்ற பெயரில் பல தில்லுமுல்லு வேலைகளை பார்த்து டிராக்டரை எடுத்துச் சென்று மறைத்து வைத்து விட்டார் என தெரிவித்திருக்கிறார் அந்த சிறுமி.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தேன் ஆனாலும் அவர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்கள். கடந்த 8 மாத காலமாக பூபாலன் என்பவரால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். இறந்துபோன என்னுடைய தந்தையின் மீது பொய்யான கணக்குகளை துண்டு சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு என்னையும் என்னுடைய பாட்டியையும் மிகவும் தரக்குறைவாக அவர் வசைபாடி வருகிறார்.

தன்னுடைய சுயநலத்திற்காக வாங்காத கடனுக்கு என்னுடைய தந்தையின் மீது வீண் பழி சுமத்தி வருகிறார். என்னுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அவரிடம் இருக்கின்ற என்னுடைய தந்தையின் டிராக்டர் இருசக்கர வாகனம் கலப்பை நகை அடகு சீட்டு ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை மீட்டுத் தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அந்த சிறுமி அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்!

0

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்!

காதல் திருமணம் செய்வது தற்போதைய கால சூழலுக்கு தவறு கிடையாது. ஆனால் சில பெற்றோர் மட்டும் இன்னும் கொஞ்சம் பிடிவாதமாகவே உள்ளனர். அதுவும் சில உள் கிராமங்களில் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. காதல் திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்திலேயே அண்ணன் தாக்கியிருக்கும் விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் காவலர்களுக்கு மத்தியிலேயே இந்த செயல் நடைபெற்று இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், பேட்டை கோடீஸ்வரன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் 25 வயதான இவரும், திருநெல்வேலி நகரம் பழனி தெருவை சேர்ந்த ரம்யா என்ற இருபத்தி ஒரு வயது பெண்ணும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு ரம்யாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ரம்யா அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார்.

அதன் காரணமாக இன்று அவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளே சென்றனர். பெற்றோர் ஒத்து கொள்ளாததன் காரணமாக இரு வீட்டு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேசி உள்ளனர். அங்கு வந்த ரம்யாவின் சகோதரன் அவர்களை மணக்கோலத்தில் பார்த்து அதிர்ந்ததோடு, கையில் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு ரம்யாவை பலமாக தாக்கி உள்ளான்.

அப்போது தடுக்க வந்த ரம்யாவின் கணவனையும் சரமாரியாக குத்தி விட்டான். அதன் காரணமாக போலீசார் அவர்கள் இருவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ரம்யாவின் அண்ணனான ராம் குமாரையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். அப்போது அவர் கூறுகையில் ரம்யா சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக தனக்கு ஆத்திரம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.