Friday, July 25, 2025
Home Blog Page 4549

லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து! 17 பேர் உடல் நசுங்கி பலி!

0

உத்தரப்பிரதேசத்தில் லோடு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சச்சென்டி பகுதியில் லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த லோடு ஆட்டோ மீது மோதிய பேருந்து, பாலத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

0

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து மூன்று பேர் கொண்ட குழு அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த உள்ளது. இந்தக் குழுவில் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோர்  உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

அனூப் சந்திர பாண்டே உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் தலைமைச் செயலாளராக பணியாற்றியுள்ளார். 1984ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அனூப் சந்திர பாண்டே, மூன்று ஆண்டுகள் பணிபுரிவார் என்றும், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மின்சார நிறுவனங்களை வாங்குகிறது டாட்டா! மத்திய அரசு அனுமதி!

0

ஒடிசா மாநிலத்தில் மின்சாரம் விநியோகிக்கும் மூன்று நிறுவனங்களின் பங்குகளை டாட்டா நிறுவனம் பெறுவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

வெஸ்டர்ன் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஓடிசா, சதர்ன் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஓடிசா மற்றும் சென்ட்ரல் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஒடிசா ஆகிய 3 நிறுவனங்களின் தலா 51% பங்குகளை டாட்டா பவர் கம்பெனி பெறுவதற்கு போட்டியில் சட்டம் 2002, பிரிவு 31 (1) இன் கீழ் இந்திய போட்டியில் ஆணையகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மின்சாரச் சட்டம் 2003, பிரிவு 20 இன் கீழ் ஒடிசா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரத்தியேக ஏல நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஒடிசா தொகுப்புக் கழகத்திடம் இருந்து ஒவ்வொரு  நிறுவனத்தின் 51% பங்குகளை டாட்டா நிறுவனம் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ராசிக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்! இன்றைய ராசி பலன் 09-06-2021 Today Rasi Palan 09-06-2021

0

 

இன்றைய ராசி பலன்- 09-06-2021,

நாள் : 09-06-2021,

தமிழ் மாதம்: 

வைகாசி 26, புதன்கிழமை

சுப ஹோரைகள்

காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இராகு காலம்:

மதியம் 12.00-1.30

எம கண்டம்: 

காலை 07.30-09.00, ,

குளிகன்:

பகல் 10.30 – 12.00,

திதி:

தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 01.58 வரை பின்பு அமாவாசை

நட்சத்திரம்:

கிருத்திகை நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு ரோகினி.

 

அமிர்தயோகம் காலை 08.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. போதாயண அமாவாசை.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் உதவிகள் கிட்டும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார நட்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே உடல் ஆரோக்கிய ரீதியாக செலவுகள் ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சினை தீரும். தெய்வ வழிபாடு நல்லது.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உங்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் பெருகும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

செல்வம், ஆரோக்கியம் அள்ளி தரும் கருமஞ்சள்! எண்ணற்ற கருமஞ்சளின் பயன் இதோ!

செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருமஞ்சள் பயன்கள் பற்றி இங்கு காண்போம். வறுமையிலும் பணக் கஷ்டத்தில் இருப்பவருக்கு நல்ல பலனை தரக்கூடியது இந்த கருமஞ்சள்.

 

1. இந்த கரு மஞ்சளை கல்லில் உரசிப் திலகமிட்டு சென்றால் பழங்காலமாக வராத பணமும் வந்து சேரும்.

2. பச்சை பட்டு துணியில் எந்த கருமஞ்சளை சுற்றி தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் குபேரன் வாசம் செய்வார்.

3. இது வீட்டில் இருந்தால் நீண்ட நாட்களாக தடைப்பட்டுப் போன காரியம் நடக்கும்.

4. குக்குமின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

5. ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 சொட்டு இந்த கருமஞ்சள் நீரை கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

6. கருமஞ்சள் பொடியை ஒரு சிட்டிகை எடுத்து பல் துலக்கி வந்தால் பல் ஈறுகளில் வீக்கம் ரத்தம் கசிதல் சரியாகும்.

7. பெண்கள் இந்த கருமஞ்சள் பொடி அல்லது பச்சையாக அரைத்த மஞ்சளை 28 நாட்களுக்கு பூசி வர முகத்தில் கரும்புள்ளி கருந்திட்டுக்கள் அனைத்தும் மறையும்.

8. கால் டீஸ்பூன் கருமஞ்சள் சாறை தேனுடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வரும் பொழுது நுரையீரல் பிரச்சனை நீங்கும். ஆஸ்துமா குணமடையும்.

9. தடைப்பட்ட மற்றும் நாள்பட்ட மாதவிடாய் சீரற்ற மாதவிடாய் அல்சர் போன்ற நோய்களுக்கு இதை கரு மஞ்சளை அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வர சீரடையும்.

இதுமட்டுமின்றி இந்த மஞ்சளில் காளி மற்றும் கால பைரவர் வாசம் செய்வதால் இதனை வசியம், தன வசியம் போன்ற காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஏழரை சனி உள்ளவர்கள் இதனை திலகமாக இடும்பொழுது தாக்கம் குறையும். காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

 

திருமண மேடையில் ஆடச் சொன்ன மணமகன்! மணமகள் செய்த காரியம்!

0

உத்திரபிரதேசத்தில் குடித்துவிட்டு மணமேடையில் வந்து நடனமாடும் படி வற்புறுத்திய மணமகனை கண்டு மணமகள் ஆத்திரத்தில் திருமணத்தையும் நிறுத்தி வரதட்சனையும் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்ய ராஜ் மாவட்டத்தில் உள்ள திகிரி கிராமத்தில் விவசாயி ஒருவரின் மகளுக்கும், ரவீந்திர பட்டேல் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு இருவீட்டாரும் மற்ற வேலைகளை கவனித்து வந்தனர். சனிக்கிழமை அன்று திருமணம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அன்று நடந்த சம்பவம் திருமணத்தையே நிறுத்தி உள்ளது.

 

திருமணத்தன்று மணப்பெண் மேடையில் தயாராக இருந்த நிலையில் மகனும் அவரது நண்பர்களும் குடித்துவிட்டு மேடைக்கு வந்துள்ளனர், மேடைக்கு வந்த மணமகன் மணமகளை தன்னுடன் நடனம் ஆடும்படி கேட்டுள்ளார், மணமகள் மறுத்ததால் கோபமடைந்த மணமகன் மணப்பெண் இடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார். இதனை பார்த்த மணப்பெண் மற்றும் பெண் வீட்டார்கள் திருமணத்திற்கு முன்பே குடித்துவிட்டு கலாட்டா செய்யும் இவனை எப்படி ஏற்றுக் கொள்வது என திருமணத்தையே நிறுத்தி உள்ளார்கள். கொடுத்த வரதட்சணை உடனே கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

போலீசாருக்கு எப்படியோ தகவல் தெரிந்த நிலையில், அங்கு வந்த போலீசார் இடம் மணமகன் வீட்டார், மணப்பெண் மற்றும் மணப் பெண் வீட்டாரை சமாதானம் செய்யுமாறு கூறியுள்ளனர், போலீசார் எடுத்துக்கூறிய நிலையிலும் மணப்பெண் மற்றும் மணப்பெண் வீட்டார் திருமணத்திற்கு முன்பே குடித்துவிட்டு இப்படி செய்வதால் திருமணத்திற்குப் பின் என்னை எந்த பாடு படுத்துவார்கள் என மணப்பெண் உறுதியாக மறுத்துவிட்டார். உடனடியாக வரதட்சணையை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். மேலும் போலீசார் வரதட்சினை திருப்பித் தருமாறு மணமகன் வீட்டாரிடம் அறிவுறுத்தி சுமூகமாக முடித்து விட்டனர்.

 

செய்தியை அறிந்த மக்கள் மணப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே தைரியமான இந்த முடிவை எடுத்தது மிகவும் நல்லது என்று பாராட்டி வருகின்றனர்.

 

 

 

 

 

இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்!

இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்!

நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விசயமே எடுத்துக்காட்டாக உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்களின் மீது ஒரு கண் இருக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்னும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். அவர்கள் இருவரும் தொடர்ந்து சமூகவலைதளத்தில் நீண்ட நேரம் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஒருகட்டத்தில் அந்த இளைஞர் மாணவியிடம் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண்ணிற்க்கு ஆபாச ஆசையை தூண்டும் வகையில் பல்வேறு புகைப்படம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர்கள் மாணவியிடம் விசாரணை செய்ததில் அவருக்கு ஃபேஸ்புக் மூலம் பழகிய இளங்கோ என்ற இளைஞர் ஆபாசமான படங்களை அனுப்பியும் பேசியும் பெண்ணை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இடம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருத்தணி காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இளங்கோ என்கின்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் டிப்ளமோ படித்துவிட்டு ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவரை கைது செய்துள்ளனர்.

“இவன் என் நண்பன்”! “இவன் கூட அத பண்ணு” மனைவியை கட்டாயப்படுத்திய கணவன்!

0

குடி போதைக்காக தன் மனைவியை தன் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்திய கணவன் மீது மனைவி போலீசில் புகார் செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்லார் பாளையத்தில் ஜெயமணி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது இவர் மனைவி பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த புகாரில், எங்கள் இருவருக்கும் 2018 திருமணம் நடந்தது. எனது கணவர் அதிக குடிப்பழக்கம் உடையவர். குடிப்பழக்கத்திற்கு எதையும் செய்யும் கொடூரமானவர். நான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது சத்து மாத்திரை என்று கூறி மயக்க மாத்திரையை கொடுத்து அவர் நண்பரான சுந்தர மூர்த்தி என்பவரை வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது எனக்கு மயக்கத்தில் இருந்ததால் விஷயம் தெரியாது. சில தினங்களுக்கு முன் மணிகண்டன் என்ற ஒருவரை கூட்டி வந்து அவருடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு என்னை கட்டாயப் படுத்தினார். நான் எவ்வளவு தடுக்க முயன்றும் என்னால் தப்ப முடியவில்லை. அப்பொழுதுதான் நான் கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் சுந்தரமூர்த்தி என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்ட உண்மையை என்னிடம் கூறினார். இந்த உண்மையை வெளியே சொன்னால் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொல்வேன் என மிரட்டினார். சில தினங்களுக்கு முன் மீண்டும் ஒரு சிலரை கூட்டி வந்து கூட்டு பாலியல் வைத்துக் கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார் அதனால் என் குழந்தையை எடுத்துக் கொண்ட அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.

 

அந்தப் பெண் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் ஜெயமணி யை அழைத்து வந்து விசாரணை செய்த பொழுது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். ஜெயமணி மற்றும் அவருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட சுந்தரமூர்த்தி , மணிகண்டன் மற்றும் மற்ற கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகும் முன்பே பெண்ணின் தடாலடி பதிலால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

0

திருமணம் ஆகும் முன்பே பெண்ணின் தடாலடி பதிலால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

தற்போதுள்ள சூழ்நிலைக்கு பெண்கள் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும். பரவாயில்லை! சரியாக போய்விடும் என்று நினைத்தால் எதுவும் மாறாது. மேலும் திருமணம் முடிந்த கையோடு எல்லாம் நாங்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறி விடுவார்கள்.

இந்த பெண் மிகவும் தைரியசாலிதான். இதை போல் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.

22 வயதான இளம் பெண் ஒருவருக்கு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹசீனா எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திருமணத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உறவினர்கள் பங்கேற்க வேண்டும் என்ற காரணத்தால் திருமணம் சாதாரணமாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணத்தின் போது நடைபெற்ற மெழுகுவர்த்தி ஒளிரச்செய்யும் நிகழ்வின் பொழுது மணமகன் மற்றும் மணமகன் உறவினர்கள் அதிக அளவு குடிபோதையில் இருந்துள்ளனர்.

திருமண நாளன்றே மணமகன் அதிக குடிபோதையில் தடுமாறியதை கண்டு மணமகள் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மணமகன் மணமகளை தன்னுடன் மணமேடையில் நடனமாட அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் மணமகனின் உறவினர்கள் சிலர் மணமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர்.  உடனடியாக மணமகளின் சொல்லை கேட்டு திருமணத்தை நிறுத்திய குடும்பத்தினர், மணமகன் குடும்பத்திற்கு மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் பரிசுகள் அனைத்தும் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

உடனடியாக மணமகன் குடும்பத்தினர் மணமகள் குடும்பத்தினரை சமாதானம் செய்ய காவல்துறையினர் உதவியை நாடியுள்ளனர். காவல்துறையினர்

மணமகள் குடும்பத்தினரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அவர்கள் திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என்ற ஒற்றை முடிவில் இருந்துள்ளனர்.

மேலும், மணமகள் காவல்துறையிடம் மணமகன் மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியதையடுத்து காவல்துறையினர் மணமகன் குடும்பத்தினரிடம் பேசி மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட அனைத்தையும் திருப்பி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

திமுக பேச்சாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! தற்கொலையின் பின்னணி!

0

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ள தமிழன் பிரசன்னா அவர்களின் மனைவி இன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சென்னையில் உள்ள எருக்கஞ்சேரி இந்திரா நகரில் தமிழன் பிரசன்னா, மனைவி, குழந்தைகள் வசித்து வந்தனர். தமிழன் பிரசன்னா திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இவர் மிகச்சிறந்த பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரது மனைவி நதியா. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் இவரது மனைவி நதியா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்த கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். தமிழன் பிரசன்னா அவர்கள் அருகில் உள்ள கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த விசாரணையில் இறந்து போன நதியாவிற்கு இன்று பிறந்தநாள் என்றும், அதை விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசன்னாவிடம் கேட்டுகொண்டு இருந்துள்ளார், இதற்கு பிரசன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் விமர்சையாகக் கொண்டாடுவது எப்படி? என்று அவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் சண்டையின் உச்சத்திற்கு சென்ற நதியா மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே குடும்ப சண்டையும் நடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.