Wednesday, July 23, 2025
Home Blog Page 4552

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்ற மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் தஹர்கி நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 03:28 மணிக்கு புறப்பட்டது. , ரைட்டி ரெயில் நிலையம்  அருகே இந்த ரெயில் 03.43 க்கு  ரெயில் தடம் புரண்டது. மேலும் ராவல்பிண்டியில் இருந்து வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் மோதி உள்ளது.

இந்த விபத்தில்  மில்லட் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன, ஐந்து பெட்டிகள் கவிழ்ந்தன, அதே நேரத்தில் சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன, மூன்று கவிழ்ந்தன, இதில் 31 பேர் பலியானார்கள்  100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்.

அவர்கள் அனைவரும் அருகில் உள்ள  மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.தடம் புரண்டதற்கும் அடுத்தடுத்த மோதலுக்கும் என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்கி  உயர் போலீஸ் அதிகாரி உமர் துஃபைல் கூறும் போது 40 உடல்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. ரயிலின் இடிபாடுகளில் 15 முதல் 20 பயணிகள் இன்னமும் சிக்கியுள்ளதாகவும், உதவிக்காக அழுகிறவர்களை மீட்க கனரக இயந்திரங்களை ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இறந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  காயமடைந்த 25 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கராச்சி, சுக்கூர், பைசலாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களில் பயணிகளுக்காக ஹெல்ப்லைன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தை ரெயில்வே அமைச்சர் அசாம் கான் சுவாதி பார்வையிட்டார்.

இந்த விபத்து நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை முடக்கி உள்ளது. பாகிஸ்தான் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக ஒரு தகவல் மையம்  அமைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மதியம் 2 மணி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கோட்கியில் நடந்த பயங்கர ரெயில் விபத்தில் 30 பயணிகள் உயர் இழந்தது குறித்து அதிர்ச்சியடைந்தேன். ரெயில்வே அமைச்சரை சம்பவ இடத்திற்கு செல்லவும். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை உறுதிப்படுத்தவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

ரயில்வே பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடட்டும்  என கூறினார்.

மக்களே நாம் இயற்கையை பாதுகாக்காத செய்யலுக்குக்கான பலனை தற்போது அனுபவிக்கிறோம். ஒரு பக்கம் உலகநாடுகளை அச்சுறுத்தும் வைரஸ் தொற்றுகள், வண்ண வண்ண பூஞ்சைகள், இயற்கை சீர்கேடுகள், அழிவுகள், விபத்துக்கள் என பல வகையில் மனித உயிர்கள் மாண்டு போகின்றன.

எனவே, அனைவரும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நன்கு பாசமாகவும், அன்பாகவும், விரோதம் காட்டாமல் பழகிக் கொள்ளவும். ஏனெனில் நாம் அனைவரும் தொடர்ந்து இருப்போமா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. எனவே முடிந்தவரை அனைவரையும் மதித்து பழகுவோம் மக்களே.

திமுகவில் இணைய இருக்கும் மிக முக்கிய நபர்! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

0

மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய ஒரு முக்கிய புள்ளி திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தவர் மகேந்திரன் இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோயம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதனையடுத்து அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக மகேந்திரன் போட்டியிட்டார். கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார்.

கோயம்புத்தூரில் மகேந்திரன் வாங்கிய வாக்குகள் போன்றவற்றை பார்த்துதான் மக்கள் நீதி மையம் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பி கமல்ஹாசன் சென்னையை ஒதுக்கிவிட்டு கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட்டதாக தகவல் கிடைத்தது. ஆனாலும் இந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் மகேந்திரன் தோல்வி பெற்றிருந்தாலும் கூட 36 ஆயிரத்து 855 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கமல்ஹாசனுடன் உண்டான மனக்கசப்பு காரணமாக, துணை தலைவர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மகேந்திரன் விலகிக் கொண்டார். இந்த சூழ்நிலையில், மகேந்திரன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. திமுகவில் இணைந்தவுடன் அவருக்கு முக்கிய பதவி வழங்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்!

0

ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்!

தமிழகத்தில் முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனுமதி இருந்த நிலையில், அதிகமானோர் விண்ணப்பித்ததால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது

இதற்கிடையே ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. இதில் ஒரு முக்கியமான அம்சமாக எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களின் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோரும் இ-பதிவு பெற்றுக்கொண்டு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரியலாம், சாலைகளில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து மேற்கண்ட தொழிலில் ஈடுபட்டிருப்போர் நேற்று காலை முதலே இணையதள சேவை மூலம் இ-பதிவு மேற்கொண்டனர். பெரும் நிறுவனங்களும் தங்களது தொழில் சார்ந்த (காண்டிராக்ட்) அடிப்படையிலான ஊழியர்களுக்கு இ-பதிவு பெற்றுத்தர முனைப்பு காட்டின. இதனால் ஏராளமானோர் இ-பதிவு பெற தொடங்கினர்.

இப்படி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் நேற்று ஒரே நேரத்தில் இ-பதிவு பெற முயற்சி செய்தனர். ஒரே நேரத்தில் இப்படி விண்ணப்பித்ததால் இ-பதிவு இணையசேவை திணறி போனது. இதனால் காலையில் இருந்து பல தடவை இ-பதிவு சேவை முடங்கியது. பிற்பகலிலும் இ-பதிவு சேவை முடங்கியது. மாலைக்கு பிறகு நிலைமை சரியானது.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்:

கொரோனா ஊரடங்கில் மக்கள் வசதியை முன்னிருத்தி, அவர்கள் ஒத்துழைப்பை கேட்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தளர்வு ஏற்படுத்தும் நிலையில், அதிக அளவில் இ-பதிவுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வருகிறது.

பொதுவாக, நமது டேட்டா பேஸ் டிராபிக் என்பது, 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை விண்ணப்பங்களை பெறுவதாக உள்ளது.

கூடுதலாக, விண்ணப்பங்கள் வந்தால், 15 லட்சம் வரை வரலாம் என்று எதிர்பார்த்தோம். அப்படி வந்தால் சமாளித்துவிடலாம். ஆனால், நேற்று எதிர்பாராதவிதமாக 60 லட்சத்தையும் தாண்டி சென்று விட்டது.

இதனால், தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை போர்க்கால அடிப்படையில் சீர் செய்தனர். இதற்கான சர்வரின் கொள்ளளவை உயர்த்தி வருகிறோம். அதன்பின் எத்தனை விண்ணப்பங்கள் வந்தாலும் அவை ஏற்கப்படும்.

தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்தும்போது, அதைவிட 2 அல்லது 3 சதவீதம் கூடுதலான தாக்கம் இருப்பதாக எதிர்பார்ப்போம். ஆனால் இதில் 10 மடங்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினார்.

மீண்டும் வருகிறது ஐபிஎல் கிரிக்கெட்! பிசிசிஐ தகவல்!

0

ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. மே 2ஆம் தேதி வரை மொத்தம் 29 போட்டிகள் நடை பெற்றன. ஆனால் வீரர்கள் சிலருக்கும், அணி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதால் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், எஞ்சிய கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்ற போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டனர்.

இது தொடர்பாக அந்நாட்டுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஐபிஎல்லில் மீதமுள்ள கிரிக்கெட் போட்டிகள் அங்கு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும் இந்திய மட்டைப்பந்து வாரியம் அறிவித்துள்ளது.

துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 25 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளதால் இதனால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

பங்களாவில் நடைபெற்ற கொடூரம்! ஆசை படுவோரை எல்லாம் அடையும் சாமர்த்தியம்! மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

பங்களாவில் நடைபெற்ற கொடூரம்! ஆசை படுவோரை எல்லாம் அடையும் சாமர்த்தியம்! மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

உலகம் எங்குதான் போகிறது? ஒரு பள்ளியில் வெளிவந்த பாலியல் புகார்களை தொடர்ந்து, விளையாட்டு பயிற்சியாளர், அமைச்சர்கள், நடிகர்கள், என பலரின் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பெண்களை என்னதான் நினைக்கிறார்கள் அவர்கள் என்று அவர்களை அரசு இரும்பு கரம் கொண்டும், கடுமையான சட்டங்களை போட்டும் மட்டுமே அடக்க முடியும், என்பது அனைவரின் மனதிலும் தோன்றும் எண்ணமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதை தொடர்ந்து பல பேரின் உண்மை முகங்கள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. இந்நிலையில், ஆன்மீகத்தின் போர்வையில் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.

ஆம், ஒரு பள்ளியில் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் சிவ சங்கர் பாபா. சுஷில் ஹரி பள்ளி, சென்னையை அடுத்த கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை அருகே சுமார் 60 ஏக்கரில் விஸ்தாரமாக அமைந்துள்ளது. இது வெறும் பள்ளி நிறுவனமாக மட்டும் இல்லாமல் ஆன்மிக செயல்பாடுகள் கொண்ட கட்டமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் நிர்வாக தலைவர்தான் சிவசங்கர் பாபா, கடவுளுக்காக வந்தேன் என்றும், கடவுளாக வந்தேன் என்றும் கூறிக்கொள்ளும் இவர் மீது முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பாலியல் புகார் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பிரைமரி பெண் குழந்தைகளும் அடக்கம். பள்ளி வளாகத்திலேயே இவருக்கென்று ஒரு தனி சொகுசு பங்களா உள்ளது. அதில் அவர் ஆசைப்படும் பள்ளி மாணவிகளை அந்த பங்களாக்குள் அழைத்து வந்து விலையுயர்ந்த சாக்லேட்டுகள், மது பானங்களை காட்டி ஆசையை தூண்டி, இவர் சம்மதிக்கும் மாணவிகள், தப்ப நினைக்கும் மாணவிகள் என அனைவரையும் சிறை பிடித்து க்ரூப் செக்சில் ஈடுபடுவார் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மாணவிகள்.

பிரபல தனியார் பள்ளி நிர்வாக இயக்குனர் சிவ சங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்திருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி மாணவிகளை கொண்டு வந்துவிடும் செயல்களில் அந்த பள்ளியில் சில ஆசிரியர்களே ஈடுபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது. அப்படி ஒருநாள் பள்ளி மாணவியை சிவ சங்கர் கட்டாயப்படுத்தி பங்களாக்குள் வைத்து பலாத்காரம் செய்ததை அடுத்து, அந்த மாணவி அழுதுகொண்டே வெளியே வருவதை சக மாணவர் ஒருவர் பார்த்துள்ளார்.

அந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வரவே பள்ளியை இரண்டு மாதம் இழுத்து மூடியுள்ளனர். அந்த மாணவன் விஷயத்தை வெளியே சொல்லி விடுவானோ என்று பயந்த பள்ளி நிர்வாகம் மாணவனை ஒரு வழி ஆக்கியுள்ளது.

தேர்வுகள் எழுதவிடாமல், மாணவன் மீது பொய்யான புகாரை கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மாணவனின் தாயார் இதுகுறித்து கேட்க வந்த போது, அந்த பெண்ணை தனது பங்களாவுக்கு வர வழைத்துள்ளார் சிவ சங்கர் பாபா. அப்போது மாணவனை குறித்து பேசாமல், பங்களாவில் உள்ள ஆடம்பர பொருட்களை காட்டி அந்த மாணவனின் அம்மாவிற்கும் ஆசையை தூண்டியுள்ளார்.

அதுவரை பள்ளி மாணவிகளை சீரழித்து வந்தவர் மாணவனின் தாய் மீது ஆசை பட்டு அவரை உறவுக்கு இணங்க வைக்க முயற்சித்துள்ளார். இதுபோல பல புகார்கள் சிவசங்கர் பாபா மீது குவிந்து வருகின்றன. இந்த பிரச்சினையை குறித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் பல ஆதாரங்களை தர தயார் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

இவரை போன்றோர்களை அரசு என்னதான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த செய்தியை பார்க்கும்போது சிலவருடங்களுக்கு முன் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் கதையை போலவே தெரிகிறதல்லவா? சினிமா பார்த்து இவர்கள் இப்படி இருக்கிறார்களா? அல்லது இவர்களை பார்த்து படம் எடுக்கிறார்களா? என்பது யாருக்கு தெரியும்.

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

31 வயதான அமல்ராஜ் என்ற நபர், கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிப்பட்டியில் வாழ்ந்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, 28 வயதான ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இவர்களுக்கு 7 வயதான பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களின் மகன் இறந்து விட்டான்.இ தனிடையே ரஞ்சிதாவுக்கும்தர்மபுரி மாவட்டம் அரூரில் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதைப்பற்றி தெரிந்து கொண்ட கணவன், இதையறிந்த அமல்ராஜ், அவரது மனைவி ரஞ்சிதாவிடம் இந்த பழக்கத்தை கைவிடும்படி கண்டித்துள்ளார். ஆனாலும் ரஞ்சிதா தங்கராஜுடன் தொடர்ந்து பழகி வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரஞ்சிதா வீட்டில் இருந்து திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அமல்ராஜ் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் ரஞ்சிதா கிடைக்காததால் நேற்று முன்தினம் ரஞ்சிதா, கள்ளக்காதலன் தங்கராஜ் வீட்டில் இருப்பதாக அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமல்ராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரஞ்சிதாவை தனது வீட்டிற்கு அழைத்தார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டின் பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கள்ளக்காதல் மற்றும் அவர்களுக்கு இருந்த கடன் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அமல்ராஜ் தனது கையால் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்து தாலி கயிற்றாலும் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் நிலைகுலைந்த ரஞ்சிதா மயங்கி விழுந்தார். இதையடுத்து தங்கராஜ் அங்கிருந்து சென்று விட்டு இரவில் வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார். நேற்று காலை அக்கம்பக்கத்தினர் அமல்ராஜை எழுப்பி, ரஞ்சிதா வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அமல்ராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் ரஞ்சிதாவை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

ஆத்திரத்தில் ஏதோ தோணுவதை செய்து விடுகிறோம். ஆனால் இப்போது அவர்களது குழந்தையை யார் பார்த்து கொள்வார்கள். எனவே எது நடந்தாலும் கொஞ்சம் ஆற போட்டு பார்த்தால் பிரச்சனைகளும் குறைந்து இருக்கும். எனவே யோசிப்போம் இது செய்தாலும் இது தேவையா? என்று.

பெற்ற தாயை பாத்ரூமில் அடைத்து சோறு போடாத பிள்ளை! சேலத்தில் நடந்த கொடூரம்! 

0

சேலம் அருகே பெற்ற தாய்க்கு சோறு போடாமல் பாத்ரூமில் அடைத்து வைத்து, மகன் சித்தரவதை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ராதா. இவர் கணவர் இறந்ததால் கடைசி மகன் ஸ்ரீதருடன் வசித்து வருகிறார். அவரை ஸ்ரீதர் நன்றாக பார்த்துக்கொள்வதாக அக்கம்பக்கத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீதர் வீட்டின் பின்புறத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது, கழிவறைக்கு அருகில் உள்ள பாத்ரூமில் உடல்நலம் குன்றிய நிலையில் மூதாட்டி ராதா அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாகவே தனது மகன் ஸ்ரீதர் சோறு, தண்ணீர் கொடுக்காமல் இங்கு அடைத்து வைத்திருப்பதாக அவர்களிடம் வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மூதாட்டியை மீட்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். பெற்ற தாயை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

0

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அவர்,  அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு  எச்சரித்திருப்பதாக விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்சவரம்பை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என பரிந்துரைத்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த ராசிக்கு ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 08-06-2021 Today Rasi Palan 08-06-2021

0

 

இன்றைய ராசி பலன்- 08-06-2021,

நாள் : 08-06-2021,

தமிழ் மாதம்: 

 25, செவ்வாய்க்கிழமை,

 சுப ஹோரைகள் 

காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இராகு காலம்:

மதியம் 03.00-04.30,

எம கண்டம்: 

காலை 09.00-10.30,  

குளிகன்: 

 மதியம் 12.00-1.30

திதி: 

 திரியோதசி திதி பகல் 11.24 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. 

நட்சத்திரம்: 

நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம்.

 

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை. மாத சிவராத்திரி. சிவ-முருக வழிபாடு நல்லது.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எதிர்பாராத தன வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.24 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு பின் மனஅமைதி இருக்கும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.24 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு இன்று கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மாத்திரை சாப்பிட்டு வாய் புண்ணா போச்சா! இப்படி வாய் கொப்பளிக்க புண் மாயமாகும்!

அதிக வீரியமுள்ள மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் வாய் மற்றும் வயிற்று பகுதி புண்ணாகிறது. வாய்ப்புண் சாதாரணமாக வருவதில்லை. வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதிகம் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், அஜீரணம் போன்ற பிரச்சனைகளால், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் , உடற்சூடு, வைட்டமின் சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றால் வாய்ப் புண்கள் எளிதில் ஏற்பட்டு விடுகின்றன.புகையிலை, பான் மசாலா, புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், வெற்றிலை, போடுபவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு வரலாம்.

இப்படி வரும் வாய்ப்புண்ணை வீட்டிலேயே எளிமையாக சரி செய்யக் கூடிய எளிய மருத்துவத்தை பார்க்கப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
1. திப்பிலி 2 கிராம்
2. உலர்த்திய மலைநெல்லி 1
3. தேன்.

செய்முறை:
1. முதலில் திப்பிலி மற்றும் உலர்த்திய மலை நெல்லி இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இவை இரண்டையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
3. அரைத்த இந்த விழுதை இரவில் படுக்க செல்லும் முன் வாயில் வைத்துக் கொள்ளுங்கள்.
4. வாயில் வைத்து இருக்கும் பொழுது நன்கு உமிழ் நீர் சுரக்கும். உமிழ்நீரை விழுங்காமல் வாயில் வைத்து நன்றாக கொப்பளியுங்கள்.
5. கழிவுகள் சேர்ந்ததும் வாயில் உள்ள உமிழ் நீரை துப்பி விடுங்கள்.
6. பிறகு நன்கு வாயை கொப்பளித்து கொள்ளுங்கள்.
7. இவ்வாறு செய்யும்பொழுது வாயில் உள்ள அழுக்குகள் நீங்கி புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

இப்படி வாரம் முழுக்க செய்து வரும் பொழுது வாய்ப்புண் விரைவில் குணமடையும்.