Monday, July 21, 2025
Home Blog Page 4559

நான் கிருஷ்ணன்! நீங்கள் அனைவரும் கோபிகைகள்! கூறிய சிவசங்கர் பாபா!

நான் கிருஷ்ணன்! நீங்கள் அனைவரும் கோபிகைகள்! கூறிய சிவசங்கர் பாபா!

சென்னையில் உள்ள பத்மா ஷேஷாத்ரி பால பவன் பள்ளியின் கணக்கியல் மற்றும் வணிக ஆய்வுகள் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்னாள் மாணவிகள் குற்றச்சாட்டை முன் வைத்ததை தொடர்ந்து பலர் தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தின் ஆசிரியர் நாகராஜன் மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தற்போது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

அதே போல சென்னை செயின்ட் ஜோசப் விளையாட்டு பயிற்சி மையத்தின் பயிற்சியாளரான நாகராஜன் என்பவர் விளையாட்டு பயிற்சிக்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ்நாடு மாநில தடகள சன்மேளத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் பள்ளி காலத்தில் தாங்கள் சந்தித்த பாலியல் கொடூரங்களையும், அவர் தன்னை கடவுளாகவும் மாணவிகளை கோபிகா என கூறி மூளைச்சலவை செய்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் மாணவிகள் குற்றம் சாட்டிய சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.

இந்த பள்ளியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் சந்தித்த கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியில் கொண்டு வருவதற்காக மாற்றம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர் பாடகி சின்மயி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் பதிவு செய்துள்ளார்.

மேலும் அதில் அவர் தயவுசெய்து அவற்றில் கையொப்பம் இடுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார் பாடகி சின்மயி தனது பதிவில் சிவசங்கர் பாபாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதன் பிறகு பலர் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளம் வாயிலாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பள்ளியில் புதன்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வியும் உடனிருந்தார்.

மேலும் ஆசிரமத்தில் சிவசங்கர் பாபா இல்லை என்றும் கூறப்படுகிறது இதையடுத்து பாலியல் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதிய ஆணைய அதிகாரிகள் வருகிற 11-ஆம் தேதி புகார் குறித்து விரிவான விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் ஆசிரமத்தின் வளாகத்திலேயே தங்கி படித்து வரும் அனைத்து சிறுமிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப் போவதாகவும் திட்டமிட்டுள்ளனர்.

இதுபோன்று தொடர்ந்து பள்ளி மாணவிகள் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு அரசாங்கம் உரிய முறையில் தண்டனை வழங்க வேண்டும் என அனைவரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் கூறி வருகின்றனர்.

ரஜினியுடன் மீண்டும் இனைகிறாரா? மனம் திறந்த இயக்குனர்!

0

நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மனம் திறந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக வலம் வருகிறார். அவருடைய திறமையை வைத்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பேட்டை திரைப்படத்தின் மூலமாக பெற்றார். கார்த்திக் சுப்புராஜ் அந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு அந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படத்தை எடுத்து முடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. திரைப்படம் ஜூன் மாதம் 18ஆம் தேதி இணையதளத்தில் வெளியாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இதற்கு நடுவில் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. தற்சமயம் கார்த்திக் சுப்புராஜ் அது தொடர்பான தகவலை வெளியிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

நான் அந்த செய்திகளை கவனித்து வருகின்றேன் நான் ரஜினி சாருடன் மறுபடியும் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் அந்த வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் தற்போது கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் மற்றும் துரு விக்ரம் நடிப்பில் விக்ரம் நடிக்கும் 60வது திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

15 வருடத்திற்கு முன்னால் நடந்த தவறுக்கு இப்போது வருத்தப்படும் நடிகை!

0

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக அறிமுகமானார். அதோடு நெப்போலியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி எழுதி இயக்கியிருந்தார், அதேபோல கே பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் சார்பாக புஷ்பா கந்தசாமி தயார் செய்திருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். அதேபோல கோலிவுட் வட்டாரத்தில் அய்யா திரைப்படத்தில் தான் முதன் முதலாக நயன்தாரா அறிமுகமாகி இருந்தார்.

அதோடு இந்தத் திரைப்படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருடம் என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த திரைப்படத்தை தவற விட்டு விட்டதாக ஒரு நடிகை தெரிவித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மலையாள சினிமாவில் பிசியாக இருந்ததன் காரணமாக, அதனை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படம் நயன்தாராவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறிப் போனது தெரியவந்ததும் இது தெரிந்திருந்தால் இதை மறுத்திருக்கவே மாட்டேன் என்று நவ்யா நாயர் தெரிவித்திருக்கிறார்.

அதிமுகவின் தலைமைகள் சந்திப்பு! பின்னணி என்ன?

0

இன்று காலை சென்னை எழும்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் விடுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் இருவரும் எதற்காக சந்தித்தார்கள் என்பதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.

சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகனின் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காகவும், நேற்றையதினம் சென்னையில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற 9 மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன என்பது தொடர்பாக ஆலோசனை ஈடுபடுவதற்கும் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என தெரியவந்திருக்கிறது.

அதோடு நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்று கொள்ளவில்லை என்ற காரணத்தால், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மறுபடியும் பனிப்போர் ஆரம்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில், தற்போது இருவரும் சந்தித்து தங்களுக்கு இடையே எந்த முரண்பாடும் கிடையாது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காமராஜ் என்ற அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்ததாக தெரிகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளுடன் உரையாடி வருவதாக ஆடியோக்கள் வெளிவரும் சூழ்நிலையில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து பேசியிருப்பது அதிமுகவினர் இடையே ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு! நாளை ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக பங்கேற்கப் போவது இவர்தானாம்!

0

தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதனை அடுத்து மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்வு செய்த பிறகு அவர்கள் எவ்வாறு மதிப்பெண் வழங்க இருக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

மாணவர்களுடைய எதிர்காலம் தொடர்பான விவகாரம் என்ற காரணத்தால், இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவையும் திடீரென்று எடுத்து விட இயலாது. சிபிஎஸ்சி தேர்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதற்கு முன்னதாகவே எல்லாம் தேர்வு நோய்த்தொற்று முற்றிலுமாக குறைந்த பின்னர் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சட்டசபை கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவுகள் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், பள்ளிக்கல்வித்துறை குறித்து நாளை நடைபெற இருக்கின்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஆசைக்கு அளவு மற்றும் அறிவு இல்லாமல் போனது! மூன்று பள்ளிமாணவர்கள் கவலைக்கிடம்!

0

கடலூர் மாவட்டத்திலுள்ள குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்கள் கள்ளச் சாராயத்தை குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் தமிழ்மாறன் கபிலன் ஆகியோர் பள்ளியில் படித்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் இவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளார்கள்.

வியாழக்கிழமை மாலை கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு திரும்பும் பொழுது அங்குள்ள ஒரு கரும்புத் தோட்டத்தின் வழியாக வந்துள்ளார்கள். அங்கு யாரோ கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல்கள் போட்டு வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த மாணவர்கள் 3 பேரும் இதை குடிக்க வேண்டுமென ஆசை கொண்டு பக்கத்தில் சென்று இருக்கிறார்கள். ஆர்வத்தின் உச்சிக்கே சென்ற அவர்கள் பழங்கள் மற்றும் எத்தனால் வாசனையில் கவர்ந்திழுத்து கள்ளச் சாராயத்தை குடித்து பார்க்க வேண்டும் என தோன்றியுள்ளது.

யாரும் இல்லாத காரணத்தால் கள்ளச் சாராயம் காய்ச்ச போடப்பட்டு இருந்த அந்த ஊறலில் இருந்து மூன்று மாணவர்களும் சிறிது குடித்து உள்ளார்கள். குடித்து விட்டு வீட்டிற்கு சென்று ஒவ்வொருத்தராக மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

பயந்துபோன மாணவர்களின் பெற்றோர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அன்பரசன் என்ற மாணவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு தான் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேல்சிகிச்சைக்காக ஜிம்பர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரும்பு தோட்டத்தில் கள்ளச்சாராயம் ஊறல் வைத்தவர்கள் யார் என்பது குறித்து நடத்திய விசாரணையில் பூபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவயதிலேயே ஆர்வமிகுதியில் அளவில்லாமல் ஆசையால் அறிவில்லாமல் இந்த செயலை செய்ய தூண்டி இப்பொழுது உயிருக்கே ஆபத்தாகி விட்டது.

தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்?

தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்?

தற்போதுள்ள சூழ்நிலையில் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்பது பெரிய கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது.  பெண் பிள்ளைகள் இருந்தாலே கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது. அது அண்ணன் என்றாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி.

திருச்சி மாவட்டம் துறையூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அம்மாபேட்டையிலும், 2-வது மனைவி தனது 3 மகள்களுடன் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியிலும் வசித்து வருகின்றனர்.

இதில் 14 வயதான 3-வது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில் கூலித்தொழிலாளியின் முதல் மனைவியின் மகன் சுரேஷ் (வயது 31) என்பவர் மோகனூர் பகுதியில் உள்ள தனது சித்தி குடும்பத்தினருடன் தங்கி மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

அப்போது சித்தியின் 3-வது மகள் தங்கையான 14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து கர்ப்பம் அடைந்த சிறுமியிடம் நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதல் மனைவியின் மகன் சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

60 சாதனங்களை ஒரே நேரத்தில் இணைத்து பயன்படுத்தலாம்! ஏர்டெல்லின் அதிரடியான அறிவிப்பு

0

வீட்டிலிருந்தே வேலை செய்யும் மக்கள் அதிகமானதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் ஏர்டெல் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கலை பயன்படுத்தக்கூடிய ஒரு ஸ்கீம் ஏர்டெல் உருவாக்கியுள்ளது. அதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ 3, 999 ரூபாய் என கூறியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டிலும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதனால் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் பிராட்பேண்ட் என்ற இணைப்பு சேவையை வழங்கி வருகிறது.இந்த ஃபைபெரின் அதிவேக wi-fi ரூட்டர்களை ஒரே இணைப்பில் சுமார் 60 சாதனங்களை இணைக்க முடியுமாம்.

ஒரு குடும்பத்தில் அதிவேக பைபர் பிராண்ட் கனெக்சன் இருந்தாலும் பல டிவைஸ்களை இணைப்பதால் நெட்டின் வேகம் குறைந்து பல சிக்கல்களை எதிர் கொள்கிறார்கள். வாடிக்கையாளரின் இந்த சிக்கலை தீர்ப்பதற்காக தான் FTTH ( fiber to the home) என்ற கனெக்சன் மூலம் ஒரே நேரத்தில் 60 சாதனங்களை இணைத்து அதிவேக wi-fi ரூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது அதிகபட்சமாக 1 ஜிபிபிஎஸ் வரையிலான ஸ்பீடு வழங்குகிறது. இதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரே நேரத்தில் 60 சாதனங்களுக்கான இணைப்பு என்ற புதிய விளம்பரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ 3999 எனக் கூறியுள்ளது. இந்த பிரபல வை-பை ரவுட்டர்களை வை-பை ரவுட்டரை உற்பத்தி செய்யும் Dasan – இடம் வாங்கியுள்ளது.

இந்த அதிவேக wi-fi ரவுட்டர் மூலம் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் லேப்டாப்கள் டேபிளட்ஸ், ஸ்மார்ட் TV, கேமிங் டூல்ஸ், வீட்டு மின்னனு பொருட்கள் என ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

தொடரும் ஊரடங்கு! எந்தெந்த மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு தளர்வுகள் என்ன?

0

ஊரடங்கு இன்னும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் என்ன என்பதைப் பற்றி முழு விவரம் தமிழக அரசின் செய்தி குறிப்பு சொல்லியுள்ளது.

கடந்த மே 24-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற ஜூன் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நோயின் பரவல் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் சில மாவட்டங்களுக்கு மட்டும் தலைப்புகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்த போதிலும் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு கரூர் சேலம் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை நீலகிரி ஆகிய மாவட்டங்கள் நோய் தொற்றுகள் அதிகமாக பரவி வருகிறது எனவே மேற்கண்ட அனைத்து மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளங்களும் மேலும் 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

அவை பின்வருமாறு:

1. மளிகை பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் தனியாக செயல்படுகின்ற கடைகள் 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
2. காய்கறி பழம் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் 6 மணி முதல் 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
3. இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
4. அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளர்கள் செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
5. மீன் சந்தைகளிலும் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
6. சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டும் கொடுத்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
7. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுடன் நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் இந்தத் அளவுகளுடன் ஊரடங்கு அமல் ஆகிறது இவ்வாறு அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மக்களே உஷார்! வெளுத்து வாங்க போகும் மழை!

0

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் அதோடு தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், ஜூன் மாதம் ஆறாம் தேதி மற்றும் ஜூன் மாதம் 7ஆம் தேதி போன்ற நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள்,கடலோர மாவட்டங்கள் காரைக்கால், புதுச்சேரி போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாக இருக்கும் அதே போல குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.