Thursday, July 17, 2025
Home Blog Page 4568

இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும்! இன்றைய ராசி பலன்கள்

0

இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் தரும்.புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.உங்கள் பணிகளில் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.உங்கள் வீட்டில் உங்களின் திருமண பேச்சுகளை ஆரம்பிப்பார்கள்..பண வரவு சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி:

     இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.கடின உழைப்பு இருந்தால் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.உங்கள் பேச்சின் மூலம் சிறந்த வளர்ச்சி பெறலாம்.வீட்டில் பொறுமையாக பேசவும்.வரவும், செலவும் சமமாக இருக்கும்.

மிதுன ராசி:

     இன்று உங்கள் பேச்சால் அனைவரையும் மகிழ்விப்பீர்கள்.இசை கேட்பது ஆறுதலாக இருக்கும்.பனியின் காரணமாக பயணம் செல்ல நேரலாம்.உங்களது பணிகள் சவால் நிறைந்ததாக இருக்கும்.பண வரவு சிறப்பாக இருக்கும்.

கடக ராசி:

     இன்று உங்களது செயல்களை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.முடிவு எடுக்கும் முன் பலமுறை யோசித்து செயல்படவும்.பணிசுமை அதிகமாக இருக்கும்.பணவரவு குறைந்து காணப்படும்.அது உங்களுக்கு கவலை அளிக்கும்.

சிம்ம ராசி:

     உங்களது நாள் சீராக செல்லும்.அதனால் நீங்கள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.உங்கள் பணிகள் அனைத்தும் பாராட்டுபெறும்.உங்கள் வாழ்கையை திட்டமிட வேண்டும்.பண வரவு சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசி:

     வெற்றிபெறும் வாய்ப்பு காரணமாக தைரியம் அதிகரித்து இருக்கும்.உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.பணவரவு இருக்கும்.

துலாம் ராசி:

     இன்று உங்களுக்கு நல்ல நாள்.புத்திசாலிதனத்தை நன்கு பயன்படுத்துவீர்கள்.வெற்றி பெற முயற்சி எடுக்க வேண்டும்.பணத்தை கோவில்களுக்கு செலவளிப்பதன் மூலம் மனநிம்மதி அடைவீர்கள்.

விருச்சிக ராசி:

     இன்று மந்தமான நாள்.உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும்.பொறுமையாக இருக்க வேண்டும்.ப்;பணிச்சுமை அதிகமாக இருக்கும்.உங்கள் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.பணவரவு நன்றாக இருக்கும்.

தனுசு ராசி:

     இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்.உங்கள் பணியில் கவனமுடன் பணியாற்றுவீர்கள்.இன்று திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.பணவரவு அதிகமாக இருக்கும்.

மகர ராசி:

இன்று உங்களுக்கு சுமாரான நாள்.மனதில் குழப்பங்கள் ஏற்படலாம்.பிறருடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.பணவரவு சுமாராக இருக்கும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசி:

     இன்று உங்களுக்கு மிக சிறந்த நாள்.கடவுள் வழிபாட்டின் மூலம் மன நிம்மதி ஏற்படும்.பணிகள் தடையின்றி நடைபெறும்.புத்திசாலிதனமாக செயல்பட வேண்டும்.பங்கு வர்த்தக முதலீடு திருப்தி அளிக்கும்.பண வரவு இருக்கும்.

மீன ராசி:

     இன்று உங்களுக்கு சற்று மந்தமாக இருக்கும்.முடிவுகளை யோசித்து எடுக்கவும்.பலன்கள் நீங்கள் எதிர்பார்க்கும்படி இருக்காது.பணிகளில் கவனக் குறைவாக இருக்க வேண்டாம்.துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள்.பண விரயங்கள் ஏற்படும்.

ஓமத்தை இப்படி செய்து குடிங்க! சளி பிடிக்காது! சளி இருந்தாலும் கரைத்து வெளியேற்றி விடும்!

ஓமம் நம் அனைவரின் வீட்டு சமையலறையிலும் இருக்கும். நம் வீட்டில் சமையலறையில் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களும் நமது உடலுக்கு தேவையான மருந்தாக பயன்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக அதனை பின்பற்றி வருகிறார்கள்.

 

இப்பொழுது ஓமம் எதற்கு பயன்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

 

1. வயிறு வலி போக 5 கிராம் ஓமத்தை எடுத்து சிறிது உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து வைத்துக் கொண்டு அந்தப் பொடியுடன் சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வரும் பொழுது வயிற்று வலி குணமடையும்.

 

2. செரிமான பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் குடிக்கும் தண்ணீரில் ஓமத்தைப் போட்டு குடித்து வரும் பொழுது இந்த பிரச்சனைகள் குணமாகும்.

 

3. எப்பொழுதும் வயிறு மந்தமாக இருக்கு என்று சொல்பவர்களுக்கு சீரகம் மற்றும் ஓமம் சம அளவில் எடுத்துக் கொண்டு கடாயில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். சாப்பிட்டபின் 20 நிமிடம் கழித்து இந்த பொடியை சாப்பிட்டு வரும் பொழுது வயிற்று மந்தம் குணமாகும்.

 

4. நெஞ்சு சளி குணமாக ஊரில் ஓமப்பொடி உப்பு கலந்து குடித்து வரும் பொழுது நெஞ்சு சளியை வெளியேற்றி விடும்.

 

5. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். அவற்றின் கால் மூட்டுகளில் தடவி வரும்பொழுது வலி படிப்படியாக குறையும். அதேபோல பல் வலி உள்ளவர்களும் இந்த ஓம எண்ணெயை பஞ்சில் நனைத்து பல்லின் மீது வைத்தால் பல்வலி குணமாகும்.

 

6.ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது புகைச்சல் இருமல் வரும் அதாவது வறட்டு இருமல் போல இருக்கும் இரவெல்லாம் இருமிக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் ஆகியவற்றை எடுத்து வைத்து பொடியாக்கி கொண்டு சரிபாதி அளவு பனை கற்கண்டு சேர்த்து காலையிலும் ,மாலையிலும் உண்டு வந்தால் வறட்டு இருமல் என்கின்ற புகைச்சல் இருமல் நீங்கும்.

 

 

இது போன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு ஓமம் தீர்வாக அமைகிறது.

 

சானிடைசர் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்குத்தான் ஆபத்து!

நீங்கள் சானிடைசரைஅதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு தோல் பாதிப்புகள் வரும் அபாயம் இருக்கிறது என்று கூறுகின்றனர்.

 

கொரோனவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி பரிதவித்து கொண்டுதான் வருகிறோம். பல்வேறு வழிமுறைகளையும் அரசு அறிவித்து கொண்டு தான் உள்ளது. முக கவசம் அணியுங்கள், கையை சுத்தம் செய்யுங்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், என பல்வேறு வழிமுறைகளையும் அரசியல் மக்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

 

கைகளை 20 நிமிடத்திற்கு ஒரு முறை கழுவ வேண்டும் என்பதால் அனைவரையும் சானிடைசர் பயன்படுத்தி கைகழுவ வலியுறுத்தி இருந்தோம். ஆனால் அதிகமாக சானிடைசர் பயன்படுத்தினால் அதில் உள்ள வேதிப் பொருட்களால் தோல் பாதிப்படையும் என்று கூறுகின்றனர்.

 

சானிடைசரிலுள்ள எத்தில் ஆல்கஹால், ஐசோபிரைல் மற்றும் ஆல்கஹால் ஆகிய வேதிப்பொருட்கள் வைரஸுக்கு எதிரான இரசாயன பொருட்கள். இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தையும் இது அழிக்கிறது. மேலும் தொற்று நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

 

ஆனால் நாம் அதிகமாக பயன்படுத்தினால் தோலில் ஈரப்பதம் நீங்கி வறட்சி ஏற்படும். வறட்சி ஏற்படும் பொழுது தோலில் அரிப்பு ஏற்படும். இதனால் தோலில் புண்கள் வர வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர். அதனால் தேவைக்கேற்ப மட்டும் சானிடைசர் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

 

உங்களுக்கு தோல் பாதிப்புகள் ஏற்கனவே இருந்தால் சானிடைசரை பயன்படுத்துவதை தவிர்த்து சோப்பு நீரை பயன்படுத்தலாம். சோப்பு நீரைக்கொண்டு கழுவும் போதும் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

சானிடைசரை பயன்படுத்தும் பொழுது தோல் பாதிப்புகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்க்கவும்! – கருப்பு பூஞ்சை

மியுக்கர் மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பொதுவாக எல்லா இடத்திலும் இருக்கும். இது இப்பொழுது வந்த தொற்று அல்ல. சாதாரண கெட்டுப்போன அனைத்து உணவுகளிலும் பூஞ்சை காளான்கள் வளரத்தான் செய்யும். காற்றிலும் இருக்கும்.

 

ஆனால் இப்பொழுது கருப்பு பூஞ்சை என்பது யாருக்கு வரும்? எதிர்ப்பு சக்தி யார்யார் களுக்கு மிகவும் குறைவாக உள்ளதோ அவர்களை பூஞ்சை தாக்கும்.

 

மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேன்சர் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் , ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

 

இது ஒரு புதிய வைரஸ். வைரஸின் வீரியத்தை குறைப்பதற்காக நாம் ஸ்டீராய்டு மருந்துகளை தருகிறோம். ஆனால் ஸ்டீராய்டு மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சர்க்கரையையும் அதிகப்படுத்தி விடுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தி விடுகிறது. வைரசின் வீரியம் 12 – 14 நாட்களில் குறைந்துவிடும் . ஆனால் நாம் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் சர்க்கரை கட்டுப்பாடு அற்ற நிலைக்கு வந்துவிடும்.

 

இதற்கான அறிகுறிகள் கருப்பு பூஞ்சை தொற்று மூக்கிலும் வரலாம், நுரையீரலிலும் பரவும்.

1. இரவில் திடீரென்று ஒற்றைத் தலைவலி வரலாம். மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலனளிக்காது.

2. ஒரு சிலருக்கு ஒரு பக்கம் முகம் மறுத்து மறுத்து போகும்.

3. மூக்கடைப்பு இருக்கும், மூக்கில் இருந்து மஞ்சள், பச்சை, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்தில் சளி வரலாம். இது தான் ஆரம்ப அறிகுறிகள்.

4. இரண்டாம் நிலை கண்களைச் சுற்றி வீக்கம் பெறலாம். கண்கள் புடைத்து வெளிவரும். பார்வை இரட்டிப்பாக தெரியும்.

5. கண்கள் வரை சென்றால் கண்ணையும் இழக்க நேரிடும். மூளை வரை சென்றால் உயிர் சேதத்தை ஏற்படுத்தும்.

 

அறிகுறிகள் சிறிய அளவில் இருந்தால் கூட உடனடியாக காது-மூக்கு-தொண்டை டாக்டரை அணுக வேண்டும். 48 மணி நேரத்தில் இது பரவி விடும். அறிகுறி இருக்கும் பொழுதே டாக்டரிடம் சென்று விட்டால் பூஞ்சையை அகற்றி 21 நாட்களுக்கு இதற்கான பிரத்தியேகமான மருந்தை மூன்று வேளை. ஊசி மூலம் செலுத்த வேண்டும்.

 

இந்த மருந்து வீரியம் மிக்கது என்பதனால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் அதனையும் கவனித்து பயன்படுத்த வேண்டும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் மூக்கு கண்கள் மூளை என பரவி தோல் அழுகும் நிலை வரும்.

 

இவ்வாறு ஐசக் ரிச்சர்ட்ஸ்,காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.

 

 

இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்!

0

இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்!

கொரோனாவின் காரணமாக உலகம் முழுவதும் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதன் மூலம் மக்கள் பொழுது போக்காக மொபைல் போனை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில் நமக்கு எதிராக தகவல் தொழில்நுட்பங்களும் செயல்பட தொடங்கி உள்ளன.

ஆன்லைன் மோசடி தொடங்கி பல சிக்கல்களில் பலர் சிக்கியுள்ளனர்.அதிலும் குறிப்பாக ஆண்களும், பதின் பருவ மாணவர்களும் தான்.பெற்றோர் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுக்கும் செல்போனில் பலர் தன் வாழ்வையே இழந்து வருகின்றனர்.

இந்த சந்தர்பத்தை மோசடியாளர்கள் தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு உள்ளனர்.இளசுகளின் பலவீனத்தில் அந்த மோசடியாளர்கள் பணம் பார்த்துள்ள விஷயம் அறிந்து சைபர் க்ரைமே அதிர்ச்சியடைந்துள்ளது.

சேவல் என்ற வாட்ஸ்அப் குரூப் தொடங்கி அந்த லிங்க்கை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எண்ணுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த க்ரூப்பில் இணைந்தால் இளம்பெண்களிடம் உல்லாசமாக வீடியோ காலில் பேசலாம் என்று கூடவே ஒரு ஆடியோ பதிவும் பகிரப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில், இந்த லிங்கை 15 பேருக்கு அனுப்பினால், அவர்களுக்கு பெண்களுடன் 15 நிமிடம் வரை இலவசமாக வீடியோ கால் பேச சலுகை தரப்படும்.

மேலும், ஆபாசமாக பேசிக்கொள்ள 1 மணி நேரத்துக்கு 500 ரூபாய், ஆடையின்றி ஒரு மணி நேரம் பேச 700 என்றும் 1 மாதம் முழுவதும் இந்த சலுகையை பெற 3 ஆயிரம் ருபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அந்த க்ரூப்பில் முதலில் 10 பேர் சேர்ந்த பிறகு, சில இளம்பெண்களை புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. க்ரூப்பில் உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் பெண்களை தேர்வு செய்துகொண்ட பின்னர் அட்மின்களின் எண்ணிற்கு ஆன்லைனில் பணத்தை செலுத்த வேண்டும்.

பணத்தை செலுத்திய பின்னர் அவர்கள் விரும்பிய பெண்ணின் ஐடி தரப்படும் என்பதே ”சேவல்” க்ரூப் அட்மின்களின் திட்டம். இதை நம்பிய பல பேர் அட்மின்களின் எண்ணிற்கு 500 முதல் 3 ஆயிரம் வரை செலுத்தியுள்ளனர்.

அவர்கள் பணத்தை செலுத்தியவுடன் க்ரூப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் நீக்கும் வரை நாம் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் என்ற விசயமே தெரியாமல், தூண்டிலில் சிக்கிய மீனாக வாலிபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் இப்படி ஏமாற்றியதாக யாருமே புகார் கொடுக்க முன்வராத நிலையில், இணையத்தில் இதை பதிவிட்டு புலம்பி கொண்டு உள்ளனர்.

உலகிலேயே மிதக்கும் நீச்சல் குளம்! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ!

0

உலகிலேயே முதன் முதலாக மிதக்கும் நீச்சல் குளம் ஒன்றை லண்டனில் திறக்கப்பட்டுள்ளது.கண்கவரும் வெளிப்படையான நீச்சல் குளம் இது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களின் மனதை கவர செய்துள்ளது.

 

இரண்டு உயரமான கட்டிடங்களின் மேல் பத்தாவது தளத்தில் அந்தரத்தில் காற்றில் பறக்கும் வகையில் கண்ணாடி போன்று வெளிப்படையான நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் தென்மேற்கு பகுதியில் நைன் எலம்ஸ் பகுதியில்தான் இந்த நீச்சல் குளம் அமைந்துள்ளது.

 

நீச்சல் குளம் Sky Pook என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நீச்சல் குளம் பக்கவாட்டு பகுதிகள் அனைத்தும் கண்ணாடியில் செய்யப்பட்டுள்ளது, இதில் உள்ளவர்கள் வெளியே உள்ளவர்களையும் பார்க்கலாம். வெளியே சாலையில் செல்பவர்களும் நீச்சல் குளத்தில் இருப்பவர்களை பார்க்கலாம். அதுபோன்று கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

தரையிலிருந்து சுமார் 115 அடி உயரம் உள்ள கட்டிடங்களை இணைத்து தான் இந்த மிதக்கும் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. 82 அடி நீளம் கொண்டது இந்த மிதக்கும் நீச்சல் குளம். இந்த நீச்சல் குளத்தில் 35 மீட்டர் தூரம் வரை நீந்தி செல்லலாம்.

 

உலகிலேயே இது போல வெளிப்படையான நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருப்பது முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் ஆனது 50 டன் எடை கொண்ட நீரை தாங்குமாம். அதனால் இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

 

எம்பஸ்ஸி கார்டன் என்னும் நிறுவனம் மூலம் இந்த நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய கட்டுமான பொறியாளர் என் பெயர் Eckersley O, Callaghan . இந்த நீச்சல் குளத்தில் 1.48 லட்சம் லிட்டர் நீர் நிரப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

 

எம்பஸ்ஸி கார்டன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நீச்சல் குளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளது. இதைப் பார்த்த மக்கள் மிகவும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் உங்களுக்காக.

 

https://www.instagram.com/reel/CPluex9pO3X/?utm_medium=copy_link

 

 

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்!

0

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை கடந்து வாழ்ந்து கொண்டு உள்ளனர்.இந்நிலையில் மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க முழு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

நோய் தொற்று குறைந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அரசின் பொருளாதாரமும் மோசமாகவே உள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் யாஷ்.இவர் பெங்கலூரில் பிறந்தார்.பின் பியுசி முடித்து டிராமாவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.2010 முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2018 ம் ஆண்டு இவர் நடித்த கே.ஜி.எப்.1 மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.இந்த படத்தின் வசூல் மட்டும் 250 கோடியை எட்டியது.

தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவர உள்ள நிலையில், கொரோனா தொற்றில் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் 3000 கன்னட தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட வங்கி கணக்குகளில் தலா 5000 என தனது சொந்த பணத்தை செலுத்தி உள்ளார்.மொத்தமாக ரூ.1.5 கோடி அவர்களுக்கு வழங்கி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும் போது இந்த மோசமான நிலையில் அவர்களது வேதனையை முழுமையாக போக்க இந்த பணம் தீர்வாகாது என்றாலும், நம்பிக்கைக்கான வெளிச்சம் ஆக இருக்கும் என நடிகர் யாஷ் கூறினார்.

தனது மகனின் பெயரையும், குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்த ஷ்ரேயா கோஷல்!

0

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது தனது மகனின் பெயரையும் மற்றும் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரேயா கோஷல் மற்றும் ஷிலாதித்யா முகோபாத்யாயா ஆகியோருக்கு பிப்ரவரி 5 ஆம் நாள் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மே 22 அன்று பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இன்று ஸ்ரேயா கோஷல் அவர்கள் தனது மகனின் பெயர் “தேவ்யான் முகோபாத்யாயா” என அறிவித்தார். மேலும் தனது மகன் மற்றும் கணவர் ஆகியோர் உடன் குடும்ப படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தங்களது குடும்ப படத்தை பதிவிட்டு ஷ்ரேயா கோஷல் அவர்கள் கூறியது, மே 22ஆம் அன்று பிறந்த எங்கள் வாழ்க்கையை மாற்றினார். அவர் பிறந்து எங்கள் இதயங்களை அன்பினால் நிரப்பினார். தாய் தந்தையால் மட்டுமே தங்கள் குழந்தைகளின் அன்பை உணர முடியும். இந்த தூய்மையான கட்டுப்பாடற்ற இந்த அன்பு ஒரு கனவு போலவே உணரச் செய்கிறது. ஷிலாதித்யா இந்த அழகான வாழ்க்கையை பரிசளித்த என் கணவருக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CPm_D3TA1H7/?utm_source=ig_web_copy_link

வெளியானது “Conjuring 3” ட்ரெய்லர்- ‘பேய்’ உள்ளது என்பதை நிரூபிக்க தயாராக உள்ள படக்குழு!

0

The Conjuring என்ற படம் வெளிவந்து அனைவரையும் பயத்தின் உச்சத்திற்கு கொண்டு போனதை யாரும் மறக்க முடியாது.

இப்பொழுது The Conjuring3 படத்தின் டிரைலர் வெளிவந்து உள்ளது. இது கண்டிப்பாக அனைவரையும் பயத்தின் எல்லை வரை கொண்டு செல்லும் என்பது நிச்சயமே.

அந்த ட்ரெய்லரில், படத்தின் கதைக்களம் ஒரு மனிதனை சுற்றி மட்டும் வருகிறது, அந்த மனிதன் ஒருவரைக் கொன்று விட்டதால் பேய் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார். பேய்களை ஓட்டும் அந்த இரண்டு பேரும் தீய சக்திகளை நம்புவதால் இந்த அந்த மனிதன் சொல்வதை இவர்கள் நம்புகிறார்கள்.

இந்த ட்ரெய்லர், பேய் ஓட்டுபவர்களையும் பேய்கள் சும்மா விடாது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

The Conjuring – The Devil Made Me Do It. உண்மையான கதையை கொண்டு எடுக்கப்பட்டது. ஜான்சன் என்பவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றி தான் இந்த கதை நகர்கிறது. அவர் ஒருவரைக் கொன்று விட்டதாகவும் அதனால் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் அவரது மனைவியிடம் பேசி அவரும் அனுபவத்தை பகர்ந்ததைக் கொண்டு எடுத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை மைக்கேல் சாவேஸ் என்பவர் இயக்கியுள்ளார். பேய் ஓட்டுபவர்களாக நடித்தவர்கள் இதிலும் நடித்து உள்ளனர்.

https://youtu.be/bBRAseMeAIU
https://youtu.be/tLFnRAzcaEc

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

0

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதை செயல்படுத்துவது என்ற அடுத்தக்கட்டத்திற்கு எங்களால் செல்ல முடியாது என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு என்று தனி அமைச்சகம் கிடையாது. ஆனால், சமூகநீதியை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தான் உள்ளது. அதை உணர்ந்து சமூகநீதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் காக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியாக இருந்தாலும், வன்னியர் சங்கமாக இருந்தாலும் அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் சமூகநீதியை பாதுகாப்பது தான். 1980-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் தான் 10 ஆண்டுகள் தொடர் போராட்டங்களை நடத்தி, 21 உயிர்களை தியாகம் செய்து வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கச் செய்து 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அனைத்திந்திய தொகுப்பு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 22.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடும், இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களின் பயனாகவே வழங்கப்பட்டன.

தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் கிடைத்தது தான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் 27% இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நான் போராடியதால் தான் அது சாத்தியமானது. அந்த வகையில் தான்கல்வியிலும், சமூகத்திலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 41 ஆண்டுகளாக ஏராளமான அறப்போராட்டங்களை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன்.

வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டில் ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் வரை 6 கட்டங்களாக தொடர் போராட்டங்களை வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்தின. அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

அந்த சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை உயர்கல்வித்துறையால் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு விட்டது. மற்ற துறைகளிலும் இதேபோன்ற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும். அவற்றின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சகத்தின் முதன்மைப் பணியாகும்.

கல்வியைப் பொறுத்தவரை சட்டப்பல்கலைக்கழகத்தில் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டு விட்டது. அதே நேரத்தில் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. மருத்துவத்துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓமியோபதி மருந்து வழங்குனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு 555 பேரை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையில் முந்தைய இட ஒதுக்கீட்டு முறையே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகளில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து, வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த இரு நடவடிக்கைகளும் தவறானவையாகும்.

பணி நியமனங்கள் தொடர்பான இந்த அறிவிக்கைகளில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு இடம் பெறாதது தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை பிற்படுத்தப்பட்டோர் அமைச்சகம் தான் தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டு, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் துறையின் அமைச்சரே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கிறார் என்றால், இது அவரது நிலைப்பாடா…. இல்லை அரசின் நிலைப்பாடா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சமூகநீதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு முறை புதிய இட ஒதுக்கீடுகள் சட்டமாக்கப்படும் போது அதை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சக்திகள் வழக்குத் தொடர்வது வாடிக்கையானது தான். தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 100% இட ஒதுக்கீட்டை ஒழிக்க செண்பகம் துரைராஜன் வழக்கு தொடர்ந்த நாள் முதல் இத்தகைய வழக்குகள் தொடரப்பட்டு தான் வருகின்றன. ஆனால், அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்காத வரை, அதை நடைமுறைப்படுத்த எந்தத் தடையும் இல்லை. இது தான் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 1994-ஆம் ஆண்டில் தொடங்கி 27 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு வழக்கு எங்காவது ஒரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போதும் கூட இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாலும், 27 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்த வழக்குகளும் நிலுவையில் தான் உள்ளன; இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும், அந்த இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. காரணம்…. அந்த இட ஒதுக்கீடுகளுக்கு எந்த நீதிமன்றத்திலும் தடை விதிக்கப்படவில்லை என்பது தான்.

அதேபோல், தேசிய அளவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கான ( Economically Weaker Section- EWS) 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு இரண்டரை ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முதலில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட அவ்வழக்கு இப்போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால், தேசிய அளவில் கல்வி – வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள போதிலும், அவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அவ்வாறு இருக்கும் போது வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுப்பது சட்டத்தையும், சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயலாகும்; இது தவிர்க்கப்பட வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தவறுகளை களைய வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக இதுவரை பிறப்பிக்கப்பட்டுள்ள இரு அறிவிக்கைகளையும் திரும்பப்பெற்று, வன்னியர் இட ஒதுக்கீட்டையும் சேர்த்து புதிய அறிவிக்கைகளை வெளியிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை நடத்துவதற்கு சமூகநீதியில் அக்கறையும், வல்லமையும் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.