Thursday, July 17, 2025
Home Blog Page 4571

நான் பேசிய 2 நிமிட வீடியோ டிவியில் வரவில்லை! அதனால் விருது வேண்டாம்! பாலாஜி முருகதாஸ்!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் பாலாஜி முருகதாஸ். அவர் இப்பொழுது பி behind woods கொடுத்த விருதை வேண்டாம் என்று திருப்பி தந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து 2-வது இடத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கு வெளியில் பல எதிர்ப்புகள் இருந்தாலும், வெளியில் கெத்தாக இருந்து வருகிறார். இதற்கு முன்னும் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் அவருக்கு பிகைண்ட்வுட்ஸ் சார்பாக ஒரு விருது வழங்கப்பட்டது. தற்போது அந்த விருதை வேண்டாம் என்று பிகைண்ட்வுட்ஸ்க்கு திருப்பித் தந்து உள்ளாராம் பாலாஜி முருகதாஸ்.

 

அதைப் பற்றி டுவிட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வீடியோவும் வெளி வந்தது ஒருத்தரை தவிர, நான் பேசிய 2 நிமிட வீடியோவை டிவியில் ஒளிபரப்ப வில்லை. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நான் வந்தது தான் காரணமா? ஆமாம், என் இதயத்தில் இருந்து வரும் பேச்சுக்களை யாராலும் தடுக்க முடியாது! என்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து பாலாஜி வீடியோவை வெளியிடாததற்கான காரணம் தொகுப்பாளரை தவறாக பேசியது தான் என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை தன்னை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது என்று பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

விஜய் மல்லையாவின் சொத்துக்கள் – வங்கிகளுக்கு தர ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

 

அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை வங்கிகளின் குழுமத்திற்கு தர சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

9000 கோடி ரூபாய் கடனாக பல வங்கிகளில் வாங்கி அதை நிலுவையில் வைத்துள்ளார் விஜய் மல்லையா என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கட்ட முடியாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பித்துச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் வாங்கிய 17 வங்கி கட்டமைப்புகள் அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. கடனை கட்டமுடியாமல் அவர் மற்ற நாடுகள் தப்பிச் சென்றதால் அவருடைய பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருந்தது.

 

அதில் சில குறிப்பிட்ட சொத்துக்களை வங்கி குழுமத்திற்கு திருப்பி தர மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று வேறு சில சொத்துக்களை வங்கிகள் குழுமத்துக்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த உத்தரவை எதிர்த்த விஜய் மல்லையாவின் எதிர் மனுவையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

 

 

பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமில்லை!

0

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.அந்த விதத்தில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறை இருந்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 95 ரூபாய் 99 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 90 ரூபாய் 12 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக தெரிகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

0

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை மிகவும் உச்சகட்ட தாக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது அதன் வேகம் கொஞ்சம் குறைந்து வந்தாலும் கூட மாநிலங்களில் தற்சமயம் இந்த தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், நேற்று மாலை பிரதமர் மோடியுடன் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்திருக்கிறார்கள்.

இந்த ஆலோசனையின் முடிவில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.நேற்றுக் காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடன் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில கல்வி அமைச்சர் போன்றோர் ஆலோசனை செய்தார்கள்.

இதற்கிடையே மத்திய அரசு பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாநில அளவிலான கல்வியின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவர் ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.

கேபி முனுசாமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

0

பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு துணை நின்றவர் கேபி முனுசாமி. அதன்பிறகு சசிகலாவிற்கு எதிராக தன்னுடைய குரலை எப்போதுமே எழுப்பி வருகின்றார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் ஒன்றிணைந்தது முதல் கட்சியில் எவ்வாறு வெளிச்சத்திற்கு வருவது என்பதில் தான் கவனம் செலுத்தி வந்தார் கேபி முனுசாமி..

இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக மாறி விட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலில் இறங்கியிருக்கிறார் கேபி முனுசாமி கேபி முனுசாமி தற்சமயம் சட்டமன்ற கொரடா பதவியை அவர் குறிவைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சசிகலாவின் அதிமுகவிற்கு கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி மறைமுகமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலா பேசிய ஆடியோ அண்மையில் வெளியாகியது. ஆடியோவில் அவர் பேசியதை உறுதிப்படுத்தும் விதமாக தான் இது இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இதை மிகக் கடுமையாக எதிர்த்த கேபி முனுசாமி சசிகலா பேச்சு அதிமுகவின் தொண்டர்களுடன் நடைபெறவில்லை. அது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உடன் நடைபெற்ற பேச்சு என்று தெரிவித்திருக்கிறார். அதோடு எந்த அதிமுகவின் தொண்டனும் சசிகலாவின் பேச்சைக் கேட்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். அவர் இவ்வாறு உரையாற்றுவது சட்டமன்ற கொறடா பதவியை தன் வசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்று சொல்லப்படுகிறது.

தடுப்பூசி போட இனி கட்டாயம் இதை செய்ய வேண்டும்

0

தமிழ்நாடு முழுவதும் முறைத்துவிட்டு தடுப்பூசி சேர்த்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 4.20 லட்சம் கோவில் அதோடு 75 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்து சேர்ந்து இருக்கின்றன. இதன் வழியாக இரண்டு மூன்று தினங்கள் சமாளிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள விருப்ப படுவோர் அதற்க்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவிற்கு பிறகு குறுஞ்செய்தி மூலமாக தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இன்று உங்களுக்கு பணியில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன்கள்

0

இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     இன்று உங்களுக்கு பிரமாதமான நாள்.ஆற்றலும், நம்பிக்கையும் வெற்றிக்கு வழி காட்டும்.பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.மற்றவர்களை விட முன்னணியில் இருப்பீர்கள்.வீட்டில் நட்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.

ரிஷப ராசி:

     இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள்.புது நண்பர்கள் உருவாக்குவீர்கள்.பணிகளில் வளர்ச்சி ஏற்படும்.உங்களின் தனித்திறமை வெளிப்படும்.உங்கள் வீட்டில் உங்கள் மீது நல்ல புரிதல் உணர்வு ஏற்படும்.அதிக சேமிப்பு சேரும்.

மிதுன ராசி:

     இன்று உங்களுக்கு சற்று ஏமாற்றமான நாள்.எதும் முன்னேற்றம் இருக்காது.சில சமயங்களில் கட்டுபாட்டை இழப்பீர்கள்.மேலதிகாரிகள் உங்கள் மீது திருப்தி அடைய மாட்டார்கள்.பணிகளில் கவனம் தேவை.வீட்டில் வாய்சண்டை ஏற்படலாம்.பிரச்சனையை பேசி தீர்க்கலாம்.

கடக ராசி:

     இன்று மந்தமான நாள்.எண்ணங்களில் குழப்பம் இருக்கும்.நீங்கள் பிறரை அனுசரித்து போக வேண்டும்.பணிகள் வளர்ச்சி அடையாது.பணிகளை திட்டமிட்டு செய்யவும்.பணவரவு சொல்லும்படி இருக்காது.

சிம்ம ராசி:

     இன்று உங்களுக்கு அனுகூலமான நாள்.உங்களின் அணுகுமுறையால் வெற்றி கிடைக்கும்.பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.பணவரவு அதிகமாக இருக்கும்.

கன்னி ராசி:

     இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மை அளிக்கும்.இதனால் நீங்கள் உறுதியுடன் நிறைய சாதிப்பீர்கள்.பணிகளில் சேவை மனப்பான்மையுடன் செயல் படுவீர்கள்.பணம் சம்பாதிக்கும் நாள்.

துலாம் ராசி:

     இன்று உங்களுக்கு சாதகமான நாள்.உங்கள் உற்சாகம் குறைந்து காண்பீர்கள்.மன ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள்.இன்று வேலைப்பளு அதிகரித்து காணப்படும்.பணிகளை திட்டமிட்டு செயல்படுங்கள்.துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

விருச்சிக ராசி:

     இன்று உங்களுக்கு அமைதியின்மை இருக்கும்.செயல்களை எளிதாக செய்யலாம்.பணிகளில் மூழ்கி இயந்திரமாக செயல்படுவீர்கள்.துணையுடன் சண்டை ஏற்படலாம்.பணவரவு சிறிது சிரமமாக இருக்கும்.

தனுசு ராசி:

     இன்று மனதில் நம்பிக்கை ஏற்படும்.அனுகூலமான நாள்.முடிவுகளை துணிந்து எடுக்கலாம்.இன்று பணியில் நற்பெயர் எடுப்பீர்கள்.மேலதிகாரியின் நன்மதிப்பை பெறுவீர்கள்.உங்கள் துணையுடன் உறவை பராமரிக்க வேண்டும்.இன்று சேமிப்புகளை பின்பற்ற வேண்டும் உங்களிடம் தைரியம் நிறைந்து காணப்படும்.

மகர ராசி:

     இன்று சுமாரான நாளாக இருக்கும்,கட்டுப்பாட்டை இழக்கலாம் அதனால் மதிப்பு உள்ள வாய்ப்புகளை தக்க வைக்க முடியாது.இன்று நீங்கள் கவனமாக இருக்கவும்.செலவுகள் அதிகரிக்கும்.எனவே திட்டமிடவும்.

கும்ப ராசி:

     தியானம் மற்றும் யோகாசனம் செய்யும் போது மன அமைதி ஏற்படும்.பணிசுமை அதிகமாக இருக்கும்.திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.குழப்பமான மனநிலை காணப்படும்.கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

மீன ராசி:

     இன்று உங்களுக்கு பாதகமான நாளாக இருக்கும்.பணிகளில் வளர்ச்சி இருக்காது.வெற்றி கிடைக்காது.முதலீடுகள் செய்ய வேண்டாம்.கட்டுப்பாடுடன் இருக்கவும்.மூட்டு வழி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Kuinka liittyä ilmaisiin online-kasinoihin

0

online-kasinot

Kuinka liittyä ilmaisiin online-kasinoihin

Pennsylvanian asukkaat, jotka etsivät online-kasinopelejä, voivat helposti löytää online-kasinot seuraavista lähialueista: Länsi-Virginian nettikasinot ja Pohjois-Kentuckyn online-kasinot. Online-kasinopelaaminen on myös hyväksytty Michiganissa, mutta toistaiseksi yksikään online-kasino ei ole käynnistynyt tässä osavaltiossa. Näissä online-uhkapelitoiminnoissa tärkein vetovoima on online-lähtö, jota tarjotaan pelaajille ilmaiseksi verkossa. Online-kasinobonus on toinen merkittävä syy online-uhkapeleihin näissä osavaltioissa.

Yhdysvaltojen online-kasinot tarjoavat erilaisia ​​online-kasinobonuksia pelaajille ja pelaajille. Nettikasinot tarjoavat kampanjoita liittymisbonuksina, rekisteröitymisbonuksina ja kanta-asiakasbonuksina, jättipottibonuksina, turnausbonuksina, online-kasinobonuksina ja erikoispalkintoina. Erilaisia ​​kampanjoita ovat:

Nämä online-kasinot tarjoavat erilaisia ​​kasinopelejä pelaajilleen, joita houkuttelee houkutteleva bonus peliautomaatit ilmaiseksi tarjouksia ja tarjouksia. Suurin osa näistä online-kasinoista tarjoaa korkealaatuisia kolikkopelejä, live-pöytäpelejä, videopokeria, pöytäpelejä ja crapsia. Jotkut parhaiten arvioiduista nettikasinoista tarjoavat online-kolikkopelejä, kuten online-blackjack, online-ruletti, online-baccarat, online-keno, online-kolikkopelit ja paljon muuta. Online-kolikkopeleillä on se etu, että ne tarjoavat pelaajalle pelikoneen pelaamisen tunteen ikään kuin hän todella pelaisi sitä maalla sijaitsevalla kasinolla.

Nettikasinot tarjoavat talletusbonuksia ja online-voittoja pelaajille ja pelaajille, mikä lisää heidän motivaatiotaan pelaamiseen ja kasvattaa voittojaan. Me kaikki tiedämme, että tosielämässä voitamme joitain ja menetämme osan, mutta online-kolikkopeleissä voitamme tai hävitämme vain edellisten pyörien seurauksena. Siten pelaajat, jotka osallistuvat kolikkopeliturnauksiin, voittavat voittojen määrän lisäämisen sijaan voittojen kokonaismäärän pienentämisen aikana.

Verkkokasinoiden avulla yhdysvaltalaiset pelaajat voivat säästää paljon rahaa ja aikaa. Tiedämme, että online-kasinot eivät hyväksy talletuksia yhdysvaltalaisilta pelaajilta. Siksi Yhdysvalloissa asuvien pelaajien on pelattava muissa maissa voidakseen hyödyntää näiden online-kasinoiden tarjoamia talletusbonuksia. Me kaikki tiedämme, että ajan myötä online-kasinoiden kustannukset tulevat halvemmiksi. Tämä tarkoittaa, että pelaajilla on nyt paremmat vaihtoehdot valita ja on parempi käyttää palveluitaan.

Online-kasinot tarjoavat upeaa viihdettä ja hauskaa online-pelaajille. Me kaikki tiedämme, että voittaminen on kaikki tässä pelissä. Pelaajien on oltava tietoisia näiden uhkapelisivustojen tarjoamista bonuksista. Joten pelaajan on oltava tarpeeksi älykäs päättämään, mitkä pelisivustot tarjoavat parhaat bonukset ja kasinot pelitilojen kannalta.

‘ரியல் ஹீரோ’ எப்பவுமே ‘அப்பா’ தான்! மகனுக்காக செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

0

உடம்பு சரியில்லாத தனது மகனுக்காக மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் தூரம் சென்று சைக்கிளில் பயணம் செய்து மருந்து வாங்கி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கணிகன கோப்பலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஒரு கட்டட தொழிலாளி. கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்த பிறகு தனது பத்து வயது மகன் நரம்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். மைசூரில் சிகிச்சை பெற்று குணமாகாத நிலையிலும் பெங்களூரில் உள்ள மனநலம் மற்றும் நரம்பியல் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும். ஒரு நாள் கூட தவறாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவன் 18 வயது அடையும் வரை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் கால்-கை வலிப்பு வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்தது. தொடர்ந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அடைப்பு போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் தன் மகனை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார் ஆனந்த்.

நாள் தவறாமல் மருந்து சாப்பிட வேண்டும் என்ற சூழலில் இருக்கும் தன் மகனை காப்பாற்ற சைக்கிளிலேயே பெங்களூருக்கு செல்ல முடிவு எடுத்துள்ளார்.

கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்த ஆனந்த் மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். அவரது செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவரது மகனின் நோய்க்கு மருந்து களையும் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பினர்.

அதைப் பெற்றுக் கொண்ட ஆனந்த் அவரது அடுத்த இரண்டு நாட்கள் கழித்து வீடுவந்து சேர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எவ்வளவு அலைந்து திரிந்தும் சுற்றுவட்டார பகுதிகளில் அலைந்தும் மகனுக்கு தேவையான மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் கூட சாப்பிடாமல் இருக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் பெங்களூருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு சைக்கிளில் சென்று வர முடிவு செய்தேன். எனக் கூறினார்.

கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்!

0

கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்!

கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் மக்கள் பலரும் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளனர்.ஆனால் மக்களுக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், அதை தயாரிக்கும் மருத்துவர்களும் வசதி படைத்தவர்களாக மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில், நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டினத்தில் ஆனந்தையா என்பவர் சித்த வைத்தியம் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலான நிலையில், அதை ஆந்திர அரசும் தற்போது பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

அவர் இரண்டு வகையான மருந்துகளை அதாவது வாய் வழியே சாப்பிடக் கூடிய உருண்டை போன்ற மருந்தும், கண்களுக்கு ஊற்றக்கூடிய சொட்டு மருந்தும் கொரோனா மருந்தாக விற்பனை செய்து வருகிறார்.

அவரிடம் மருந்து வாங்க மக்கள் அனைவரும் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்த நிலையில், கொத்தையா என்ற ஆசிரியரும், கொரோனாவை விரட்ட கண்களில் போடப்படும் சொட்டு மருந்தை எடுத்துக் கொண்டார்.

மேலும் அவர் ஒரு வீடியோவையும் வெளி இட்டு இருந்தார்.அதில் அவர் தனக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மட்டுமே இருக்க முடியும் என்றும், மருத்துவர்கள் தன்னை குணப்படுத்த முடியாது எனவும் கூறிவிட்டனர்.

ஆனால் நெல்லூர் மாவட்டத்தில், கண்சொட்டு மருந்து எடுத்தவுடன் மூச்சுவிடுவதில் சிக்கல் ஒன்றும் இல்லை என்றும், நன்றாக மூச்சு விட முடிகிறது என்றும், உடனே குணம் அடைந்ததாகவும், பதிவிட்டு இருந்தார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், திடீரென்று அவருக்கு மீண்டும் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

தொடர்ந்து ஆக்சிஜன் குறைந்து வந்ததால், இரண்டு நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் காரணமாக கண்ணுக்கு தரும் சொட்டு மருந்தை தடை செய்து, வாய் வழியே சாப்பிடும் மருந்துக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும் அவர் குழுவிலேயே மூன்று நபர்கள் கோரோனாவினால் பாதிக்கப் பட்டதாக கூறுகின்றனர்.