Saturday, July 26, 2025
Home Blog Page 4592

இவன் தொல்லை தாங்கல!! இரண்டு பேரும் வாங்க ! தீர்த்து கட்டிடலாம்!! மனைவி!!

கோபிசெட்டிபாளையத்தில் பரோட்டா மாஸ்டர்க்கு ஆசைப்பட்டு கணவனை தனது கள்ளக் காதலர்கலோடு ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் பிரபா. பிரபா எந்த நேரமும் மொபைலும் கையுமாகத்தான் இருந்துள்ளார். பல ஆண் நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்து வந்துள்ளார். தனக்கு ஒரு மகள் இருப்பதையும் மறந்து, அவளின் எதிர்காலத்தைப் பற்றியும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சுற்றித் திரிந்திருக்கிரார்.

 

பாவம் சீனிவாசன் பகல் முழுவதும் சலூன் கடையில் வேலை பார்த்து வந்ததால் மனைவியின் செயல்கள் எதுவும் அவருக்கு தெரியாமல் இருந்துள்ளது. ஊரடங்கு என்பதால் சீனிவாசன் வீட்டிலேயே இருந்துள்ளார்.

 

வீட்டிலேயே உள்ள சீனிவாசன் பிரபாவிற்கு அடிக்கடி போன்கள் வந்து கொண்டிருந்ததையும், அதை எடுத்துக்கொண்டு போய் தனியாக பிரபா பேசுவதையும் கவனித்து வந்துள்ளார். இதனை கவனித்த சீனிவாசன் பிரபாவை அடித்து எச்சரிக்கை செய்துள்ளார்.

 

சீனிவாசன் இருக்கும் வரை தான் சந்தோஷமாக இருக்க முடியாது என்று பிரபா நினைத்து கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது குமாரபாளையத்தில் சலூன் கடை வைத்திருக்கும் வெள்ளையங்கிரி மற்றும் பரோட்டா மாஸ்டர் சரவணனுக்கு ஃபோன் செய்து ஐடியா கேட்டுள்ளார். அவர்கள் இருவரும் கொடுத்த யோசனையின்படி சீனிவாசனுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளார். அதனால் சீனிவாசன் நன்றாக தூங்கியுள்ளார்.

 

கணவன் தூங்கியதும் வெள்ளையங்கிரி மற்றும் சரவணனுக்கு போன் போட்டு பிரபா வரவழைத்துள்ளார். இருவரும் வந்து சீனிவாசனின் கழுத்தை இறுக்கி உள்ளனர். கயிற்றால் இருக்கவே தூக்கம் கலைந்த சீனிவாசன் உயிர் பிழைக்க காலை அடித்துள்ளார். கால் அடிக்கும் சத்தம் கேட்காமல் இருக்க பிரபா காலை அழுத்தி பிடித்து உள்ளார்.

 

சீனிவாசன் இறந்ததும் கள்ளக்காதலர்கள் இருவரும் கொடுத்த ஐடியாவை படி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று கணவனுக்கு இரண்டு நாளாக சளி இருமல் காய்ச்சல் இருந்ததாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

 

சீனிவாசன் இறந்த செய்தியைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். அப்பொழுது உறவினர்கள் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு சாவில் மர்மம் உள்ளதாக போலீசுக்கு தகவல் சொல்லி வழக்கு பதிவு செய்தனர்.

 

போலீஸ் விசாரணையில் பிரபா அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். பிரபா, வெள்ளையங்கிரி, சரவணன் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

மக்களுக்காக இந்த ஆட்சி நடைபெறும்! முதலமைச்சர் அதிரடி பதில்!

0

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் இருக்கின்ற நெகமத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் சென்னை உள்பட பெருநகரங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இன்னும் மூன்று தினங்களுக்குள் நோய்த்தொற்று ஊரடங்கு பலனையும் கொடுக்கும். நோய்தொற்று குறையத் தொடங்கும் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

முதலில் சென்னை மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மே மாதம் 24ஆம் தேதி முதல் மே மாதம் 31-ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல் படுத்தி இருக்கின்றோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதம் செய்யும் போது முதலில் ஒரு வாரம் முழு உள்ளங்கையை செயல்படுத்தி தொற்று பரவலின் தன்மையை கண்டு கொண்டு அதற்கேற்றவாறு ஊரடங்கை நீட்டித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் அதோடு அரசியல் நோக்கத்துடன் நாங்கள் எதையுமே அணுகவில்லை. மக்களுக்காக இந்த ஆட்சி நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் காலமானார்! அதிர்ச்சியில் தலைமை!

0

கோயம்புத்தூரை அதிமுககோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராஜு உடல்நல குறைவு காரணமாக காலமானதாக சற்றுமுன் தகவல் கிடைத்திருக்கிறது.

கோயம்புத்தூரை சார்ந்த கே டிவி ராஜ் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோயம்புத்தூரில் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார் அதோடு கோயம்புத்தூர் மாவட்ட ஒன்றிய தலைவர், முன்னாள் தமிழ்நாடு பஞ்சாலை அமைப்பின் தலைவர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர், போன்ற பல பொறுப்புகளை வகித்தவர் கே.பி.ராஜு

இந்த சூழலில் சிறுநீரக கோளாறு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்திருக்கிறார். அவருடைய மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், போன்றவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ஏம்மா!! நீ படம் காட்னது போதும் கிளம்பு!! மாட்டி கொண்ட போலீஸ் மனைவி!!

0

சென்னை திருமுல்லைவாயில் கொரோனா பரிசோதனைக்காக வந்து நகையைத் திருடி விட்டார்கள் என்று பொய் கூறி போலீஸின் மனைவி நாடகமாடியது அம்பலமான சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள ஆவடியை அடுத்து திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகர் என்ற பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ், இவருக்கு வயது 27, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மூன்றாம் அணி காவலர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரலேகா, வயது 24. தர்மராஜ் வழக்கம் போல நேற்று முன்தினம் 3.30 மணி அளவில் வேலைக்கு சென்றுள்ளார்.

திடீரென்று சந்திரலேகா திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். சந்திரலேகா அளித்த புகார் என்னவென்றால், .நேற்று முன்தினம் மாலை கணவர் தர்மராஜ் வேலைக்கு சென்ற சில மணி நேரத்தில் கொரோண பரிசோதனை செய்ய வேண்டும் என்ற ஒரு சில நபர்கள் வந்ததாகவும், அவர்கள் சந்திரலேகாவிற்கு மயக்க மருந்து கொடுத்து வீட்டிலுள்ள 5.5 சவரன் நகைகளையும் 40,000 பணத்தையும் திருடிச் சென்றதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சந்திரலேகாவை விசாரித்த திருமுல்லைவாயில் காவல் நிலைய அதிகாரிகள், சந்திரலேகாவின் கழுத்தில் நகைகள் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து இதில் ஏதோ பிரச்சினை உள்ளதாக கண்டறிந்தனர்.

இதனால் சந்திரலேகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது நகை காணாமல் போனதாக நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.

கணவர் தர்மராஜ்க்கு தெரியாமல் உறவினர் ஒருவரிடம் நகைகளையும் பணத்தையும் கொடுத்துள்ளார். அவர்கள் திரும்பி தரமாட்டார்கள் என்று தெரிந்த சந்திரலேகா கணவரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இந்த மாதிரியான நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.

அக்கா வீட்ல இல்ல!! தங்கை 16 வயசு பொண்ணு!! அக்கா கணவர் அடுத்தது??

0

சென்னை மாவட்டத்தில் ஆவடி அடுத்து உள்ள பக்கத்தில் 16 வயது சிறுமியை சிறுமியின் அக்காவின் கணவரே பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள செங்கற்சூளையில் 16 வயது சிறுமி அவர் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனால் என்னவாயிற்று என்று பதற்றமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அந்தச் சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சைக்கு சென்ற பெற்றோருக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையின் மூலம் அந்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என மருத்துவர்கள் கூறினார்கள். 16 வயது சிறுமி கர்ப்பம் ஆக உள்ளதால் மருத்துவர்கள் அருகிலுள்ள ஆவடி மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் விழுப்புரத்தில் உள்ள அக்கா கணவரான அஜித் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளியானது.

அஜித் என்பவர் தனது மனைவியுடன் செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை செய்து கொண்டிருந்தார்.அங்கு, அஜித் மனைவி, அவரது தாய், சகோதரர்கள் மற்றும் 16 வயது தங்கை வேலை செய்து வந்தனர்.

சிறுமியின் சகோதரி, சகோதரர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுமியை செங்கல் சூளையில் விட்டு விட்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது தனியாக இருந்த சிறுமியை அஜித் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விசாரணையில் உண்மை தெரியவர ஆவடி மகளிர் நிலைய போலீஸார் அஜித்தை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

 

கண்டனம் தெரிவித்த அஸ்வின்!

0

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான விதத்தில் நடந்து கொண்டது. மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் அதோடு அவரது வாக்குமூலம் தொடர்பான தகவல் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 5 வருடங்களாக இந்த கொடூரம் தொடர்ந்து வருவதாகவும் இது குறித்த புகைப்படம் மற்றும் காணொளிகளை அவர் வைத்திருப்பதாகவும், மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் வாக்குமூலம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான விதத்தில் நடந்து கொண்டதற்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில்,சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி பழைய மாணவராக மட்டுமல்லாமல், 2 இளம் சிறுமிகளின் தந்தையாகவும், இரண்டு குழப்பமான இரவுகள் இருந்தன.ராஜகோபாலன் என்பது இன்று வெளிவந்த ஒரு பெயர், ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, நாம் செயல்பட வேண்டும் மற்றும் அமைப்பின் முழுமையான மாற்றம் தேவை.என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

0


சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை புதிதாக கொண்டு வந்தது. அந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். டெல்லியில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் தொடங்கியது.

அந்த வகையில், தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஸ்டாலின் தலைமையில் இந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து போராட தொடங்கியது. அப்பொழுதே ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த மூன்று காலகட்டங்களில் தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

அந்த விதத்தில் தற்சமயம் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களையும், மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் ஆறு மாத காலங்கள் ஆகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மற்றும் உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். எனவே இது இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். ஆனால் அதற்கு முயற்சி செய்யாதது கவலை தருகிறது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..

வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர் ராமதாசை துயரத்தில் ஆழ்த்திய மரணம்!

0

டெல்டா நாராயணசாமி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு வெளியிட்டுயிருக்கின்ற இரங்கல் செய்தியில் என்னுடைய அரசியல் மற்றும் சமூக நீதி பயணத்தில் மறக்க இயலாத மனிதர் டெல்டா நாராயணசாமி தான் என்னுடைய வாழ்க்கையின் அனைத்து வெற்றி மற்றும் சோகங்கள் , சுகதுக்கங்கள் போன்றவற்றில் எனக்கு துணையாக இருந்தவர். என்னைப்போலவே எளிய குடும்பத்தில் பிறந்து கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் பொறியாளராக உருவெடுத்தவர். கடுமையான உழைப்பு காரணமாக, தொழில் அதிபராக உயர்ந்தார். 40 வருடங்களுக்கு முன்பு சமூக நற்பணி மன்றத்தில் எங்களுடைய நட்பு ஆரம்பமானது. வன்னியர் சங்க காலத்தில் வளர்ந்தது. அதன்பிறகு அசைக்க இயலாத ஆலமரமாக விழுது விட்டது. தூய நட்புக்கு சொந்தக்காரரான நாராயணசாமி மறைவு செய்தி கேட்டு என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. கண்கள் குளமாகின்றன என தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

ஆனால் அதோடு மேலும் அவர் தெரிவித்ததாவது என் மீதும், சமுதாயத்தின் மீதும், மிகப்பெரிய பற்றுக் கொண்டவர் எனவும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டங்களின் போதும் தளபதியாக விளங்கியவர் என்றும், இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் சொந்தங்கள் 21 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை ஆனதை தொடர்ந்து, அவர்களுடைய குடும்பத்திற்கு நிதி வாங்கி கொடுக்கும் குழுவின் உறுப்பினராக மிகவும் சிறப்பாக செயலாற்றி வந்தவர் நாராயணசாமி என்று தெரிவித்திருக்கிறார்.

1989 ஆம் வருடத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் உரையாடுவதற்கு சென்னையில் இருக்கும் டெல்டா நாராயணசாமியின் வீட்டில் இருந்து தான் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னை அழைத்துச் சென்றார். அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினப்புரட்சி நாளிழலின் மேலாண் இயக்குனராக பணியாற்றினார். இந்த நிகழ்வுகளை நினைவு கூறும்போதெல்லாம் எங்களுடைய நட்பின் ஆழத்தையும், வலிமையையும், உணர இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராக டெல்டா நாராயணசாமி இருந்திருந்தார். சென்னைக்கு நான் வருகை தரும் போதெல்லாம் அவரை சந்திக்காமல் சென்றது கிடையாது. அவருடைய மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும் எங்களுடைய சமூகத்துக்கும் பேரிழப்பு என தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த துயர சம்பவத்தில் இருந்து என்னை நானே தேற்றிக் கொள்ள இயலாமல் இருந்தாலும் நாராயணசாமியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இறந்தவர்களின் உடலில் கொரோனா எத்தனை மணி நேரம் இருக்கும்? எய்ம்ஸ் தடய அறிவியலர் விளக்கம்!

0

நாளுக்கு நாள் கொரோனா வின் தாக்கம் உலகையே தாக்கி ஸ்தம்பித்து வருகிறது. போன அலையை விட இந்த அலையில் இந்திய நாடு மிகவும் அதிகம் பாதித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் ஊரடங்கு போடப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு தளர்வு குளம் கொடுக்கப்பட்டிருந்தன. இறுதி சடங்கிற்கு 10 பேர் மட்டுமே அனுமதி போன்ற தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி இறந்த உடலிலிருந்து கொரோனா எப்படி பரவும்? எத்தனை மணி நேரம் இருக்கும் என்பதை பற்றியே.

 

பொதுவாக இறந்தவர்களின் உடலில் 24 மணி நேரம் மட்டுமே இருக்குமாம். எரித்த சாம்பல் மூலம் எந்த ஒரு தொற்று பரவாது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தடய அறிவியல் துறையின் தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் கடந்த ஒரு வருடமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பரிசோதித்த பொழுதும் கொரோனா இறந்தவர்களின் தொண்டை மற்றும் மூக்கில் 12 மற்றும் 24 மணி நேரம் வரை வைரஸ் உயிருடன் இருக்கலாம் அதற்கு மேல் தொற்று உயிருடன் இருக்காது என்று தெரிவித்தார்.

 

கொரோனாவால் உயிரிழந்த ஒருவரிடன் உடலில் இருந்து வேறுஒருவரின் உடலுக்கு தொற்று பரவ வாய்ப்பில்லை என தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் கொரோனா நோயாளிகளை முழுவதுமாக எரித்து பிறகு அந்த சாம்பலில் இருந்தும் தொற்று பரவாது. என்று கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசரக் கடிதம்!

0

தமிழ்நாட்டில் நடைபெற்று நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் கோயமுத்தூர் தெற்கு சட்டசபை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையில் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டம் இதுவரையில் இல்லாத அளவிற்கு தொற்றுப் பரவலில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இந்த நோயைத் தடுப்பதில் ஈடுபட்டிருக்கின்ற சுகாதாரத் துறையில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோயமுத்தூர் தொழில்துறை நகரம் என்பதால் 70சதவீதத்திற்கும் மேலான மக்கள் தொழில் துறையை சார்ந்தவர்கள் என்ற காரணத்தால், கோவையில் தடுப்பூசி போடுவதற்காக உடனடித் தேவை ஏற்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக இந்த பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதித்திருக்கிறது. அதோடு பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், மாநில அரசுக்கு உதவி புரிவதற்கும் மற்றும் நெருக்கடியை திறனுடன் கையாள்வதற்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு தமிழ் நாட்டிற்கு அனுப்பப் படவேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தி இருக்கிறார்.

அதோடு அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டும். அவற்றில் குறிப்பிடத்தக்க அளவை கோயம்புத்தூருக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.