Tuesday, July 22, 2025
Home Blog Page 46

சாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!

0

முதுமை காலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய்.இந்த நோய் தற்பொழுது இளமை பருவத்தினருக்கு அதிகமாக ஏற்படுகிறது.இந்த நோய் சாகும் வரை முழுமையாக குணமாகாது என்பதால் இதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.அதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு பிடித்த உணவுகளை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.குறிப்பாக இனிப்பு உணவுகளை சாப்பிடுவதில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

நீரிழிவு நோய் அறிகுறிகள்:-

**அதீத உடல் சோர்வு
**கண் பார்வை மங்குதல்
**அடிக்கடி சிறுநீர் கழித்தல்
**எடை இழப்பு
**அதிக தாகம் எடுத்தல்

நீரிழிவு நோய் வர காரணங்கள்:-

**குடும்ப வரலாறு
**வயது முதுமை
**உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறை
**கணைய நோய்
**மோசமான உணவுப் பழக்கம்
**உடல் பருமன்

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஐந்து பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2.பிறகு நெல்லிகாய் விதையை மட்டும் தூக்கி போட்டுவிட்டு சதை பற்றை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.இதற்கு அடுத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீரை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

3.இந்த நெல்லிக்காயை ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த நெல்லிக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

4.நெல்லிக்காய் ஜூஸை தினமும் ஒரு கிளாஸ் அளவிற்கு பருகி வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா காய் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கொய்யாக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்ஸர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

2.இந்த கொய்யாக்காய் ஜூஸை பருகி வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.இந்த கொய்யாக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.

நாய் கடித்தவர்கள் இதை செய்தால்.. ஆபத்துகளில் இருந்து மீண்டுவிடலாம்!!

0

தற்பொழுது தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.சாலைகளில் நாய்கள் அராஜகத்தால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.வெறி நாய்கள் மனிதர்களை கடிப்பது அதிகரித்து வருவதால் நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்தில் இருக்கின்றனர்.

வெறி நாய்கள் கடித்தால் உடலில் ரேபீஸ் வைரஸ் தாக்கம் அதிகரித்துவிடும்.நாய் கடியை அலட்சியமாக கொண்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தாக அவை மாறிவிடும்.நாய்க்கடி விஷம் உடலில் நுழைந்தால் நிச்சயம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாய்கள் மட்டுமின்றி எலி,பூனை போன்றவை கடித்தாலும் அவை விஷமாக மாறி உயிரை பறித்துவிடும்.

உங்களை நாய் கடித்துவிட்டால் நீங்கள் சில விஷயங்களை பின்பற்றி பாதிப்பில் இருந்து உங்களை மீட்டுவிடலாம்.

நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள்:

1)பாதிக்கப்பட்ட இடத்தில் சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.பிறகு வெது வெதுப்பான நீரை கொண்டு நாய் கடித்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

2)நாய் கடித்த இடத்தில் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

3)நாய் கடிபட்ட இடத்தில் இரத்தப் போக்கு இருந்தால் காட்டன் துணி கொண்டு அவ்விடத்தை அழுத்தி இரத்த வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

4)பிறகு மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.நாய் கடிக்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவர் சொல்லும் உண்வுமுறையை பின்பற்ற வேண்டும்.

5)நாய் கடிபட்டவர்கள் அடுத்து இரண்டு வாரங்களுக்கு தங்கள் உடல் நிலை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

சேலம் மாநகராட்சியில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர் தாக்குதல்: பரபரப்பான மன்ற கூட்டம்

சேலம் மாநகராட்சியில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர் தாக்குதல்: பரபரப்பான மன்ற கூட்டம்

சேலம் மாநகராட்சியில் மே 29, 2025 அன்று நடைபெற்ற மன்ற கூட்டத்தில், திமுக கவுன்சிலர் சு. சுகாசினி, அதிமுக எதிர்க்கட்சி தலைவர் என். யாதவமூர்த்தியை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டத்தின் போது, யாதவமூர்த்தி கட்டிட அனுமதிகள் முறையற்ற வகையில் வழங்கப்படுகின்றன என்றும், டெண்டர்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், அவர் மீது பேப்பர் ஒன்றை தூக்கி எறிந்தனர். பின்னர், திமுக கவுன்சிலர் சுகாசினி எழுந்து, யாதவமூர்த்தியின் அருகில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில், சுகாசினி அவரை கன்னத்தில் அறைந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் மேயர் மேஜை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து, திமுக கவுன்சிலர் சுகாசினி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

இந்த சம்பவம், மாநகராட்சி மன்ற கூட்டங்களில் ஏற்படும் அரசியல் மோதல்களின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

திடீரென கட்சி மாற்றம்! திமுகவை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்

புதுக்கோட்டை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “அரசியலில் நம்பிக்கையே முக்கியம். அதிமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, நாங்கள் 5 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் பெறுவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நம்பிக்கையை காப்பது அதிமுகவின் கடமை” எனத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியதைப் பாராட்டிய பிரேமலதா, “அவர்கள் தங்கள் வார்த்தையை நிறைவேற்றினர். நாங்களும் அதே நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என கூறினார்.

மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு உறுதியளித்த மாநிலங்களவை இடத்தை வழங்குமா என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கியமான கேள்வியாக உள்ளது.

மேலும், பிரேமலதா, “பொறுமை என்பது கடலுக்கு மேல். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். ஆனால், நம்பிக்கையை காப்பது முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு மாநிலங்களவை இடத்தை வழங்குமா அல்லது புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்பது எதிர்வரும் நாட்களில் தெளிவாகும்.

“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!” – அன்புமணி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராமதாஸ் தனது மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் நிலவும் பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும் வெளிப்படுத்தினார்.

முக்கிய குற்றச்சாட்டுகள்:

அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக பரிந்துரைத்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு தலைமைப் பண்பே இல்லை என்றும், மேடை நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி பொதுக்குழுவில் அன்புமணி மேடையில் மைக்கை தூக்கி டேபிளில் வீசியது போன்ற செயல்களை மேற்கொண்டதாக ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி, தனது தாயை குடிநீர் பாட்டிலால் தாக்க முயற்சித்ததாகவும், அது சுவரில் பட்டதால் அவர் மீது படாமல் தவிர்க்கப்பட்டது என்றும் கூறினார்.

முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞரணித் தலைவராக நியமித்ததை அன்புமணி எதிர்த்ததாகவும், அவரது நியமன கடிதத்தை கிழித்து போட்டதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

அன்புமணி, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என கூறி தனித்தனியாக போனில் பேசியதாகவும், அதனால் 108 மாவட்ட தலைவர்களில் 8 பேர் மட்டுமே வந்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.

வன்னியர் சங்க மாநாடு முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் பலர் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களை ஓய்வெடுக்க வலியுறுத்தி வந்த நிலையில் ராமதாஸ் அவர்களின் இந்த பேட்டியானது விவகாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அன்புமணியின் பதில்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து என்ன நடக்கும் என கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய விசா கோரிய மாணவர்களுக்கு வைத்த செக்! புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா!!

அமெரிக்கா அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப அங்குள்ள இளைஞர்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார். மேலும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் விசா குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை தற்போது கடுமையாகப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா பல்கலைக்கழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து செல்பவர்கள். இந்நிலையில் வெளிநாட்டு புதிய விசா மாணவர்களின் நேர்காணல்கள் நிறுத்தி வைக்கும்படி அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதிதாக விசா கோரி உள்ள மாணவர்களின் பேஸ்புக், எக்ஸ் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் பயங்கரவாத ஆதரவு காணப்பட்டால் அவர்களுடைய விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதிதாக விசாவிற்கு கோரி உள்ள மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் அமெரிக்க மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் படிப்பை கவனிக்காமல் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் மாணவர்கள் மிகவும் அவதியடைவதாக கூறப்படுகின்றது.

திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றம்.. கோவில் நிர்வாகம் அளித்த விளக்கம்!!

புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இருப்பது திருவண்ணாமலை. பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்படும். பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அதனால் சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை கோவிலின் பெயரை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இணையத்தில் செய்தி பரவி வருகின்றது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை கோவிலின் பெயர் அருணாச்சலேஸ்வரர் கோவில் என பெயர் மாற்றுவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக கோவிலின் இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 1940 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியத்தரிசி பாலசுப்ரமணியானால் திருவண்ணாமலை வரலாறு என்ற நூலில் கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் இந்த கோவிலை அண்ணாமலையார் ஆலயம் எனவும் அருணாச்சலேஸ்வரர் கோவில் எனவும் அழைத்து வருகின்றனர். தற்போது கோவிலின் பெயர் மாற்றுவது குறித்து வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு!! இது தான் கடைசி இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!!

பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியாகி உள்ளது. தற்போது மாணவர்கள் மேல்படிப்பிற்காக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் படி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சில பள்ளிகள் திருத்தங்களை முறையாக மேற்கொள்ளாமல் உள்ளது. அதனால் தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழில் தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வு அல்லது பெயர், மொழிப்பாடம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள இறுதிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஜூன் 13ஆம் தேதிக்குள் இதனை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona: காவு வாங்கிய கொரோனா தொற்று.. பீதியில் பொதுமக்கள்!!

கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சென்னை மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல் நல குறைவு காரணமாக கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் சென்னையின் அண்மையில் ஏற்படும் மரணம் என குறிப்பிட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே மிகவும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 1,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகம் எடுத்து வரும் நிலையில் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டணி வேணும்னா இதை செய்து தான் ஆக வேண்டும்.. அதிமுக-வுக்கு பிரேமலாத போட்ட ஆர்டர்!!

ADMK DMDK: தமிழகத்தில் உள்ள ஆறு எம்பிக்களின் பதவியானது வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலானது அம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆறு சீட்டுக்களில் நான்கு திமுகவும் மீதமுள்ள இரண்டு சீட்டுகள் அதிமுக வசம் உள்ளது. திமுக தனது கழக நிர்வாகிகள் மூன்று பேருக்கும் மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கி உள்ளது.

இரண்டு சீட்டுகளை கையில் வைத்திருக்கும் அதிமுக யாருக்கு வழங்குவது என்று ஆலோசனை செய்து வருகிறது. குறிப்பாக தேமுதிக ஒரு சீட்டு கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. கடந்து முறை கூட்டணி கட்டியாக இருந்த அன்புமணி, மேலும் ஜி கே வாசனுக்கு எம் பி சீட் கொடுத்தீர்கள். அதேபோல இம்முறையும் கூட்டணி கட்சிக்கென்று  ஒரு சீட்டு வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி கடந்த முறை பாமகவுக்கு சீட் வழங்கி, அவர்கள் உங்களுக்கு கூட்டணியில் எந்த ஒரு பக்க பலமாகவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் எம்பி சீட் வழங்குவதாக அதிமுக எங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததாகவும் பிரேமலதா கூறியுள்ளார். ஆனால் அதிமுக தலைமை இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் தனது வாரிசை டெல்லிக்கு அனுப்பி எம்பியாக பார்க்க வேண்டும் என் பிரேமலதா நினைக்கிறார்.

அதேபோல சீட்டு வழங்கினால் மட்டும் தான் கூட்டணி வைப்போம் என்ற முடிவில் பிரேமலதா உள்ளாராம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எம் பி சீட் குறித்து அதிக நெருக்கடி இருப்பதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இம்முறை எம்பி சீட் கூட்டணி கட்சிக்கு வழங்காமல் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்குமாறு மற்றொருபக்கம் பரிந்துரை செய்து வருகின்றனர். யாருக்கு இந்த எம்பி சீட் கிடைக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.