Thursday, July 24, 2025
Home Blog Page 47

“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!” – அன்புமணி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராமதாஸ் தனது மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் நிலவும் பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும் வெளிப்படுத்தினார்.

முக்கிய குற்றச்சாட்டுகள்:

அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக பரிந்துரைத்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு தலைமைப் பண்பே இல்லை என்றும், மேடை நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி பொதுக்குழுவில் அன்புமணி மேடையில் மைக்கை தூக்கி டேபிளில் வீசியது போன்ற செயல்களை மேற்கொண்டதாக ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி, தனது தாயை குடிநீர் பாட்டிலால் தாக்க முயற்சித்ததாகவும், அது சுவரில் பட்டதால் அவர் மீது படாமல் தவிர்க்கப்பட்டது என்றும் கூறினார்.

முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞரணித் தலைவராக நியமித்ததை அன்புமணி எதிர்த்ததாகவும், அவரது நியமன கடிதத்தை கிழித்து போட்டதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

அன்புமணி, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என கூறி தனித்தனியாக போனில் பேசியதாகவும், அதனால் 108 மாவட்ட தலைவர்களில் 8 பேர் மட்டுமே வந்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.

வன்னியர் சங்க மாநாடு முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் பலர் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களை ஓய்வெடுக்க வலியுறுத்தி வந்த நிலையில் ராமதாஸ் அவர்களின் இந்த பேட்டியானது விவகாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அன்புமணியின் பதில்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து என்ன நடக்கும் என கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய விசா கோரிய மாணவர்களுக்கு வைத்த செக்! புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா!!

அமெரிக்கா அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப அங்குள்ள இளைஞர்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார். மேலும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் விசா குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை தற்போது கடுமையாகப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா பல்கலைக்கழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து செல்பவர்கள். இந்நிலையில் வெளிநாட்டு புதிய விசா மாணவர்களின் நேர்காணல்கள் நிறுத்தி வைக்கும்படி அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதிதாக விசா கோரி உள்ள மாணவர்களின் பேஸ்புக், எக்ஸ் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் பயங்கரவாத ஆதரவு காணப்பட்டால் அவர்களுடைய விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதிதாக விசாவிற்கு கோரி உள்ள மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் அமெரிக்க மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் படிப்பை கவனிக்காமல் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் மாணவர்கள் மிகவும் அவதியடைவதாக கூறப்படுகின்றது.

திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றம்.. கோவில் நிர்வாகம் அளித்த விளக்கம்!!

புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இருப்பது திருவண்ணாமலை. பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்படும். பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அதனால் சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை கோவிலின் பெயரை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இணையத்தில் செய்தி பரவி வருகின்றது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை கோவிலின் பெயர் அருணாச்சலேஸ்வரர் கோவில் என பெயர் மாற்றுவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக கோவிலின் இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 1940 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியத்தரிசி பாலசுப்ரமணியானால் திருவண்ணாமலை வரலாறு என்ற நூலில் கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் இந்த கோவிலை அண்ணாமலையார் ஆலயம் எனவும் அருணாச்சலேஸ்வரர் கோவில் எனவும் அழைத்து வருகின்றனர். தற்போது கோவிலின் பெயர் மாற்றுவது குறித்து வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு!! இது தான் கடைசி இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!!

பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியாகி உள்ளது. தற்போது மாணவர்கள் மேல்படிப்பிற்காக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் படி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சில பள்ளிகள் திருத்தங்களை முறையாக மேற்கொள்ளாமல் உள்ளது. அதனால் தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழில் தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வு அல்லது பெயர், மொழிப்பாடம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள இறுதிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஜூன் 13ஆம் தேதிக்குள் இதனை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona: காவு வாங்கிய கொரோனா தொற்று.. பீதியில் பொதுமக்கள்!!

கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சென்னை மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல் நல குறைவு காரணமாக கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் சென்னையின் அண்மையில் ஏற்படும் மரணம் என குறிப்பிட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே மிகவும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 1,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகம் எடுத்து வரும் நிலையில் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டணி வேணும்னா இதை செய்து தான் ஆக வேண்டும்.. அதிமுக-வுக்கு பிரேமலாத போட்ட ஆர்டர்!!

ADMK DMDK: தமிழகத்தில் உள்ள ஆறு எம்பிக்களின் பதவியானது வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலானது அம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆறு சீட்டுக்களில் நான்கு திமுகவும் மீதமுள்ள இரண்டு சீட்டுகள் அதிமுக வசம் உள்ளது. திமுக தனது கழக நிர்வாகிகள் மூன்று பேருக்கும் மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கி உள்ளது.

இரண்டு சீட்டுகளை கையில் வைத்திருக்கும் அதிமுக யாருக்கு வழங்குவது என்று ஆலோசனை செய்து வருகிறது. குறிப்பாக தேமுதிக ஒரு சீட்டு கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. கடந்து முறை கூட்டணி கட்டியாக இருந்த அன்புமணி, மேலும் ஜி கே வாசனுக்கு எம் பி சீட் கொடுத்தீர்கள். அதேபோல இம்முறையும் கூட்டணி கட்சிக்கென்று  ஒரு சீட்டு வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி கடந்த முறை பாமகவுக்கு சீட் வழங்கி, அவர்கள் உங்களுக்கு கூட்டணியில் எந்த ஒரு பக்க பலமாகவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் எம்பி சீட் வழங்குவதாக அதிமுக எங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததாகவும் பிரேமலதா கூறியுள்ளார். ஆனால் அதிமுக தலைமை இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் தனது வாரிசை டெல்லிக்கு அனுப்பி எம்பியாக பார்க்க வேண்டும் என் பிரேமலதா நினைக்கிறார்.

அதேபோல சீட்டு வழங்கினால் மட்டும் தான் கூட்டணி வைப்போம் என்ற முடிவில் பிரேமலதா உள்ளாராம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எம் பி சீட் குறித்து அதிக நெருக்கடி இருப்பதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இம்முறை எம்பி சீட் கூட்டணி கட்சிக்கு வழங்காமல் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்குமாறு மற்றொருபக்கம் பரிந்துரை செய்து வருகின்றனர். யாருக்கு இந்த எம்பி சீட் கிடைக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரேஷன் அட்டை இல்லவதவர்களுக்கும் ரூ 1000 உரிமைத்தொகை!! உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!!

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் ஒன்றாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டத்தை அமல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த குடும்ப தலைவிகள் பயனாளியாக சேர்க்கப்படவில்லை இந்நிலையில் தமிழகத்தில் 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் மட்டுமே உரிமைத் தொகையை பெறுகின்றனர். தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இன்று முதல் விண்ணப்பம் பெறப்படும்.

தற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெறும் நிலையில் இந்த முகாமின் மூலம் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ,100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, விண்ணப்பிக்கும் குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும் வங்கி பாஸ்புக் மற்றும் மொபைல் எண் ஆகியவை முக்கியமான ஆவணம்.மேலும் விண்ணப்பதாரர்கள் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு நேரடியாக சென்று தங்களுடைய விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

10 மற்றும் +2 முடித்த மாணவர்களே.. அரசு டிப்ளமோ கல்லூரியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.

நடப்பு கல்வியாண்டு அதாவது 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது தொடங்கியிருக்கிறது.கடந்த மே 7 அன்று சேர்க்கை முறை தொடங்கப்பட்ட நிலையில் வருகின்ற மே 31 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு கொண்டிருக்கிறது.இது தவிர 32 அரசு உதவிபெறும் பாலிடெக்னி மற்றும் 414 தனியார் பாலிடெக்னி கல்லூரிகள் இயங்கி கொண்டிருக்கிறது.தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றது.

இதில் 55 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளில் 20,500க்கும் அதிகமாக இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.32 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 14,000 இடங்களும் இருக்கிறது.10 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.அதேபோல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சேர சேர்க்கை கட்டணம் ரூ.2000 முதல் ரூ.2500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் http://tnpoly.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எக்ஸாம்க்கு ரெடி ஆகுங்க!!

தமிழக அரசு பணிக்கு தகுதியான நபர்கள் TNPSC அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் பணியமரத்தப்படுகின்றனர்.தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு துறைகளுக்கு தகுதியான நபர்களுக்கான ஆட்சேர்ப்பு அவ்வப்போது எழுத்து தேர்வின் மூலம் நடைபெறுகிறது.

கல்வித் தகுதி,வயது வரம்பு உள்ளிட்டவற்றை பொருத்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1,குரூப் 2 மற்றும் குரூப் 2A,குரூப் 4,குரூப் 5.குரூப் 6,குரூப் 7,குரூப் 8 என்று பல தேர்வுகளை நடத்தி வருகிறது.

குரூப் -1

துணை கலக்டெர்,DSP,பதிவுத் துறை,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் -2 மற்றும் குரூப் -2A

நகராட்சி ஆணையர்,துணை பதிவாளர்,உதவி பிரிவு அதிகாரி,துணை வணிக வரி அதிகாரி,நன்னடத்தை அலுவலர்,திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் -3

கிராம நிர்வாக அலுவலர்,தட்டச்சர்,இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

குரூப் -4:

இளநிலை உதவியாளர்,தட்டச்சர்,கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

TNPSC தேர்வு:

வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.அடுத்து செப்டம்பர் 28 குரூப் 2 மற்றும் 2A நடைபெற உள்ளது.

இந்த இரு தேர்வுகளும் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.இந்த தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும்.தமிழ் மொழி கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கும்,பொது ஆய்வுகள் மற்றும் திறன் மற்றும் மனத்திறன் தேர்வு 150 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

போட்டி தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை ஆய்வு செய்ய வேண்டும்.6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை படித்த பிறகு முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படிக்க வேண்டும்.பிறகு தேர்வு முந்தைய 6 மாதங்களுக்கான நடப்பு நிகழ்வுகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். தினமும் தேர்வு பாடத்தை படித்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடேங்கப்பா ஒரு நாள் நைட்டுக்கு இத்தனை லட்சமா? டிராகன் பட நாயகி சிக்கியது எப்படி?

தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.இது குறித்த புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சம்மந்தப்பட்டவர்கள் மீது FIR பதிவு செய்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகள்,அலுவலகங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் டாஸ்மாக்கில் 1000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது என்பதை அதிகார்பூர்வமாக அறிவித்தது.

கடந்த மே 16 அன்று ரத்தீஷ்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர்கள்,திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டாஸ்மாக் ஊழல் விசாரணை பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில் பிரபல நடிகை கயாடு லோகருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

டிராகன் படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோகர்.இவர் தற்பொழுது சிம்பு,ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.டிராகன் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் டாப் இடத்தில் இருக்கும் நடிகை கயாடு லோகர் டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பவர்கள் நடத்திய இரவு பார்ட்டியில் கலந்து கொள்ள ரூ.35,00,000 வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில் குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் கயாடு லோகர் டாஸ்மாக் ஊழல் வழக்கில் தொடர்பு படுத்தப்படுத்தப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.