கூலித் தொழாலாளியாக மாறிய ராகுல் காந்தி!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!!

0
142
#image_title

கூலித் தொழாலாளியாக மாறிய ராகுல் காந்தி!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!!

டெல்லி ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இரயில் நிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சிவப்பு நிற சட்டையை அணிந்து சுமை தூக்கி செல்லுமாறு உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வாயிலாக வருகின்றது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்கினார். ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லும் ராகுல் காந்தி அவர்கள் அங்கு இருக்கும் மக்களிடமும் தொழிலாளர்களிடமும் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு வருகின்றார்.

அந்த வகையில் பாரத் ஜோடோ யாத்திரையில் லாரி ஓட்டுநர்களுடன் லாரியில் சென்ற ராகுல் காந்தி அவர்கள் லாரி ஓட்டுநர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மார்கெட் பகுதிகளுக்குள் சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும் மீனவர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று மீன் பிடித்தது, விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடுவது போன்ற செயல்களை செய்து மக்கள் மனதில் ராகுல் காந்தி அவர்கள் இடம் பிடித்து வருகின்றார்.

அதைப் போலவே பல்வேறு கூலித் தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்கள் செய்யும் வேலை செய்து கொண்டே கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை ராகுல் காந்தி கேட்டு வருகிறார்.

அந்த வகையில் டெல்லி ஆனந்த் விஹார் இரயில் நிலையத்தில் வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் ராகுல் காந்தி அநர்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இன்று(செப்டம்பர்21) திடீரென்று ராகுல் காந்தி அவர்கள் டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கு வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி அவர்கள் கலந்துரையாடினார்.

அப்பொழுது சுமை தூக்கும் தொழிலாளர்கள் அணியும் சிவப்புநிற சட்டையை அணிந்து கொண்டு இரயில் நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரின் பெட்டியை ராகுல் காந்தி அவர்கள் தலையில் வைத்து சுமந்து சென்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

மேலும் ராகுல் காந்தி அவர்களுடன் கலந்துரையாடிய சுமைதுக்கும் தொழிலாளர்கள் அனைவரும் ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.