எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக விளையாட்டுமேம்பட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது சர்ச்சை அமைச்சராக வலம் வருகிறார்.இவர் கூறும் ஆணவக் கருத்துக்கள் அனைவரையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.முதலில் இந்து மதத்தையும்,சனாதனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கூறி மக்களின் கண்டனத்திற்கு ஆளானார்.

மக்கள் பிரதிநியதாக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்று,வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது என்று உதயநிதிக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கிய நிலையில் தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.கடந்த செப்டம்பர் 7 அன்று உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளிட்டார்.

அதில் சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச்செயலாளர் தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருந்து தேடி கொண்டிருக்கிறார்.கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாட்கள் ஒளிந்திருக்க முடியாது.அந்த ஆடு காணாமல் போனால் உங்கள் நிலைமை என்ன ஆகும் என்பதை எண்ணி பார்க்க வேண்டுமென்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் உதயநிதியின் இந்த கருத்து தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாககவும்,இதற்காக உதயநிதி தனக்கு மான நஷ்ட ஈடாக 1 கோடியே 10 லட்சம் வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நீதிபதி மஞ்சுளா அமர்வு முன் வந்தது.இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு தன்னை யாரும் இதுவரை இதுவரை அழைத்ததில்லை.தனக்கும் இந்த கொடநாடு வழக்கிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.தான் ஆட்சி பொறுப்பில் இருந்த சமயத்தில் இந்த கொடநாடு வழக்கு விசாரணையை நடத்த அனுமதி வழங்கினேன்.அப்படி இருக்கையில் எந்த தவறும் செய்யாத தன்னை இந்த வழக்கில் தொடர்பு படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

தற்பொழுது திமுக தான் ஆட்சி செய்து வருகிறது.அப்படி இருக்கையில் முழுமையான விசாரணையை மேற்கொள்ள அவர்களால் மடியும்.ஆனால் அதை விடுத்துவிட்டு எந்த ஆதாரமும் இன்றி தன் மீது வீண் பழியை போட உதயநிதி முயற்சிக்கிறார்.இவரின் இந்த அவதூறு பேச்சால் மக்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.எனவே உதயநிதி தன்னை பற்றி பேசுவதற்கும்,தன் மீது அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று திரு.எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நீதிபதி மஞ்சுளா அவர்கள் அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கை வெளியிடுவது வழக்கமான ஒன்று என்றாலும் உதயநிதியின் அறிக்கையில் அவதூறு கருத்துக்கள் இருக்கிறது.இந்நிலையில் அமைச்சர் உதயநிதியின் அறிக்கையில் அவதூறை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும்.எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற அவதூறு அறிக்கையை வெளியிட கூடாது.அதேபோல் இந்த மனு மீதான விசாரணை முழுமையாக முடியும் வரை இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதி மனுவிற்கு 2 வாரங்களில் பதில் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டுள்ளார்.