குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை- ஸ்டாலின் அறிவிப்பு!!

0
178
#image_title

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நடந்த சட்டசபையில். குடும்ப தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டசபையில் தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சி ஒரு நல்ல ஆட்சியாக செயல்பட்டு வருகிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்வேன்.

மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இதுவரை மட்டும் 265 கோடி பயணங்களை மகளிர் பயணித்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து 1000 ரூபாய் உதவி தொகையையும் குடும்ப தலைவிகள் பெற போகிறார்கள்.

அதற்கான செயல் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இதன் மூலம் ஒரு கோடி மகளிர் பயனடைய போகிறார்கள். அதுமட்டுமின்றி மேலும் பல உதவிகளையும் செய்துள்ளோம் அதுபற்றி பல மேடைகளிலும் நான் பேசியுள்ளேன்.

இதற்கு முன் 63 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை. திமுக ஆட்சிக்கு வந்த பின் 33 ஆயிரம் கோடி குறைந்து, 30 ஆயிரம் கோடியில் இருக்கிறது.

மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 6.1 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து துறையிலும் எங்கள் வெற்றி என்னவென்று என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும். இன்னும் பல திட்டங்களும் வெளியிட உள்ளோம்.

எங்களுக்கு எதிராக செயல் படுவர்களுக்கு நான் பதிலடி கொடுத்துள்ளேன். அதுவே அவர்களுக்கு தோல்வி கண்டதை போல் இருக்கும்.

நான் முதலில் வெற்றி அடைந்து விட்டேன் என்று சொன்னது ஆட்சியில் மட்டுமல்ல, மக்களின் மனதிலும் தான், என்று சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.

மாதம் 1௦௦௦ ரூபாய் உதவித்தொகை என்ற திட்டம். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு மட்டும் தான் என்று அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்க இருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை, பொருளாதார ரீதியான இந்த சிக்கலால் செயல்படுத்த முடியவில்லை.

மாத உதவித்தொகை மட்டுமின்றி பல்வேறு திட்டங்கள் இன்னும் அமலுக்கு வரவில்லை. 1௦௦௦ ரூபாய் உதவித்தொகை திட்டம், ஏழ்மையான குடும்ப பெண்களை சேரும், அதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த உதவிதொகையில் வருமான வரி செலுத்துவோர், சொந்த வீடு வைத்திருக்கும் பெண்களுக்கு உதவித்தொகை பெறமுடியாது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களும், PHH-AYY, PHH, NPHH ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உதவி தொகை வழங்கப்படும்.

மேலும் NPHH-S, NPHH-NS அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு உதவித்தொகை பெறமுடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

author avatar
Jayachithra