விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

0
70

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக நிறைவேறும் நாள். இன்றைய தினம் அருமையாக திட்டம் போட்டு செயல்படுத்துவீர்கள். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகள் மூலம் சில நன்மைகளை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் மீது நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

உத்தியோகத்தில் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பான சூழ்நிலைகளில் நிலவும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வட்டாரம் விரிவடையும்.

அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். கலைத்துறையில் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி அற்புதமான பாதையில் செல்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரப்பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani