பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!

பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா என்ற பேருந்து நிலையத்தில்  நின்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இருந்தார் என கூறப்படுகிறது .அப்போது அவரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் தடுத்துள்ளார்.மேலும் அவரை பேருந்தை விட்டு கீழே இறங்கும் படியும் கூறியுள்ளார்.

அதனை அந்த பயணி கேற்க வில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த நடத்துனர் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு அடித்துள்ளார். மேலும் ஆத்திரம் தாங்காமல் பயணியை நடத்துனர் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.அதன் பிறகு சிறிதும் அச்சம்மின்றி பேருந்தின் கதவை மூடி விட்டு பேருந்தை இயக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . போதையில் இருந்த அந்த நபர் சாலையிலேயே விழுந்து கிடந்தார். இதனுடைய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.