தீவில் புதுமனைவியுடன் விடுமுறையை கொண்டாடும் வில்லன் நடிகர்!! செல்பி படங்கள் வெளியீடு!! 

0
71
Villain actor vacationing with his new wife on the island!! Release of selfies!!
Villain actor vacationing with his new wife on the island!! Release of selfies!!

தீவில் புதுமனைவியுடன் விடுமுறையை கொண்டாடும் வில்லன் நடிகர்!! செல்பி படங்கள் வெளியீடு!! 

பிரபல வில்லன் நடிகர்
தனது புது மனைவியுடன் விடுமுறைக்கு சென்றுள்ளார்.

தமிழில் கில்லி, பாபா, பகவதி,ஏழுமலை, உத்தம புத்திரன், மாப்பிள்ளை, உட்பட பல படங்களில் நடித்த வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே நடன கலைஞரான ராஜோஷி பருவா என்பவரை திருமணம் செய்து பின்னர் கடந்தாண்டு விவகாரத்து பெற்றார்.  இந்த சூழ்நிலையில் 60 வயதை கடந்த ஆஷிஷ் வித்யார்த்தி கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி என்பவரை சமீபத்தில் இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணத்தை பலரும் பலவிதமாக கேலி செய்தனர். 60 வயதில் திருமணம் தேவையா?? என வலைதளத்தில் அவரை பலரும் கேலி  கிண்டல்  செய்தனர். ஆனால் இதற்கெல்லாம் அசராத ஆஷிஷ் வித்யார்த்தி காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை என தன்னை கிண்டல் கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

என்னதான் அவரை பற்றி கேலி விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆஷிஷ் வித்யார்த்தி தனது புது மனைவியுடன் இந்தோனேஷியா அருகில் உள்ள பாலி தீவிற்கு விடுமுறையை களிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு தனது மனைவியுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.