இந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்! 

இந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்!

போக்குவரத்து துறை பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தினாலும் பலர் அதனை பின்பற்ற தவறி விடுகின்றனர். அவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முன்பெல்லாம் நோ என்ட்ரி  வழியாக சென்றால்  ரூ 1000 மட்டுமே அபராதமாக வசூலித்தனர். ஆனால் தற்பொழுது அதனை மாற்றி அமைத்து நோ என்ட்ரிவழியாக இனி சென்றால், அவர்களுக்கு அபராதமாக ரூ. 1100 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.