காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்!

காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்!

‘தமிழகத்தில், பரவு கொரோனா தொற்று பேரிடருக்குபின், இளைஞர்கள் அதிகம் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது,’ என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

காசநோய் ஒழிப்பு உச்சி மாநாடு, சென்னை தரமணியில் நடைபெற்றது. மாநாட்டில். ‘3ஹெச்பி’ என்ற புதிய காசநோய் மருந்து திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, கோவை, திருச்சியில் உள்ள ஆய்வகங்களையும் திறந்து வைத்தார்.

அப்போது பேசியதாவது, உலகில் பெரிதாக உயிரிழப்புக்கு உள்ளாக்கும் நோயாக காசநோய் உள்ளது. தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாக குணம் அடைய முடியும். மற்றவர்களுக்கு பரவாமலும் கட்டுப் படுத்த முடியும். மத்திய, மாநில அரசு கள், 2025க்குள் ‘காசநோய் இல்லா இந்தியா’ என்ற இலக்கை அடைய, பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, காசநோய் இல்லா இந்தியா, காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைவோம். தி.மு.க., அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளோம். அதேநேரம் இளம் வயதினர், தற்போது அதிகம் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். பேரிடருக்குபின், மாரடைப்பு அதிகரித்துள்ளதை மருத்துவ நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, இளைஞர்கள் அலட்சியப்படுத்தாமல், பரிசோதனை செய்து உரிய, சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு, சுப்ரமணியன் பேசினார். மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், ”ஒவ்வொரு ஆண்டும், 1.20 லட்சம் பேருக்கு காசநோய் பரிசோ தனை செய்ய வேண்டும் என்பது இலக்கு. “கடந்தாண்டு, 91 ஆயி ரம் பேருக்கு தான் பரிசோ தனை செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் பரிசோதனையை அதி கப்படுத்த வேண்டும். காசநோய்க்கு அளிக்க, 9.42 சிகிச்சை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,” என்றார்.