இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் விரட்ட இயற்கை வழி உடனடி தீர்வு இதோ!!

Photo of author

By Divya

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் விரட்ட இயற்கை வழி உடனடி தீர்வு இதோ!!

மழைக்காலம் வந்துவிட்டால் கூடவே கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாகி விடும்.இந்த கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் டெங்கு,மலேரியா உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

இந்த கொசுக்களை வீட்டில் இருந்து விரட்ட இரசாயனம் கலந்த ஆல் அவுட்,கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை விட வீடுகளில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் அனைத்து கொசுக்களையும் சில நிமிடத்தில் வெளியேற்றி விடலாம்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*புதினா இலைகள் – 1/4 கைப்பிடி அளவு

*தண்ணீர் – 2 டம்ளர்

செய்முறை:-

1/4 கைப்பிடி அளவு புதினா எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
இதை வீட்டில் கொசுக்கள் அதிகம் சூழுந்துள்ள இடத்தில் தெளித்து விடவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள கொசுக்கள் உடனடியாக வெளியேறி விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சம் பழம் – 1

*கிராம்பு(இலவங்கம்) – 10

செய்முறை:-

ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.அதில் பிரியாணி உள்ளிட்ட சமையலுக்கு பயன்படுத்தும் வாசனை மிகுந்த இலவங்கத்தை(கிராம்பு) சொருகி வைக்கவும்.பின்னர் வீட்டில் கொசுக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வைத்தால் உடனடியாக கொசுக்கள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*மண் விளக்கு – 1

*சாம்பிராணி – 1

*வேப்பிலை – 6

*பூண்டு – 1

செய்முறை:-

ஒரு மண் விளக்கு எடுத்து அதில் சாம்பிராணி 1 சேர்க்கவும்.அதை பற்ற வைக்கவும்.பின்னர் அதன் மேல் 5 அல்லது 6 இலைகளை சேர்க்கவும்.

பின்னர் 1 பூண்டு பல்லை சிறிதளவு நசுக்கி அந்த விளக்கின் மேல் சேர்க்கவும்.இப்படி செய்யும் பொழுது எரிந்து கொண்டிருக்கும் சாம்பிராணியில் இருந்து புகை வரும்.இந்த புகையால் கொசுக்கள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.அதேபோல் வீட்டிற்குள் எந்த கொசுவும் வராது.