திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025
Home Blog Page 5664

அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றினால் சுட்டுத்தள்ளுங்கள்! வெளிநாட்டு அதிபரின் அதிரடி பேச்சு.!!

0

அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றினால் சுட்டுத்தள்ளுங்கள்! வெளிநாட்டு அதிபரின் அதிரடி பேச்சு.!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றும் நபர்களை சுட்டுத்தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் அதிரடியாக கூறியுள்ளார்.

உலக நாடுகளை பதம் பார்த்து வரும் கொரோனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு மனிதர்களின் மூலமாக பரவி புது இடங்களில் கடைவிரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை கையில் எடுத்துள்ளன. பெரும்பாலான மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் சூழலில், சிலர் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் வழக்கம்போல நடமாடி காவல்துறைக்கு தொல்லை கொடுப்பதோடு கொரோனா பரவ வழிவகை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உத்தரவை மீறி வெளியில் திரிந்தால் அவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட் கூறியுள்ளார். இதுகுறித்து மக்களிடையே அவர் உரையாற்றிய போது; ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம் இதனை மீறி சுகாதார ஊழியர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் இடையூறு கொடுப்பது குற்றமாகும். இதனால் காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு தெரிவிப்பது என்னவெனில், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் நபர்களால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது உங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ உடனே சுட்டுத்தள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் அருகேயுள்ள குயிசான் நகர பகுதி மக்கள் தங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை 2,311 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் 96 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு

0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 309 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதுபற்றித் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் தமிழகத்தில் ஏழு பேர் கொரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளத்கவும் 1580 பேர் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழகத்தில் 411பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறியுள்ளார்.

மேலும் 484 பேரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..??

0

சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..??

சென்னையில் கொரோனா தீவிரமாக பாதித்த 8 இடங்களை கட்டுபடுத்தப்பட்ட இடங்களாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவிய கொரோனா தொற்றுக் கிறுமியால் தினசரி அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்களிடையே அச்சம் தொடர்ந்து காணப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 24 ஆம் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியது. இதனையடுத்து இந்திய மாநில எல்லைகள் மூடப்பட்டு, தமிழகத்தில் மாவட்ட எல்லைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. மற்ற நாடுகளை விட இந்தியாவில் முன்னெச்சரிக்கையாக முடிவெடுக்கப்பட்டதால் உயிரிழப்பு குறைவு என்றும் கூறலாம்.

இந்நிலையில் தமிழகத்தில் 309 பேர் கொரோனா பாதித்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள குறிப்பிட்ட 8 இடங்களை தமிழக போலீசார் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளனர். எண்ணூர், புளியந்தோப்பு, தண்டையார் பேட்டை, முத்தியால் பேட்டை, நேநாஜி நகர், புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சிகிச்சையின் போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசின் புதிய முயற்சி

0

சிகிச்சையின் போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசின் புதிய முயற்சி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளைக் கொடுப்பதற்காக ரோபோக்களை இன்று முதல் பயன்படுத்துகிறது.

தமிழகம் இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது அந்த நோய்த்தொற்று செவிலியர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்கவே நம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ரேபோக்களைக் களமிறக்கியுள்ளார்.

நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவுகளைக் கொண்டு கொடுப்பதற்கு இந்த ரோபோ உதவியாக இருக்கும் என்றும் இந்த ரோபோக்களை மருத்துவமனையில் பணிபுரியும் செவவிலியர்களே இயக்குவர் என்றும் கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். இவருடைய செயல்கள் அனைவராலும் பாராட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அர்னால்ட் அளித்த 7.5 கோடி நிதியுதவி! மருத்துவர்களே நிஜ ஹீரோக்கள் என்று புகழாரம்.!!

0

அர்னால்ட் அளித்த 7.5 கோடி நிதியுதவி! மருத்துவர்களே நிஜ ஹீரோக்கள் என்று புகழாரம்.!!

ஆலிவுட் நடிகர் அர்னால்ட் கொரோனா பாதிப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்காக 7.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அமெரிக்காவில் அதிகளவு பாதிப்பை கொரோனா ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 2.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 5 ஆயிரத்தை தாண்டியது.

சீனா, இத்தாலி , பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க அதிபரும் கொரோனா தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை எதிர்த்து பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கு உதவும் வகையில், பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்ட் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில்
7.5 கோடி மதிப்பாகும். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிஜ ஹீரோக்களுக்கு எனது பங்களிப்பு என்று கூறினார்.

இந்தியாவை பின்பற்றும் சிங்கப்பூர்! உலக அளவில் பெருமிதம்

0

இந்தியாவை பின்பற்றும் சிங்கப்பூர்! உலக அளவில் பெருமிதம்

உலகெங்கும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. சீனாவில் முதலில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி இந்தியா போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் தாக்குதலிலிருந்து சிங்கப்பூரும் தப்பவில்லை. இதுவரை சிங்கப்பூரில் கொரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து சிங்கப்பூரின் அதிபர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 7 முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஆனால் அதே சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தடையேதும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும்போது அனைவரும் கட்டாயமாகச் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க புதிய கண்டுபிடிப்பு : டாக்டர்கள் நிம்மதி பெருமூச்சு!

0

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது.

இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகிறது. ஆனால் நமக்காக போராடும் இந்த ஹீரோக்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு ராணுவத்தின் ஒரு பிரிவான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்துடன் இணைந்து டாக்டர்களுக்கு என பிரத்தியேக கவச உடையை தயாரித்துள்ளது. இந்த உடையில் கிருமிகள் புகாத வண்ணம் அனைத்து பகுதிகளையும் மூடிக்கொள்ளும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா போன்ற கொடிய வியாதியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது டாக்டர்களின் பாதுகாப்பை இந்த கவச உடைய உறுதி செய்கிறது என்று மருத்துவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை முதல்வர் எச்சரிக்கை

0

144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை முதல்வர் எச்சரிக்கை

தமிழகத்தில் தடை உத்தரவை யாரேனும் மீறினால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி அவர்கள் எச்சரித்துள்ளார்.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வேலைக்காகச் சுமார் லட்சம் பேர் வநனதுள்ளனர். அவர்கள் அனைவரும் முகாமில் பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர். இன்று அவர்களிருக்கும் முகாமை ஆய்வு செய்தபின் முதல்வர் கூறியதாவது நேற்றுப் பிரதமருடன் நடந்த ஆலோசனையில் வெளிமாநிலத்தவருக்கு உணவு உடை இடம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரத் தொடங்கியுளனர் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். அது மட்டுமில்லாமல் பல இடங்களில் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அனைவரும் தடை உத்தரவை மதித்து நடக்க வேண்டும் இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அவர்கள் கூறியுள்ளார்.

மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்த குஷ்பு! வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அட்வைஸ்.!!

0

மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்த குஷ்பு! வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அட்வைஸ்.!!

இன்று நேரலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பற்றி மக்களிடையே புதிய வேண்டுகோளுடன் கூடிய அறிவிப்பை கூறினார். இந்த தகவல் பல்வேறு தரப்பு ஆதரவும் சில தரப்பு விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

கொரோனா பாதிப்பின் இருளை அகற்ற அனைவரும் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை அனைத்துவிடுங்கள் என்று மோடி கூறினார். மேலும் வீட்டில் இருக்கும் நான்கு மூலைகளில் அகல்விளக்கு, டார்ச்லைட் மெழுகுவர்த்தி ஆகியவை ஒளிவீசும் படி செய்யுங்கள் என்று மக்களிடம் தெரிவித்தார். மோடியின் முக்கிய அறிவிப்பை பலரும் எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்வதுபோல் இருந்தாலும் அதன் மூலம் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இதை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், யுரேகா! கொரோனாவை எதிர்க்க என்ன ஒரு வழி, இப்படி செய்தால் கொரோனா பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். விளக்கு வைக்கிறேன் என்று வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம். தற்போதைய சூழலுக்கு சமூக இடைவெளி மிக முக்கியமான ஒன்று. ஆகவே இடைவெளி காட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.

குஷ்புவின் டுவிட்டருக்கு பதில் அளித்த பலரும் ஆம் சரியாக சொன்னீர்கள், பிரதமர் அலுவலகத்தில் படித்தவர் ஒருவர் கூட இல்லையா, விளக்கை ஏற்றினால் கொரோனா வைரஸ் அழியாது உலகம் நம்மைப்பார்த்து சிரிக்கும் என்பது போல் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்பு மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் வீட்டிற்கு வெளியே வந்து கை தட்டி உற்சாகமூட்டுங்கள் என்று பிரதமர் கூறியது மக்களிடம் நல்ல பலன் கிடைத்தது.

கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!!

0

கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேலையில்லாமல் வறுமையில் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் நிதி அளிக்கத் தொடங்கின. சினிமா திரைப்பட நடிகர், நடிகை போன்றவர்களும் கோடிக்கணக்கில் நிவாரண நிதியை அளித்துள்ளனர். மேலும் சிறுவர் முதல் பெரியவர் வரை மக்கள் மூலமாக நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் வடசென்னையில் கொரோனா பாதிப்பால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு 1,000 பால் பாக்கெட் கொடுத்து உதவியுள்ளனர். இதேபோல் தேனி மாவட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகளை வழங்கியுள்ளனர். நடிகர்கள் பெயரில் சினிமா தியேட்டரில் விசில் அடிப்பதோடு இல்லாமல் ஆபத்தான சூழலில் மக்களுக்கு உதவிய விஜய் ரசிகர்களுக்கு மக்கள் சார்பிலும் சமூக வலைதளங்களின் சார்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதற்கு முன்பு கொரோனா நிவாரண உதவியாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் 150 அரிசி மூட்டைகள் மக்களுக்கு வழங்கியதும், தொடர்ந்து அவசரகாலத்தில் உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது.