சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5764

வானவேடிக்கை காட்டிய கிவி பேட்ஸ்மேன்கள் :3 பேர் அரைசதம் ! 204 ரன்கள் இலக்கைத் துரத்துமா இந்தியா ?

0

வானவேடிக்கை காட்டிய கிவி பேட்ஸ்மேன்கள் :3 பேர் அரைசதம் ! 204 ரன்கள் இலக்கைத் துரத்துமா இந்தியா ?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்துள்ளனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து கொண்டு இதில் டாஸில் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

தங்கள் மண்ணில் களம் இறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களைத் தாக்க ஆரம்பித்தனர். பூம்ராவைத் தவிர அனைவரின் பந்துகளையும் பவுண்டரிக்கும் சிக்ஸர்க்கும் அனுப்பினர்.இதனால் அந்த அணியின் ரன்ரேட் 10 க்கும் குறையாமல் சென்றது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும் அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடிடியைத் தொடர்ந்தனர்.

அந்த அணியின் மன்ரோ, கேன் வில்லியம்ஸன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு இலக்காக 204 ரன்களை நியுசிலாந்து நிர்ணயித்துள்ளது.

இந்தியா சார்பில் பூம்ரா, தாகூர், சஹால், துபே, ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வலுவான பேட்டிங் கொண்ட இந்திய அணி 204 ரன்களை எப்படி சேஸ் செய்ய போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ஹிட்லரை எதிர்த்த பிரபல கோடீஸ்வரர் மோடிக்கு கண்டனம்

0

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் சோரஸ் என்பவர் ஹிட்லர் ஆட்சியின்போது ஹங்கேரியில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறியவர் என்பது குறிப்பிடதக்கது.

இவர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது ’இந்தியாவில் இப்படி ஒரு நிலை உருவாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும், அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, ஜனநாயகத்தை மதிக்காமல் சர்வாதிகாரி போல் ஆட்சி செய்து வருவதாகவும் குறிப்பாக இஸ்லாமியருக்கு எதிரான சட்டங்களை இயற்றி வருவதாகவும் கடுமையாக கண்டனம் செய்தார்.

அதேபோல் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க அதிபர் டிரம்ப் தான் காரணம் என்றும் டிரம்ப் அரசியல் சாசனத்தை மதிக்காமல் தன்னைச் சுற்றித்தான் உலகமே சுற்றுகிறது என்று நினைப்பதால் தான் அமெரிக்கா தற்போது பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது என்றும், அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ் 8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளதவர் என்பதும் அவர் இதுவரை நன்கொடையாக மட்டும் 32 மில்லியன் டாலர் கொடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை கடுமையாக கண்டனம் தெரிவித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ் ரயிலில் திரைப்படம்: புதிய வசதியால் பயணிகள் மகிழ்ச்சி

0

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வாரம் ஆறு நாட்கள் தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது என்பது தெரிந்ததே. இந்த ரயிலில் விமானத்தில் உள்ளது போல் ஒவ்வொரு சீட்டின் பின்புறத்திலும் தொலைக்காட்சி இருந்ததால் பயணிகள் பொழுதுபோக்குக்கு உதவியாக இருந்தது. ஆனால் இந்த தொலைக்காட்சி சரியாக செயல்படவில்லை என்ற புகார் வந்ததையடுத்து தற்போது பயணிகள் பொழுதுபோக்கிற்கு என வைஃபை வசதியை தேஜஸ் ரயில் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதன்மூலம் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பில் வைபை வசதியுடன் கூடிய மேஜிக் என்ற ஆப் மூலம் திரைப்படங்களை பார்த்து மகிழலாம். இந்த செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் இலவசமாக வைபை வசதி கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான கார்ட்டூன் நிகழ்ச்சிகள் ஆகியவைகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

பயணிகள் தங்களுடைய பயணத்தில் 500 மணி நேரம் தொடர்ச்சியாக வைபையை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வசதியை பயணிகள் பயன்படுத்தி தங்கள் பயணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யலாம் என்றும் தேஜஸ் ரயில் அறிவித்துள்ளது இந்த புதிய அறிவிப்பு தேஜஸ் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெளடிபோல் வாளால் கேக் வெட்டிய நடிகர் மீது வழக்கு!

0

பிரபல ரவுடிகள் தங்களுடைய பிறந்தநாளை வாளால் வெட்டி கொண்டாடுவது கொண்டாடுவதுபோல் நடிகர் ஒருவர் வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கடந்த 19ஆம் தேதி தனது பிறந்தநாளை தனது வீட்டின் முன் ஒரு பெரிய பந்தல் அமைத்து அதில் பிரம்மாண்டமான கேக் ஒன்றை வாளால் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்த போது அவர் மீது அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

நடிகர் துனியா விஜய் தனது வீட்டின் முன்னால் அனுமதி இல்லாமல் பந்தல் போட்டு பிறந்தநாள் கொண்டாடியதாகவும், வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் படியும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் நடிகர் துனியா விஜய்யை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தனர். அப்போது நடிகர் துனியா விஜய் இது குறித்து விளக்கம் அளித்ததாக தெரிகிறது. ஆனால் இந்த விளக்கத்தில் திருப்தி அடையாத போலீசார் அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல் வாளால் கேக் வெட்டி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என விரும்பிய நடிகர் துனியா விஜய் தற்போது போலீஸ் வழக்கில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தோனியின் இந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி ! இன்றே நடக்குமா ?

0

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டனாக அடித்த ரன்களைக் கோலி தகர்க்க உள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு வெறும் வீரராக விளையாடி வந்தார். கோலி பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கோலியும் கேப்டனாகப் பொறுப்பேற்ற பின்னர் தனது பங்களிப்பை அதிகமாக அளித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது கோலி அண்ட் கோ. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டித் தொடரில் கோலி தோனியின் ஒரு சாதனையை முறியடிக்க உள்ளார்.

டி 20 போட்டிகளில் தோனி கேப்டனாக எடுத்த ரன்களைக் கடக்க அவருக்கு இன்னும் 83 ரன்களே தேவை. அதை இந்த போட்டியிலேயே அவர் கடப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் டூ பிளஸ்சி முதல் இடத்திலும் அடுத்த இடத்தில் கேன் வில்லியம்ஸனும் உள்ளனர்,

டி 20 போட்டியில் தனி வீரராக அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி 2689 ரன் எடுத்து முதல் இடத்திலும்,  ரோகித் சர்மா 2633 ரன்னுடன் 2-வது இடத்திலும், மார்டின் கப்தில் 2436 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

0

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரன் தன்னுடைய படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பல ரூபங்களில் கலக்கியவர் ராஜ்கிரன். தற்போது அவர் நடிக்கும் குபேரன் படத்தின் மூலம் பாடல் ஆசிரியராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியதைப் பற்றி சுவையான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தனது பதிலில் ‘ நான் என் ரசிகரின் ஒருவரின் திருமணத்துக்காக மதுரைக்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்து ஹோட்டல் அறையில் தங்கி இருந்தேன். எனக்கு மறுநாள்தான் ரயில் என்பதால் பொழுது போக்குவதற்காக எனது ரசிகர் ஒருவர் நான் ஒருவரை அனுப்புகிறேன் என்றார். அப்படி வந்தவர் தான் வடிவேலு.

வந்ததில் இருந்து பேசிப்பேசி என்னை இரண்டு நாட்களாக சிரிக்க வைத்தார். அதன் பின் இரு வருடங்கள் கழித்து நான் ராசாவின் மனசிலே படத்தை எடுத்த போது ஒரு கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். அப்போது எனக்கு அவரை அறிமுகப்படுத்திய நபரை அழைத்து உடனே வடிவேலுவை வர சொன்னேன்.

வந்த வடிவேலு கவுண்டமணியிடம் அடிவாங்கும் போது நாங்கள் சொல்லிக் கொடுத்த வசனத்தை மட்டும் பேசாமல் தானாகவும் சில வசனங்களை பேசினார். அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. இவர் சினிமாவில் சாதிப்பார் என்று. அதன் பின் நடந்தது எல்லாம் கடவுள் நடத்தியதுதான். அதனால் அவரை நான் அறிமுகப்படுத்தினேன் என சொல்ல முடியாது’ என மனம் திறந்து பேசியுள்ளார்.

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: பிரபல நடிகர்

0

பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனமாக உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும்படி பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்.

அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், “பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினி, சிறுத்தை சிவா காம்போவில் உருவாகும் படத்தின் தலைப்பு : வெளியான தகவல்… ரசிகர்கள் குஷி !

0

ரஜினி, சிறுத்தை சிவா காம்போவில் உருவாகும் படத்தின் தலைப்பு :வெளியான தகவல் ! ரசிகர்கள் குஷி !

ரஜினி தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இதையடுத்து ரஜினி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, ரஜினியின் ஆஸ்தான கதாநாயகிகளான மீனா, குஷ்பு ஆகியோர் அவருடன் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கின்றனர். ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் சதீஷ், சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பிரம்மாண்டமாக சன் பிக்ஸர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். சிறுத்தை சிவாவின் செண்ட்டிமெண்ட் படி படத்தின் தலைப்பு ஆங்கில வி எழுத்தில் ஆரம்பித்து எம் மில் முடியும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்வார். வீரம், வேதாளம், விவேகம், மற்றும் விஸ்வாசம் போன்றவை அதற்கு சான்று.

அதனால் அதேப் போன்ற பெயரைதான் இதற்கும் வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம் என்பதால் இதற்கு தற்போது அண்ணாத்தே எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை இன்னும்  படக்குழு உறுதிப் படுத்தவில்லை. அதற்குள்ளாகவே ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் அண்ணாத்தே என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !

0

சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விரேந்திர சேவாக் தன்னைப் பற்றி கூறிய கருத்து ஒன்றுக்கு நக்கலாக பதிலளித்துள்ளார். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான சேவாக் நகைச்சுவைக்கு பெயர் போனவர். அவரது டிவிட்டர் பதிவுகள அவரது நக்கல் தொனிக்காக பெயர் போனவை.

இந்நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரைப் பற்றி ஒரு கமெண்ட் ஒன்றை அடித்தார். அதில் ‘அக்தருக்குப் பணம் தேவை என்பதால் இந்தியாவுக்கு சாதகமாக பேசுகிறார்’ எனக் கூறியிருந்தார்.

இதுபற்றி அப்போது எதுவும் பதில் அளிக்காத அக்தர் இப்போது தன்னுடய யுடியூப் சேனலில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருக்க வேண்டும் என்பதை நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது.

அது அல்லாவால் அளிக்க படுவது. என்னிடம் சேவாக்கின் தலையில் உள்ள முடிகளை விட அதிகமாக பணம் உள்ளது. இதை நான் விளையாட்டாகதான் சொல்கிறேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

களத்தில் இருக்கும் போது எதிர் எதிர் அணியில் இருந்து மோதிக்கொண்ட இருவரும் ஓய்வு பெற்ற பின்னரும் அதுபோலவே தொடர்ந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அக்தரின் இந்த நக்கலுக்கு விரைவில் சேவாக் டிவிட்டரில் பதிலளிப்பார் என இந்திய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !

0

மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னை கட்டாயப் படுத்தி  வல்லுறவு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த பெண்ணுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமனத்துக்குப் பிறகு தன்னுடைய கணவர் ஒரு திருடன் என்ற உண்மையை அறிந்து அவர் அதிர்ந்துள்ளார்.. இதனால் மனமுடைந்த அந்த பெண் தன்னுடையக் கணவரைப் பிரிந்து தனியாக சென்று வாழ்ந்துள்ளார்.

ஆனாலும் அவரை விடாத அந்த கணவன் டெல்லிக்கு சென்று தனது மனைவியிடம் இனிமேல் திருடமாட்டேன் என சத்தியம் செய்து அவரோடு வாழ ஆரம்பித்துள்ளார். அந்த பெண்ணும் அவர் திருந்திவிட்டார் என்ற நம்பிக்கையில் அவரோடு சந்தோஷமாக வாழ ஆரம்பித்துள்ளார்.

ஆனாலும் அந்த திருட்டுக் கணவர் வீட்டிலேயே தனது வேலையைக் காட்டியுள்ளார். வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாயைத் திருடிக்கொண்டு சென்றுள்ளார். இது சம்மந்தமாக அந்த பெண் தனது கணவர் மேல் புகார் கொடுக்க போலிஸ் அவரைக் கைது செய்துள்ளது.

அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த அவர், மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க அவரிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணை ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ’ 2016-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வல்லுறவு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக சம்மந்தப்பட்ட இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதனால் இந்த வழக்கில் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் தண்டனைக் கொடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளனர்.