மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம்
நம்ம திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மகனா சாந்தணு
வாழ்க்கையில எத்தனையோ பேர் ஒளியேத்திவைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் எதுவுமே
கைகொடுக்கவில்லை. பார்த்திபன், தங்கர் பச்சான் போன்ற எத்தனையோ ஜாம்பாவான்கள்
தலைகீழாக நின்று பார்த்தும் ஒன்றும் நடக்காத நிலையில், தற்போது அந்த
ரிஸ்க் மணிரத்னம் கைக்கு வந்திருக்கிறது.
எஸ்! மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின்
செல்வன்’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக
நடந்து வரும் நிலையில், அவர் தற்போது ‘வானம்
கொட்டட்டும்’ என்ற படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் பேனரில்
தயாரித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது
‘வானம்
கொட்டட்டும்’ படத்தை மணிரத்னம் அவர்களின் உதவியாளர் தனசேகரன் என்பவர்
இயக்கவுள்ளார். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ்
உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் தற்போது புதியதாக சாந்தனு பாக்கியராஜ்
இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது
மணிரத்னம் கதை திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ’96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இந்த படத்தில் ப்ரீத்தா என்பவர் ஒளிப்பதிவாளராக பணி செய்கிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சரத்குமார் – ராதிகா ஜோடி இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எடுத்த இந்த திடீர் முடிவால் மணிரத்னம் படத்தில்
சாந்தணுவா..??? சாந்தணு வளர்ந்துட்டாரா.. இல்லை மணிரத்னம்
எதுவும் சறுக்கிட்டாரா..?? என்று திரையுலகினர் குழப்பத்தில் உள்ளனர்.
அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!
காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க வருவதை பொது மக்களின் பாதுகாப்பு கருதி முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதர் தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொது மக்கள் வந்து கொண்டிருப்பதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் தடுமாறி வருகிறது சில தினங்களுக்கு முன்பு தான் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் காஞ்சிக்கு வர வேண்டாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரே பத்திரிகைகள் மூலம் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு அந்நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.
ஏறத்தாழ நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் வந்து கொண்டிருக்கும் இந்நிலையில் நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் காஞ்சியை அடையும் பக்தர்களின் எண்ணிக்கை விறுவிறுவென்று கூடிக் கொண்டிருக்கிறது. இதை கணக்கில் கொண்டே கலெக்டர் காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிப்பதை ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என பத்திரிகைகள் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மாவட்ட ஆட்சியர் பொன்னையனை அழைத்து கண்டித்தாக கூறப்படுகிறது.
மேலும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதை விட்டு விட்டு தவிர்க்க வேண்டும் என அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது என கூறிய முதலமைச்சர், இதனையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசிக்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதற்கு கடும் கண்டணம் தெரிவித்தார்.
“தமிழ்நாட்ல ஒரு ஆன்மிக விழா நடக்குது. 45 நாள் பாதுகாப்பு தர உங்களால் முடியாதா…மக்களை காஞ்சிபுரத்துக்கு வரவேணாம்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க. அதைவிட உங்களுக்கு என்ன வேலை என்று பொங்கித் தீர்த்து விட்டார்.
லண்டனில் இருந்து வெளியான தகவலின் படி தோனி இரண்டாம் இடம் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிறுவனம் வருடத்தில் ஒரு முறை இந்த தகவலை தெரிவிக்கும் அதன் படி இந்த வருடம் மோடி முதல் இடமும் தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். இதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சாருகான், சல்மான் கான், மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் இடம் பிடித்துள்ளனர்.
அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். பிரதமர் மோடி உலகளவில் அவர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, ‘யூகவ்’ என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் பொதுமக்களின் கருத்துகள், புள்ளிவிவரங்களைத் திரட்டி வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், பல நாடுகளில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் பற்றி ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில், உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் இந்திய அளவில் விரும்பப்படும் நபர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பிரதமர் மோடி அதிகம் விரும்பப்படும் பிரமுகராக இருக்கிறார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் வரிசையில் பிரதமர் மோடி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கடந்த ஆண்டு ஆய்வில் அவர் 8-வது இடத்தில் இருந்தார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் பிரதமர் மோடி 4.8 சதவீதம் பெற்றுள்ளார்.
இந்தியா வில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில், அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2-வது இடத்தில் இருக்கிறார்.
அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் முதல் 20 பேரில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவருக்கு அடுத்த நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளார்.
இந்தியாவில் அதிகம் விரும் பப்படும் பெண்களில், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் பெண்களில் முதல் 20 இடங்களுக்குள் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் உள்ளனர்.
உலகளவில் அதிகம் விரும்பப் படும் பிரமுகர்களில் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இருக்கிறார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டி யலில் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, அமெரிக்க தொலைக்காட்சி நடிகை ஓப்ரா வின்பிரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெண்களில் முதல் 5 இடத்தில் மேரி கோம், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் உள்ளனர். இவ்வாறு ‘யூகவ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி நடந்து முடிந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகம் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் கோப்பை உலக கோப்பை கிரிக்கெட் போல நடந்து கொண்டிருக்கிறது. சங்கர் சிமெண்ட் வழங்கும் TNPL 4 சீசன் நடந்து வருகிறது. நேற்றை முன்தினம் கேதர் ஜாதவ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோவை மற்றும் காஞ்சி அணிகள் மோதுகின்றனர்.
இப்போட்டி, திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடை பெறும். திண்டுக்கல் மற்றும் சென்னை சேப்பாக் அணிகள் மோதின முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்னில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.
2-வது நாளான நேற்று 2 ஆட்டங்கள் நடந்தது. காரைக்குடி காளை- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ‘சமம்’ ஆனது. இதனால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தியது. இதை தொடர்ந்து நான்காவது போட்டி இன்று நடக்கிறது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் 4-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை மற்றும் பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் முதல் வெற்றியை பெற போகும் அணி யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது
கோவை அணியில் கேப்டன் அபினவ்முகுந்த், முகமது ஆசிக், டி.நடராஜன் போன்ற சிறந்த வீரர்களும், காஞ்சி வீரன்ஸ் அணியில் கேப்டன் பாபா அபராஜித் விஷால்வைத்யா, கவுசிக் சீனிவாஸ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் காஞ்சி வீரன்ஸ் இரண்டு முறையும், கோவை கிங்ஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் இன்று வெற்றி பெறும் அணி எது என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். காஞ்சியா? கோவையா? அபினந்த் முகுந்தனா? பாபா அப்ராஜித்தா?
சும்மாவே அட்லீ
இந்த விஷயத்துல கில்லி.. பிகில்ல
இதெல்லாம் இருக்குன்னா கேக்கணுமா..?
தளபதி விஜய் – அட்லீ கூட்டணியின் ஹாட் டிரிக் படைப்பான ‘பிகில்’ படம் பெருத்த எதிர்பார்ப்பில் உருவாகிவருகிறது. இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலையிலிருந்து
சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளை அட்வான்ஸாக ட்ரெண்ட்
செய்து வந்ததாலும் அதன்பின் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட பாடல் வெளியானதாலும்,
கொஞ்சம் அமைதியாக இருந்த விஜய் ரசிகர்களுக்கு
இந்த அப்டேட் இன்ப செய்தியாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது விஜய் ரசிகர்கள்
சலங்கை கட்டி ஆடிவருகிறார்கள்.
இந்நிலையில் இந்த
அப்டேட்டிற்காக தற்போது ஒரு போஸ்டர் வெளியாகியிருக்கிறது. முதன்முதலாக விஜய்,
பெண்கள் கால்பந்து அணியுடன் இருக்கும்படி
வெளியாகியுள்ள இந்த போஸ்டரை கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் பல விஷயங்களை
அவதானிக்கமுடிகிறது. இதில் ஒரு வீராங்கனையின் முகம் ஆசிட் வீச்சால்
பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு குறைவிருக்காது
என நம்பமுடிகிறது.
Latest Updates about Bigil Vijay Movie-News4 Tamil Online Tamil News Channel
சும்மாவே அட்லீ
இந்த விஷயத்தில் கில்லி, ஆசிட்
வீச்செல்லாம் வேறு இருந்தால் கேக்கவா வேண்டும்..? இதை விஜய் ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால் ஒருவேளை ஆசிட்
வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் விஜய்க்கு வேண்டப்பட்ட பெண்ணாக இருக்கலாம்.. அந்தப்
பெண்ணுக்கு ஆசிட் வீசியவனை விஜய் தண்டிக்கலாம்.. அதைத்தொடர்ந்து விஜய்க்கு வேறு
வேறு பிரச்சனைகள் கிளம்பலாம்..
திமுக கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போய் வாக்களித்து விட்டனர் என முதல்வர் கூறியுள்ளார். அவர் கூறியது
கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், அவர்கள் அளித்த கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நகைகடன் ரத்து, மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. இது நிறைவேற்ற முடியுமா? இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
சட்ட சபை கூட்டத்தொடர் முடிந்து அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்றிரவு கோவை சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் குறித்த கேள்வி எழுப்பிய செய்தியாளர், மக்களை பாதுகாக்க எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதனை அரசு ஆதரிக்கும் எனக் கூறிய முதலமைச்சர் . இது மக்களுக்கான ஆட்சி மக்கள் விரும்பாத எதையும் இந்த ஆட்சி செய்யாது எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசியதாவது, கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார். பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. நாங்கள் அப்படி எந்த பொய்யான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளை மட்டுமே இந்த அரசு அளிக்கும் என்று கூறினார்.
மேலும் மாணவி ஒருவர் குத்து சண்டை போட்டியில் அனுமதிக்க படாததால் தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து மாணவியின் பெற்றோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்தனர். அதாவது குத்து சண்டையில் இடம் தரமறுத்த கல்லூரி நிர்வாகத்தின் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இது மக்களுக்கான ஆட்சி எனவும் இது மக்கள் விரும்பாத எதையும் செய்யாது எனவும் தெரிவித்தார். திமுக தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது. அந்த வாக்குறிதகள் என்றுமே நிறைவேற்ற முடியாது என அவர் கடுமையாக குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் அடுத்த முதல்வர் இவரா? ஆம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை போன்ற கூட்டணிகளுடன் திமுக மதசார்பற்ற கூட்டணி என்று தமிழகத்தில் போட்டி இட்டது. இதற்க்கு எதிர் அணியில் மெகா கூட்டணி என அழைக்கப்படும் அஇஅதிமுக உடன் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், பிஜேபி, போன்ற கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியாக நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலை சந்தித்தனர்.
இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 37 நாடாளுமன்ற தொகுதிகளை பெற்று வெற்றி பெற்றது. ஆளும் அதிமுக கூட்டணி ஒரே இடத்தில் மட்டும் ஓபிஎஸ் மகன் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் மத்தியில் மீண்டும் பிஜேபியே ஆட்சியை பிடித்து மீண்டும் இரண்டாவது முறையாக மோடி தலைமையேற்று நாட்டின் பிரதமர் ஆனார்.
இதை அடுத்து சற்றுநாட்களுக்கு முன் திமுகவின் இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு மனதாக பொறுப்பேற்றார். அவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன் என்பதற்காகவே இப்பொறுப்பை அவருக்கு வழங்கி இருக்கிறது என விமர்சனம் எழுந்தது.
இதை அடுத்து திரு உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்றுதான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்கக் கிளம்பியிருக்கும் இளம்படைக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, அடுத்த தேர்தலில் கண்டிப்பாக திமுக வெல்லும் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பெரிதும் பேசும் பொருளாக ஆனது.
அடுத்த தேர்தலில் திமுக இளைஞர் அணி தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் சொல்வது போல திமுக ஆட்சியை பிடித்து திமுக தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்.
காலத்தால் அழியாத
தமிழ் மண்ணின் மனம் மாறாமல் கிளாசிக் படங்களான அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்றவற்றைத் தந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். இதற்கு
முன்னதாக அவர் நாற்பதுக்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் தங்கர்பச்சான் தனது
எழுத்துகள் மற்றும் படைப்புகள் மூலம் தமிழ்ச் சமூகம் சார்ந்த உணர்வுகளை
வெளிப்படுத்தி வருகிறவர். அவ்வப்போது தற்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும்
தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் பல ஆண்டுகளாக இயக்கி
வந்த களவாடிய பொழுதுகள் திரைப்படம் பல சோதனைகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தான்
திரைக்கு வந்தது. பல்வேறு தரப்பினரும் பாராட்டும் விதமாக படத்தை எடுத்திருந்தாலும்
தாமதமாக வந்த காரணத்தால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஒரு
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்க தொடங்கியுள்ளார் தங்கர் பச்சான்.
அவர் இயக்கி வரும் இந்தப் புதிய படத்தில் தன் மகன் விஜித் பச்சானை ஹீரோவாக
சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.
விஜித் பச்சான், பிரபுதேவாவிடம் இரண்டு வருடங்கள் நடனப் பயிற்சியும் பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஒருவரிடம் சண்டை பயிற்சியும் கற்றுள்ளாராம்.
இப்படத்தில்
அவருக்கு ஜோடியாக மிலனா, அஸ்வினி ஆகியோர்
நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், முனிஷ்காந்த்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இது குறித்து
பேசிய தங்கர் பச்சான் படம் இந்த தலைமுறைக்கு பிடிக்கும் விதமாக இருக்கும். காதல்,
சண்டை, காமெடி, பொழுதுப்போக்கு
என எல்லாம் கலந்த அம்சமாக இருக்கும் என கூறியுள்ளார்.
சென்னையில் நடத்தவுள்ள இதன் படப்பிடிப்பை சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் விஜித் பச்சானைப் பார்த்த அனைவரும் தங்கர் பச்சானுக்கு இவ்வளவு பெரிய பையனா என வியப்பில் ஆழ்ந்து போயிருக்கிறார்களாம்.தந்தையை போல மகனும் திரைத்துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்..!
வன்னியர்களால் வெற்றி பெற்ற திமுக அவர்களுக்கு செய்த துரோகம்! ஆதாரத்துடன் வெளியான தகவல்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைக்க பலமுறை வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகள் தான் உதவியிருக்கின்றன என்றும் ஆனால் அந்த மக்களுக்காக திமுக தரப்பில் எதுவும் செய்யாமல் துரோகம் செய்துள்ளதாக பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் அருள் ரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளதில் குறிப்பிட்டுள்ளதாவது.
திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். இந்த சமூகத்திற்கு திமுக துரோகம் செய்தது ஏன்?
வன்னியர்களின் 1950 அரசியல் வரலாறு
சுதந்திர இந்தியாவில் வன்னியர்களுக்கு அரசியல் சட்ட உருவாக்க சபையில் இடம் அளிக்கப்படவில்லை. பத்துலட்சம் மக்களுக்கு ஒரு அரசியல் சபை உறுப்பினர் என்கிற காங்கிரசு கட்சி அறிவிப்பை நம்பி, வன்னியர்களுக்கு 3 உறுப்பினர் இடம் வேண்டும் என்று வன்னியர்கள் தில்லிக்கு தூது சென்றனர். ஆனால், காங்கிரசு கட்சி ஒரு இடம் கூட கொடுக்கவில்லை. வன்னியர்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் கூடுதலாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினரில் ஒரே ஒருவருக்கு கூட இடம் கொடுக்கவில்லை.
காங்கிரசுக் கட்சி வன்னியர்களைப் புறக்கணித்தது. இதனால் – விடுதலைக்கு காரணமான காங்கிரசுக் கட்சியை, இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1949 ஆம் ஆண்டின் உள்ளாட்சித் தேர்தலில் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் தோற்கடித்தது. (தென்னார்க்காடு ஜில்லா போர்டு தேர்தலில் மொத்தமிருந்த 52 இடங்களில் 22 இடங்களை சங்கம் கைப்பற்றியது).
1950 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம் – சாதி அமைப்புகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ததால் – 1952 தேர்தலில் வடார்க்காடு வன்னியர்கள் ‘காமன்வீல் கட்சி’ என்ற பெயரிலும், தென்னார்க்காடு வன்னியர்கள் ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற பெயரிலும் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றனர்.
(அப்போதைய 190 சட்டமன்ற உறுப்பினர் இடங்களில் 25 இடங்களை வன்னியர் கட்சிகள் கைப்பற்றின. இதனால், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே, சென்னை மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை சந்தித்தது).
காமன்வீல் கட்சி ராஜாஜியை முதலமைச்சர் ஆக்கியது. பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி காமராசரை முதலமைச்சர் ஆக்கியது. (காங்கிரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, வன்னியர் கட்சிகள் இரண்டையும் கலைத்துவிட்டனர்).
வன்னியர்கள் திமுகவை வளர்த்த வரலாறு
காங்கிரசை வெறுத்த வன்னியர் சமூகம் – திமுகவை வளர்த்தது. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் தலைவருமான ஆ. கோவிந்தசாமி 1954 ஆம் ஆண்டில் ‘உழவர் கட்சி’ எனும் கட்சியைத் தோற்றுவித்தார். அவர் 1954 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காணை காஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அவரது தலைமையில் வன்னியர்கள் திமுகவில் சேர்ந்தனர். திமுக உதய சூரியன் சின்னத்தை எடுத்துக்கொண்டது. அக்கட்சி முதன் முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள் வன்னியர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளாகும்.
அதன் பின்னர் 1962 தேர்தல் திமுக வெற்றி பெற்ற 50 இடங்களில் மிக அதிகமானவை வன்னியர்கள் வாழும் தொகுதிகள் ஆகும். இதனை Myron Weiner எனும் அரசியல் ஆய்வாளர் தனது Politics of Scarcity நூலில் “In the 1962 elections for the Madras Legislative Assembly, a large number of Vanniyakula Kshatriyas in North and South Arcot, Trichinopoly, Tanjore and Salem supported the DMK. It was in these districts that the DMK registered most of its gains” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போதும் கூட – மிக அதிகமான இடங்களை வெற்றி கொண்டது வன்னியகள் ஆதரவுடன் தான்.
வன்னியர்களுக்கு திமுக செய்த துரோகம்
இவ்வாறாக, திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த வன்னியர் சமூகத்திற்கு திமுக செய்த நன்மைகள் என்ன? சாதாரண கட்சி மாவட்டச் செயலாளர் பதவிகளைக் கூட விகிதாச்சாரத்துக்கு ஏற்ப வன்னியர்களுக்கு கொடுக்காதது ஏன்?
மிகவும் குறைந்த பட்ச நீதியான – வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இடஒதுக்கீடு பெறுவதற்கு கூட – மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தின் மூலம் “21 உயிர்களை தியாகம் செய்த பின்னர் தான் திமுகவிற்கு மனம் இறங்கும்” என்கிற நிலை ஏற்பட்டது ஏன்?
வன்னியர்களின் அடையாளமான ராமசாமி படையாட்சியாரின் படத்தை, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்து தான் சட்டமன்றத்தில் திறக்க வேண்டும் என்கிற சூழலை திமுக உருவாக்கியது ஏன்? கலைஞர் கருணாநிதிக்கோ, முக ஸ்டாலினுக்கோ இந்த எண்ணம் எழாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த எஸ்.எஸ் ராமசாமி படையாச்சியாரின் திரு உருவ படத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ள இந்நிலையில் இந்த தகவல் திமுகவில் உள்ள அந்த சமுதாய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் இந்த துரோகத்தை ஒவ்வொருவரும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
விஜய் என்ற மூன்று எழுத்து கொண்ட இந்த சொல் தமிழ் திரையுலகில் செய்யாத சாதனைகள் இல்லை. வசூல் மன்னன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் இவர். முன்னதாக வந்த படம் A.R. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் சர்கார் ஆகும். அது பல விமர்சனங்களும் பல கட்சிகளின் எதிர்ப்புகளும் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முறையாக இணைந்துள்ள படம் பிகில். இதற்கு முன்னர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் இப்படங்கள் ஹிட் ஆன படங்கள் ஆகும். இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.
விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டிவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் பிரபலம் அடைந்தது.
இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் 23-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பாடல் நாட்டின் அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம்’ என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சர்கார் படம் போலவே இப்படமும் வெற்றி அடைய வேண்டும். வாழ்த்துக்கள். 23 ஆம் தேதி ரசிகர்களுக்கு விருந்து தான்.