பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!

0
165

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்! 

சிறுமி ஒருவரின் வினோத பழக்கத்தினால் விபரீதமாகி அறுவை சிகிச்சையில் முடிந்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் இருந்து ஒரு கிலோ தலை முடியை அகற்றி உள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12 வயது சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த தலைமுடி அகற்றப்பட்டது. இது பற்றி அந்த மருத்துவமனை சார்ந்த மருத்துவர் பொட்லூரி வம்சிகிருஷ்ணா கூறுகையில்,

குடி வாடா பகுதியைச் சார்ந்த அந்த 12 வயது சிறுமி நீண்ட நாட்களாக வயிற்று வலி, வாந்தி, மற்றும் உடல் எடை குறைவு பிரச்சினைகளால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை குடி வாடாவில் உள்ள ராமா நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு எண்டோஸ்கோபி மற்றும் ஸ்கேனிங் மூலமாக வயிற்றில் பெரிய கருப்பு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அகற்ற மருத்துவரால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள அந்த கட்டியை நீக்கி அடையாளம் காணும் பொழுது அது தலைமுடி என தெரியவந்துள்ளது. மருத்துவ மொழியில் இதனை டிரைக்கோபெசோர்’ என்று கூறுவர்.

சிலருக்கு சிறுவயதில் இருந்து முடி சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஒரு சில முடிகள் எனில் வெளியே வந்து விடும். சிறுமி நிறைய முடிகள் சாப்பிட்டு பழகி விட்டதால் அது வயிற்றில் குவிந்து செரிமான மண்டலத்தில் ஒரு பெரிய கட்டியாக உருவாகிவிட்டது. அவரது செரிமான மண்டலத்தில் ஒரு கிலோ அளவுள்ள முடிகள் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக சாப்பிட்ட உணவு வாந்தியாக வெளியேறுவதும் உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் உடல் ஆற்றலை இழப்பதும் நடந்து வந்துள்ளது. இதனால் சிறுமிக்கு கடுமையான உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் உள்ள தலைமுடி அகற்றப்பட்டது.

இரத்த சோகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது போன்ற தலைமுடி சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். எனவே பெற்றோர்கள் கவனமாக தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என அவர் கூறினார்.