சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்! உச்சநீதிமன்றம் அதிரடி!

0
195
#image_title

சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்!
உச்சநீதிமன்றம் அதிரடி!

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழ் மாநில கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டிலும் சைக்கிள் சின்னத்தில் நின்று தமாகா வெற்றி பெற்றது.

2001 ஆம் ஆண்டு தமாகா தலைவர் மூப்பனாரின் இறப்பிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்ததன் அடிப்படையில் சைக்கிள் சின்னத்தை மீட்டெடுக்க முடியாத நிலையை எட்டியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கியது.

சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி மனு அளித்தும் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்காததால் தமாகா நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Preethi