பாட்டி வைத்தியம்: மூட்டு வலியை சட்டுனு விரட்டும் மந்திர பால்!

0
118
#image_title

பாட்டி வைத்தியம்: மூட்டு வலியை சட்டுனு விரட்டும் மந்திர பால்!

இன்றைய உலகில் மூட்டு வலி என்பது அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது. எலும்பு போதிய வலிமை இல்லாததால் இது போன்ற பாதிப்புகளை சிறு வயதிலேயே சந்திக்க நேரிடுகிறது. இந்த முழங்கால் மூட்டு வலியை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணபடுத்திக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)எள்
3)ராகி
4)பேரிச்சம் பழம்

ஒரு கிண்ணத்தில் சிறிது எள் மற்றும் 4 தேக்கரண்டி ராகி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும். சுமார் 4 மணி நேரத்திற்கு ஊறவிடவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த ராகி மற்றும் எள்ளை போட்டு மைய்ய அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் 10 பேரிச்சம் பழத் துண்டுகளை போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து பால் ஊற்றி காய்ச்சவும்.

பிறகு அதில் அரைத்த கலவையை ஊற்றி பேரிச்சம் பழத்தை போட்டு காய்ச்சி குடித்தால் மூட்டு வலி, முழங்கால் வலி முழுமையாக குணமாகும்.