வெள்ளை முடியை கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்!

0
102
#image_title

வெள்ளை முடியை கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்!

இளம் தலைமுறையை அதிகம் பாதிக்கும் வெள்ளை நரையை நிரந்தமாக கருமையாக்க வீட்டு முறையில் டை தயாரித்து பயன்படுத்துங்கள்.

டை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)இண்டிகோ பவுடர்
3)வெங்காயத் தோல்
4)மருதாணி பொடி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1/4 கப் வெங்காயத் தோல் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி இண்டிகோ பவுடர், இரண்டு தேக்கரண்டி மருதாணி பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு அதில் வெங்காய நீரை வடிகட்டி சேர்த்து கலக்கவும். அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும். இந்த ஒரு இரவு வரை ஊறவிடவும்.

மறுநாள் இந்த ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் ஷாம்பு எதுவும் பயன்படுத்தலாம் தலையை நன்கு அலசி சுத்தம் செய்யவும்.

அடுத்த நாள் ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசிக் கொள்ளவும். இதுபோல் வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் நிரந்தமாக கருமையாகும்.