தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை!

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை!

தமிழகத்தில் மொத்தமாக சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளது.தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.மின் கட்டணம் செலுத்த பல்வேறு வகையான வழிமுறைகள் வந்துள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம் ,மின்வாரிய செயலி ,கூகுள் பே,போன் பே போன்ற செயலிகள் உள்ளது அதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம்.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.மேலும் இது குறித்து மின் இணைப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

ஆனால் மின் வாரியம் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அதில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பதைக் கைவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை அதனால் பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.ஆதார் எண் இணைப்பு என்பது முற்றிலும் தரவுகளை சேமிக்கும் அடிப்படையில் தான் இணைக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

ஆதார் எண்னை இணைக்காவிட்டால் மானியங்கள் ரத்து என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என மின் வாரியம் தெரிவித்துள்ளது.மேலும் மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.