திங்கள்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்! எந்தெந்த ஊரில் தெரியுமா?

திங்கள்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்! எந்தெந்த ஊரில் தெரியுமா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிய தொடங்கிவிட்டனர்.அதனால் தற்போது சபரிமலையில் பக்தர்கள்  கூட்டம் அலைமோதுகின்றது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் டிசம்பர் 5 முதல் ஜனவரி 9 ஆம் அன்று திங்கள்கிழமை தோறும்  ஹைதராபாத் -கொல்லம் இடையில் வாராந்திர வண்டி எண் 07053 என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.

இந்த ரயில் ஹைதராபாத்தில் திங்கள்கிழமை தோறும் மாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்கு கொல்லம் வந்தடையும்.

அதனையடுத்து மறுமார்க்கமாக வண்டி எண் 07054 டிசம்பர் 7 முதல் ஜனவரி 11 தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படுகின்றது. கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஹைதராபாத் வந்தடையும்.

மேலும் இந்த ரயில்கள் தமிழகத்தின் காட்பாடி ,ஜோலார்பேட்டை ,சேலம் ,ஈரோடு ,திருப்பூர் மற்றும் கோவை வழியாக இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.