Monday, July 14, 2025
Home Blog Page 3373

தனுஷ் ஐஸ்வரியா பிரிவுகளுக்கு பிறகு இணைந்த போட்டோ வைரல்! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

தனுஷ் ஐஸ்வரியா பிரிவுகளுக்கு பிறகு இணைந்த போட்டோ வைரல்! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

நடிகர் தனுஷ்விற்கும்  ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வரியாவிற்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வரியா இருவரும் 18 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள்.

இந்நிலையில் திடீர்ரென்று தனுஷும்  ஐஸ்வரியாவும்  சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர்.இவர்களின் இந்த திடீர் முடிவிற்கு என்ன கராணம்? என பல விதமான கேள்விகள் வலைதளத்தில் பரவி வந்துள்ளன.இதனால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறபட்டாலும் தனுஷும், ஐஸ்வர்யாவும் அமைதி காத்து வருகின்றனர்.இந்நிலையில் பிரிவிற்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அடுத்தபடியாக தனுஷ் மற்றும் ஐஸ்வரியாவின்  மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் யாத்ரா தனது பள்ளியில்  ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்போது தங்கள் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இயல்பாக தங்களது மகனை அணைத்த படி இருக்கின்றனர்.தனுஷ் மற்றும் ஐஸ்வரியா பிரிவிற்கு பிறகு கூட தங்களது மகனை உற்சாகப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து வந்துள்ளார்கள்.இதில் அவர்கள் கலந்துகொண்டது  நல்ல பெற்றோர்களின்  அடையாளம் காட்டுவதாக ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி எற்படுகிறது.

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை… சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு!

0

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை… சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு!

இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது.

சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல்களை சந்தித்தது. அதிகளவில் ஒரு தமிழ்ப்படம் ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான் படத்துக்காகதான் இருக்கும். அப்போதில் இருந்து லிங்குசாமிக்கு இறங்குமுகமாகவே உள்ளது.

இந்நிலையில் முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்திடம் லிங்குசாமி ‘எண்ணி ஏழே நாள்’ என்ற திரைப்படத் தயாரிப்பிற்காக 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் கார்த்தி மற்றும் சமந்தா நடிக்க இருந்தனர். ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் வாங்கிய கடனுக்காக லிங்குசாமி கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டதால் பிவிபி நிறுவனம் அவர் மேல் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் இன்று சென்னை, சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியவர்களுக்கு 6 மாத காலம் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.  இதனால் லிங்குசாமி கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தீர்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து லிங்குசாமி மேல் முறையீடு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்!

0

திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்!

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படத்துக்குப் பிறகு வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஜகமே தந்திரம், மாறன் மற்றும் கலாட்டா கல்யாணம் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இதையடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில்லாமல் வந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தனுஷின் ஹிட் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். தனுஷ் உள்ளிட்ட அனைவரையும் தூக்கி சாப்பிட்டு படத்தை தாங்கிப் பிடிப்பதே அவர்தான் என்றும், அவருக்காக மீண்டும் படம் பார்ப்போம் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். படத்தில் நித்யா மேனன் தனுஷின் தோழியாக நடித்துள்ளார். அதேபோல பாரதிராஜாவின் கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை முதலில் தனுஷே தயாரிப்பதாக இருந்ததாம். அப்போது நித்யா மேனன் நடித்த வேடத்தில் நடிக்க நயன்தாராவையும், ராஷி கண்ணா நடித்த வேடத்தில் நடிக்க ஹன்சிகாவையும், பிரியா பவானி சங்கர் நடித்த வேடத்தில் நடிக்க சமந்தாவையும் சாய்ஸாக வைத்திருந்தார்களாம். ஆனால் படம் தாமதமாகி சன் பிக்சர்ஸ் கைக்கு வந்த போது பட்ஜெட்டைக் குறைக்க கதாநாயகிகளை மாற்றியதாக சொல்லப்படுகிறது.

செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?..

செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?..

ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவர் ஒரு லாரி பட்டறை மெக்கானிக் ஆவார்.இவர் கர்நாடக மாநிலத்தில் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி பரிமளா.இவர்கூலி வேலைக்கு சென்று வருவார்.இவருடைய ஒரே மகள் ஹரிணிஸ்ரீ.

இவருடைய வயது பதினைந்து.இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த வாரம் அன்று செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.அவர் அதிக நேரமாக செல்போன் பயன் படுத்தியதாக கூறப்படுகிறது.இதை அவரது தாயார் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஹரிணி ஸ்ரீ அழுதுகொண்டே அறைக்கு சென்றார்.அப்போது அருகில் இறந்த சேலையை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மகளின் அழுகை சத்தம் திடிரென்று நின்றதும் அதிர்ச்சி அடைந்த பரிமளா கத்தி சத்தம் போட்டதால் அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து ஹரிணிஸ்ரீயை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்த மருத்துவர்கள் ஹரிணிஸ்ரீயின்  உடலை பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மேல் சிகிச்சை பெற்று வந்த ஹரிணிஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது என தன் தாய் கூறியதால் சிறுமி எடுத்த விபரீத முடிவு.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்!

தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து குழு அமைத்து ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் அடிப்படையில் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் இந்த பரிசோதனையில் டிக்கெட் இல்லாதவர்கள் மற்றும் பார்சல் கொண்டு வந்தவர்கள் என 18,860 பேர் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களின் மீது ரயில்வே சட்டப்படி வழக்கு பதிவு செய்து 1.32 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தவறு இது தண்டனைக்குரியது அவ்வாறு பயணம் செய்பவர்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க படலாம் எனவும் கூறியுள்ளார்.

 

இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு!

0

இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு!

அஜித் நடிப்பில் H வினோத் இயக்கி வரும் படத்தை ரசிகர்கள் அஜித் 61 என அழைத்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியானது. அன்று தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாள் என்பதால் அன்று வெளியாகும் என எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அன்றைய தினம் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்போது விசாகப்பட்டணத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரத்தில் ‘அஜித் 61’ படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படத்தின் போதும் இதுபோல ரசிகர்களுக்கு எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருக்க, ரசிகர்கள் வலிமை அப்டேட் என்பதை ஒரு பிராண்ட்டாகவே மாற்றினர். இந்தமுறை அதுபோல எதுவும் நடக்கக் கூடாது என்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் தற்போது பைக் ரேஸ் சம்மந்தமான காட்சிகளில் நடித்து வருவதாக சொலல்ப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா!

0

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்த அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோபாக்‌ஷா ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை.

பிரின்ஸ் திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா ரியாபோபாஷ்யா தெரிவித்துள்ளார்.

பிரின்ஸ் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. முதலில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாவதாக இருந்த இந்த திரைப்படம் தற்போது தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?

0

லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?

நடிகர் அஜித் சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்த போது அங்கு லைகா சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் – ஹெச் வினோத் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவே அது வைரலானது. தற்போது இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், அஜித் நடிக்க இருக்கும் 62-வது படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி அஜித் நடிக்கவிருக்கும் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருகிறார் என்றும், அந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் லைகா சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அஜித் 62 படம் பற்றி இருவரும் எதுவும் பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது. திருமணம் முடிந்து தற்போதுதான் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தின் திரைக்கதை பணிகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்!

0

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் நெல்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்.  அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கிரண் கலை இயக்குனராகவும் பணியாற்ற உள்ளனர். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே போல யோகி பாபு நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜெயிலர் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்தின் அட்டகாசமான கேரக்டர் லுக் போஸ்டர் ஒன்றையும்  வெளியிட்டது.

இந்த போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷியாக்க பலரும் அந்த போஸ்டரை பகிர்ந்து ஜெயிலர் என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கினர். இதையடுத்து இந்திய அளவில் இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களில் ட்ரண்ட் ஆனது.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் படத்துக்காக போடப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடக்கும் என சொல்லப்படுகிறது.  அடுத்த ஆண்டில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் 

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர்

பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி.நடிகர் ரஜினிகாந்த அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி எதுவும் ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

இந்நிலையில் தான் அவருடைய கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை தலைமையில் அவர் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.