Monday, July 14, 2025
Home Blog Page 3379

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை!

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை!

ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் ஒன்று உள்ளது.அங்கு தினம் தோறும் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.வழக்கம் போல நேற்று பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் தலை ,முகம் போன்ற பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.அதனை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அந்த இளம் பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மேகாஶ்ரீ என்பது தெரியவந்தது.

 இவர் டெல்லியில்  எம்.டெக் , பி.எச்.டி முடித்து விட்டு ஐ ஐ டி விடுதியில் தங்கி மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மாணவி இந்த இடத்திற்கு எதற்காக வந்தார் ,ரயிலில் செல்லும் பொழுது தவறி கீழே விழுந்தார அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியில் அதிரடி மாற்றம்… இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே திணறல்

0

இந்திய அணியில் அதிரடி மாற்றம்… இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே திணறல்

ஜிம்பாப்வே – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

 இன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் சஹார் இந்த போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். பந்துவீச்சை தொடங்கிய இந்திய அணி தீயாகப் பந்துவீசி வருகின்றனர்.

இதையடுத்து தொடங்கியுள்ள போட்டியில் ஜிம்பாப்வே அணி பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியைப் போலவே தடுமாறி வருகின்றனர். தற்போது வரை 5 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்தியா தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து ரன்கள் சேர்க்க முடியாமல் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். இதனால் இந்த போட்டியையும் இந்தியா வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. ஜிம்பாப்வே போன்ற நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாடினால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பொருளாதார ரீதியில் பலன் கிடைக்கும் என்பதால் இந்த தொடரை ஜிம்பாப்வேயில் நடத்துகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா, கோலி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்!

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்!

தாய் தந்தையர் பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய காலத்தில் பெற்ற மகன் தன் தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரையே விட்ட சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பகுதியில் தம்பதியினர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்பொழுது இத்தம்பதியினருக்கு கார்த்திக் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். தினந்தோறும் சிறுவன் கார்த்திக்கை தனது வீட்டின் முன் விளையாட கூறிவிட்டு வீட்டில் வேலைகளை  செய்வதையே அவரது தாய்  வழக்கமாக வைத்துள்ளார்.

வழக்கம் போல் அவரது தாய்  கார்த்தியை விளையாட கூறியுள்ளார்.அவ்வாறு  விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பாம்பு ஒன்று இவரது வீட்டிற்குள் நுழைய முற்பட்டுள்ளது. பாம்பு நுழைவதை கண்ட அச்சிறுவன் தனது அம்மாவை கடித்து விடும் என்ற பயத்தில் யாரையும் கூப்பிடாமல் அந்த பாம்பை அவரே  விரட்டியுள்ளார். அப்பொழுது, அப்பாம்பு அச்சிறுவனை தீண்டியுள்ளது. உடனே சிறுவன் அலறி துடித்து கீழே விழுந்துள்ளான். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய், உறவினர்களை அழைத்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அச்சிறுவனை சோதித்த மருத்துவர் இவர் முன்பே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். பாம்பிடம் இருந்து தாயை காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்த ஐந்து வயது சிறுவனின் செயல் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

“அவர்தான் என் கனவு நடிகர்… அவருடன் டான்ஸ் ஆடவேண்டும்” வாரிசு நடிகையின் ஆசை

0

“அவர்தான் என் கனவு நடிகர்… அவருடன் டான்ஸ் ஆடவேண்டும்” வாரிசு நடிகையின் ஆசை

நடிகை அதிதி ஷங்கர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். அவர் நடித்த விருமன் திரைப்படத்தின் வெற்றி அவரை பிரபல நாயகி ஆக்கியுள்ளது.

பிரபல இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். ‘கொம்பன்’ முத்தையா இயக்கும் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்தி கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகி வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்பே அதிதி சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒபப்ந்தம் ஆனார். அந்த படத்தில் அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் அவரின் தந்தை ஷங்கரின் பெயர் பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளது.

இந்நிலையில் இப்பொழுது அதிதி நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளியிட்டுள்ளார். அவர் அளித்த ஒரு நேர்காணலில் “விஜய் என்னுடைய கனவு நடிகர்களில் ஒருவர். அவருடன் இணைந்து டான்ஸ் ஆடவேண்டும். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு” எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவம் படித்தவர்கள். இவர்களை தவிர சங்கருக்கு அர்ஜித் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது.

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

 கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தான் ரதிமேனன் இவருடைய வயது 59.இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அவரது தாய் ரதிமேனன் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் அவரது மகள்கள் பார்த்துக்கொண்டார்கள். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்தனை செய்தார்.

அந்த சிந்தனையில் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று ஒரு முடிவுடன் இருந்தார்.அதற்காக தனது தாய்க்கு தகுந்த மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்.அந்த சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் தான் திவாகரன் அவருடைய வயது 63. மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.

தனது தாய்க்கு ஏற்ற துணை இவர்தான் என்று பிரசிதா முடிவு செய்தார். இரண்டு மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார்.அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும் அவருக்கு ஒரு துணை வேண்டும் அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று கூறினார்.

பல மணி நேரம் மனம் உருகி பேசினார். இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2 ஆவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது இரண்டு பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

எங்களுக்கு முழு சம்மதம் என்றார்கள். இதை தொடர்ந்து தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார்கள்.அதன்படி உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

தாய்க்கு 2ஆவது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பிரசிதா மகிழ்ச்சியில் அதைப்பற்றி கூறியதாவது,எனது அம்மாவுக்கு நாங்கள் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் தான். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.இப்போது நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது இவ்வாறு அவர் கூறினார்.

இதனை கண்ட அனைவரும் கண்கலங்கி பார்த்து ரசித்து இருந்தனர். இப்படி பட்ட பெண் பிள்ளைகள் இருக்கையில் தாய்க்கு எதற்க்கு கஷ்டம் வரும்.இப்போது பிள்ளைகளுக்கு இவர்களும் ஒரு குழந்தை தானே.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரதின் நண்பர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாத். இவர்கள் மூவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்ளை கோபிநாத் இயக்கினார்.

இதனையடுத்து இவர்கள் மூவரும் அற்புதபுரம் சோதனை சாவடி அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் அடித்து விட்டு புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தானர்.அப்போது அதே சாலையில் எதிரில் வல்லம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மாதவன் என்பவர் அவரதின் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தார்.அந்த ஸ்கூட்டரை புதுக்கோட்டை கட்டியா வயலில் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த கார் ஆனது எதிர்பாராத விதமாக மாதவன் இயக்கி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. மேலும் கல்லூரி மாணவர்கள் வந்த மோட்டர் சைக்கிளின் மீதும் மோதியது.இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்த மாதவன் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். அதில் பலத்த காயம் ஏற்பட்டது.இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர்கள் அனைவரையும்  தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாதவன் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சிலிண்டர் வேண்டி பதிவு செய்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை. நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

இதைதொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி, ஆயுதபூஜை, தீபாவளி என, ஹிந்து பண்டிகைகள் வர உள்ளன. இதனால், வீடுகளில் சமையல் கேஸ் பயன்பாடு அதிகம் இருக்கும்.மேலும், பண்டிகை நாட்களில் சிலிண்டர் டெலிவரியும் செய்வதில்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டர் டெலிவரி செய்யுமாறு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்படுள்ளது. அதைதொடர்பாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதம் அதிகமாக பெய்துள்ளது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை மாதம் 6,13,14, 15ஆம் தேதிகளிலும், ஆகஸ்ட் மாதம் 3,4,5,8 ஆம் தேதி ஆகிய 8 நாள்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் மாணவா்களுக்கு நடத்தப்பட வேண்டிய பாடத் திட்டம் பெருமளவு முடிக்கப்படாமல் உள்ளதால், இதை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தாமோதரன் அறிவித்துள்ளார். இதையடுத்து  செப்டம்பா் 3, 17, 24 ஆம் தேதிகளிலும், அக்டோபா் 15, 29 ஆம் தேதிகளிலும், நவம்பா் 5, 26 மற்றும் டிசம்பா் மாதம் 17 ஆம் தேதி ஆகிய 8 நாள்கள் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக  அறிவித்துள்ளது.

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள பட்டிபாடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரதின் மனைவி தேவி(37). கணவன் மனைவி இருவரும் நேற்று ஏற்காடு பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஸ்கூட்டரை தேவி இயக்கி கொண்டிருந்தார்.பின்புறம் அவரது கணவர் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பட்டிபாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஏற்காடு நடூர் அருகே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சாலையின் குறுக்கே வந்த காட்டெருமை திடீரென தேவி மீது மோதியது.அதில் தேவி பலத்த காயம் அடைந்தார் .

மேலும் அவரதின் கணவர் எந்தவித காயமும் இல்லாமல் தப்பித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த தேவியை ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தேவி  உயிரிழந்தார். திடிரென காட்டெருமை முட்டி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அப்பகுதி மக்கள்  வன விலங்குகள் சாலையில் நடமாடுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..

உலக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், மாநிலங்களில் பருவமழை காரணமாக விடாது கனமழை பெய்து வருகிறது.இந்த மழை வெள்ளக்காடாக மாறியது.அந்த வகையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது.

குறிப்பாக அந்த மாநிலங்களில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை காரணமாக  வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.மேலும் சில பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் ஒரு ரயில்வே பாலம்  மழை வெள்ளம் காரணமாக திடீரென்று அந்த பாலம் உடைந்து விழுந்துள்ளதாகவும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு இன்னும் குறையவில்லை என்றும் வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மண்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியது.சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் சில நீரில் அடித்து செல்லப்பட்டது.படு மோசமான வானிலை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பாலம் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.