Tuesday, July 15, 2025
Home Blog Page 3386

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டிலிருந்து 3.15 கிலோ தங்கம் வியாழக்கிழமை அன்று தனிப்படை போலீசாரால் மீக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைக்கொள்ளையில் அமல்ராஜிற்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காவல் ஆய்வாளர் வீட்டில் மூன்று புள்ளி ஐந்து கிலோ தங்கம் மீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரும்பாக்கம் ரசாப் கார்டன் சாலையில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்திருந்தது. அந்த வங்கியில் கடந்த 13 ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

கொள்ளையர்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அதில் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி  வந்த கொரட்டூரை சேர்ந்த முருகன் என்பவர் தான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்தது.

வங்கிக் கிளையிலே பணியாற்றி வங்கியிலே கொள்ளை அடிக்க சதி திட்டத்தை நிறைவேற்றி இருப்பது தெரியவந்தது. தனிப்படையினர் கொள்ளை நடந்த 24 மணி நேரத்திற்குள் வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த மோ.சந்தோஷ் அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் வீ.பாலாஜி மற்றும் செந்தில்குமரன் ஆகிய மூன்று பேரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து 8.5 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்க நகைகள்,இரண்டு கார்கள்,மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதனிடையே தற்போது காவல்  ஆய்வாளர் அமல்ராஜை பணியிட நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி உத்தரவு வெளியிட்டுள்ளார். காவல் ஆய்வாளரை பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் போலீசார்களிடம் சற்று பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

0

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியிட்டு தேதியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தைத் திரையரங்குகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதில் ஒரு பாடலை சிம்புவும் மற்றொரு பாடலை ரஹ்மானும் பாடியுள்ளனர். இரண்டு பாடல்களையும் பாடல் ஆசிரியர் தாமரைதான் எழுதியுள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் இசை வெளியீடு தாமதம் ஆகி வந்த நிலையில் தற்போது வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி  பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடக்கும்  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அன்றே படத்தின் டிரைலரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படி  உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  மதிப்பூதியம் பெறுவோருக்கும் தனியாக சிறிய தொகை உயர்த்தி தரப்படும் எனவும் நிதி துறை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து ரூ. 2500 வரை பெரும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஐம்பது  ரூபாய் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ 2500க்கும் மேலாக பெரும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் நூறு ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்ட இந்த தொகையை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர் தேக்க  தொட்டி போன்றவைகள்  இயக்குபவர்களும் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

0

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

நேற்று வெளியான தன்னுடைய திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தனுஷ் சென்னையின் பிரபல திரையரங்குக்கு சென்று பார்த்தார். அவரோடு படத்தின் நாயகி ராஷி கண்ணாவும் படத்தைப் பார்த்தார். படம் முடிந்து வெளியேறிய போது ரசிகர்கள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து இருவரையும் நெருங்கினர்.

பவுன்ஸர்களாலும் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ் ராஷிகண்ணாவை கூட்டத்திடம் இருந்து காப்பாற்றி பத்திரமாக தன்னுடைய காரில் ஏற்றி அழைத்துச் சென்றார். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம். படத்தை இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று இப்போதே சொல்லப்பட்டு வருகிறது.

படத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக படத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது நித்யா மேனன்தான். இந்த படத்துக்குக் கிடைத்து வரும் வரவேற்புக்கு மத்தியில் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் பாடலுக்கு ஆடும் போது திரையைக் கிழித்த தேவையிலலாத சம்பவமும் நடந்துள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது… டிரைலர் எப்போது?

0

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது… டிரைலர் எப்போது?

பா ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பா ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் கதையை இயக்கியுள்ளார். இந்த படத்துக்காக பல புதுமுகங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். வழக்கமாக தன் படங்களில் பணிபுரியும் கலைஞர்களுக்கு பதில் புதுமுக கலைஞர்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளார். காதல் கதையில் அரசியல் சார்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு தீனி போடும் வகையில் இந்த டிரைலர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா ரஞ்சித் 2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் அவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றன. இதற்கிடையில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கி தரமான படங்களையும் தயாரித்து வருகிறார்.

மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

0

மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த சாஹல், தற்போது மீண்டும் தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாஹல் சமூகவலைதளங்களில் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்குக் காரணம் சமீபத்தில் தனுஸ்ரீ தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் தன்னுடைய கணவர் பெயரான சாஹலை நீக்கினார். இதுதான் ரசிகர்களுக்கு விவாகரத்து யூகங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் “விவாகரத்து” தொடர்பான பதிவுகளால் சமூக ஊடகங்களில் பரபரப்பானதைத் தொடர்ந்து, தனது திருமண வாழ்க்கை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைப்பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாஹல், “எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள். தயவுசெய்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பு.” எனக் கூறி பதிலளித்துள்ளார்.

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்  முருகன்.இவருடைய வயது40.

இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்த அரசு பேருந்தில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் சேர்த்து வருகின்றார்கள்.இந்நிலையில் இன்று அரசு பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

நேற்று இரவு 11:30 மணி அளவில் அந்த பேருந்து பரவை கொண்ட மாரி பாலம் அருகே வந்திருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே கவிழ்ந்தது.இந்த விபத்தை கண்ட சக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! 

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியிலுள்ள பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது .அதில் தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சம்பவத்தன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதியது அதனை சாதகமாக பயன்படுத்தி   42 ஆயிரம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடி சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்குள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில்  மூதாட்டி ஒருவர் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது . இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவருடன் பள்ளி கல்வித்துறை ஆணையர் கா.நந்தகுமார் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி உரையாடினார்கள்.

அதனையடுத்து மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகளை தொடர்ந்து தற்போது துறை சார் இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பள்ளி கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம் பாடநூல் கழகம் என ஒவ்வொரு துறை வாரியாகவும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் தற்போதைய நிலை அதற்கான நிதி ஒதுக்கீடு போன்றவைகள் பற்றி சட்டப்பேரவை அறிவிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அந்த ஆலோசனையில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் குறித்து நீதிமன்ற வழக்கு நிலவரம், மழலையர் வகுப்புக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பாகவும் பேசப்பட்டது. கல்வி தொலைக்காட்சிகளில் தலைமை செயல் அதிகாரியாக சிஇஓவாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணி நியமனம் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டது.

அவர் மீது  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ள நிலையில் அவரைப் பற்றி ஆராயும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தனர். அவர் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களில் இருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்து நியமிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

அப்போது அவர் தற்போதுள்ள நிலவரம் படி அரசு பள்ளிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேண்டுமென்பதால் முதுநிலை ஆசிரியர் பணி நியமனம் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் அடிப்படையாக இதர ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள ஆசிரியருக்கான ஊதியத்தை உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம்! எதிரணியை சிதற விட்ட இந்தியா!

0

ஹராரேயில் நடந்த இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி 40.3 ஓவர்கள் தான் தாக்குப் பிடித்தது. அந்த அணியின் கேப்டன் 51 பந்துகளை சந்தித்து 4 பவுண்டர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார்.

110/8 என்ற நிலையில், இருந்த ஜிம்பாப்வே அணி 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் சேர்த்தது. இது வெறும் 11 ஓவர்களில் எடுக்கப்பட்டது. இந்தியா தரப்பில் தீபக் சாஹர் பிரஷீத் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதேபோல முகமது சிராஜ் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. சுப்மன் 82 தங்களுடனும், தவான் 81 ரன்களுடன், ஆட்டமிழக்காமலிருந்தனர்.

ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி சமீபத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், இந்தியா தன்னுடைய முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், வெற்றியைக் கண்டிருக்கிறது. நடைபெறவிருக்கும் ஆசிரியக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும், மொத்தவிருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த தீபக் சாகர் 7 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.