சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் 

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார்.

இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி முயற்சியால் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவை பயணத்தை திமுகவினர் கொண்டாடினாலும்,பாஜக தரப்பு வழக்கம் போல கடுமையான எதிர்ப்பை காட்டி வருகிறது.குறிப்பாக மின்கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வு உள்ளிட்ட கடந்த சில மாதங்களில் நடந்த பிரச்சனைகளை மையப்படுத்தி எதிர்ப்பை காட்டி வருகிறது.

அந்த வகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் திமுக அரசுக்கு எதிராக பாஜகவினர் கருத்துக்களை தெரிவித்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.இதில் திமுகவின் கடந்தகால துரோகம் முதல் இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர் செய்தது வரை என அனைத்தையும் பட்டியலிட்டு விமர்சித்து வருகின்றனர்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போதெல்லாம் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பாளர்கள் டிவிட்டரில் #GoBackModi என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து மகிழ்ச்சி அடைவார்கள்.ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு அதை மறந்து மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் மோடி தமிழகம் வந்த போது சுமூகமான போக்கையே திமுகவினர் கடைபிடித்தனர்.

https://twitter.com/yogeswaranvija1/status/1562290962738556929?t=GWQSPTTwZyPAfyJJqniygQ&s=19

 

ஆனால் பழசை மறக்காத பாஜக தற்போது கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறது.

இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.இதைப்பார்த்த திமுகவினர் எதும் செய்ய முடியாமல் கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.