சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5676

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!

0

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!

பாஜக கட்சியின் முப்பெரும் விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று நடிகர் ராதாரவி வெளிப்படையாக பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரும் கையெழுத்து போராட்டத்தை திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்து சில நாட்களில் 2 கோடி கையெழுத்துக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. தான் எதிர்பார்த்ததை விட அதிக்பட்சமான மக்களின் ஆதரவு கிடைத்த காரணத்தால் ஸ்டாலின் தனது நன்றியினை தெரிவித்துள்ளார். எதற்காக இந்த இயக்கத்தின் மூலம் மக்களிடம் கையெழுத்து வாங்கினோம் என்கிற விளக்கமுக் திமுக தரப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. மக்களிடம் வாங்கப்பட்ட கையெழுத்துகள் இந்திய குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப் போவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுகவின் கையெழுத்து போராட்ட இயக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இந்திய நாட்டுக்கு திமுக செய்யும் மிகப்பெரிய துரோகம் என்றும் நடிகர் ராதாரவி பாஜக கூட்டத்தில் பேசினார். மேலும், தமிழகத்தில் பாரதியாருக்கு பெரிய அளவில் சிலை வைக்க. வேண்டும் என்றும், நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விவகாரத்தில் சரியான கருத்துகளையே கூறி வருவதாகவும் கூறினார். இந்த பாஜக முப்பெரும் விழாவில் தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் பாஜகவின் சில முக்கிய தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்றோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவதற்கு துளியும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடு தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது?

0

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது?

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் எனப் போற்றப்படும் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாக டிவிட்டரில் வெளியான தகவலால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரையும் வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் வெற்றி பெறாததால் ஆந்திர மற்றும் கன்னட தேசங்களில் அடைக்கலமாகி பழைய ஹிட் படங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திடீரென தமிழ் ரசிகர்களின் பேசுபொருளாக ஆகியுள்ளார் ரவிக்குமார். அதற்குக் காரணம் அவர் அஜித்தை அடுத்த படத்தில் இயக்கப் போவதாகவும் அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்திகளே. யாரோ ஒரு நபர் டிவிட்டரில் இந்த செய்தியைக் கொளுத்திப் போட ரணகள்மானது டிவிட்டர். ஏனென்றால் கே எஸ் ரவிக்குமார் ஏற்கனவே அஜித்தை வைத்து வில்லன், வரலாறு என இரு ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது உண்மையா இல்லை பொய்யா என்று விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கே எஸ் ரவிக்குமார்.

இதையடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் ‘அன்பான நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு… நேற்று முதல் ஒரு வதந்தி வேகமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜித்தை நான் இயக்கப் போகிறேன் என்று. ஆனால் அது உண்மை இல்லை. மேலும் எனக்கு டிவிட்டரில் எந்த கணக்கும் இல்லை. அதனால் டிவிட்டர் மூலம் என் சம்மந்தமாக வரும் எந்த விஷயத்தையும் நம்ப வேண்டாம்.’ எனத் தெரிவித்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது அஜித் ஹெச் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தில் அவர் கவனம் செலுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி !

0

கொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி !

சீனாவில் மக்களை பெரும் பீதிக்கு ஆளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பிறந்த குழந்தை ஒன்று தப்பித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 800 பேருக்கும் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். இந்நிலையில் இப்படிப் பட்ட கொடூரமான வைரஸிடம் இருந்து கருவில் இருக்கும் ஒரு குழந்தை தப்பித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்யத்துடன் உள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

வங்கதேசத்திடம் உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்தியா:ரசிகர்கள் சோகம்!

0

வங்கதேசத்திடம் உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்தியா:ரசிகர்கள் சோகம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்ட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை இழந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள இந்திய அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே ஆமைப் போல ஊர்ந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தவிர மற்ற அனைவரும் சொதப்பினர். இதனால் அவரால் கூட அதிரடியாக விளையாட முடியாமல் போனது, நிதானமாக விளையாடிய அவர் அரைசதம் கடந்தார். இதனால் இந்திய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஜெய்ஸ்வால் மட்டும் அதிகபட்சமாக 88 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 178 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் வீரர்கள் நிதானமாக விளையாடினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும் ஆட்டம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டனர். இதற்கிடையில் மழைக் குறுக்கிட்டதால் இலக்கு 171 ரன்களாக குறைக்கப்பட்டது. 42.1 ஓவர்களில் நிர்ணயிக்க பட்ட் இலக்கை அந்த எணி எட்டி முதல் முறையாக உலகக்கோப்பையைத் தட்டிச் சென்றது. அந்த அணி சார்பாக இமான் 47 ரன்களும் அக்பர் அலி 47 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர்.

இந்தியா சார்பில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு ஆதரவு அளித்தது.

சக்கரம் இல்லாத வண்டியில் ஏறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்: பொன் ராதாகிருஷ்ணன்

0

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பணிபுரியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் பணிபுரிய உள்ளது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியபோது பிரசாந்த் கிஷோர் உடனான திமுகவின் உறவு என்பது சக்கரம் இல்லாத வண்டியை போன்றது என்றும் திமுகவுடனான உறவை பிரசாந்த் கிஷோர் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்

மேலும் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடிய தேர்தல் என்றும் கூறிய அவர், நெய்வேலியில் பாஜக நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் அல்ல என்றும் அங்கு எந்த படப்பிடிப்புக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று நடந்த ஒரு பொதுவான போராட்டம் என்றும் தெரிவித்தார்

வேனிலும் ரசிகர்களின் மனதிலும் ஏறிய விஜய்!

0

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பை பார்ப்பதற்கும் விஜய் பார்ப்பதற்கும் தினமும் அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூறிவருகின்றனர்

இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் விஜய்யை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று பல மணி நேரமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தது மட்டுமன்றி படப்பிடிப்பு குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார்

அதன்பின் தனது மொபைல் போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். முதன்முதலாக ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக் கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரி ரெய்டுக்கு பிறகு விஜய் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும் ரசிகர்கள் காட்டி வரும் அன்புக்கு அவர் நெகழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் வேனில் ஏறியது மட்டுமின்றி ரசிகர்களின் நெஞ்சிலும் ஆழமாக ஏறிவிட்டார் என்றுதான் இந்த சம்பவங்கள் காட்டுகின்றன

கலிபோர்னியாவை கலக்கும் ‘மதுரை இட்லி கடை’

0

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லியை அமெரிக்கா வரை கொண்டு சென்ற மதுரை இட்லி கடை உரிமையாளர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உணவகம் என்றாலே அது மதுரை தான் என்பது அனைவரும் அறிந்ததே. 24 மணி நேரமும் சுடச்சுட உணவுகள் ஓட்டல்களில் கிடைக்கும் என்பதும் இதனால்தான் மதுரையை தூங்கா நகரம் என்று அழைப்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு கலிபோனியா மாநிலத்தில் ’மதுரை இட்லி கடை’ என்ற ஓட்டலை ஆரம்பித்துள்ளார். இந்த ஓட்டல் சிறிது சிறிதாக வளர்ந்து தற்போது மிகப்பெரிய அளவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் இந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழர்கள், இந்தியர்கள் மட்டுமின்றி ஒருசில அமெரிக்கர்களின் ரெகுலராக இந்த கடைக்கு வந்து இட்லியை சுவைத்து சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மதுரையிலுள்ள இட்லியைப் போலவே அச்சு அசலாக அதே சுவையில் அமெரிக்காவிலும் கிடைப்பதால் உள்ளூரில் நாம் வாழ்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக அங்கு வாழும் தமிழர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் தற்போது இந்த ஓட்டல் ஸ்டார் ஓட்டல் என்ற நிலைக்கு இணையாக வளர்ச்சி அடைந்துள்ளது

பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி!

0

பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி!

இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஒன்றில் 30,000 பேரை வைத்து ஷங்கர் இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கமல் சேனாதிபதி எனும் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது காஜல் நடித்துவருகிறார்.

படம் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள பல தடங்கள்களுக்கு இடையில் படம் துண்டு துண்டாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் இப்போது 50 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தைப் பற்றிய ஆச்சர்யமான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சி ஒன்றை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் 30,000 பேரை வைத்து எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக கமல் தனது உடல்நிலையை பேணி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் வெளியானால் இந்த காட்சி உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வேறு வழியில்லை: பயிற்சியாளரே களத்துக்கு வந்த வினோதம் ! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம் !

0

வேறு வழியில்லை: பயிற்சியாளரே களத்துக்கு வந்த வினோதம் ! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நியுசிலாந்து அணியின் உதவி பயிற்சியாளர் லூக் ரோஞ்சி களத்தில் பீல்ட் செய்தது ரசிகர்களுக்கு அச்சர்யத்தை அளித்தது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி.

நியுசிலாந்து அணியின் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்களால் வரிசையாக சொதப்பியதால் இந்திய அணி தடுமாறி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜடேஜா ஆகியோரின் போராட்டம் வீணாக 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் தொடரையும் இழந்தது.

இதையடுத்து இந்தியா பேட்டிங்கின் போது களத்தில் இருந்த வீரர் ஒருவர் காயமாகி வெளியேறியதால் அவருக்குப் பதில் மாற்று வீரரை இறக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால் நியுசிலாந்து அணியின் பென்ச்சில் உள்ள கேன் வில்லியம்சன், கூகளின் மற்றும் சாண்ட்னர் ஆகியோர் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அந்த அணி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது.

வேறு வழி இல்லாத நிலையில் அந்த அணியின் உதவி பீல்டிங் பயிற்சியாளர் லூக்கி ரோஞ்ச் களத்துக்கு வந்து பீல்ட். இந்த சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யப் படுத்தியது. இதற்கு முன்னதாக இதுபோல இங்கிலாந்து பயிற்சியாளர் காலிங்வுட் பீல்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லூக் ரோஞ்சி 2017 ஆம் ஆண்டு வரை நியுசிலாந்து அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக நடைபெறும் திரைப்பட விழா!

0

சென்னை விமான நிலையத்தில் இதுவரை படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது என்பதும் எந்த ஒரு திரைப்படத்தின் விழாவும் இதுவரை அங்கு நடந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் முதல்முறையாக விமானம் குறித்த திரைப்படம் என்பதால் விமான நிலையத்தில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழாவை நடத்த விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பிரபல விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ விழா வரும் 13ம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இதற்காக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசிய போது விமான நிலைய அதிகாரிகள் இந்த விழாவிற்கு அனுமதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு சில பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது