சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5697

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; விழிப்புணர்வுடன் கவனமாக இருங்கள்!

0

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; விழிப்புணர்வுடன் கவனமாக இருங்கள்!

ஓமன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் பரவ ஆரம்பித்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ் தற்போது தமிழக இளைஞர் ஒருவருக்கு தொற்றுநோயாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை உண்டாக்கிய கரோனாவால் “சர்வதேச சுகாதார நிறுவனம் அவரசநிலை” என்று அறிவித்துள்ளது. இந்த புதிய வகையான நச்சு வைரஸை அழிக்க நேரடி மருந்துகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்கிற காரணத்தால் பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஆந்திராவில் ஒரு நபருக்கு வைரஸ் தொற்று அறிகுறி இருந்த காரணத்தால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கென்றே தனியாக இடம் ஒதுக்கப்பட்டு பிறருக்கு பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டிலும் கரோனாவிற்காக தனி வார்ட்டுகளே ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 நபர்களுக்கும் மற்றும் ஓமனில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சஞ்சீவ்குமார் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஓமனில் இருந்த வந்த தமிழக நபரை பற்றிய முழுமையான தகவல் எதுவும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. கரோனா பாதிப்படைந்த மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்திய பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறிய போதிலும் பலருக்கு கரோனா பற்றிய அச்சம் இன்னும் குறைந்தபாடில்லை.
இதனால் பொது மக்கள் தினமும் விழிப்புடன் இருக்குமாறு மருத்துவர்களும், அரசியல் தலைவர்களும் அறிவுரை கூறுகின்றனர்.

அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்

0

அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்

திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை வசூல் சாதனைகளையும் புரிந்து வருகிறது.

ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவர்கள் சமூக வலைதளங்களில் இப்படத்தின் இயக்குனரிடம் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தனர்.

இதற்கிடையில் இயக்குனர் மோகன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் வம்பிழுக்கும் படியான கேள்விகள் கேட்கப்பட்டது இதனை தொடர வேண்டாம் என்று இயக்குநர் நன்றி கூறி முடித்து இருக்கிறார்.

இதனை அந்த யூடியூப் சேனல் பயன்படுத்தி சில காட்சிகளை நீக்கிவிட்டு அவர் பாதியிலேயே வெளியேறியது போல் பேட்டியை ஒளிபரப்பி உள்ளனர். இதை பார்த்த இயக்குனர் தான் அப்படி செய்யவில்லை இதற்கு அந்நிறுவனம் விளக்கமளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த நிறுவனம் இயக்குநர் மோகனுக்கு எந்த பதிலும் விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் இயக்குனர் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டபோது அந்த காட்சி பதிவாகவில்லை என்று மழுப்பலாக பதிலளித்துள்ளனர்.

இயக்குனர் மோகன் இவர்களின் ஊடக அறம் இவ்வளவுதான் இவர்கள் போலி நடுநிலையாளர்கள் என்று சமூகவலைதளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு அந்த நிறுவனம் சமூக வலைத்தளத்தில் மோதல் போக்கிலேயே பதில் அளித்து உள்ளது.

இவர்கள் போக்கை புரிந்து கொண்ட மோகன் திரௌபதி திரைப்படத்தை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்த யூடியூப் சேனலை கடுமையாக திட்டித் தீர்த்தனர்.

இவர்கள் திரௌபதி என்ற கடவுள் பெயரை வைத்ததால் தான் இப்படி வன்மத்தை கக்கி வருகிறார்கள். அதனால் என்னுடைய அடுத்த படத்தின் தலைப்பும் கடவுள் பெயரில் தான் இருக்கும் என்று இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மோகனின் அதிரடியான இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!!

0

தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!!

21 வயது இளம்பெண் 250 குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உதவி புரிந்ததால் பொதுமக்களிடே பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உத்திர பிரதேர மாநிலத்தின் நித்தோரா கிராமத்தைச் சேர்ந்த கோமல் என்ற இளம்பெண் தனது கிராமத்தில் பெருமளவு இருக்கும் திறந்தவெளி கழிப்பறை கலாச்சாரத்தை மாற்றும் வகையில் 250 குடும்பங்களுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இந்த சமூக சேவையில் தன்னால் முடிந்த பெரும் உதவியை தனது கிராமத்திற்கு செய்துள்ளார். திறந்த வெளியில் மலம் கழிக்க சென்ற பெண்களை கற்பழிக்கும் சம்பவங்கள் வட மாநிலங்களில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.

இந்த சாதனையை செய்வதற்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட தடங்கல் மற்றும் அவமதிப்புகளை அவரே வருத்தமுடன் “தி பெட்டர் இந்தியா” என்கிற உரையாடலில் கூறியுள்ளார். மக்களிடம் இதைப்பற்றி எடுத்துக் கூறி புரியவைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இந்த வேலை எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. உனக்கு வேறு வேலையே இல்லையா என்று பலர் கேலி செய்தனர். சிலர் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதையும் தனது உரையாடலில் கோமல் தெரிவித்துள்ளார்.

டெல்லி நகரத்தில் பிறந்து வளர்ந்த கோமலுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பின் தனது கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு கழிவறை போன்ற எந்த வசதிகளும் கிடையாது. தினமும் காலையில் மற்ற பெண்களுடன் திறந்தவெளிக்குதான் செல்லவேண்டிய கட்டாயம். இதனையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் ஊர் தலைவர், சில அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளின் மூலம் கழிவறை கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கோமல். கிராம விவசாயிகள் & அரசு ஆதரவின் மூலம் கழிவறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலமாக 250 குடும்பத்திற்கான கழிவறைகளை கோமல் கட்டிமுடித்தார்.

தனது கிராமத்தில் பல்வேறு குடும்பங்களுக்கு கழிவறை கட்டி கொடுத்த காரணத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தினாலும், அனைத்து மக்களுக்காக அடிப்படை வசதி 100% எல்லாருக்கும் இருப்பதில்லை என்பதே உண்மையாகும். தனது கிராமத்தில் கழிவறை வசதியில்லாத குடும்பங்களுக்கு உதவிய கோமலுக்கு பொது மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோமலின் சிறப்பான சமூக சேவையை கடந்த 2019 ஆம் ஆண்டு பாராட்டி நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் பாராட்டினார்.

சர்வதேச மகளிர் தினத்தில் புதிய மைல் கல்லை எட்டிய திரௌபதி திரைப்படம் : உற்சாகத்தில் படக்குழு

0

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் தயாரிப்பு செலவை விட 30 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையில் உள்ள பல தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

திரௌபதி திரைப்படம் பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் திரௌபதி திரைப்படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று அப்படத்தின் இயக்குனர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

“பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ???.. 2020 ம் ஆண்டின் முதல் #Blockbuster படம் #திரெளபதி . ஆதரவு அளித்த மக்களுக்கும் நேர்மையான ஊடகங்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு உச்ச நட்சத்திரத்தின் படம் முதல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை. திரௌபதி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் தயாராகி மாபெரும் அடைந்துள்ளதால் இது இந்த ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று மகளிர் தினம் என்பதால் இந்த வெற்றியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

யெஸ் வங்கி நிறுவனர் கைது

0

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்…

வாராக்கடன்கள் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கைப்பற்றியுள்ளது. திருப்பி செலுத்தும் திறன் இல்லை என்பதால் பிற வங்கிகள் கடன் அளிக்க மறுத்த நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அந்த வங்கியின் நிலைக்கும் அந்த கடன்களே காரணம் என்று கூறப்படுகிறது. முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டி ஹெச் எஃப் எல் நிறுவனத்துக்கு யெஸ் வங்கி அளித்த கடன் வாராக்கடனாக மாறியுள்ளது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் ராணா கபூரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்…..

கொரோனா அச்சுறுத்தலுக்கு வேற லெவலில் விழிப்புணர்வு: அதிரடி செயலில் மத்திய அரசு!

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

தற்போது வரை இந்த நோயை குணப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு மருந்து கண்டுபிடிக்க படாததால் இந்த நோய் பரவாமல் இருக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கரோனா வைரஸ் இருமல் தும்மல் தொடுவது போன்ற செய்கைகளாலேயே பரவிவருகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பரவாமல் இருக்க ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான யுக்தியை கையாண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இது வரை இந்தியாவில் 33 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நோய் அனைவருக்கும் பரவிவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதனால் நமது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. அன்றாடம் நாம் தொலைபேசியில் பிறரை அழைக்கும்போது காலர் டியூனுக்கு பதிலாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்தியை கேட்க முடிகிறது.

அதில் இருமல் அல்லது தும்மலின் போது முகத்தை மாஸ்க் அல்லது கைக்குட்டையை பயன்படுத்தி மூடிக்கொள்ள வேண்டும். மேலும் வெளியில் சென்று வந்தால் கை கால்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை பரிந்துரையின் பேரில் தொலைபேசி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன என்று அதிகாரப்பூர்வமாக தெரிகிறது.

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த இளம்பெண்! 3 மாதத்தில் சாயம் வெளுத்த நாடக காதல்..!! பின்னர் எடுத்த விபரீத முடிவு?

0

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த இளம்பெண்! 3 மாதத்தில் சாயம் வெளுத்த நாடக காதல்..!! பின்னர் எடுத்த விபரீத முடிவு?

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தெய்வானை மற்றும் இவர்களது 17 வயது மகள் கார்த்திகாவும் தலைவாசலில் அம்மாவுடன் இருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்கிற இளைஞர் காதல் என்கிற பெயரில் மைனர் பெண்ணான கார்த்திகாவை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார். இதற்கு சதீஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்தனர்.

இந்த கட்டாயத் திருமணத்திற்கு கார்த்திகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. பின்னர் இச்சம்பவம் காரணமாக தலைவாசல் காவல் நிலையத்தில், தனது பெண்ணை கடத்தி கட்டாயத் திருமணம் செய்ததாக தெய்வான புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் பெண்ணை கடத்திச் சென்ற சதீஷின் குடும்பத்திற்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், புகாரளித்த தெய்வானை மற்றும் அவரது உறவினர்களை திட்டி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு தாய் தெய்வானையை போனில் தொடர்புகொண்டு பேசிய கார்த்திகா, கணவரின் வீட்டார் தன்னை வரதட்சனை கொடுமை செய்வதாகவும், உன் வீட்டில் இருந்து 1 லட்சம் பணம் வாங்கி வா என்று அடித்து துன்புறுத்தியதாகவும் அழுகையோடு பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி தெய்வானைக்கு போன் செய்து உங்கள் மகள் கார்த்திகா விஷம் குடித்து மயங்கிவிட்டாள். மருத்துவ சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தோம், சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டதாக சதீஷ் கூறினார்.

இத்தகவலை கேட்ட தெய்வானை பதறியடித்து ஆத்தூர் மருத்துவமனைக்கு சென்று மகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் தெய்வானை புகார் அளித்தார். என் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலியான காதலனை நம்பி பெற்றோரை எதிர்த்து கட்டாய திருமணம் செய்து, 1 லட்சம் ரூபாய் வரதட்சனை வேண்டுமென்று நாடகமாடிய சதீஷின் போலியான காதலையும், அவரது குடும்பத்தினர் செய்த கொடுமையும் தாங்க முடியாமல் கார்த்திகா இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனையில் மாணவியின் இறப்பு குறித்து விரைவில் உண்மை வெளிவரும்.

தமிழர் கலாச்சாரம் இருக்கும் போது கொரானா தொற்று ஏற்படாது : பிரதமர் மோடி பெருமிதம்

0

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று சீனா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நோய் வராமல் தடுக்க பல்வேறு குறிப்புகள் சொல்லப்பட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வமாக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது.

இதனால் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முகமூடி பயன்படுத்துவதோடு வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவும் படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் பிரதமர் மோடி கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க கை குலுக்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பதிலாக தமிழர்களின் கலாச்சாரமான கும்பிட்டு வரவேற்கும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார். இது தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெண்களை பாதுகாப்பதில் தமிழகம்தான் முதலிடம். – முதல்வர் பேச்சு

0

பெண்களை பாதுகாப்பதில் தமிழகம்தான் முதலிடம். – முதல்வர் பேச்சு

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் ஒரத்தூரில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர், ஜி.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்.விழாவில் முதல்வர் பேசியதாவது;

வருடந்தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான இன்று இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு பெருமை அடைகிறேன். தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்காக உண்மையாக பாடுபடும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

இயற்கையின் படைப்பான நதிகளுக்கும், வழிபடும் தெய்வங்களுக்கும் பெண்களின் பெயரை வைத்து பெண்ணின் பெருமையை போற்றுகிறோம். நம் நாட்டையும் தாய்நாடு என்றுதான் அழைக்கிறோம், ஆண்கள் கல்வியறிவு கற்றால் அவரது குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மட்டுமே முன்னேற முடியும். ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் சமுதாயத்தையும், நாட்டையும் உயர்த்துவார்கள். மாதவராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகளை நினைவூட்டினார்.

பெண்கள்தான் நம் நாட்டின் கண்கள், பெண்களின் முன்னேற்றமே தமிழகத்தின் முன்னேற்றம் என்ற நலனைக் கருதி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தேவையான வகையில் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம்தான் முதன்மையாகவும், முன்னோடியாகவும் விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

இவ்விழாவை அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். இ.ஜி.எஸ் கல்விக் குழுமத்தின் முதன்மை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பல்வேறு அதிமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

தந்தை திருமணம் செய்ய இருந்த பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட மகன் : குழப்பத்தில் குடும்ப உறுப்பினர்கள்!

0

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சித்தரஞ்சன்(வயது 43) என்ற ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு மகன்கள் ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் மற்றொருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயதிலேயே தாயை இழந்த மகன்களை இவர்தான் வளர்த்து வந்துள்ளார். இவரது மூத்த மகன்(வயது 19) ஹாஸ்டலில் தங்கி கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். இளைய மகன்(வயது 16) தன் கிராமத்தில் அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் அவரது இளைய மகன் பைக்கில் செல்லும் போது சிறு விபத்து ஏற்பட்டது. இதனால் மகனை வீட்டிலேயே ஓய்வெடுக்க வைத்து வந்தார் சித்தரஞ்சன்.

இதற்கிடையில் அவரது அக்காவின் குடும்பம் பெரும் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் அக்கா மற்றும் அவரது கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

அவர்களது ஒரே மகள்(வயது 20) தாய் தந்தையின்றி தனியாக வசித்து வரும் நிலை ஏற்பட்டது. இதை பார்த்த சித்தரஞ்சன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

அந்தப் பெண் தொடர்ந்து இவ்வாறு இருக்க முடியாது என்பதால் அவளுக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணை வெளியில் கொடுக்க மனமில்லாத சித்தரஞ்சன் தனது சித்தப்பா மகனுக்கு (வயது 30) திருமணம் செய்ய திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார்.

ஏற்கனவே விபத்தில் சிக்கி காயமுற்று இருந்த இளைய மகனை குளிப்பாட்டுவது முதல் அனைத்து உதவிகளையும் அந்தப் பெண் உடனிருந்து செய்து வந்தாள். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களில் அவர் இளையமகன் முழுவதும் குணமடைய அந்தப் பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை யாருக்கும் தெரியாமல் இருவரும் மறைத்து வந்துள்ளனர்.

இது பற்றி எதுவும் தெரியாத சித்தரஞ்சன் திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுத்த அந்த பெண் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.

மேலும் தனது மாமாவின் மகனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியுள்ளாள். சித்தரஞ்சனின் தம்பிக்கும் அந்த பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

நிச்சயதார்த்தம் நடந்த சில வாரங்களில் அந்தப் பெண் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாள். உடனே உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இது சித்தரஞ்சன் மற்றும் அந்த பெண்ணின் உறவினர் களுக்கு இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும்போது சித்தரஞ்சனி இளைய மகன் தான் காரணம் என்று கூறியிருக்கிறாள். இதைக்கேட்ட உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

சூழ்நிலையை புரிந்து கொண்ட உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். அதோடு சித்தரஞ்சனி இளைய மகன் 18 வயதை கடந்த பிறகு திருமணம் செய்யலாம் என்று உபதேசிக்கப் பட்டது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உறவினர்கள் அந்தப் பெண்ணின் வயிற்றில் பலரும் கருவை என்ன செய்வது என்று குழம்பியுள்ளனர். காரணம் அவரது இளைய மகன் தற்போது திருமணம் செய்ய இயலாது அதனால் தீர்வு காணமுடியாமல் உள்ளனர்.