சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5730

மோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து!

0

மோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து!

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது.முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற,  டர்பனில் நடைபெற்ற 2 ஆவது 20 ஓவர் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து மூன்றாவது போட்டி செண்ட்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க வீர்ரகள் அனைவரும் அதிரடியாக விளையாட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அந்த அணியின் க்ளாசன் 66 ரன்களும் பவுமா 49 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணியும் பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியில் இறங்க ஸ்கோர் சீரான வேகத்தில் சென்றது. அந்த அணியின் பட்லர்(57) மற்றும் பேர்ஸ்டோ (64) ஆகியோர் சீரான அடித்தளம் அமைத்துக் கொடுக்க கடைசியில் களமிறங்கிய மோர்கன் அதிரடியில் இறங்கி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை 19.1 ஓவர்களில்  எட்டியது. சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மார்கன் தட்டிச்சென்றார்.

டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் டி 20 தொடரை  2-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றது.

விவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்!! அன்புமணி பேச்சு!

0

விவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்!! அன்புமணி பேச்சு!

அம்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு முத்துவிழா பாராட்டு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில்,

தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் கொள்கை, அடித்தட்டு மக்கள் முன்னேற பாமக பாடுபட்டு வருவதாக கூறினார். மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தியா முழுக்க 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்ததை குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தில் ஆரம்பிக்கும் எந்த கட்சிக்கும் ஆட்சியில் அமர்வதே நோக்கமாக இருக்கும், பாமகவும் ஆட்சியில் அமர வேண்டும் என பேசினார்.

தமிழகத்திற்கு தேவையான தரமான, அறிவுசார்ந்த கல்வியை இலவசமாக வழங்குவோம். விவசாயிகளை கடவுளாக பார்க்கிறேன் தற்போதைய சூழலில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை என்றும், தமிழக பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்காக ஒரு லட்சம் கோடி வழங்கினால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நிலை உயரும் என்று கூறினார்.

இதனையடுத்து, விவசாயத்திற்கு முக்கிய தேவையான கோதாவரி மற்றும் காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று கூறியதைப் போலவே, 500 டாஸ்மாக் கடைகளை முதல்வர் எடப்பாடி அரசு மூடியது. நீதிமன்ற சட்ட போராட்டத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மூன்றாயிரம் மதுபான கடைகள் மூடினோம், சமீபத்தில் எங்களின் முக்கிய கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்தது மட்டுமல்லாமல், அதனை சட்ட மசோதாவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தமிழக உரிமைக்காக போராடும் பாமகவை மக்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தில் பாமக வழக்கறிஞர் கே.பாலு, முன்னாள் மத்திய இரயில்வே துறை அமைச்சர் ஏகே மூர்த்தி ஆகியோருடன் அம்பத்தூர் பகுதி பாமக கட்சியினர் கலந்து கொண்டனர்.

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

0

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே சிவகார்த்திகேயனும் இவரும் நண்பர்கள். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கவனம் ஈர்த்த போஸ்டர் பரவலான பாராட்டைப் பெற்றது.

ஆனால் மதியத்திற்குள்ளாகவே அந்த போஸ்டர் எந்த படத்தின் காப்பி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர் ரசிகர்கள். இந்த ஆண்டு ஆஸ்கார் பட்டியலில் கவனம் ஈர்த்த நைவ்ஸ் அவுட் என்ற படத்தின் போஸ்டரை சுட்டுதான் லேசாக மாற்றங்களை செய்து டாக்டர் படத்தின் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதேப்போல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் மற்றும் ஹீரோ போன்ற படங்களின் போஸ்டர்கள் வெளியான போதும் விமர்சன்ங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் இரு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்: சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்

0

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7.07 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை 11.03 மணிக்கு சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிஒவந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் இன்னொரு படமான ’அயலான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தான் நடித்து வரும் இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!!

0

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிய ஸ்டாலினை ஒரே வார்த்தையில் முடியாது என்று அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். வண்ணாரப் பேட்டை சம்பவம் குறித்து பேசலாம் என்றும் தெரிவித்தார்.

சில தினங்களாக சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் CAA சட்ட திருத்தத்திற்கு எதிராக திவீர போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் மற்றும் கைது செய்த சம்பவமும் போராட்டத்தை அதிகப்படுத்தியது.

இது குறித்து சட்டசபையில் ஸ்டாலின் பேசுகையில்; குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், சென்னை வண்ணாரபேட்டையில் அமைதியாக நடந்த போராட்டத்தில் தடியடியை தூண்டியது யார் என்றும், சம்பவ இடத்திற்கு சென்று தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனை கேட்ட சபாநாயகர் தனபால், CAA குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற “முடியாது” என்று ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்தார். தடியடி நடந்த சம்பவம் குறித்து பேசலாம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மனுவை பற்றி விவாதிக்க முடியாது என தீர்க்கமாக தெரிவித்தார். நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருப்பதால் அதைப்பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை என கூறினார். இதுகுறித்து ஸ்டாலினுக்கு எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி; வண்ணாரபேட்டை சம்வத்தில் தொடர்பே இல்லாத ஒரு முதியவர் இறந்ததாக வதந்தியை பரப்பி தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் இதில் சில விஷமிகள் வேண்டுமென்ற செயல்பட்டதாகவும் பேசினார். போராட்ட இயக்கத்தினரை எடப்பாடி ரகசியமாக சந்தித்து குடியுரிமை சட்ட திருத்தத்தால் இசுலாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

அமலாபாலின் மறுதிருமணம் எப்போது? அவரே அளித்த பேட்டி

0

நடிகை அமலாபால் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த நிலையில் இயக்குனர் விஜய் சமீபத்தில் மறுதிருமணம் செய்து கொண்டார். எனவே அமலாபாலும் விரைவில் மறு திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் ஒருவரை காதலித்து கொண்டு வருவதாகவும் ஆனால் தற்போது தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் அனைத்தையும் முடித்துவிட்ட பின்னர்தான் திருமணம் எப்போது என்பது குறித்த முடிவை எடுக்க முடியும் என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறினார்

மேலும் தனது விவாகரத்துக்கு தனுஷ் காரணம் என்று பொய்யான வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் விவகாரத்து முடிவு தனது சொந்த முடிவு என்றும் இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் கூறினார்

மேலும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தான் விலகியதற்கு காரணம் அந்த கேரக்டரில் தன்னால் நடிக்க முடியாது என்று கருதியதாகவும் அதனால்தான் அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் நடிகை அமலாபால் அந்த பேட்டியில் கூறியுள்ளார் அமலாபாலின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!!

0

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!!

புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் வயதான ஒருவரை காயத்துடன் சாலை ஓரமாக இறக்கி விட்டதாக, புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இந்த தகவலை அடுத்து மோகன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

சம்பவ இடத்தில் ஒரு பெரியவர் உடலில் காயங்களுடன் சோர்ந்து பேசமுடியாத அளவிற்கு உட்கார்ந்திருந்தார். இதனை கண்ட காவலர் மோகன் அவரிடம் விசாரிக்க ஆரம்பித்தார். முதியவரால் பேச முடியாமல் பசியால் தவிப்பதை மோகனால் உணர முடிந்தது. இதனையடுத்து உணவு வாங்கி வந்து அவரே ஊட்டிவிட்டார். பின்னர் முதியவரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார். முதியவரிடம் எந்த பதிலும் வெளி வந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், முதியவரின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். யார் ஒருவருக்கு தானே உணவு ஊட்டிய சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது. சமூகத்தின் மேல் பொறுப்புள்ள ஒரு காவலராக செயல்பட்ட மோகன் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். முதியவர்களை வீட்டைவிட்டு விரட்டுவதும் அவர்களை புறக்கணிப்பதும் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

0

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

தயாரிப்பாளர்களின் மேல் அதிக சுமை வைக்காமல் நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய படங்களின் சம்பளத்தை வித்தியாசமான முறையில் பெற்றுக்கொண்டு வருகிறார்.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது ரசிகர்களின் வெறியும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதும் தான் என சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட் ஏற்றத்துக்குக் காரணம் கட்டுக்கடங்காமல் செல்லும் நடிகர்களின் சம்பளம்தான்.

அதனால் படங்கள் நஷ்டமடையும் போது நடிகர்களின் நஷ்ட ஈடு கேட்டுப் போராட்டம் நடத்தும் அளவுக்கு செல்கிறது. படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் சம்பளமாக நடிகர்கள் பெறுவதால் தயாரிப்பாளர்கள் மிகப்பெரும் கடன்சுமைக்கும் ஆளாகின்றனர். இதை மாற்றும் விதமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு வித்தியாசமான முறையில் சம்பளம் பெற்றுக்கொள்கிறார்.

மகேஷ் பாபு, ராஷ்மிகா மற்றும் விஜயசாந்தி ஆகியோரின் நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து சரிலேறு நீக்கவேரு என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்துக்காக மகேஷ் எந்த வொரு சம்பளத்தையும் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மூன்றாவது தயாரிப்பாளர் என்ற முறையில் பெற்றுக்கொண்டுள்ளார். இதனால் தயாரிப்பாளருக்கு பணச்சுமை ஏற்படாமல் படத்தை திட்டமிட்ட செலவில் தயாரித்துள்ளார். இதனால் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. அதே போல மகேஷ் பாபுவுக்கும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது

தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் படி மகேஷ் பாபுவின் தற்போதைய சம்பளம் 30 கோடி ரூபாய். சரிலேரு நீக்கவேரு படத்தில் அவர் வாங்கிய உரிமைகளை விற்றதன் மூலம் 80 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது வழக்கமான அவரது சம்பளத்தை விட 250 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த முறையால் அதிக வருவாய் வருவதால் இனி வரும் படங்களில் எல்லாம் இதே முறையில் உரிமைகளை வாங்கிக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இதைப் போன்ற முறையை தமிழ் சூப்பர் ஸ்டார் நடிகர்களும் பின்பற்றினால் அவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்கும் என திரை வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.

முதல் டெஸ்ட் யாருக்கு வாய்ப்பு:பண்ட்டா? சஹாவா?

0

முதல் டெஸ்ட் யாருக்கு வாய்ப்பு:பண்ட்டா? சஹாவா?

நியுசிலாந்து ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட்டுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.

தோனியின் ஓய்வுகாலம் நெருங்கிய வேளையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி ஐபிஎல் கண்டுபிடிப்பான ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தது. அவரும் முதலில் சிறப்பாக விளையாண்டாலும் அதன் பின் வரிசையாக சொதப்ப ஆரம்பித்தார்.

அதனால் முதலில் டெஸ்ட்டில் இருந்து அவர் தூக்கப்பட்டார். அதன் பிறகு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தலையில் அடிபட்டதால் தொடரில் இருந்து விலகினார். அதனால் பகுதிநேரக் கீப்பரான ராகுல் அந்த பொறுப்பை ஏற்றார். இரு போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்து கீப்பிங்கும் செய்தார். இதனால் அவரேக் கீப்பாராக தொடர்வார் என பேச்சுகள் எழுந்துள்ளன.

இதுபற்றி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பியபோது ‘அணித் தேர்வு என்பது கேப்டனும் தேர்வுக்குழு தலைவர்களும் முடிவு செய்ய வேண்டியது. அதனால் பண்ட் விளையாடுவதும் விளையாடாமல் போவதும் விராட் கோலி எடுக்கும் முடிவு’ என சொல்லியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக விக்கெட் கீப்பராக இருக்கும் சஹாவின் ஆட்டத்திறனும் சிறப்பாக இல்லை. நேற்று முடிந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 65 பந்துகளில் 70 ரன்களை சேர்த்து சிறப்பாக விளையாடினார். இதனால் தொடங்க இருக்கும் நியுசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இருவரில் யார் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் அணியில் ராகுல் என்னும் தற்காலிக விக்கெட் கீப்பரும் இருப்பதால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. எப்படியாகினும் பண்ட்டுக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்!

0

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்!

ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா புர்ஹா அணிந்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த எழுத்தாளர் தஸ்ரிமா நஸ்ரினுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு விதமான ஒரு சர்ச்சையும் கிளம்பியது.

கதீஜா புர்கா ஆடை அணிந்து இருந்ததால் ஏ ஆர் ரஹ்மானை பிற்போக்குவாதியாக சித்தரித்து நிறைய விமர்சனங்கள் எழவே, அதற்குப் பதிலளித்த கதீஜா ரஹ்மான் ‘இது நான் தேர்ந்துகொண்ட பாதை… இதற்கும் எனது தந்தைக்கும் சம்மந்தம் இல்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் தந்தை எப்போதும் உறுதுணையாகவும், என்னை ஊக்கப்படுத்தியும் வந்துள்ளார்’ எனக் கூறினார்.

இந்த புர்ஹா விவகாரம் அத்தோடு முடிய இப்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் புதிய வடிவில் சர்ச்சை உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ‘ எனக்கு ஏ ஆர் ரஹ்மானை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளை பார்க்கும் போதுதான் ஒருவிதமான புழுக்கத்துக்கு ஆளாகிறேன்.’ எனத் தெரிவிக்க மீண்டும் சர்ச்சைகள் உருவாகின. இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் இப்போது மீண்டும் கோபமாக கதீஜா ரஹ்மான் அவருக்குப் பதிலளித்துள்ளார். அதில் ‘ஒருவருடத்திற்குள்  மீண்டும் இந்த விஷ்யம் டாப்பிக்காக ஆகியுள்ளது. தஸ்லிமா நஸ்ரின் அவர்களே, என் உடையால் நீங்கள் புழுக்கம் அடைந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். வெளியே சென்று நல்ல காற்றை சுவாசியுங்கள். கூகுளில் சற்று பெண்ணியம் என்றால் என்னவென்று தேடிப் பாருங்கள். ஒரு பெண்ணை இழுத்து அவரின் அப்பாவுக்கு பிரச்சினை கொடுப்பது பெண்ணுரிமை இல்லை. அதேப்போல நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி கருத்து கேட்கவில்லையே’ தடாலடியாக பதிலளித்துள்ளார்.