செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 26, 2025
Home Blog Page 5833

கடுகு இவ்வளவு நோயை தீர்க்குமா? என்ன ஒரு அதிசயம்!

0

நமது வீட்டிலே அனைத்திற்கும் மருந்துகள் உண்டு. அதில் கடுகும் ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். கடுகில் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது ஆகும். திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை சேர்க்கிறார்கள்.

வெப்பம் அதிகமான கோடை காலங்களில் உடலில் ஏற்படும் வெப்ப கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.
கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

கொழுப்புக்கள் இரண்டு வகை அதில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், அதிக உடல் பருமன் உள்ளவர்களை பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில், இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் விட்டமின் பி-3 ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்க கூடியது, ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு.

சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.
பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது. இப்படி பட்ட கடுகு அளவில் சிறியதாக இருந்து எவ்வளவோ வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது கடுகு ஆகும். இனி தவறாமல் அனைவரும் கடுகை சமையலில் சேர்ப்போம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அடேய் இப்படி எல்லாமா கேள்வி கேபிங்க? அப்படி என்ன கேள்வி? கூகுள் அளித்த விடை என்ன?

0

எங்கு சென்றால் எல்லாம் கிடைக்கும் என்றால் அது கூகுள் தான். கூகுள் தான் இன்றைய இளைஞர்களின் நண்பன். எல்லாவற்றையும் கூகுளை தேடும் நபர்கள் ஏராளம். இவர்களின் கேள்விகளுக்கு விடைகளை கூகுள் நிறுவனம் தொடர்ந்து அப்பேட் செய்து வருகிறது.

இணையம் பயன் படுத்தும் அனைத்து மக்களின் விவரங்கள் கூகுள் வசம் தான் இருக்கிறது. மக்களின் தேடல்கள் அவற்றின் பதில்கள், விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை கூகுள் நன்கு அறிந்துவைத்திருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் உங்கள் கணினியில் வரும் விளம்பரங்கள். இணையத்தில் நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது தொடர்பாக விளம்பரங்கள்தான் உங்கள் கணினியில் வரும். இப்படி ஒரு சம்பவம் கூகிளில் நடந்தது அதை பற்றி காண்போம்.

கூகிளில் எழுத்துக்களை டைப் செய்து தேடுவது மாறி நாம் பேசியும் தேடலாம் என்ற நிலையில் கூகுள் அமைத்துள்ளது. இந்த வாய்ஸ் அசிஸ்டென்டைப் பயன்படுத்தி ஒருவர் செய்த சேட்டைதான் தற்போது இணையத்தை பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இருக்கும் நபர் ஒருவர். தனது தட்டில் இருக்கும் முட்டைகளை காண்பித்து ஹேய் கூகுள்.. நான் முட்டையை உடைத்தேன் அந்த முட்டையில் இரண்டு மஞ்சள் கரு இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்கிறார். அதற்கு கூகுள் ” உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப்போகிறது” என்றது.

அதற்கு அவர் ஹாய் கூகுள், எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல என நக்கலாக பதிலளித்தார். அதற்கு கூகுள் உங்கள் வீட்டில் ஒருவர் இறக்கப்போகிறார் என்று அர்த்தம் என்றது. அந்த நபர் உடனே பதட்டமாகிவிட்டர். இந்த உரையாடல் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கீழே கலாய்த்து நெட்டிசங்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வீடியோ பதிவிட்ட நபர் தனது ட்வீட்டில், ” நான் ஒரு முட்டையை உடைத்தேன், அதில் இரட்டை மஞ்சள் கரு இருந்ததால் ஆச்சர்யமாக இருந்தேன். நான் உற்சாகமாக ஒரு வீடியோ பதிவு செய்தேன். கூகுளிடம் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். அமைதியாக நான் எனது பணியைப் பார்த்து இருக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அரசு பள்ளிகளில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம்! மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா தமிழக அரசு?

0

அரசு பள்ளிகளில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம்! மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா தமிழக அரசு?

தமிழகத்தில் பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் பெறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா என சமூக ஆர்வளர்களிடயே சந்தேகம் எழுந்துள்ளது. புதிய கல்வி மூலம் அனைத்து வகுப்பு புத்தகங்களையும் மாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து இந்த ஆண்டு 7, 8, 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாடத்திட்டம் மாற்றியமைக்க பட்ட புத்தகங்களை அச்சிட்டு பள்ளிகளில் வழங்கி கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகளில் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க வகுப்புகளில் ஒரு சில பாடப்புத்தகங்கள் மட்டும் கொடுக்கவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். அதாவது 3 ஆம் வகுப்பில் வெறும் தமிழ் புத்தகம் மட்டுமே கொடுத்து உள்ளதாகவும் மற்ற புத்தகங்கள் இன்னும் வழங்கபடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே போல் 8,11 ஆம் வகுப்பில் ஒரு சில மாணவர்களுக்கு ஒரு சில பாட புத்தகங்கள் தரவில்லை எனவும் மாணவர்கள் கூறினார்கள். அதாவது மேற்கொண்டு விவரம் கேட்கும் பொழுது மாணவர்கள் கூறியதாவது, ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் புத்தகம் வந்திருப்பதாகவும் மற்றவர்களுக்கு இன்னும் வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் கேட்கும் பொழுது , தங்களுக்கு கிடைத்த புத்தகம் இவ்வளவு தான் மற்ற மாணவர்களுக்கு கல்வித் துறை அச்சிட்டு அனுப்புவதாக கூறுவதாக கூறினார்.

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் அல்லாது தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் இதே நிலைதான் உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் அன்றே இலவச நோட்டு புத்தகங்கள் கொடுக்கும் என தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்தார் என்பது குிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் இணைய வழியில் பள்ளிகள் புத்தகங்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் புத்தகம் இல்லாமல் எப்படி தேர்வை எதிர்கொள்வது என வினா எழுப்புகின்றனர்.

தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் கிடைக்காமல் இருக்கும் புத்தகங்களை அந்நிறுவனம் E- சேவை மையங்களில் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களும் அரசு E- சேவை மையங்களில் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி படிக்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். E- சேவை மையங்களிலும் புத்தகம் பெறுவதற்கு தாமதம் ஆகிறது எனவும் கூறுகின்றனர்.

இதனால் புத்தகங்களை பெறுவதற்கு அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்வதாக கூறப்படுகிறது. அல்லது பணம் கொடுத்து E- சேவை மையங்களில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதாக பொது மக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

ஸ்டாலின் சட்டையை கிழித்து கொண்டு, வெளிநடப்பு மட்டுமே செய்வார்! பாமக அன்புமணி காரசார பேச்சு!

0

சென்னையில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு அன்புமணி ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார்.

பொதுகூட்டத்தில் பேசியதாவது, ஸ்டாலின் யார்? எதிர்க்கட்சித் தலைவர். அவரால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்ய முடியும். சட்டப்பேரவையிலிருந்து சட்டையைக் கிழித்துக் கொண்டு வர முடியும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.

சென்னை தி. நகரில் பாமக சார்பில் டாக்டர் ராமதாஸின் முத்து விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலினுக்கு ஓட்டுப் போட்டத்தைக் குறிப்பிட்டு அன்புமணி ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் ஐயாவின் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். தமிழக மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான். ஸ்டாலினின் நோக்கம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். நான் முதலமைச்சராக அமர வேண்டும் என்பார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நகைக் கடன் தள்ளுபடி செய்வோம், கல்வி கடன் தள்ளுபடி செய்வோம், விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்று ஸ்டாலின் சொன்னதை நம்பி ஓட்டுப் போட்டீர்கள். ஸ்டாலின் யார்? எதிர்க்கட்சித் தலைவர். அவரால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்ய முடியும்.

சட்டப்பேரவையிலிருந்து சட்டையைக் கிழித்துக் கொண்டு வர முடியும். அவ்வளவுதான்.
திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். அதை நம்பி நீங்கள் எல்லோரும் வாக்களித்தீர்கள். நிறையபேர் ஸ்டாலின் வாக்குறுதி சொன்ன பிறகு, நகையை அடமானம் வைத்து கடன் வாங்கினார்கள். கையெழுத்து போட்டு நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் சொன்னார். இப்போது என்ன ஆனது? இந்த கடன்களை எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று ஸ்டாலினிடம் கேளுங்களேன்.

ஸ்டாலின் சொன்னதை நம்பி ஓட்டுப் போட்டுவிட்டீர்களே. உங்கள் மீது எனக்குக் கோபம் வரவில்லை. இதையெல்லாம் நம்பி ஓட்டு போட்டீர்களே என்று ஆதங்கம்தான் வருகிறது. இன்னுமும் திமுகவை நம்புறிங்களே என்றுதான் வருத்தம்.

நாங்கள் தொலைநோக்குத் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். ஆனால், நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இதையெல்லாம் சுயநலத்துக்காகத் தெரிவிக்கவில்லை. தமிழகத்திலேயே நிழல் பட்ஜெட் போட்டவர்கள் நாங்கள் மட்டும்தான்.

நாங்கள் அந்த கட்சிக்கு மாறுகிறோம், இந்த கட்சிக்கு மாறுகிறோம் என்று கூறுவார்கள். நாங்கள் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதையெல்லாம் நினைக்கவில்லை. யார் வரக்கூடாது என்று நினைத்தோமோ, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். மருத்துவர் அய்யா 30 ஆண்டுகள் கட்சி நடத்தியிருக்கிறார். 40 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி க்கு என்ன வேண்டும் என்று அவருக்கு தெரியும்.” என அன்புமணி பேசினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

கலக்கத்தில் அதிமுக! அந்த 3 ஸ்லீப்பர் செல் இவர்களா? தினகரன் கூறுவது யாரை?

0

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஒன்று தினகரன் அணி அமமுக எனவும் மற்றொன்று அதே அதிமுக EPS, OPS அணியாகவும் பிரிந்தது. உண்மையான அதிமுக EPS மற்றும் ops அணியிடம் தான் உள்ளது என்று ஆட்சி பொறுப்பில் EPS, OPS அணி இருக்கிறது.

இதன் பின்னர் அதிமுக வில் இருந்து ஒரு சில சட்ட மன்ற உறுப்பினர் தினகரன் பக்கம் வர தொடங்கினர். இதனால் ஆரம்பத்தில் தன்னுடைய ஸ்லீப்பர்செல்கள் அதிமுக-வில் இருப்பதாக கூறி வந்தார். அவரது இந்த பேச்சை கேட்டு யார் அந்த ஸ்லீப்பர்செல் என்று அதிமுக அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே திரிந்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், தினகரனின் உறவினர் திவாகரனுக்கு நெருக்கமான உணவுத்துறை அமைச்சர் காமராஜை கண்டுகொள்ளாமல் இதுநாள் வரை அதிமுக இருப்பதும் அதிசயமாகவே இருக்கிறது.

தற்போது அமமுக-விலிருந்து 3 எம்.எல்.ஏ-க்கள் விலகி சென்று அதிமுக-வில் இணைந்தனர். இதனால் தினகரன் பெரும் வருத்தத்தில் உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் அணி பெரிதும் வாக்கு வங்கியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கட்சி தோல்வியை தழுவியது.

இதனால் அமமுக மொத்தமாக உடைந்து போய் விட்டது என்று பேசப்பட்டது. இதுபற்றி தினகரனிடம் கேட்டால் அவர் ரொம்ப கூலாக வெற்றி தோல்வி என்பது சாதாரண விசியம் தான். சட்ட மன்ற உறுப்பினர் அதிமுக பக்கம் செல்வது எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘இப்போது அதிமுக-வுக்கு சென்ற மூன்று எம்.எல்.ஏக்களும் என்னிடம் சொல்லிவிட்டுதான் அமமுக-விலிருந்து விலகினார்கள்’ என்று கூறியுள்ளார்.

இது அதிமுக பெருந்தலைகளுக்கு EPS, OPS அணிகளுக்கு கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. வந்தவர்கள்தான் உண்மையான ஸ்லீப்பர்செல்களாக இருப்பார்களோ என்று சந்தேகத்தோடே சுற்றி வருகிறார்களாம். என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

PMK மரு.இராமதாஸ் முத்து விழாவை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடும் விழா சென்னையில்!

0

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலை மற்றும் மரக்கன்று நடுதல் போன்றவை செய்தனர்.

இதை தொடர்ந்து இன்று மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மற்றும் பசுமை தாயகம் ,சமூக முன்னேற்ற சங்கம் இணைந்து விழா ஒன்றை நடத்தியது. அதற்கு அன்புமணி ராமதாஸ் மனைவி திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் தலைமை தாங்கி நட்தினார்.

சமூக முன்னேற்ற சங்கம் சென்னை மாவட்டம் சார்பில் மருத்துவர் அய்யா முத்து விழாவை முன்னிட்டு பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது,
விழாவில் பசுமைத்தாயகத்தின் தலைவர் மரியாதைக்குரிய சௌமியாஅன்புமணி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பு செய்தனர் .

விழாவில் ஆற்றல் மிக்க மாநில தலைவர் பேராசிரியர் ச. சிவப்பிரகாசம் பொதுச்செயலாளர் ஆசிரியர் சி. ஏழுமலை பசுமைத்தாயகம் செயலாளர் அண்ணார் அருள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடுதல் நடைபெற்றது.
சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில பொது செயலாளர் சி.ஏழுமலை அவர்கள் மாணவர்கள் முன்னே கூறியதாவது, மாணவர்கள் தமிழ் சமுதாயத்தின் எதிர் காலம் எனவும், ஐயா அப்துல் கலாம் சொல்வது போல நாட்டின் பெரும் சக்தி மாணவ செல்வங்கள் என கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Bigg- Boss இல் நுழைந்தது ஒரு குற்றமா? வறுத்தெடுக்கும் பிரபல நடிகர்!

0

Big Boss மூன்றாவது சீசன் விஜய் டிவி ஒளிப்பரப்பு ஆகிகொண்டிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இயக்குனர் சேரனும் ஒருவர் என அனைவரும் அறிந்ததே. இதனால் இயக்குனர் சேரம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது பற்றி இயக்குனரும், நடிகருமான மனோபாலா கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் (Big Boss) வீட்டில் ஒரு விளையாட்டின் போது சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு ரசிகர்களிடையே அவர் மீது அதிருப்தியை ஏற்பட்டு அவருக்கு ஆன்லைன் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இதனால், மீரா மிதுன் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என செய்திகள் கசிந்துள்ளது

அவர் மீது மீரா மிதுன் இப்படி பாலியல் புகார் கூறியது சேரனின் ரசிகர்களுக்கு அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, மீராவின் குற்றச்சாட்டை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் உண்மைக்கு மாறான விசியங்களை தெரிவிக்கிறார். எனவே, அவர் நடிக்கிறார் என big boss வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர் .

இந்நிலையில் இந்நிகழ்வு பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மனோபாலா ‘ சேரன் எவ்வளவு நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் நல்ல நடிகரும் ஆவார். பிக்பாஸ் வீட்டிற்கு அவர் ஏன் போக வேண்டும். அவர் அங்கு போனதே தவறு என்னை கூடத்தான் 3 முறையும் கூப்பிட்டார்கள். ஆனால், நான் செல்ல வில்லை’ என அவர் கூறியுள்ளார்.

இது தவிர bigg boss நமது வாழ்வியல் தன்மையை கெடுக்கும் விதமாக இருக்கிறது என அதை தடை செய்ய வேண்டும் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அதிமுக ஆட்சி கவிழ்ப்பு! ஸ்டாலின் வியூகம் இதுதான்! விரைவில் ஆட்சி மாற்றம் ?

0

நாங்கள் நினைத்தால் ஆட்சி கலைக்கப்படும், அதிமுக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டு மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திறந்த வேனில் வாக்கு சேகரித்த அவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு பிஜேபி தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு செய்த சதிகளை முறியடித்து வென்றதைப் போல வேலூரிலும் வெல்வோம். திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள். நீங்கள் முதல்வர் பழனிசாமி அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற உடனே திமுக பல சாதனைகளை செய்துள்ளது. அவற்றில் ஒன்று மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் என்றும், மேலும் பேசியதாவது, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும், அந்த எண்ணம் உள்ளது. காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

55 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்,மீண்டும் தற்போதுதான்! என்ன செய்யும் இந்தியா?

0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்த விளையாட்டு போட்டிகள் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 55 ஆண்டுகள் கழித்து இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஏ.ஐ.டி.ஏ உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த டென்னிஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 14-15 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும். “ஆம், நாங்கள் செல்வோம்” என்று ஏஐடிஏ பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

இது, வெறும் டென்னிஸ் இருதரப்பு தொடர் மட்டும் இல்லை, இது உலகக் கோப்பையை விடவும் பெரிய போட்டியாக கருதுகிறோம். எனவே இதில் எந்தவொரு முன்னணியிலும் தடை இல்லை.”
ஒரு சகாப்தத்திற்கும் மேலாக பார்க்கப்படுகிறது. பாக்கிஸ்தான் நடத்திய பெரும்பாலான விளையாட்டு நிகழ்வுகள் இந்தியாவால் தவிர்க்கப்பட்டன.

கடைசியாக விளையாடிய விளையாட்டு நிகழ்வு 2007 பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ததுதான். பிப்ரவரியில் டேவிஸ் கோப்பை டிரா வில் முடிந்தது, ஆனால் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அணியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் மோசமாகத் தெரிந்தன.

ஐ.ஐ.டி.ஏ. “அணித் தேர்வு, போட்டிகளில் பங்கேற்பது அல்லது விளையாட்டு வீரர்களால் நாடுகளுக்குச் செல்வதில் விளையாட்டு அமைச்சகம் தலையிடாது,” என்று அவர் கூறினார். 55 ஆண்டுகள் கழித்து நடைபெற உள்ள இந்த போட்டி மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

திமுக வெற்றி செல்லாது! அதிரடி அறிக்கை ? முதல்வர் அறிவிப்பு!

0

திமுகவின் வெற்றி செல்லாது. அவர்களுடைய வெற்றி பொய்யாகும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிருத்தபட்டதை அடுத்து மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி சண்முகம் போட்டி இடுகிறார். ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை.

பொய் வாக்குறுதி பொய்யான அறிக்கை என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றியை திமுக பெற்றது. இந்த வெற்றி செல்லாது என்றும்,
அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். அவர் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அதிமுக ஆட்சி தொடரும் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்
தடையில்லா மின்சாரம் தரப்படுவதால் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.

அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 16,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் திமுக பொய்யான அறிக்கை குடுத்து வெற்றி பெற்றதால் அவர்களது வெற்றி செல்லாது என்று கூறினார்.