வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31, 2025
Home Blog Page 5871

காவல் துறையை காக்குமா தமிழக அரசு! பதவி விலக்கப்படுவாரா ஆட்சியர்?

0

காவல் துறையை காக்குமா தமிழக அரசு! பதவி விலக்கப்படுவாரா ஆட்சியர்?

காவல்துறை உங்கள் நண்பன் என்று மக்களுக்கு கொடுக்கப்பட்ட விழிப்புணர்வு மேல் அதிகாரிகளின் ஆளுகைக்கு தலையசைப்பது என்று அர்த்தமல்ல.

இன்றைய நிலையில் இரவு பகல் பாராமல் ஏராளமான இளைஞர்கள் மக்களை பாதுகாக்கவும் சேவை செய்யவும் தங்களை காவல் துறை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறை அரசியல்வாதிக்கோ ஆதிக்க வாதிகளுக்கோ சாதகமல்ல என்றும் மக்களுக்கான ஒன்றே என பல்வேறு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், திருச்சி மயில்வாகனன் போன்றவர்கள் நிரூபித்து வந்துள்ளனர்.

இப்படி போலீஸ் என்றால் ஒரு உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் போது காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடைபெற்ற சம்பவம் மக்கள் மனதில் ஒருவித குற்ற உணர்ச்சியே ஏற்பட்டுள்ளது.

காஞ்சி அத்தி வரதர் கோவிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் துறை அதிகாரியை காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அவர்கள் காஞ்சி அத்திவரதர் கோவில் முன்பு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய காட்சி அனைத்து ஊடகங்களிலும் வைரலாகி வந்தது.

அந்த அதிகாரி ஏதேனும் தவறு செய்து இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை செய்யலாம். அதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு ஆட்சியர் இப்படி காவல்துறை அதிகாரியை மிரட்டுவதும் தரக்குறைவாக பேசுவதும் மிகவும் ஆளுமை திறன் அல்லாததை குறிக்கிறது.

இதனால் காவல்துறை தான் உயிரென போட்டி போட்டு படிக்கும் இளைஞர்கள் மத்தியில் இப்படியொரு அடிமைத்தனமா காவல்துறை என கேள்வி எழுந்துள்ளது. அது மட்டுமல்ல காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொருவர் குடும்பமும் வெட்கி தலை குனிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனால் பல்வேறு பட்ட அமைப்பினர், முன்னாள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்கும்படி எழுந்து வருகிறது.

மேலும் கீழ்மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றது, ஏற்கனவே கீழ்மட்ட காவல்துறையில் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் காவலர்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது.

அவர்களது மன உளைச்சலுக்கு காரணமாக அமைவதாவது

  1. அவர்களுக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை வேலை செய்ய வைப்பது
  2. அவர்களின் சொந்தங்களின் கல்யாணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு கூட அவர்களுக்கு விடுப்பு வழங்காதது
  3. மேலதிகார்கள் தொடர்ந்து கீழதிகாரிகளை சட்ட விரோத வேலைகள் செய்ய அழுத்தம் கொடுப்பது
  4. காவல்துறையின் செயல்பாட்டில் அரசியல்வாதிகளின் தொடர் தலையீடு.
  5. காஞ்சி ஆட்சியர் பொன்னையா போன்று உயரதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் மிரட்டுவது.
  6. சில மேலதிகாரிகளின் சட்ட விரோத வேலைகளுக்கு அவர்கள் அடிபணியாத போது அவர்களை பணியிடம் மாற்றுவது
  7. மேலதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்துதல். போன்ற தவறுகளை களைய வேண்டும்.

காவல்துறை நம் சட்ட ஒழுங்கை காக்கவும் சட்டப்படி மக்களை நடக்க வைக்கவும் மிக அவசியமான ஒன்றாகும். அவர்களின் இந்த நிலையை மாற்ற காவல்துறை தன்னிச்சையாக இயங்குவது அவசியம். கடந்த சில மாதங்களாக கீழ்மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் காவல்துறையில் மாற்றங்கள் கொண்டு வர எண்ணுகின்றனர்.

உச்சநீதி மன்றம் 2007 ல் பரிந்துரை செய்த காவல்துறை சீர்த்திருத்தங்களை நம் தமிழகம் பெரும்பாலும் நிறைவேற்றாமலே உள்ளது.

அதில் அரசியல் தலையீட்டை குறைப்பது, வெளிப்படைதன்மையுடன் கூடிய நியமனம், ஓரிடத்தில் குறைந்தபட்சமாக 2 வருட பணி, சட்ட ஒழுங்கையும் விசாரணைகளையும் பிரிப்பது, பணி மாற்றம், உயர்வுக்காக தனியாக காவல்துறை நிருவாக வாரியம் அமைத்தல், தன்னிச்சையாக இயங்கும் காவல்துறை புகார் மையம் என பல பரிந்துரைகள் உள்ளது. இவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினரின் கோரிக்கைகளாக:

  1. கீழ்மட்ட காவல்அதிகாரிகளுக்கான நீதியின் பக்கம் அரசு இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வரும் வகையில் காஞ்சி ஆட்சியர் பொன்னையாவை உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்
  2. உடனடியாக தமிழகத்தில் உச்சநீதி மன்ற பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்
  3. கீழ் மட்ட காவலதிகாரிகளுக்கு அவர்கள் மன உளைச்சலை குறைக்கும் வகையில் ஒரு நல்ல வேலை சூழல் ஏற்படுத்தி கொடுக்கப் பட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்!

0

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்!

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் சுற்று பயணமாக சீன சென்றுள்ளார். அங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து சீனாவிடம் விவாதம் நடைபெற்றது.

பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் எதிர்கட்சிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் அதிபர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை சமீபத்தில் இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இது காஷ்மீர் மக்களுக்கு எதிரான செயல் என்றார். ஐ.நா ஒப்பந்தத்தை தகர்க்கும் செயல் ஆகும்.

மேலும் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் சீனா சென்று பேச்சு வார்த்தை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு சீனா அமைச்சர்களை சந்தித்து காஷ்மீர் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, இந்தியாவின் எல்லைகளுக்கோ அல்லது சீனாவின் எல்லைக் கோட்டுப்பகுதிக்கோ எந்தவிதமான தவறுகளும் இந்த காஷ்மீர் விவகாரத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியா எல்லையில் கூடுதல் ஆகிரிமிப்பு உரிமை இந்தியா முன்னெடுக்கவில்லை. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீன தவறாக நினைத்து கவலைப்பட வேண்டாம் என ஜெய் சங்கர் கூறியதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில் சீனாவும் உறுதி அளித்துள்ளது. சீனா கூறியதாவது, அண்டைநாடுகளின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை மதிப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.

இதில் என்ன சிறப்பு என்றால், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த பிறகு இதனை அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தற்பொழுது அண்டைநாடுகளின் உதவி இல்லாமல் நிற்கிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் பாமக! காவிரி நீர் வீணாய் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்!

0

கேரளா கர்நாடகா மாநிலங்களின் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கேரளா கர்நாடகா மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கிருஷ்ண சாகர் அணை நிரம்பி அணை திறந்து விடப்பட்டது. கேரளா அணை நிரம்பி கேரளாவும் அணையை திறந்து விட்டுள்ளது.

இதனால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம், 92 அடியை நெருங்கியது.இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை கடந்தது.
இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை கடந்தது.

அணையின் கொள்ளளவு எட்டியதால் அணையை பாதுகாப்பு கருதி வேளாண்மை பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் இன்று நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை கடந்தது.

அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து நீர்வள பொதுப்பணிதுறை அதிகாரிகள் காவிரி நீருக்கு பூஜை செய்தனர். தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி தஞ்சாவூர், நெற்களஞ்சியமாக விளங்க, மேட்டூர் அணை நீர் பாசனம், மிக முக்கிய ஆதாரமாக உள்ளது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை இன்று திறந்து விடப்பட்டது.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரித்து வரும் நாட்களில் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும். இதனால் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெரும் என கூறினார்.

ஆனால் பாமக தரப்பில் ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். பாசனத்திற்காக செல்லும் நீர் தவிர மீதம் உள்ள நீரை பயன் படுத்த வேண்டும். இல்லையேல் வீணாக கடலில் கலக்கும். மழை பெய்யாத காலங்களில் இந்நீரை சேமிப்பது மூலம் விவசாயிகள் பயனடைவர். வீணாகும் நீரை ஏரி,குளம் போன்ற இடங்களில் நிரப்பி நீரை சேமிக்க வேண்டும்.

பாமகவின் இந்த கோரிக்கை ஏற்புடையதாக சமூக ஆர்வலர்களின் கருத்து ஆகும். ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் அவர்கள் தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து வீணாய் கடலில் கலக்கும் நீரை சேமிக்க தருமபுரி மக்களிடையே 10 லட்சம் கையெழுத்து என்ற செயலை செய்து மக்களிடம் 10 லட்சம் கையெழுத்து வாங்கி முதல்வரிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பாமகவின் பல ஆண்டு கனவு திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்த வேண்டும்! MP அன்புமணி ராமதாஸ் முதல்வரிடம் வேண்டுகோள்!

0

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள், அந்த கிராம மக்களின் வருவாய் தொழில் அனைத்துமே வேளாண்மை ஆகும். ஆனால் இன்றைய சூழலில் வேளாண்மையை மறந்து கொண்டு செய்கிறோம் என்பது உண்மை. அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

பாட்டாளி மக்கள் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவற்றில் அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் , மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகள் எப்படி முக்கியமோ முதன்மையாக இருக்கிறதோ, அது போல வேளாண்மை சார்ந்த பாடங்கள் கண்டிப்பாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு பாடமாக கட்டாயம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவே 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது பலர் அறிவுறுத்தலின் பேரில் வேளாண்மை ஒரு பாடமாக சேர்க்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அறிவுறுத்தலின் படி 1996 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களிடம் அந்த ஆணையம் அறிக்கையை சம்ப்பித்தது. ஆனால் திமுக அந்த அறிக்கையை செயல்படுத்தாமல் காலம் கடத்தியது.

மேலும் 2001 இல் மீண்டு அதிமுக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் அமர்ந்த நிலையில் வேளாண்மை குறித்த அறிக்கையை செயல் படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி 200 பள்ளிகளில் மட்டும் முதன்மையாக வேளாண்மை பாடதிட்டமாக சேர்க்கப்பட்டது. அதற்கும் தனி ஆசிரியர்களை நியமிக்க வில்லை. இதனால் சரியாக கடைபிடிக்க வில்லை.

இதனால் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளாக வேளாண்மை குறித்து தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறது. அந்த அறிக்கையில் வேளாண்மை குறித்த முக்கியத்துவம், வேளாண்மை தேவைகள், வேளாண்மையின் இன்றைய நிலை போன்றவற்றை கட்சியில் நிழல் நிதி அறிக்கையில் வெளியிட்டுள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேளாண்மை குறித்த அறிக்கையை முதவரிடம் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தொண்டை கிழிய கத்திட்டு இருக்கேன் எப்போ என் பேச்சை கேப்பிர்கள்? கொட்டும் மழையில் வெறிப் பேச்சு! கை கொடுத்ததா சீமான் பேச்சு?

0

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குறிப்பிட்ட இடத்தில் பெரும் அளவு திமுகவின் பணம் தேர்தல் ஆணையத்தின் மூலம் பிடிக்கப்பட்டு பின்பு வேலூர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு தேர்தல் ஆணையம் வேலூர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து இந்த மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதி எண்ணபட்டு அன்றே தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் திமுக ரொம்ப கஷ்டப்பட்டு தான் வெற்றி பெற்றது என்று கூற முடியும். மற்ற தொகுதிகளில் திமுக 3 லட்சம் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட வேலூர் தொகுதியில் அப்படி வெற்றி பெற முடியவில்லை. காரணம் அதிமுக ஏ.சி.சண்முகம் திமுகவிற்கு நெருக்கடி கொடுத்தார் என்பது நிதர்சன உண்மை.

ஆனால் அதை விட திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுத்தது சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு அள்ளி அள்ளி பணம் கொடுத்தன. அதை இரண்டு கட்சிகளும் மறுக்க முடியாது. ஆனால் பணமே கொடுக்காமல் கால் கடுக்க நடந்து தொண்டை கிலிய கத்தி வாக்குகளை சேகரித்த கட்சி நாம் தமிழர் கட்சி.

இன்று திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தாமத படுத்தி, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அக்கட்சிக்கு வாக்குகள் விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவுக்கு வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி போன்ற நகர்ப்புற வாக்குகள் கை கொடுத்தது போல சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் நகர்ப்புற வாக்குகள் கூடுதலாக கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்திலிருந்தே மெதுவாக வாக்குகளில் முன்னேறி வந்த நாம் தமிழர் கட்சி நகர்ப்புற வாக்கு எண்ணிக்கை நடந்த உடன் கூடுதல் வாக்குகளை பெற்றது.

சீமான் மேடை பேச்சு அனல் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சீமான் அடிக்கடி கூட்டத்தில் பேசும்போது சொல்லுவார், நான் ஒருத்தன் தொண்டை தண்ணி வற்ற கத்திட்டு இருக்கேனே.. மக்கள் இதை எப்போதான் புரிஞ்சிப்பீங்க? என்பார். அவர் திமுக அதிமுக கட்சிகளை பொதுவாகவே விமர்சனம் செய்வார். அவர் பேசிய பேச்சுக்களும், ஒரு கட்சி விடாமல் எல்லாரையும் நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்டதும் வீண் போகவில்லை.

அந்த கட்சி வேலூர் தேர்தலின் ஏறக்குறைய 30 ஆயிரம் வாக்குகளை பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சீமானின் நாம் தமிழர் கட்சி வளர்ச்சி மெதுவாக அதிகரித்து வருகிறது என்பது நிதர்சன உண்மை ஆகும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர்! குவியும் பாராட்டுக்கள்!!

0

கொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர் ! குவியும் பாராட்டுக்கள்!!

சேலம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள நீர் தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் அங்கு இருந்து 3 லட்சம் கனஅடி அளவிற்கு தண்ணீரானது தமிழகத்திற்கு காவேரியில் வெளியேற்றபடுகின்றது.

தற்போது தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், எஞ்சிய உபரிநீர் அனைத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது வந்து கொண்டிருக்கும் நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தாலே, மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் நிலையில்தான் உள்ளது.

ஏனெனில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் பத்தடி நிரம்பிய மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று ஒரு நாளில் 15 அடி நிரம்பி இரவு 85 அடியாக உள்ளது.

காலைக்குள் 100 அடியை எட்டும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக ஒரே நேரத்தில் திறக்கும் போது அவை நேரடியாக வீணாகும்.

ஆகையால், முன்கூட்டியே அணையை திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இந்த முடிவு அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஏனெனில் கடந்த வருடம் அதிகபடியான மழைநீர் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டதால், மொத்தமாக கடலுக்கு சென்று வீணாகியது.

இந்த வருடம் நிச்சயமாக பயன்படும் வகையில் முன்கூட்டியே பாசனத்துக்கு திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தார்.

தற்போது மேட்டூர் அணைக்கு 2.10 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் முடிவு காவிரி டெல்டா மக்கள் எதிர்பார்த்த ஒன்றாகும்.

இன்னும் சில மணி நேரத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணையால்
டெல்டா பகுதியின் சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்குமென டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியுடன்

இன்னும் சில மணி நேரத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணையால்
டெல்டா பகுதியின் சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்குமென டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதால்
எடப்பாடியாருக்கு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

மத்திய அரசின் நோக்கம் என்ன? காஷ்மீரின் வியூகத்தை விவரித்தார் மோடி!!

0

மத்திய அரசின் நோக்கம் என்ன? காஷ்மீரின் பின்னணியை விவரித்தார் மோடி!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஏன் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார். 

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியதாக வந்த ரகசியத் தகவலையடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. 

இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடியது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் அவை கூடியவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமித்ஷா விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவரோ ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370ஆவது சட்டப்பிரிவை நீக்குவது குறித்து வெளியிட்டார். இதன் மூலம் 35 ஏ சட்டப்பிரிவும் தானாக வெளியேறியது. 

அத்துடன் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பின்வாங்கி , அது லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுவதாகவும் அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று (ஆக.8) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் தொலைக்காட்சி மூலம் உரையாடினார் பிரதமர் மோடி. அப்போது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஏன், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது ஏன் ஆகியவை குறித்து அவர் விவரித்தார் .

சுமார் 40 நிமிடங்களுக்கு மோடி ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் இதோ…

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு சட்டப்பிரிவு 370 தடையாக இருந்தது. இந்தச் சிறப்பு சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்காக காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இதன் மூலம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம்.

சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பல கோடி இந்தியர்களின் கனவுகள் இச்சட்டப் பிரிவை நீக்கியதன் மூலம் நனவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இப்போது தேசத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும் ஒன்றே; பொறுப்புகளும் ஒன்றானவை.

காஷ்மீரில் பாகிஸ்தான் சிலரைத் தூண்டிவிட்டதால் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. சுமார் 42,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

சஃபை கரம்சரிஸ் சட்டம் நாட்டின் பிற மாநிலங்களில் பொருந்தும், ஆனால் ஜம்மு-காஷ்மீர் துப்புரவு தொழிலாளர்களுக்கு அது பொருந்தவில்லை. பிற மாநிலங்களில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன, ஆனால் காஷ்மீரில் இல்லாமல் இருந்தது.

சட்டப்பிரிவு 370ஐ அகற்றுவதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமைகள் மேம்படும்.

காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது தற்காலிகமானது. நிலைமை முழுவதும் சீரடைந்ததும் காஷ்மீர் மீண்டும் மாநில அந்தஸ்துக்கு மாற்றப்படும்.

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற பல்லாயிரக்கணக்கான காஷ்மீர் மக்களால், சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இப்போது இந்த நிலைமை மாறும்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை உலகின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்குகின்றன.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகளை இனி காஷ்மீரில் நடத்த முடியும்.

லடாக் மூலிகை வளங்களை சந்தைப்படுத்துவது மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம்.

லடாக்கில் மிகப் பெரிய சூரிய மின்சக்தி மையம் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தி லடாக்கை புதிய பாதைக்கு அழைத்து செல்வோம்.

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும்.

ஜம்மு-காஷ்மீர் தயாரிப்புகளை உலகமெங்கும் பிரபலப்படுத்தி ஊக்குவிக்க அனைத்து தொழில்நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய நடவடிக்கைகள் மூலம் ஜம்மு-காஷ்மீரை தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திலிருந்து விடுவிப்போம்.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் புதிய ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் பிரிவினைவாதத்தைத் தோற்கடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தனது உரையை முடித்தார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கசிந்தது காஷ்மீர் சீக்ரெட்! குறி வைத்து கூறுபோட்ட கூட்டாளிகள்!! கடுப்பில் எதிர்கட்சியினர்!!!

0

கசிந்தது காஷ்மீர் சீக்ரெட்! குறி வைத்து கூறுபோட்ட கூட்டாளிகள்!! கடுப்பில் எதிர்கட்சியினர்!!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஏன் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளார். 

பிரதமர் மோடி அவர்கள் கூறியதாவது ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியதாக வந்த ரகசியத் தகவலையடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. 

இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடியது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் அவை கூடியவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமித்ஷா விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவரோ ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370ஆவது சட்டப்பிரிவை நீக்குவது குறித்து வெளியிட்டார். இதன் மூலம் 35 ஏ சட்டப்பிரிவும் தானாக வெளியேறியது. 

அத்துடன் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பின்வாங்கி , அது லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுவதாகவும் அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து ரிலையன்ஸ் குழும வருடாந்திர மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜம்மு காஷ்மீரில் நிறுவனங்கள் துவங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் இப்போது அங்கு நிலம் வாங்குவது கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களது தொழிலை துவங்குவது எளிமையாகி உள்ளது என தனது எண்ணத்தை குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி முகேஷ் அம்பானி அங்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை துவங்க முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் மீது ஒரு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ராணுவ எந்திர தயாரிப்பில் நண்பனுக்கு வாய்ப்பு அளித்த நிலையில் இந்த அறிவிப்பானது நாட்டு மக்களுக்காக காஷ்மீரா இல்லை நண்பனுக்காகவா என பல்வேறு இடங்களில் கேள்வி எழுந்துள்ளது.

முதலிலே முகேஷ் அம்பானி காஷ்மீரில் கால்பதிப்பதிப்பதுதான் மத்திய அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

0

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு நடத்தும் அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10,000 வழங்கபடும் என்று இலவச பயிற்சி மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் இலவச நீட் தேர்வு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

ஆரஞ்சி அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் என்ற இந்த இலவச பயிற்சி மையமானது அரியலூர் மாவட்டத்தில் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியில் 2017 ல் தொடங்கப்பட்டு கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு அரசு பணியாளர் தேர்வுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் வெளி மாவட்ட மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் இலவச விடுதியும் வழங்கி வருகிறார்கள் என்பது மிகவும் சிறப்புகுரியது

இந்த மையத்தில் இருந்து கடந்த வருடம் நடந்த தமிழ்நாடு வனக்காவலர் பணிக்கு 3 பேர் தேர்வாகியுள்ளது என்பதும் கூடுதல் சிறப்பு

இந்த மையத்தில் தற்போது வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்வுக்கு தான் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த பயிற்சி வகுப்பில் 90 க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் படித்து வருகிறார்கள் குறிப்பாக
மதுரை,திருவண்ணாமலை, கடலூர் ,சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் வந்து தங்கி படித்து வருகிறார்கள்

கூடிய விரைவில் +2 படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வண்ணம் திறமை மிக்க பல ஆசிரியர்கள் கொண்டு நீட் தேர்விற்கு இலவச பயிற்சிகள் நடத்தபட உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி மையம் அமைப்பது என்பது மிகவும் கடினமான செயல் என்பதை அனைவரும் அறிவோம் அவற்றையும் கடந்து இந்த மையம் நீட் தேர்விற்காக பயிற்சியை இலவசமாக நடத்த இருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது

இந்த வாய்ப்பை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பயிற்சி மையத்தின் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனில் 10,000 வழங்கப்படும் என்று பயிற்சி மையத்தின் நிறுவுனர் அறிவித்துள்ளார்.

இக்காலத்தில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சிக்கு நிறைய தனியார் பயிற்சி நிறுவனங்கள் லட்சம் கணக்கில் பணம் வாங்கி கொண்டு நடத்தி வரும் நிலையில் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 வழங்கப்படும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இம்மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழுள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
திரு.பழனிசாமி -7010021004

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

விவாகரத்தால் வந்த வினை ! வீடு புகுந்து மனைவியின் தலையை வெட்டி வலம் வந்த வாலிபர்!!

0

விவாகரத்தால் வந்த வினை! வீடு புகுந்து மனைவியின் தலையை வெட்டி வலம் வந்த வாலிபர்!!

விஜயவாடா: பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

விஜயவாடா அருகே சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தம்பதி மணி கிராந்தி – பிரதீப். இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

அதனால் மணிகிராந்தியிடம் விவாகரத்து கேட்டு பிரதீப் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். அதனால் இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் மணி கிராந்தி வீட்டுக்கு பிரதீப் வந்திருந்தார். விவாகரத்து சம்பந்தமாக பேச வேண்டும் என்று சொன்னார். அதனால் அவரிடம் மனைவியும் பேச முன்வந்தார். அப்போது, பிரதீப், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் மணி கிராந்தி அங்கேயே துடிதுடித்து இறந்து விட்டார்.

பின்னர் வெட்டிய தலையை எடுத்து கொண்டு பிரதீப் தெருவில் நடந்து சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் பிரதீப் நடந்து செல்வதை பார்த்து தெருமக்கள் எல்லாம் அலறி அடித்து கொண்டு வீட்டுக்குள் ஓடினார்கள்.

கையில் தலையுடன் அருகில் இருந்த சத்யநாராயணபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பிரதீப் சரணடைந்தார். இதையடுத்து, போலீசார், விரைந்து வந்து வெறும் முண்டத்துடன் கிடந்த மணி கிராந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. அந்த காட்சியில் கொலையாளி தலையுடன் ஆவேசமாக ஸ்டேஷனுக்கு சரணடைய வருவது பதிவாகி இருந்தது.

ஸ்ரீநகர் என்றும் நகரின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில், மனைவியின் தலையை வெட்டி கணவன் கொண்டு போன சம்பவம் விஜயவாடாவில் பெரிய பரபரபப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.