Monday, July 14, 2025
Home Blog Page 3374

மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!

0

மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!

சமீப காலமாக புது புது ஆப்கள்  மக்களுக்கு கடன் வழங்கி வருகிறது. மீண்டும் அத்தொகையை பெறும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செல்போனில் உள்ள தகவல்களை எடுத்து அதை வைத்து மிரட்டி வருகின்றனர். இது குறித்து பல புகார்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் குவிய தொடங்கியது. இதனை கண்டுபிடிக்க டெல்லியில் இரண்டு மாத காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்பொழுது விசாரணை முடிவடைந்த நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

நமது செல்போன் மூலம் கடன் வழங்கும் ஆப்கள் அனைத்தும் சீனாவிற்கு நேரடி தொடர்பு கொண்டவை என கூறியுள்ளனர். இதற்கென்று ஒரு தனிக்குழு அமைத்து மக்களுக்கு புதுப்புது செயலிகள் மூலம் கடன் வழங்கி அப்பொழுது அவர்கள் செல்போனில் இருக்கும் அனைத்து டேட்டாவையும் திருடி அவர்களை பிளாக்மெயில் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு போலீசார் 22 பேரை தற்பொழுது வரை கைது செய்துள்ளனர். இந்த 22 நபர்களும் சீன நிறுவனங்களின் நேரடி தொடர்பாளர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இவர்களிடம் இருந்து 50 செல்போன்கள், 25 கணினிகள், ஒன்பது மடிக்கணினிகள், பத்திற்கு மேற்பட்ட கிரெடிட் அண்ட் டெபிட் கார்டுகள், கார்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இவர்கள் வைத்திருக்கும் ஆப் மூலம் மக்களுக்கு  5000 முதல் 10 ஆயிரம் வரை கடன் வழங்குகின்றனர். அந்தத் தொகையை மக்கள் திருப்பி செலுத்திய போதிலும், அவர்கள் செல்போனில் இருந்து திருடப்பட்ட டேட்டாவை வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ளர்.

அதாவது, நாம் எப்பொழுது இவர்களின் ஆப்பை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்கிறோமோ அப்பொழுதே நமது டேட்டா அனைத்தும் நேரடியாக சீன தொடர்பாளர்களுக்கு சென்று விடும் என போலீசார் விசாரனியில் தெரியாவந்துள்ளது. இதை வைத்துதான் அந்த கும்பல் மக்களை மிரட்டி வந்துள்ளது. இந்த விசாரணையில் முக்கிய புள்ளியாக சீனாவை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல் 

கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல்

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தால் வழக்கு அனைத்தும் ரத்து செய்யப்படும் என பாஜக தரப்பிலிருந்து பேரம் பேசப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.இதனைத்தொடர்ந்து குஜராத் மாநிலத்தை கையில் எடுத்து ஆட்சியை கைப்பற்றும் வகையில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் மீது அதிருப்தி நிலவி வருவதால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது.ஏற்கனவே உட்கட்சி பிரச்சனையால் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் கட்சி இந்த போட்டியிலிருந்து சற்றே விலகியே இருப்பது போல் சூழல் உள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வேகத்தை கட்டுப்படுத்து மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பல்வேறு தடுப்புகளை போட்டு வருகிறது.அந்த வகையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

Bargain to Deputy Chief Minister to break party and join BJP
Bargain to Deputy Chief Minister to break party and join BJP

டெல்லியில் புதிய மதுபான கொள்கையின் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான பல இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதன் காரணமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யயப்பட்டு, மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில்,, முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மீது குற்றசாட்டை வைக்கும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சியை உடைத்துவிட்டு பாஜகவில் சேருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு பாஜகவில் இணைந்தால் அனைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை  வழக்குகளும் ரத்து செய்யப்படும் என பேரம் பேசப்பட்டதாகவும் குற்றசாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் நான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ள மணீஷ் சிசோடியா, தனது தலையை வெட்டிகொள்வேனே தவிர சதிகாரர்கள், ஊழல்வாதிகளின் முன் தலை குனிய மாட்டேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும், என் மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள் என்றும் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.

என் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?..

என் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?..

விருத்தாசலம் அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் தான் ராம்ராஜ்.இவருடைய வயது 32.இவரது மனைவி வெண்ணிலா.இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.இதனால் கணவன் மற்றும் மனைவி இருவரும் மனமுடைந்து இருந்து வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் குழந்தையின் ஏக்கம் மாணவி வெண்ணிலாவை அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் ஏக்கம் கொண்ட வெண்ணிலா கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெண்ணிலா உயிரிழந்தார்.

அதில் வேதனையடைந்த கணவன் ராம்ஜாஜ் சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் தனது அக்கா ராதா வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த வாரம் தன் வீட்டிற்கு சென்று வருவாதாக கூறி அக்கா வீட்டிலிருந்து சென்றுள்ளார்.வீட்டிற்கு சென்ற ராம்ராஜ் தனது  அக்காவிடம் கூட தொலைபேசியில் தொடர்பு கொள்ள வில்லை.

அதில் அச்சமடைந்த பயந்து போய் பெரியாக்குறிச்சியில் தனது தம்பி வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தார்.அப்போது அழுகிய நிலையில் ராம்ராஜ் சடலம் கிடந்தது.இதனை கண்ட அக்கா ராதா கதறி அழ ஆரம்பித்தார்.

மேலும் போலீசாரிடம் இதை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்கள் ராம்ராஜ் உடலை கைபற்றி பிரேதா பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மனைவி இறந்த துயரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (66). இவர் ராணுவ வீரராக பணிபுரிந்தவர். இவருடைய தோட்டமானது ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாரியப்பன் தொளசம்பட்டியில் உள்ள அவருடைய தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தார். அதே பகுதியில் டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த டிராக்டர் ஆனது மாரியப்பன் வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. அந்த விபத்தில் சிக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

0

இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களின் ஒற்றுமையை காட்டும் நோக்கில் அனைவர் வீட்டிலும் மூன்று நாட்கள் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என கூறினார். அதன்படி நாட்டு மக்கள் பலர் தங்கள் வீட்டின் முன் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வந்தனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ள காஞ்சி மாவட்டத்தில் சிலர் கொடியை ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியை ஏற்ற முயற்சித்த நிலையில், மின்சாரம் தாக்கி இறந்தது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. அதனால்  அம்மாநில அரசு இவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. தேசியக்கொடி ஏற்றும் போது மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு  ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தது.

இந்த மூவரும் தேசியக்கொடியை ஏற்ற உலோக கம்பியை பயன்படுத்தி உள்ளனர். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது அங்கு இருந்த உயர் அழுத்த கம்பியின் மீது இந்த உலோக கம்பி உரசி உள்ளது. இவ்வாறு இரண்டு கம்பிகளும் உரசியதால் அதனைப் பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டனர். அதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 15 லட்சமும், ஒப்பந்தம் அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மடிக்கணினி வழங்கும் திட்டம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!

மடிக்கணினி வழங்கும் திட்டம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை  இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் பல புதிய அம்சங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கி உள்ளார். இந்த வருடம் ரூ 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் மத்திய அரசு 1729 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கடன் தொகையாக 500 கோடி தரலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

அத்தோடு வெளியில் கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரூ 1889 கோடி வரை கடன் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் கல்வித்துறைக்கென ரூ 802 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனால் வரும் காலங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என கூறினார். அதேபோல 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படும் என  தெரிவித்தார்.அதுமட்டுமின்றி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

அர்ஜென்டினா நாட்டில் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி பல கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு  நல்ல படியாக குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் ஆரோக்கியமாக ஐந்து குழந்தைகள் பிறந்தது.ஆனால் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தவை இதற்கு காரணம் யாரும் இல்லை என குழந்தைகளின் பெற்றோர்கள் இதை பற்றி யாரும் பெரிதும்  கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அந்த மருத்துவமனையில் கடைசியாக உயிரிழந்த குழந்தையின் பாட்டி கடந்த வாரம் போலீசார்களிடம்  புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார்கள் விசாரணை நடத்தி வந்தார்கள்.விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளி வந்தது.குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல் நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

மேலும் இது பற்றி விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்த ஐந்து குழந்தைகளில் இரண்டு குழந்தைகளின் மருத்துவ பதிவுகளை மறுஆய்வு செய்ததில் அந்த குழந்தைகளுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.இதனை அரங்கேற்றியவர் நர்ஸ் பிரெண்டா அகுவேரோவை போலீஸாரால் கைது செய்து மேல் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

மேலும் மற்ற மூன்று குழந்தைகளின் மருத்துவ பதிவுகளில் மறுஆய்வு நிலுவையில் உள்ளநிலையில்  அந்த குழந்தைகளையும் இவர் தான் கொலை செய்திருப்பார் என சொல்லப்படுகிறது.இருந்தாலும் மறு ஆய்வுக்கு பின்னரே உண்மைகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகும்.

இதனால் மருத்துவமனையில் அசம்பாவிதம் ஏதும்  நடைபெறமால் இருக்க அங்கு போலீசார்களின்  பாதுகாப்பும் போடப்பட்டு வருகின்றது.இந்த சம்பவம் மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !  

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(52).இவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த போலீஸார் அவர்  வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது   அவர்  வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சின்னதுரையை காரையூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறைசாலையில் மாலை நேரத்தில் அனைவருக்கும் தின்பண்டம் கொடுப்பார்கள்.நேற்று மாலை சின்னதுரை கடலை சாப்பிட்டுள்ளார். அப்போது சின்னத்துரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறைக்காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சின்னதுரை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை!

 அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை!

செஸ் ஒலிம்பியா  போட்டியானது முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நேரு ஒரு விளையாட்டு அரங்கில் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் முன்னிலையில் பிரம்மாண்டமாக தொடங்கினர். இந்த விழாவின் ஆரம்ப விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த தொடக்க விழா அனைவரையும் கவரும்  வகையில் பிரம்மாண்டமாக இருந்ததையடுத்து பலர் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் திருமண முடிந்த கையோடு தொடர்ச்சியாக வேலையில் ஈடுபட்டதால் அவர்களுக்கு உண்டான நேரத்தை செலவிட முடியவில்லை.

அதனால் எங்களுக்கு உண்டான நேரத்தை செலவிட ஸ்பெயின் க்கு செல்வதாக விக்னேஷ் தனது இன்ஸ்டா வில் கூறினார். அங்கு சென்று அங்குள்ள பல இடங்களை சுற்றி பார்த்து வருகின்றனர். தினந்தோறும் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் புகைப்படம் அவர்களின் நெருக்கமான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவன் அப்லோட் செய்து வருகிறார். தனது தங்கம், எனது உயிர் என தினந்தோறும் வர்ணித்த வண்ணமாகவே தான் விக்னேஷ் சிவன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று கழுத்தின் பின்புறம் டாட்டூ  உள்ளது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது எப்ப போட்ட டாட்டூ என்று கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் இந்த டாட்டூ விக்னேஷ் சிவனுக்காக போடப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக பிரபுதேவாவை காதல் செய்து வந்தபோது அவரது பெயரை தனது கையில் பச்சை குத்தி இருந்தார். நாளடைவில் இருவரும் பிறந்த நிலையில் அதனை பாசிட்டிவிட்டி என்று மாற்றிக் கொண்டார். தற்பொழுது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரது பெயரை டாட்டூ போட்டுள்ளாரா என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.ஆனால் இந்த கழுத்தின் பின்புறம் உள்ள டாட்டூ பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டதாக கூறியுள்ளனர்.

சற்று நேரத்தில் வெளியாகவிருக்கும் தேர்வு முடிவுகள்!!

சற்று நேரத்தில் வெளியாகவிருக்கும் தேர்வு முடிவுகள்!!

12- ஆம் வகுப்பு துணை தேர்வு முடிவுகளை இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளிவந்த நிலையில்,
தற்போது துணை தேர்விற்கான தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு வெளியிடவுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.மேலும் & என்ற இணையதளம் முகவரியை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளது.ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்,விடைத்தாள் நகலினை பெற 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.மேலும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாயும்,ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.