Monday, July 14, 2025
Home Blog Page 3381

இந்த படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது! தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட அறிவிப்பு!

இந்த படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது! தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பி.ஏ படிப்புக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொது பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் எந்த கல்லூரி என்று உறுதி செய்வதற்கான இணைய வழி கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அதனை அடுத்து கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வரையிலும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

இதனையடுத்து 431 பொருளியல் கல்லூரிகளில்  பி.இ ,பி.டெக், பி.ஆர்க் போன்ற  படிப்புகளில் இன்று முதல் இடங்களை பெறுபவர்கள் அடுத்த ஏழு நாட்களுக்கு கட்டணம் செலுத்தாவிட்டால் அந்த இடங்களும் மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பிரிவு பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையவளிலேயே நடைபெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளது. கிராமப்புற மாணவர்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவர்கள் சேர்க்கை பயணங்களுக்கு சென்று இந்த கலந்தாய்வில் அறிவித்துள்ளனர்.

ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்?

0

ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியானது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

இதையடுத்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி , ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்று படத்தில் இடம்பெற்ற செகண்ட் சிங்கிள் பாடலான சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் நடந்தது. இதில் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. பொன்னி நதி பாடல் வெளியான போதும் இதுபோல விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளாக நாளாக அந்த பாடல் ஹிட் ஆனது. அதுபோல இந்த பாடலும் ஹிட் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன்  படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

0

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

இந்திய அணியின்  முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் மீண்டும் பேட் பிடிக்க தயாராகி விட்டார்.

இந்தியாவின் மிகச்சிறந்த லிமிடெட் ஓவர் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் போட்டித் தொடரின் சீசன் 2ல் விளையாடுவார் என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.  கம்பீர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக சில போட்டிகளையும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி 2 முறை கோப்பையையும் வென்றவர் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கவுதம் கம்பீர் “செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்க உறுதியளித்துள்ளேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்குவதை எதிர்பார்த்து உற்சாகமாக உள்ளேன். மீண்டும் களமிறங்குவதை ஒரு பாக்கியமாகவும் மரியாதையாகவும் இருக்கும். மீண்டும் உலக கிரிக்கெட்டின் மினுமினுப்புடன்,” என்று கவுதம் கம்பீர் கூறினார்.

இதுபற்றி லெஜண்ட் லீக் கிரிக்கெட் சார்பாக “2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 97 ரன்களை அடித்த கெளதமின் ஆட்டத்தை யார் மறப்பார்கள்? சீசன் 2 இல் கௌதம் மற்றும் பிற வீரர்களிடமிருந்து அதே நரம்பைக் குலைக்கும் ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” நிறுவனர் தெரிவித்துள்ளார்.

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

0

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கே எல் ராகுல் தலைமை தாங்குகிறார். நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்திய நேரப்படி 12.45 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ள இந்தியா இந்த போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய அணியே இந்த போட்டியிலும் களமிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை தக்கவைக்க ஜிம்பாப்வே கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உத்தேச அணி

ஷுப்மான் கில், ஷிகர் தவான், இஷான் கிஷன், கே.எல். ராகுல் (கேட்ச்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (வி.கே.), அக்சர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே உத்தேச அணி

இன்னசென்ட் கையா, தடிவானாஷே மருமணி/தகுத்ஸ்வனாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, விக்டர் நியாச்சி

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

 

பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கடைசியாக காணப்பட்ட நடிகை நமீதா. இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளின் சிறப்பு நாட்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். நடிகை தனது குழந்தை பம்பின் அழகான படங்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.நமீதா மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரியை மணந்தார்.மேலும் கடந்த நவம்பரில் அவருடன் நான்காவது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். நமீதா தனது குழந்தைகளுக்காக தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதத்தையும் அன்பையும் நாடினார்.மேலும் கர்ப்பம் மற்றும் தாய்மைக்கான இந்த பயணத்தில் தன்னை வழிநடத்திய மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள நமீதா,ஹரே கிருஷ்ணா! இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். உங்கள் ஆசிகள் மற்றும் அன்பு எப்போதும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

குரோம்பேட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் ரெலா ஹாஸ்பிட்டலுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.அவர்களின் சிறந்த சுகாதார சேவைகளுக்காக எனது கர்ப்பப் பயணத்தில் என் குழந்தைகளையும் இதில் அழைத்துச் சென்றதற்காக டாக்டர் புவனேஸ்வரி மற்றும் அவரது குழுவினருக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் எனக் கூறியிருந்தார்கள். டாக்டர் ஈஸ்வர் மற்றும் டாக்டர் வேலு முருகன் எனது புதிய தாய்மையிலும் எனக்கு உதவுகிறார்கள். சிறந்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததற்காக டாக்டர் நரேஷ்க்கு நன்றி மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

புடலங்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

புடலங்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். நமது முன்னோர் காலத்தில் நூறில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கும். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான நோயாளிகள் செல்பவர்களில் சர்க்கரை வியாதி உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது. இந்த  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும். இது மிகச்சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது.

நமது எடையை கட்டுப்பாட்டில் வைக்க புடலங்காய் உதவுகிறது. நீருடன் புடலை இலைச் சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் கட்டுப்படுத்த வல்லது.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்தபட்ட நோய்கள் சரியாகும்.

புடலை இலையானது குடல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. ஆலோபேஷபியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும்.

புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை உடையவை. பொடுகைப் போக்கும் குணமும் புடலங்காயிற்கு உண்டு.

 

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

லட்சுமி கடாட்சம் தரும் அஞ்சரைப்பெட்டி:நல்ல நாள் பண்டிகை தினம் என்றதுமே நம்முடைய கவனத்தில் முழுவதும் இருப்பது பூஜை அறை தான். இறைவனுக்கு பூஜை எப்படி செய்வது பூஜை அறையை எப்படி சுத்தம் செய்வது. சுவாமிக்கு என்ன நிவேதனம் செய்வது, என்பதை பற்றிய சிந்தனை முழுவதுமாக இருக்கும். அந்த சிந்தனையோடு சேர்த்து வீட்டையும் சுத்தம் செய்யக்கூடிய வேலையை நாம் கவனிக்க வேண்டும். அதாவது வீடு துடைக்கும் வேலை. பண்டிகை நாளுக்கு முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து விடுவோம். இவ்வாறு ஒரு நல்ல நாள் கிழமையில் மற்ற எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தக்கூடிய நாம் நம்முடைய சமையலறையில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள் வந்தால் இப்படி லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய பொருட்களை சமையலறையில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்

சமையலறை:சமையலறையில் இருக்கக்கூடிய உப்பு ஜாடி, புளி ஜாடி, அஞ்சரை பெட்டி, அரிசி அளக்க பயன்படுத்தும் ஆழாக்கு, படி, அரைப்படி, முறம் இவைகளை நல்ல நாள் கிழமையில் சுத்தம் செய்ய வேண்டும். ஜாடியில், அஞ்சரை பெட்டியில் எல்லாம் மளிகை ஜாமான்கள் இருந்தாலும் அதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, இந்த பொருட்களை எல்லாம் சுத்தமாக கழுவி காயவைத்து அதன் பின்பு அதில் பொருட்களை நிரப்பி வைக்க வேண்டும்.

உப்பு ஜாடி:இதே போல சமையல் மேடையை துடைத்து சுத்தம் செய்து, அந்த அடுப்புக்கு மேல் பக்கத்தில் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, பிள்ளையார் சுழி போட்டு, லாபம் என்று எழுத வேண்டும். கொஞ்சமாக மஞ்சளை தண்ணீரில் கரைத்து அதைத் தொட்டு லாபம் என்று எழுதலாம். அப்படி இல்லை என்றால் தனலாபம் என்று கூட எழுதி வைக்கலாம். இப்படி செய்வது சமையல் அறைக்கே ஒரு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சமையலறை என்று இருந்தால் அந்த சமையலறையில் சிறிய உரல், அம்மிக்கல் இருக்க வேண்டும். உரல், அம்மிக்கல்பயன்படுத்துவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை என்றால் இந்த சிறிய உரலுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

அம்மிக்கல்:இதேபோல சமையலறை அலமாரியை ஒவ்வொரு பண்டிகை நாட்களுக்கும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். சமையலறையில் இருக்கும் பாத்திரங்கள் மளிகை ஜாமான்கள் கொட்டி வைத்திருக்கும் டப்பாக்கள் அனைத்தும் எண்ணெய் பிசுக்கோடு அசுத்தமாக இருக்கவே கூடாது. பண்டிகை நாட்களில் பூஜை அறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சமையலறையும் சுத்தமாக இருந்தால் தான் வீட்டில் லட்சுமி கடாட்சத்தில் நிறைந்திருக்கும்.

 

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!…

 

இந்த உலகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் அயராது பாடுபட்டால் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவேறும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.தொழிற்துறையில் போட்டிகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் சொந்த வியாபாரத்தை செம்மைப்படுத்தி லாப நோக்கில் கொண்டு செல்வது எப்படி? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் அதிகம் பெறவும் முன்னோர்களால் சில பரிகாரங்கள் அன்றைய காலங்களிலேயே கணித்திருக்கின்றார்கள்.

அதில் ஒன்று தான் வியாபார விருத்தி யந்திரம். வியாபார விருத்தி யந்திரத்தை வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட்டு லாபம் உண்டாகும் என நம்பப்படுகிறது.மன அமைதியுடன் வியாபாரம் நடக்க வழிவகை செய்யும். வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.தொழில் போட்டிகளை சமாளித்து சிறந்த லாபம் பெற செய்யும்.தொழிலில் உள்ள தடைகளை நிவர்த்தி அடைய செய்யும்.தொழிலில் வருமானம் பெருகும்.

புதிய முதலீடுகள்,விரிவாக்கம், பணியாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.தொழில் சார்ந்த கண் திருஷ்டி, பொறாமை நீங்கும்.இது வியாபாரிகள், வணிகர்கள், புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம். சக்திமிக்க இந்த யந்திரங்களை தொழிற்கூடங்களில் கிழக்கு முகமாக வைத்து வணங்க வேண்டும்.வாரம் ஒரு முறை அல்லது அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் சந்தனம், குங்குமம் கலந்து பொட்டு வைத்து கதம்ப மாலை சாற்றி வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். இந்த முறையினை காலங்காலமாக நம் மனிதர்கள் செய்து வருகின்றார்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

 

 

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

 

அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் தான்  இந்த கிருஷ்ணன். நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். இன்று நாம் கிருஷ்ணரை பற்றி அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்.மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

 

கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.கிருஷ்ணர் மூன்று வயது வரை கோகுலத்திலும், மூன்று முதல் ஆறு வயது வரை பிருந்தாவனத்திலும், ஏழாம் வயதில் கோபியர்களுடனும், எட்டு முதல் பத்து வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது கிருஷ்ணருக்கு வயது ஏழு கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் மற்றும் சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர்.

ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும். கண்ணனின் லீலைகளை விளக்கும் கர்பா என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது.உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார். இவருக்கு பால் பாயாசம், நெய்வேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர். மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் கத்ர கேஷப்தேவ் என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

 

 

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

இந்த மூட்டுவலி உங்களை தொற்றி கொண்டதா.. உங்களை விட்டு போக மாட்டிகுதா இதை டெய்லி பண்ணுங்க அப்பறம் பாருங்க நீங்களே ஓட ஆரம்பித்து விடுவீங்க.வாங்க எப்டி சரி செய்யலாம்னு பார்க்கலாம்.தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும் முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும். ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.பகல் உணவுக்குப் பின் 10இ20 நிமி டங்கள் ஓய்வெடுப்பது மூட்டுவலியை நன்கு குறைக்கும்.உப்பு கரைத்த நீரில் குளித்தால் பக்க விளைவுகள் ஏதுமின்றி மூட்டு வலி பறந்து போகும்.சிறிது கறுப்பு எள்ளை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் தினம் இருமுறை வெறும் வயிற்றில் குடித்தால் வலி குறையும். மூட்டுவலிக்கு உடனடி தீர்வு வேண்டுமெனில் வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயை நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.ஐஸ் கட்டிகளால் வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினைந்து நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறை இதே போன்று செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதால் மூட்டு வலி இருக்கவே இருக்காது.