Monday, July 14, 2025
Home Blog Page 3382

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!…

 

இந்த உலகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் அயராது பாடுபட்டால் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவேறும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.தொழிற்துறையில் போட்டிகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் சொந்த வியாபாரத்தை செம்மைப்படுத்தி லாப நோக்கில் கொண்டு செல்வது எப்படி? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் அதிகம் பெறவும் முன்னோர்களால் சில பரிகாரங்கள் அன்றைய காலங்களிலேயே கணித்திருக்கின்றார்கள்.

அதில் ஒன்று தான் வியாபார விருத்தி யந்திரம். வியாபார விருத்தி யந்திரத்தை வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட்டு லாபம் உண்டாகும் என நம்பப்படுகிறது.மன அமைதியுடன் வியாபாரம் நடக்க வழிவகை செய்யும். வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.தொழில் போட்டிகளை சமாளித்து சிறந்த லாபம் பெற செய்யும்.தொழிலில் உள்ள தடைகளை நிவர்த்தி அடைய செய்யும்.தொழிலில் வருமானம் பெருகும்.

புதிய முதலீடுகள்,விரிவாக்கம், பணியாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.தொழில் சார்ந்த கண் திருஷ்டி, பொறாமை நீங்கும்.இது வியாபாரிகள், வணிகர்கள், புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம். சக்திமிக்க இந்த யந்திரங்களை தொழிற்கூடங்களில் கிழக்கு முகமாக வைத்து வணங்க வேண்டும்.வாரம் ஒரு முறை அல்லது அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் சந்தனம், குங்குமம் கலந்து பொட்டு வைத்து கதம்ப மாலை சாற்றி வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். இந்த முறையினை காலங்காலமாக நம் மனிதர்கள் செய்து வருகின்றார்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

 

 

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

 

அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் தான்  இந்த கிருஷ்ணன். நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். இன்று நாம் கிருஷ்ணரை பற்றி அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்.மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

 

கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.கிருஷ்ணர் மூன்று வயது வரை கோகுலத்திலும், மூன்று முதல் ஆறு வயது வரை பிருந்தாவனத்திலும், ஏழாம் வயதில் கோபியர்களுடனும், எட்டு முதல் பத்து வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது கிருஷ்ணருக்கு வயது ஏழு கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் மற்றும் சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர்.

ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும். கண்ணனின் லீலைகளை விளக்கும் கர்பா என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது.உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார். இவருக்கு பால் பாயாசம், நெய்வேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர். மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் கத்ர கேஷப்தேவ் என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

 

 

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

இந்த மூட்டுவலி உங்களை தொற்றி கொண்டதா.. உங்களை விட்டு போக மாட்டிகுதா இதை டெய்லி பண்ணுங்க அப்பறம் பாருங்க நீங்களே ஓட ஆரம்பித்து விடுவீங்க.வாங்க எப்டி சரி செய்யலாம்னு பார்க்கலாம்.தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும் முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும். ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.பகல் உணவுக்குப் பின் 10இ20 நிமி டங்கள் ஓய்வெடுப்பது மூட்டுவலியை நன்கு குறைக்கும்.உப்பு கரைத்த நீரில் குளித்தால் பக்க விளைவுகள் ஏதுமின்றி மூட்டு வலி பறந்து போகும்.சிறிது கறுப்பு எள்ளை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் தினம் இருமுறை வெறும் வயிற்றில் குடித்தால் வலி குறையும். மூட்டுவலிக்கு உடனடி தீர்வு வேண்டுமெனில் வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயை நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.ஐஸ் கட்டிகளால் வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினைந்து நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறை இதே போன்று செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதால் மூட்டு வலி இருக்கவே இருக்காது.

வழுக்கையை போக்கும் மாம்பழம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! 

வழுக்கையை போக்கும் மாம்பழம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழம் என்றால் அது மாம்பழ பழம் தான். மாம்பழம் உடலுக்கு மட்டும் நன்மை தருவது மட்டுமல்லாமல் உடல் இதர பாகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுதை தலைமுடிக்கு கண்டிஷனராக பயன்படுத்தலாம்.

சிலருக்கு தலையின் முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுதை சிறிது விளக்கெண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.

மாங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் இந்த நான்கையும் சம அளவில் கலந்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, சம அளவில் வெந்தயம், பயத்தம்பருப்பை கலந்து ஊற வைத்து அரைத்த விழுதைத் தலைக்கு தேய்த்து குளித்தால், பொடுகுத்தொல்லை போய்விடும்.

நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு பாதாம்பருப்பும், கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது மற்றும் மாங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி, காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், கழுத்து சுருக்கம் நீங்கும்.

தினமும் குளிப்பதற்கு முன் சிறிது வேப்பம்பூ விழுது, மாம்பழ சதை மற்றும் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பளபளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.

மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் டிரேயில் இட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள் ரோஜா இதழ் போல பளபளப்பாகும்.

 

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க..

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க..

முதலில் அதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்.தேவையான பொருள்கள் இட்லி மாவு – ஒரு கப், பூண்டு – 25 பல், இட்லி மிளகாய் பொடி – 2 மேசைக்கரண்டி, எண்ணெய் – 3 தேக்கரண்டி

எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.செய்முறை , பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.வாணலியில் அல்லது தோசைக்கல்லில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.பூண்டை இரண்டு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி அளவு தோசை மாவை எடுத்து ஊற்றி தோசை வார்க்கவும்.மேலே இட்லி மிளகாய் பொடி தூவி அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் பூண்டை தூவவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். தோசை கரண்டியை வைத்து ஒரு முறை தோசையின் மீது அழுத்தி விடவும். திருப்பி போடும் போது பூண்டு கீழே விழாமல் இருக்கும்.தோசை வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.மொறுமொறு பூண்டு தோசை ரெடி. இதனுடன் எதுவும் தொட்டுக் கொள்ள தேவையில்லை. விரும்பினால் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

நகைக்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்த மர்ம நபர்கள்! ஏமார்ந்து போன மூதாட்டி!

நகைக்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்த மர்ம நபர்கள்! ஏமார்ந்து போன மூதாட்டி!

தஞ்சாவூர் மாவட்டம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரதின்  மனைவி சரஸ்வதி (65). இவர் வெளியில் சென்று விட்டு ஏ ஓ ஏ நகரில் நடைமேடையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சில மர்மநபர்கள்   நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மூதாட்டியை நிறுத்தி பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த பகுதியில் வழக்கமாக வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழும் என்றும்  அந்த மர்ம கும்பல் மூதாட்டியிடம் கூறியுள்ளனர். நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை  அனைத்தும் எங்களிடம் கொடுத்தால் பாதுகாப்பாக பையில் வைத்து தருவதாகவும் கூறினார்கள்.

அந்த மர்மநபர்கள்  கூறுவதை உண்மை தான் என   நம்பிய சரஸ்வதி அவர் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகளை கழற்றி அந்த மர்மநபர்கள்களிடம்  கொடுத்துள்ளார். சரஸ்வதி நகையை கொடுத்தவுடன் மர்மநபர்கள்  அவர்கள் அந்த நகையை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக பையில்  கற்களை வைத்து கொடுத்துள்ளனர்.

மேலும் அதனை அறியாத மூதாட்டி பையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் சென்று பார்க்கும் பொழுது நகைகளுக்கு பதிலாக கற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தஞ்சை மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

அனிருத்தும் இல்லை… இமானும் இல்லை இவர்தான் இசையமைப்பாளர்… சூர்யா- சிவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

0

அனிருத்தும் இல்லை… இமானும் இல்லை இவர்தான் இசையமைப்பாளர்… சூர்யா- சிவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

சிறுத்தை சிவா தமிழ் சினிமாவின் தற்போதைய கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். தன் படங்களில் இதுவரை அஜித், கார்த்தி, ரஜினி போன்ற ஸ்டார் நடிகர்களை இயக்கியுள்ளார். அதுபோல அனிருத், இமான், தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய முன்னணி இசையமைப்பாளர்களையும் பயன்படுத்தியுள்ளார்.

அண்ணாத்த படத்துக்கு பிறகு அடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார்.இந்த படத்துக்கு முதலில் இமான் இசையமைப்பாளர் என சொல்லப்பட்டது. பின்னர் அனிருத் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இருவரும் இல்லை தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசையமைக்க போகிறார் என சொலல்ப்படுகிறது. இவர் ஏற்கனவே சிவாவுடன் வீரம் படத்தில் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்க உள்ளாராம். இவர் தோனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் இந்த படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்றுக் கதைக்களம் கொண்ட இந்த படம் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளது.

பிளஸ் ஒன் பள்ளி மாணவன் தற்கொலை!. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்?

பிளஸ் ஒன் பள்ளி மாணவன் தற்கொலை!. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்?

அஞ்சுகிராம் அருகே அலகப்பபுரத்தைச் சேர்ந்தவர் தான் ஆல்பர்ட்.இவருடைய மனைவி சகாய சின்சா. இந்த தம்பதி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு வலை  கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஐசக் ஸ்டீபன் வயது பதினாறு என்ற மகனும் இவருக்கு பன்னிரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளார்.

ஐசக் ஸ்டீபன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஆல்பர்ட், அவருடைய மனைவியுடன் வலை கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். ஐசக் ஸ்டீபன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். பின்பு பள்ளிக்குச் சென்ற அவரது சகோதரி நேற்று மாலை வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அவரது தாயார் வேலை பார்க்கும் கம்பெனிக்கு அழைத்துச் சென்று தன் தங்கையை தாயாரிடம் விட்டுவிட்டு ஐசக் ஸ்டீபன் அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலிருந்த ஐசக் ஸ்டீபன் திடீரென்று அருகில் இருந்த கயிறை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது பெற்றோர்களுக்கும் மற்றும் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஐசக் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்டீபன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஐசக் ஸ்டீபனின் வீட்டில் அவரது உறவினர்கள் திரண்டார்கள். இந்நிலையில் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

0

அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் பள்ளிக் கிரிக்கெட்டில் விளையாடிய போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ட்வீட்டில், அந்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் சச்சின், மைதானத்தில் விளையாடியபோது பெவிலியனாக இருந்த பழைய அமைப்பை பார்வையாளர்களுக்குக் காட்டுகிறார். மேலும்  ‘எனது பேட்டிங்கின் போது நான் ஸ்ட்ரைக்கர் இல்லாத முனையில் இங்கே நின்று கொண்டிருந்தேன், எனது பள்ளி நண்பர் ராகுல் கன்புலே ஸ்ட்ரைக்கர்’ முனையில் இருந்தார். அவர் விக்கெட்டுகளுக்கு இடையே மிக வேகமாக ஓடுவார்.

அன்றைய போட்டியில், ராகுல் ஒரு ஆஃப் டிரைவ் அடித்து விக்கெட்டுகளுக்கு இடையே மூன்றாவது ரன் எடுக்க என்னை அழைத்தார். ஆனால் நான் அப்போது மிக வேகமாக ஓடவில்லை. நான் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனேன். அந்த ரன் அவுட் என் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது, அவுட் ஆன பிறகு பெவிலியன் வரை அழுதுகொண்டே  எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. அன்று நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது எனது முதல் போட்டி, நான் பெரிய ரன்களை எடுக்க விரும்பினேன், ஆனால் அது நடக்கவில்லை.” என நடக்கவில்லை என்று 35 ஆண்டுகளுக்கு முந்தைய போட்டி குறித்து அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

0

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

ஆர்யா தற்போது இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது.  இதையடுத்து ஏற்கனவே டெடி படத்தின் மூலம் இணைந்த வெற்றிக் கூட்டணியான ஆர்யா – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவே தயாரிப்பாளராக களமிரங்கி  உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாலிவுட் படமான ப்ரிடேட்டர் வகைப் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படத்துக்கு டி இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை ஆர்யாவே தயாரிக்கிறார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தை தமிழகத்தில் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

இதையடுத்து படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் ஸாம்பி, ஸ்பேஸ் திரைப்படம் ஒவ்வொரு ஜானரிலும் ஒவ்வொரு படத்தை இயக்கி வருகிறார். அந்த வகையில் ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு கேப்டன் திரைப்படம் ட்ரீட்டாக அமையும் என சொல்லப்படுகிறது.