Monday, July 14, 2025
Home Blog Page 3372

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள்

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள்

இவற்றின் பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

மலை:

மலை ஏறுவது போல கனவு வந்தால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் மற்றும்புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.

மரணம்:

மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும்.

பேய்:

பேய் கனவில் வந்தால், உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும் ரகசியம் ஒன்றை நினைத்து நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். அந்த ரகசியத்தை மூடி மறைக்க கூடாது.

புது துணி:

புது துணி போடுவது போல கனவு கண்டால், புதிய சிக்கல்கள் உருவாகும். எதிர்பாராத வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடக்கும். மன அமைதியில்லாமல் சிறிது நாட்கள் இருப்பீர்கள். சில நாட்களுக்கு பிறகு யார் மூலமாவது நன்மை கிடைக்கும் என்று பொருள்.

விருந்து:

பலருடன் சேர்ந்து விருந்து உண்பது போல் கனவு கண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பதைக் குறிக்கும்.

நெருப்பு:

நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடையூறு செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது என்பது பொருள்.

தேவபுரீஸ்வரர் மதுர பாஷினி அம்மன் திருக்கல்யாணம்!

0

கீழ வேளூர் அருகே தேவூரில் மதுர பாஷினி அம்மன் சமேத தேவபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஆலயத்தில் கடந்த 20ஆம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. இதனை தொடர்ந்து இரவில் தேவபுரீஸ்வரர், மதுரபாஷினி, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கோவில் கொடிமரத்தடியிலிருந்து ஏராளமான பெண்கள் பழங்கள், மஞ்சள், குங்குமம், இனிப்புகள், போன்ற பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்தார்கள். தேவபுரீஸ்வரர் சுவாமி, மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அதன் பிறகு மதுரபாஷிணி அம்மன் சன்னதியில் தேவபுரீஸ்வரர் சாமிக்கும், தேவபாஷினி அம்மனுக்கும், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்த்தக்கோடிகள் பங்கேற்று கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தார்கள்.

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா? 

கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் செய்யக்கூடாதவை! எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே கோயில்களை தேடிச் செல்கிறார்கள். சிலர் மட்டுமே காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறார்கள்.

கோயிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும்பும் ஒரு குழப்பம். கோயிலுக்கு போகும் முன் கோயில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா இல்லை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் தான்.

கோயிலுக்கு செல்லும் முன்….

பக்தர்கள் கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் தண்ணீர் குழாய்களில் கண்டிப்பாக கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோயிலின் உள்ளே செல்ல வேண்டும்.

குறிப்பாக கை, கால்களை கழுவிய பிறகு ஒரு சொட்டு நீரை தலையில் தெளித்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கோயிலுக்குள் செல்லும் முன்பு அங்குள்ள கோயில் கோபுரத்தையும், கலசத்தையும் வணங்கி விட்ட பிறகுதான் கோயிலின் உள்ளே செல்ல வேண்டும்.

கோயிலுக்கு செல்லும் முன் அனைவரும் கோயில் படிக்கட்டை குனிந்து வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவத்தின் இடையில் தொட்டு அழுத்த வேண்டும்.

இப்படி செய்வதால் நாம் கோயிலுக்குள் சென்றதும் நமது பாதத்தின் வழியே கோயிலின் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் செலுத்தப்படும் என்பது நம்பிக்கை.

கோயில் படிக்கட்டை தாண்டாமல், மிதித்து சென்றால் மனதில் உள்ள பிரச்சனைகளை கூடவே கோயிலுக்குள் அழைத்து செல்வதாக அர்த்தம்.

அல்லது கோயிலில் குறுக்கே இருக்கும் வாசற்படியை தாண்டித்தான் செல்ல வேண்டும். கோயில் படியை தாண்டி செல்வதால் நமது மனதில் இருக்கும் கவலைகள், கெட்ட விஷயங்கள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற அனைத்தையும் வெளியில் விட்டு செல்வதாக ஐதீகம். எனவே நமது பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்.

கோயிலில் தினந்தோறும் அர்ச்சகர்கள் கூறும் மந்திர ஒலி, நாதஸ்வரம், மேள சப்தங்கள் போன்றவை கோயிலில் நிறைந்து இருக்கும். இதனால் கோயில் வாசற்படியை மிதித்து செல்லாமல் பக்தர்கள் கட்டாயமாக தாண்டித்தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

23-8-2022 இன்றைய ராசி பலன்கள்!

0

மேஷம்

இன்று தங்களுக்கு நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். மற்றவர்கள் நலம் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள், ஆரோக்கிய தொல்லைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு பண நெருக்கடி நீங்கும் நாள், உத்தியோகத்தில் உயர் பொறுப்புகள் தேடி வரலாம், விலகிச் சென்ற உறவினர்கள் தானாக வந்து பேசுவார்கள், அஞ்சல் வழியே அனுகூலம் ஏற்படும், திருமண கனவுகள் நினைவாகும்.

மிதுனம்

இன்று தாங்கள் சுறுசுறுப்பாக செயல்படும் நாள். துணிச்சலாக எடுத்த முடிவு வெற்றி பெறும், நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள், வீடு, வாகன, பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிட நேரலாம்.

கடகம்

இன்று தாங்கள் எதிர்கால நலன் கருதி அக்கறையுடன் செயல்படும் நாள். நீண்ட நாள் பிரச்சனையொன்று பஞ்சாயத்துக்கள் மூலமாக நல்லதொரு முடிவுக்கு வரலாம். தொழில் முன்னேற்றம் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்ளலாம்.

சிம்மம்

இன்று தாங்கள் வாக்கு சாதுரியம் காரணமாக, வளம் காணும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பொருளாதார நிலையை அதிகரித்துக்கொள்ள முன்வருவீர்கள். கண் தொடர்பாக உண்டான அச்சுறுத்தல்கள் நீங்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு மங்கள ஓசைகள் மனையில் கேட்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும், ஒரே சமயத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை கொடுக்கலாம். சோம்பலால் திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை ஏற்படும்.

துலாம்

இன்று தங்களுடைய விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் அதிகரிக்கும், வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதால் செலவுகள் ஏற்படும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வது தொடர்பாக சிந்திப்பீர்கள்.

விருச்சிகம்

இன்று வரவை விடவும் செலவுகள் அதிகரிக்கும் நாள். அமைதி குறையும், ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது, செலவுகளால் கையிருப்பு சற்று கரையலாம்.

தனுசு

இன்று தங்களுக்குஉடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும் நாள், பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவார்கள். குடும்பத்திலிருந்து கருத்து வேறுபாடுகள் நீங்கும், உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.

மகரம்

இன்று தாங்கள் வியக்கத்தக்க செய்தி ஒன்று வந்து சேரும் நாள். விஐபிக்களின் உதவி கிடைக்கும், பயணத்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை அதிகரிக்கும், உறவினர்களின் பாசமழையில் நனைவீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு சலுகைகள் கிடைத்து சந்தோஷமடையும் நாள், காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை, வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நூதன பொருள் சேர்க்கையுண்டு.

மீனம்

இன்று தங்களுக்கு நண்பர்களால் வளர்ச்சி அதிகரிக்கும் நாள். உற்றார் உறவினர்கள் வருகை காரணமாக, செலவுகள் அதிகரிக்கலாம், விட்டு போன வரன்கள் மறுபடியும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும்.

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

காலையில் அரசனைப் போன்றும் நண்பகலில் சாதாரண மனிதனை போன்றும் இரவு நேரங்களில் பிச்சைக் காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனெனில் காலை நேரங்களில் உணவுக்குப் பிறகு உடலுக்கான உழைப்பு நேரம் தீவிரமடைகிறது. அதனால் வயிறு அடைக்க உணவு உண்டாலும் செரிமானம் என்பது சிக்கல் இல்லாமல் இருக்கும்.

மதிய நேரங்களில் உடலுக்கான உழைப்பு சற்றே குறையும் என்பதால் அதிகப்படியான உணவு செரிமானத்துக் கான நேரத்தை அதிகரிக்கும். இரவு நேரங்களில் உடல் ஓய்வுக்கான நேரம் என்பதால் உள் உறுப்புகளுக்கு அதிகமான வேலையை தராமல் இருப்பது ஆரோக்யத்துக்கு நன்மை அளிப்பதாக இருக்கும்.

காலை உணவை 8 மணி முதல் 8.30-க்குள் சாப்பிட வேண்டும். மதிய உணவை ஒரு மணி முதல் 1.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இரவு உணவைப் பொறுத்தவரை, வீட்டில் இருப்போர் இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. யாராக இருந்தாலும் 8.30 மணிக்குள் இரவு உணவைச் சாப்பிடுவது சிறந்தது.

உணவை எந்த திசையில் அமர்ந்து உண்பதன் மூலம் என்ன பயன் என்பதையும் நமது முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.

கிழக்கு திசை:கிழக்கு நோக்கி அமர்ந்து உண்டால் ஆயில் விருத்தி ஏற்படும்.

மேற்கு திசை:மேற்கு நோக்கி அமர்ந்து உண்டால் செல்வ விருத்தி ஏற்படும்.

தெற்கு திசை:தெற்கு திசை நோக்கி அமர்ந்து உண்டால் புகழ் அல்லது நோய் வளரும்.

வடக்கு திசை: எப்பொழுதும் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

 

ஏகாதசி வழிபாடு…!!இந்த விரதங்கள் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்!..

ஏகாதசி வழிபாடு…!!இந்த விரதங்கள் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்!..

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.ஆவணி மாதத்தில் விரதம் இருந்து வணங்குவதற்குரிய ஒரு சிறப்பு நாளாக ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகிறது. இந்த தினத்தில் நாம் பெருமாளை வழிபடுவதால் ஏராளமான பலன்கள் பெறலாம்.மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் கடவுளின் முக்தி கிடைக்க வேண்டும்.அந்த முக்தி நிலையை அடைவது என்பது எளிதான விஷயம் இல்லை.

கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும்.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.
ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் அனுசரித்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு விரதம் இருந்து அதற்கு மறுநாள் காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.ஏழு முறை துளசி இலையை பகவான் நாமத்தை சொல்லி சாப்பிடலாம்.

உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள்,பால்,தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.
சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.

இனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்

இனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்

ஒரு தானியங்கி என்பது நடைமுறையில் உண்மையான இயந்திர வடிவுடைய மெய்நிகர் முகவர் ஆகும். தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழக்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கு காதித பயண சீட்டுதான் வழங்கப்படுகிறது.

இதைதொடர்ந்து இந்த நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாக  கோவை ,மதுரை ,சென்னை ஆகிய போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சர்வதேச ஒப்பந்த புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கியுள்ளது. மேலும் இந்த தானியங்கி பயணச்சீட்டு முறையை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படுகிறது.

இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, QR CODE  ஆகியவை மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் , 10-வார்டு, மேலவீதியில் வசித்து வருபவர் மணி அவருடைய மனைவி அங்கம்மாள்.இந்த  தம்பதிகளுக்கு பாஞ்சாலை என்ற 24 வயது மகள் உள்ளார். தீடீரென  கடந்த 16 ஆம் தேதி முதல் பாஞ்சாலையை  காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கெங்கவல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஒரு காதல் ஜோடி கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காணாமல் போன தெடாவூர் பகுதியைச் சேர்ந்த பாஞ்சாலை என்பவர் என தெரியவந்துள்ளது.

If the missing girl becomes a bride! Police investigation!

மேலும்  இவர் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி மகன் டிரைவர் வேலு(வயது 25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து கிளம்பி திருமணம் செய்துகொண்டு கெங்கவல்லி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது இருவரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து காதல் ஜோடியை அழைத்துச் சென்றனர்.

தமிழகத்தில் இனி இந்த மரக்கன்றுகளை வளர்க்கவோ விற்கவோ கூடாது – நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் இனி இந்த மரக்கன்றுகளை வளர்க்கவோ விற்கவோ கூடாது – நீதிமன்றம் அதிரடி

தமிழக வனப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நிய மரக்கன்றுகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை வைத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த தடை உத்தரவை அறிவிப்பாணையாக வெளியிடவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அது மட்டுமில்லாமல் ஏற்கனவே வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்தெரிவித்துள்ளனர்.

அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டிய மற்றும் குப்பைகளை கொட்டியவர்களுக்கு சுமார் 22 லட்சம் வரை அபராதம்

அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டிய மற்றும் குப்பைகளை கொட்டியவர்களுக்கு சுமார் 22 லட்சம் வரை அபராதம்

பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டிய மற்றும் குப்பைகளை கொட்டியவர்களுக்கு சுமார் 22 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

சென்னையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னையில் கடந்த 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 300 அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.10 லட்சத்து 95 ஆயிரத்து 410 அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய 451 நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்றவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.